FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, April 15, 2016

இணையத்திலும் "அம்மா" யூனிகோடுகள் .....

Re: [FTC] புதிய தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள்:-

Font Name: uniAmma-11

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Font Name: uniAmma-12

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Font Name: uniAmma-13

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Font Name: uniAmma-14

Re: [FTC] புதிய தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள்

இன்பாக்ஸ்
x
மன்றங்கள்
x

இரா.சுகுமாரன் rajasugumaran@gmail.com

பிற்பகல் 12:20 (28 நிமிடத்திற்கு முன்)
பெறுநர்: freetamilcompu.
எழுத்தும் அம்மா என்றால் !!! வேறு பெயர் கிடைக்கவில்லையா?
On Apr 14, 2016 10:51 AM, "Selva Murali" <murali1309@gmail.com> wrote:
வணக்கம் நண்பர்களே!!

இணையத்தில் யுனிகோடு என்றாலே லதா எழுத்துருவும், ஏரியல் யுனிகோடு எம்எஸ் மற்றும் விஜயா எழுத்துருக்கள்தான் அதிகமாக பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலைமையை சற்றே மாற்றிட  எங்கள் நிறுவனம் ஏற்கனவே பனீசியா நிறுவனம் கட்டற்ற முறையைல் வெளியிட்ட டாம் எழுத்துருக்களை யுனிகோடு வெப் எழுத்துரு முறைமைக்கு மாற்றி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விதவிதமான எழுத்துருக்களை இணையத்தில் பயன்படுத்தலாம். மின் புத்தகம், குறுஞ்செயலிகள் என எல்லாவிடங்களிலும் இதை பயன்படுத்தலாம்.

எழுத்துருக்களின் மாதிரி



தமிழ்ப் புத்தாண்டில் பொதுப்பயன்பாட்டு வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி

இன்னமும் 100 எழுத்துருக்கள் விரைவில் வெளியிடப்படும்


இந்த எழுத்துரு திட்டத்தில் எங்களுக்கு வழிகாட்டிய திரு.தகடூர் கோபி அவர்களுக்கு நன்றி!

நன்றி.


--
M.S.Murali (B+ve)

Tuesday, April 12, 2016

"குரு கிராம்" ஒரு புதிய கிராமம் புதிய பெயர் இன்றுமுதல் உதயமாகியது .

செய்தி:- புது  தில்லியின் எல்லையில் இருக்கும் ஹரியான மாநில "குடு காவுன்"  என்கிற தற்ப்போதைய தொழில்நகரம் இன்றுமுதல் "குரு கிராம்" என்று (சமஸ்கிருத மொழி)  பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.  ஒரு காலத்தில் நான் 1991 ல் பார்த்த போது எங்கும் எருமை மாடுகளும், எருமை சான வரட்டிகளுமாக இருந்த கிராமம், 2000ம் ஆண்டுக்குப் பிறகு புது தில்லியின் தொழிலாக மாசு கட்டுப்பாட்டு கெடுபிடிகளால் பல தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து தில்லியிலிருந்து இந்த குடு கிராமத்திற்கு இடம்பெயர்ந்தன.  அப்படிப்பட்ட நிலையில்தான் அந்தக் கிராமம் இன்று மிகப்பெரிய தொழில்நகரமாக  உயர்ந்தது.  இன்றும் உத்திரப்பிரதேசம் மற்றும் தில்லியிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் தினமும் இந்த தொழில் நகரத்திற்கு சென்றுவருகிறார்கள்.  புது தில்லியின் பாலம் சர்வதேச விமான  நிலையத்திலிருந்து வெறும் 10 மையில் தொலைவில் அமைந்திருக்கும் ஹரியான மாநிலத்தின் இந்த புதிய தொழில் நகரத்தின் புதிய பெயர் "குரு கிராமம்"  நட்புடன் கோகி -ரேடியோ மார்கோனி, புது தில்லியிலிருந்து. 
Photos: Mr.Shiv Kumar Pushpakar - The Hindu



Friday, April 8, 2016

Want to be a TV Broadcast Journalists...

Want to be a TV Broadcast Journalists, to collect, verify and analyse information about news and events, and present that information in an accurate, impartial and balanced way. Please mail your details to "Careers@ns7.tv"

Friday, April 1, 2016

இன்று World Autism Awareness Day.ஆசியாவிலேயே புகழ் பெற்று விளங்கும்- NIMHANS & VIMHANS.

ஏப்ரல் 2, 2016 இன்று World Autism Awareness Day.... ஆசியாவிலேயே புகழ் பெற்று விளங்கும், இந்தியாவின் சிறந்த மற்றும் முதன்மையான மனநல சுகாதார நிறுவனமான "மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான" தேசிய நிறுவனம் (NIMHANS-National Institute of Mental Health and Neuro Sciences) பெங்களூரில் அமைந்துள்ளது." இதைப்போலவே மற்றொன்று புது தில்லியில் இருக்கும் "விம்ஹான்ஸ்"(VIMHANS -Vidyasagar Institute of Mental Health, Neuro & Allied Sciences) வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இந்த இரண்டு இடங்களையும் சுற்றிப்பார்த்த என்னுடைய அனுபவம், என் மனதை நெகிழவைத்த அனுபவமும்கூட.............. அங்கு சிகிச்சை பெறுபவர்கள் சராசரி நோயாளிகள் போல இருந்தாலும் சிறு அளவிலான மூளைக் குறைபாடு அல்லது நரம்பியல் குறைபாடு உடையவர்கள்’ என்று அங்கு பணியாற்றும் மருத்துவர் ஒருவர் சொன்னபிறகுதான் தெரிந்தது................ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு நாள் ஏப்ரல் 2, 2016 இன்று World Autism Awareness Day என்று ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட நாள். கோகி-ரேடியோ மார்கோனி.  


அப்போது 1985-87, நான் டாக்டர் ராதா கிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளியில் (நான் படித்த அதே பள்ளியில்) பகுதிநேர ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த நேரம். முன்பு நான் மாணவனாக அதே பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது எனக்கு மேல்நிலைக்கல்வி "தாவரவியல்" ஆசிரியராக இருந்தவர்................................. " திரு ந.கிருஷ்ண சுவாமி சார் (சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கிறார்) என்னிடம் 15 நாட்கள் விடுப்பில் அவரது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான" தேசிய நிறுவனம் (NIMHANS) பெங்களூருவுக்கு சென்றுவர உடன் உதவிக்கு வருமாறும், அதற்குத்தேவையான திட்டமிடவேண்டும் என்று என்னுடைய உதவியை கேட்டபோது, பள்ளி கலைக்கல்வி நாடகக்குழு நிகழ்ச்சி தயாரிப்பில் உதவியாக இருந்த எனக்கு "மருத்துவ சிகிச்சைக்கு திட்டமிடுதலில் " அதுதான் முதல் அனுபவமும்கூட..... 

ஆகவே நிகழ்ச்சி தயாரிப்பு என்பது அவ்வளவு எளிய வேலை இல்லை அதற்க்கென்று தனி அனுபவ அறிவும், செயல் திறனும்  அவசியம் தேவை....... மேலும் பல சுவையான விவரங்களுக்கு வாருங்கள் நமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறைக்கு..... அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி.  http://programmedirector.blogspot.in/2015/11/blog-post_21.html

FREE JOBS EARN FROM HOME