FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, March 28, 2013

என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்? யாரிடமும் தயாரான பதில் இல்லை,

திடீர் என கடவுள் உங்கள் முன்னம் வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்? யாரிடமும் தயாரான பதில் இல்லை, அனைவரும் யோசிக்க முனைந்தார்கள், அவர்களுக்கு தெரியும் "தொட்டதெல்லாம் பொன் ஆகவேண்டும் என்கிற வரம் பெற்ற கதை" ஒருவர் நன்கு யோசித்தபிறகு இப்படி கேட்டார் "மன சாந்தி" வேண்டும் என கேட்பேன் என்றார் ..அதாவது எனக்கு வேண்டியது கிடைக்கவில்லை என்றால் மனம் சாந்தி அடையாது என்கிற நோக்கில் அப்படி வரம் கேட்டார் .. அதற்கு கடவுள் சிரித்தபடியே வரம் தந்தேன் என்றார். அவரது சிரிப்பிற்கு காரணம் இருந்தது ...தேவை என்று ஒன்று இல்லாத "சாதுக்கள்" மற்றும் சில "ஞணிகள்" "சாந்தம்" நிறைந்த மனம் பெற்றவர்கள்.. சாதுக்கள் என்று அழைக்கப்படும் ஒருவர் சாலையோரம் நடந்து வந்துக்கொண்டிருந்தார். பார்பதற்கு எத்தனை நாட்கள் குளிக்காமல் இருந்திருப்பாரோ? அவ்வளவு தூசுக்கள் படிந்த உடலும் அழுக்கு உடைகளையும் அணிந்திருந்ததால், அவரின் அருகே செல்லக்கூட மக்கள் அஞ்சி, விலகி சென்றுக் கொண்டிருந்தனர், அவரின் கண்கள் மட்டும் மிகவும் பிரகாசமாக இருந்தது அதில் அவருக்கு, தனது வெளிப்புற தூய்மையின்மை மற்றும் தனது நிலையைப்பற்றிய எந்த நினைப்பும் இருக்கவில்லை, அடுத்தவேளை உணவு இருப்பிடம் போன்ற எந்த கவலையும் அவரிடம் இருக்கவில்லை. மொத்தத்தில் அவரின் மனம் சாந்தமாக... "மன சாந்தி நிறைந்தவராக" தெரிந்தார். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் வரம் கேட்டபோது கடவுள் ஏன் சிரித்தபடியே "வரம் தந்தோம்' என்று கூறினாரே அதற்க்கான காரணம் இது தான் " தேவை என்று ஏதுமின்றி ஆசையை தொலைத்தாலே "சாந்தி" கிடைத்துவிடும். ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் இதை, எதற்கு கடவுளிடம் வேண்டி வரமாக பெறவேண்டுமா? http://youtu.be/TdA-ZCZ1omQ

No comments:

FREE JOBS EARN FROM HOME