FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Tuesday, July 19, 2016

ஆங்கில இலக்கண வகுப்பில், தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள்...

ஆங்கில இலக்கண வகுப்பில், தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள்...
தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களைப்பற்றி  (அவரின் வாழ்க்கை காலம் 1946 முதல், செப்டம்பர் 16, 2009வரை) இவர் என்றும் நம் மனதில் நீங்காப் புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார். அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். பல சிறுகதைகளையும் எழுதியிருந்தார்.


அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ. சுவாமிநாதன் அவர்கள்  சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். வேளாண்மைப் பட்டதாரியான இவர் நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் நிலையான இடம் பிடித்தவர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர்....

நான் படித்த அதே பள்ளியில், 2 வருடம் பகுதிநேர ஆசிரியராக பணியாற்றிய நாட்கள் எனக்கு என்றும் மறக்கமுடியாதவை, அப்போதெல்லாம் (1980)  கிராமப் பகுதியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள், 10ம் வகுப்புக்கு செல்லாமலே படிப்பை நிறுத்திவிடுவார்கள், காரணம் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறுவது கடினம் என்கிற ஒரு எண்ணம் பரவலாக இருந்தது. 

அந்தக்கால கட்டத்தில்,  நிரந்தரம் செய்யப்படாத, தற்காலிக பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியராக  பணியாற்றிக்கொண்டிருந்த நானும், மேலும் சில அரசுப்பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று... தேர்தல் கூட்டத்தில் பேசுவதைப் போல மேடையில் பிரசாரம் செய்வோம்.... கிராமத்திற்கு சென்றதும் கிராம மக்களை கவருவதற்கு முதலில்  பாடல் ஒலிக்கும்:- "பாடசாலை செல்லவேண்டும் பாப்பா எழுந்திரு.." என்கிற பாடல் டி ஆர் பாப்பா அவர்கள் இசையமைத்திருந்த பாடல்... அப்போதெல்லாம் மிகவும் பிரபலமான வானொலிப் பாட்டு இது ......
பிறகு ஒவ்வொரு ஆசிரியர்களாக கிராமத்து மக்களுக்கு எளிமையாக புரியுமாறு எடுத்துக்கூறி பேசவேண்டும்... அப்போது நான் கூறியது "A, B, C, D...." கூட சரியாக சொல்லத் தெரியாதவர்களும் 10ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் பாஸ் மார்க் எடுக்கலாம், அதற்க்கான எளிமையான வழியில் பாடம் சொல்லிக்கொடுத்து உங்களின் மகன்/மகளின் வெற்றிக்கு உறுதியளிக்கிறோம்..... என்று,.....எதோ டுடோரியல் காலேஜ் விளம்பரம் போல, நாங்கள் பணியாற்றிய அரசுப்  பள்ளியின் 10ம் வகுப்பிற்கு ஆள் சேர்க்கவேண்டிய நிலை இருந்தது....... 

(பின் குறிப்பு:-அன்று மேடையில் பேசிய, என்னுடன் பணியாற்றிய பகுதிநேர ஆசிரியர் ஒருவர் தற்போது ஒரு முக்கிய கட்சியின் மாவட்ட செயலாளராக இருக்கிறார். ஆசிரியர் பணியைவிட அரசியல்பணி எளிமனானது என்கிற முடிவுக்கு வந்ததே... அன்று நாங்கள் செய்த பிரசாரத்தின் விளைவு என்றானது......  நல்லவேளை எனது தொழில் படிப்பும், மனசும் அதற்க்கு இடம்கொடுக்கவில்லை. ஆகவே நான் பல்வேறு திட்டப் பணியில் பல ஊர், உலகம் என்று இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கிறேன்).
கிராமம் கிராமமாக அலைந்து பேசியதற்கு பெற்றோர்களைவிட மாணவர்களிடம் நல்ல பலன் இருந்தது. பல மாணவ மாணவிகள் 9ம் வகுப்போடு நின்றுவிடாமல் 10ம் வகுப்பு படிப்பைத் தொடர்ந்தார்கள். அப்படி படிப்பைத் தொடர்ந்த பல மாணவர்களுக்கு A, B, C, D.. கூட சரியாக சொல்லத் தெரியாது என 90% மாணவர்கள் இருந்தது தெரிந்தபோது எனக்கு சற்று மனதுக்கு கவலை வந்தாலும்.... தொழிற்பாடப் பிரிவின், "பொது எந்திர தொழில் கல்வி" (General Machinist- Vocational Education)- பகுதிநேர ஆசிரியராக இருந்த எனக்கு, அதை ஒரு சவாலாக எடுத்து ஆங்கில ஆசிரியராக மாறிய அந்த நாட்களில்.... எனக்கு புது உற்சாகம் தந்தவர் "இன்று ஒரு தகவல்" என்கிற வானொலி நிகழ்ச்சியில் புகழ் பெற்ற தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களை மறக்கமுடியாது. 

அவரின் வானொலி  நிகழ்ச்சியின் பல தகவல்கள், கதைகள், சம்பவங்களை, என பலவற்றை மாணவர்களுக்கு எடுத்துக்கூறி மாணவர்களின் ஆங்கிலப்பாடத்தின் பயத்தை போக்கி அவர்களை ஊக்கப்படுத்தி வெற்றியடையச் செய்தோம்.... 

(பின் குறிப்பு:- A,B,C,D....யிலிருந்து ஆரம்பித்து ... ஒரு சில திரும்ப திரும்ப கேட்கும் கேள்வி பதில்களை தினமும் இரண்டு வரி என்று மனப்பாடம் செய்யவைத்து... பல மாணவர்களை ஒருவழியாக 10ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில்  35 to 38... என பாஸ் மார்க் எடுக்க வைத்தபொது... ஸ் ஸ் ஸ் ஸ் அப்பாடா என...... மாணவர்களைவிட, ஆசிரியராக இருந்த நாங்கள்தான் மிகவும் சந்தோஷமடைந்தோம்...)  

அந்த அனுபவத்தின் ஒரு பகுதியைத்தான் இதோ இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்...... அன்று மாணவர்களுக்கு எளிமையான ஆங்கில இலக்கணம் - இரண்டாம் விடைத்தாள் (கிராமர்) வகுப்புக்கு..... தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் சுவையான நிகழ்ச்சிகளை... சுவைபட எடுத்துக்கூறி, மாணவர்களின் மனதில் அன்றைய ஆங்கில இலக்கண பாடத்தை பசுமரத்தாணி போல ஆழமாக பதியவைத்தோம்......

அன்றைய ஆங்கில இலக்கண பாடம் :-
The lesson is Grammatical Person in nominative case English Pronouns. 
Fill in the blanks questions:-
First Person Singular= " I " Plural = "We" 
Second Person Singular & Plural = "You"
Third Person Singular= " He/She/It" Plural = "They"
வயதானவர்களில் பெரும்பாலோனோர் விரும்பும் ஒரு அமர்வு நாற்காலி என்றால் அது "ஈஸி சேர்-Easy Chair" என்று ஆங்கிலத்தில் அழைக்கும் வசதியான சாய்வு அமர்வு நாற்காலி. அதாவது "டூ இன் ஒன்" என்று ஆங்கிலத்தில் கூறுவதைப்போல இரண்டு பயன்கள் தரும் ஒரே அமர்வு சாய் நாற்காலி இது  இதில் உட்கார்ந்துகொள்வதையும் படுத்துக்கொள்வதையும் ஒரே நேரத்தில் செய்யலாம். வயதானவர்களுக்கு ஜீரண சக்தி குறைவு ஆகவே உண்ட உணவு செரிப்பதற்கு நீண்ட நேரம் பிடிக்கும் அதுவரை நீண்ட நேரம் உட்காருவதற்கு வயது மூப்பின் காரணமாக உடல் எலும்புகள் ஒத்துழைப்பு தருவதில்லை. ஆகவே இந்த சாய் நாற்காலியில் உட்கார்ந்தபடியே (முதுகு எலும்புகளுக்கு இதமாக) படுக்கை நிலையில் அமர வசதியான இருக்கையாக இருப்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த அமர்வு நாற்காலியாக "ஈஸி சேர்" திகழ்கிறது. 

ஓய்வு பெற அந்த முதியவர் சாய்வு நாற்காலியில்  "ஈஸி சேர்" அமர்ந்திருக்கிறார். இவர்தான் இந்த நிகழ்வின் முதல் கதாநாயகன் அதாவது First Person Singular= " I "

வயதானவர்களுக்கு  தலையில் "முடி" என்பது அவ்வளவாக இருக்காது... பல வருடங்களாக முடி கொட்டி போயிருக்கும் அல்லது வழுக்கை விழுந்திருக்கும் . ஆக சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அந்தப் பெரியவருக்கு  தலையில் ஏதோ அரிப்பு ஏற்பட... தமது கையால் தலையை சொறிந்தவண்ணம் இருக்கும் நிலையில்... 

அந்தப் பெரியவரின் வீட்டு தெருவழியாக ஒரு (Post Man) தபால்காரர் செல்கிறார்.  இவர்தான் இந்தக் நிகழ்வின் 3வது நபர் அதாவது... Third Person Singular= " He/She/It" 

இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்களாக நாம் அதாவது...Second Person Singular & Plural = "You" "We

தபால்காரரை பார்த்த சாய்வு நாற்காலியில் கையை தலையில் வைத்து சொரிந்துகொண்டிருக்கும் அந்தப் பெரியவர் "ஏம்ப்பா எனக்கு ஏதாவது இருக்கா?"  என்கிறார்...

கை தலையில் இருக்கும்போது தபால்காரரிடம் எனக்கு ஏதாவது இருக்கா என்று கேட்பது பார்வையாளர்களாகிய நமக்கு என்ன தோன்றும் ... பெரியவர் தலையில் ஏதாவது இருக்கா என்று தபால்காரரை கேட்பதுபோல இருக்கும்!!!..... 

பெரியவரின் கேள்விக்கு பதிலாக தபால்காரர் கூறினார் "உங்களுக்கு எதுவும் இல்லைங்க!!!"

அதோடு அந்தப் பெரியவர் விட்டிருக்கலாம்.. ஆனாலும் பெரியவர் தொடர்ந்து...."நல்லா பார்த்து சொல்லப்ப.... எனக்கு ஏதாவது இருக்கா????" என்கிறார்...

அதற்கு அந்த தபால்காரர் "பெரியவரே... நல்ல பார்த்துவிட்டேன்... கொஞ்சம் நாளாகவே உங்களுக்கு ஒன்றும் இல்லை..." என்று நிச்சயம் செய்துவிட்டு சென்றார். 

பார்வையாளர்களாகிய நமக்கு என்ன தோன்றும்... இதெல்லாம் இந்தப் பெரியவருக்கு தேவையா??? கொஞ்சம் நாட்களாக உங்களுக்கு மூளையே இல்லை... என்பதை அந்த தாபால்காரர் சான்று தந்துவிட்டு செல்வது போல நமக்கு தெரியும். 

மற்றவர்களின் பார்வையில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்கிற நினைப்புகூட..... பல நேரங்களில், பலருக்கும், இருப்பதில்லை என்பதுதான் உண்மை...

மீண்டும் சந்திப்போம் நன்றிகளுடன் ... கோகி-ரேடியோ மார்க்கோனி..... 


FREE JOBS EARN FROM HOME