நாம் ரசிக்கப் போகும் ‘’உனக்காகவே நான் உயிர் வாழ்வேனே’ என்று மனதை உருக்கும் ஒரு பாடல்’ இந்த பாடல் ‘பாகேஸ்ரீ’ எனும் ராகத்தைத் தழுவியது. பாடலை தஞ்சை ராமையதாஸ் எழுதியிருக்கிறார். http://youtu.be/O5qPzM_zBuM
ஒரு முறை மெல்லிசைமன்னர் ராமமூர்த்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிட்ட பாட்டை என்ன ராகம் என்று கேட்டாராம் அதற்க்கு இசை மன்னர் : “ராகமா? ராமமூர்த்தி ராகம், இல்லையென்றால் கிருஷ்ணமூர்த்தி ராகம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! சினிமா பாட்டுக்கெல்லாம் ராகம் தேடாதீங்க ஸார்” என்றாராம். அதனால்தான் நான் இன்ன ராகத்தைத் ‘தழுவியது’ என்று எழுதித் தப்பித்துக் கொள்ளுகிறேன்! மிகப் பழைய படங்களின் பாட்டுப் புத்தகத்தைப் பார்த்தால் கூட, ‘மிச்ர மாண்ட்’, மிச்ர இந்தோளம்’ என்று அந்தந்தப் பாடல் வரிகளுக்கு மேல் ராகங்களுக்கு முன் ‘மிச்ர’ என்று சேர்த்துப் போட்டிருப்பார்கள். குறிப்பிட்ட ஸ்வரங்களைக் கொண்ட ராகத்தில் அன்னிய ஸ்வரங்கள் சேர்ந்தால் ‘மிச்ர’ அதாவது கலப்பு, ஒரிஜினல் ராகம் இல்லை என்று ஆகிவிடும்! ..... இப்போது கலப்பில்லாத ‘பாகேஸ்ரீ’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல் கேட்கவேண்டுமானால் இதே ராகத்தைத் தழுவி, குலேபகாவலியில் ’மயக்கும் மாலைப் பொழுதே நீ போ, போ’, மீண்டசொர்க்கத்தில் ’கலையே என் வாழ்க்கையின்’, போன்ற பல சிறந்த பாட்டுக்கள் உண்டு.
No comments:
Post a Comment