செய்தி:- புது தில்லியின் எல்லையில் இருக்கும் ஹரியான மாநில "குடு காவுன்" என்கிற தற்ப்போதைய தொழில்நகரம் இன்றுமுதல் "குரு கிராம்" என்று (சமஸ்கிருத மொழி) பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் நான் 1991 ல் பார்த்த போது எங்கும் எருமை மாடுகளும், எருமை சான வரட்டிகளுமாக இருந்த கிராமம், 2000ம் ஆண்டுக்குப் பிறகு புது தில்லியின் தொழிலாக மாசு கட்டுப்பாட்டு கெடுபிடிகளால் பல தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து தில்லியிலிருந்து இந்த குடு கிராமத்திற்கு இடம்பெயர்ந்தன. அப்படிப்பட்ட நிலையில்தான் அந்தக் கிராமம் இன்று மிகப்பெரிய தொழில்நகரமாக உயர்ந்தது. இன்றும் உத்திரப்பிரதேசம் மற்றும் தில்லியிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் தினமும் இந்த தொழில் நகரத்திற்கு சென்றுவருகிறார்கள். புது தில்லியின் பாலம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெறும் 10 மையில் தொலைவில் அமைந்திருக்கும் ஹரியான மாநிலத்தின் இந்த புதிய தொழில் நகரத்தின் புதிய பெயர் "குரு கிராமம்" நட்புடன் கோகி -ரேடியோ மார்கோனி, புது தில்லியிலிருந்து.
Photos: Mr.Shiv Kumar Pushpakar - The Hindu
No comments:
Post a Comment