FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Wednesday, May 13, 2015

மீண்டும் ஒரு மிகப்பெரிய சுனாமி பேராலை உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்....

"....மீண்டும் ஒரு மிகப்பெரிய சுனாமி பேராலை உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்."

நேற்றைய 12-05-2015 நேபாளம் மற்றும் சீனா,  ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகம் முழுவதும் 82 இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “நேபாள பூகம்பத்துக்குப் பிறகான பூமியின் ஊடாக சென்ற ஒலி அலைகளின் தரவுகளின் படி, தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பூமியின் பாறைத்தட்டு கிட்டத்தட்ட 6 மீட்டர்கள் தெற்கு நோக்கி கீழ் நகர்ந்துள்ளது. இது மிகப்பெரிய இடப்பெயர்வாக கருதப்படுகிறது.” 

“பூகம்பம் காரணமாக பாறைகள் பூமிக்கு அடியில் இடப்பெயர்வு கண்டுள்ளதால் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் குறித்து ஆஸ்திரேலிய சுனாமி எச்சரிக்கை மையத்தின் டேனியல் ஜக்ஸா கூறும்போது, மேலும் ஒரு சுனாமி வருவதற்கான சூழல்
ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்தார், அதாவது ஆசியப்பாரைத்தட்டு ஆஸ்திரேலிய பாரைத்தட்டான சுண்ணாம்பு பாறைக்கடியில் மிகப்பெரிய அழுத்தத்தால் தொடர்ந்து அழுத்திக்கொண்டிருப்பதால் எந்த நேரத்திலும் ஆசியப்பாரைத்தட்டு பசிபிக் கடல்பகுதியில் ஒரு பிளவை சந்திக்கக்கூடிய சூழல் எப்போதுவேண்டுமானாலும் ஏற்ப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அப்படி ஒரு பிளவு ஏற்ப்ப்படும்போது இந்திய மற்றும் இந்தோனேசிய கடல்பகுதியில் மீண்டும் ஒரு மிகப்பெரிய சுனாமி பேராலை உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

Friday, May 1, 2015

வாழ்க வாசகர் மன்றங்கள்....விமர்சனங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.....

எழுத்தாளர்களின், சில பொன்னான வார்த்தை மற்றும் வரிகளைப்பற்றி வாசகர்கள் அவர்களின் கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்யும்போதும், அதைக்கேட்கும்போதும் அந்த  புத்தகத்தை வாங்கவும்  படிக்கவும் ஆவலை தூண்டும்வண்ணம் அமைந்திருக்கும் அவர்களின் அந்தச் சிறந்த விமர்சனங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.. காரணம் இந்தக்கணினி உலகத்தில்,  எதோ ஒரு வழியில் புத்தகம் படிப்பவர்களை கவர்ந்திழுத்து பரவலாக புத்தகம் படிக்கும் ஆவலுக்கு உயிர்கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் என்பதால், அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் படைத்த  "விமர்சகர்களை" பாராட்டாமல் இருக்கமுடியாது. 

எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும்,  புத்தகம் படிப்பவர்களையும், படித்த புத்தகத்தைப்பற்றி விமர்சனம் செய்பவர்களையும்  உற்சாகப்படுத்தி ஊக்கிவித்தால், புத்தகம் படிப்பவர்களை அதிகரிக்கச் செயலாம் ..  அது இந்தக்கணினி உலகத்தில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும் என்பது என் எண்ணம்......... 

மலேசிய மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் புத்தகத்தைப்படித்து விமர்சிப்பவர்களுக்கு, "வாசகர் மற்றும் விமர்சகர் மன்றங்கள்"  "பணமுடிப்பு" தருவது இன்றும் வழக்கமாக உள்ளது (எனக்கும் இரண்டு முறை 40 சிங்கப்பூர்  வெள்ளி (இந்திய மதிப்பில் ரூபாய் 2,000/- ) கிடைத்தது.  மாதம் இரு முறை வாசகர் மன்ற கூட்டங்களில் பலருக்கு சிறந்த விமர்சனங்களுக்காக புத்தகப் பதிப்பாளர்களும், சில நிறுவனங்களும் போட்டிப்போட்டுக்கொண்டு பரிசுகள் வழங்குகிறார்கள். ( குறிப்பு - இந்தியாவில் சில எழுத்தாளர்களுக்குகூட இப்படி பாராட்டி பணமுடிப்பு கிடைப்பதில்லை !!!!) தமிழகத்திலும் இப்படி ஒரு செயல் நடைபெற்றால்  புத்தகங்களைப் படிக்கும் / வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும் என்பது எனது எண்ணமும் அதற்க்கான முயற்சியும் மேற்க்கொண்டுவருகிறேன்...ஆகவே  சர்வதேச அளவில் பல வாசகர் மற்றும் விமர்சகர்களின் குழுக்கள், மற்றும் விமர்சகர்களின் வட்டம், விமர்சகர் மன்றம் போன்றவை உருவாகுவதற்கு உறுதுணையாக உதவி செய்தாலே போதும், ஏராளமான வாசகர்களைப் பெறமுடியும்.  இதற்க்கு எழுத்தாளர்களோடு, பதிப்பாளர்களும் உதவி செய்ய முன்வரவேண்டும்.  முதலில் உங்களுக்கு அருகாமையில் இருக்கும் பகுதிகளில்  வாசகர் மன்றம் ஒன்றை அமைத்து, மாதம் ஒருமுறை வாசகர் மற்றும் விமர்சகர் கூட்டம் ஒன்றை  நடத்தி,   சிறந்த வாசகர் மற்றும் விமர்சகர்களுக்கு சில பரிசுப்பொருட்கள் வழங்கினால், வாசகர் மன்றம் சிறப்பாக செயல்படுவதோடு எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் நிறைய பயன்களைப் பெறலாம்.  புது தில்லி மற்றும் அதன் எல்லையில் அமைந்த  உத்திரப் பிரதேச மாநிலத்திலும் சில தமிழ் வாசகர் மற்றும் விமர்சகர் மன்றங்களை உருவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ("வைஷாலி வாசகர் வட்டம்"- புது தில்லி  மற்றும் காசியாபாத் உத்திரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் தமிழ் புத்தாண்டு 2014 முதல் பல நூறு தமிழ் வாசகர்களை உருவாக்கியுள்ளது)… மேலும் இதுபோன்ற பணிகள் தொடர  தோள்கொடுத்து துணை நிர்ப்பவர்களை வரவேற்கிறேன்........

"புத்தம் புதிய புத்தகமே
உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
பொதிகை வளர்ந்த செந்தமிழே
உன்னை பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்....."

விடாமல் முயலுங்கள், 
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்! 
வணக்கம்
நன்றிகளுடன் கோகி -என்கிற கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி- புது தில்லியிலிருந்து.... 

FREE JOBS EARN FROM HOME