FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Monday, February 14, 2022

*🎶 இந்த "4" 'நாலு' க்கு என்னதாங்க ஸ்பெஷல்?????*🎶 🤣🤣🤣🤣🤣🤣

 🤣444444444444444444🤣

*🎶 இந்த "4" 'நாலு' க்கு  என்னதாங்க ஸ்பெஷல்?????*🎶

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*1. 'நாலு' பேரு 'நாலு' விதமா பேசுவாங்க.*

*🎶பாடல்:-பேசு மனமே பேசு பேதை மனமே பேசு நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு*🎶

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை

கடக்க வேண்டிய நிலைகளும் நான்கு.

பிரம்மசர்யம் , கிருஹஸ்தாச்ரமம்  வானப்ரஸ்தம், சந்யாசம்

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*2. 'நாலு' பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல.*


*🎶பாடல்:- நாலு பேருக்கு நன்றி... அந்த நாலு பேருக்கு நன்றி... தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்.. தோள் கொடுத்து தூக்கி செல்லும்.. நாலு பேருக்கு நன்றி..*🎶


" செத்தாலும், 

நல்லதுக்கும்,

கெட்டதுக்கும் நான்கு பேர் வேண்டும்"

"நாலு பேரை போல வாழ்வில் நல்லா இருக்கனும்.."

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*3. 'நாலு' காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல??*


*🎶பாடல்;-நாலு வகை பூவில் மலர்க்கோட்டை.. அதில் ராணி ஆகிறாய்.. நாலு புறம் வீசும்.. மலர் வாசம் .. அதில் நீ..யே ஆள்கிறாய்...*🎶


*ஏன் இந்த 'நாலு' மட்டும் இவ்ளோ ஸ்பெஷல்...*


சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில்,பெயருடன் நான்கு சேர்ந்து வரும். சில நாலு,நாற்பது மற்றும் எட்டுத்தொகையில் நானூறு,பிரபந்தத்தில் நாலாயிரம்  என  நான்கு வரும்.

நாலடியார், நான்மணிக்கடிகை,இன்னா நாற்பது,இனியவை நாற்பது

அக நானூறு,புற நானூறு,நாலாயிர திவ்ய பிரபந்தம் ..

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*4. 'நாலு' ஊரு சுற்றினாதான் உலகம் புரியும்* 

திசைகள் நான்கு

*🎶பாடல்:-நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும்.. படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது... நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும் தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ..*🎶


ஹரித்வார், அலஹாபாத் (பிரயாகை, த்ரிவேணி சங்கமம்), நாசிக், உஜ்ஜையினி என நான்கு இடங்களில் கும்ப மேளா நடைபெறும்.

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*5. அவரு 'நாலு'ம் தெரிஞ்சவரு,  'நாலு'ம் புரிஞ்சவரு.*


*🎶பாடல்:-இரண்டு கைகள் நான்கானால்.. இருவருக்கேதான் எதிர் காலம்... பகைவர்களே ஓடுங்கள்.. புலிகளிரண்டு வருகின்றன..🎶*


நான்கு வேதங்களும் கற்றவர்களை சதுர்வேதி என்பார்கள்.


வேதங்களை நான்காகப் பகுத்த வேத வியாசர் ,அவற்றை  நாலு ரிஷிக்களிடம்  பரப்பும் பொறுப்பை ஒப்படைத்தார்.அவர்கள்

ருக் – பைலர், யஜூர் — ஜைமினி, சாம — வைசம்பாயன, — அதர்வண — சுமந்து.

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*6. 'நாலு' வார்த்த நறுக்குன்னு நல்லா கேக்கணும்.*

*🎶பாடல்:- அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு.. அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு.. மணக்க மணக்க மயக்க மயக்க..இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க.. அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே.*🎶


அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு..பெண்டிரின் நால்வகை குணங்கள்


"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்"

ஔவையின் நால்வழி நீதி நூலில் கடவுள் வாழ்த்து பாடல்.

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*7.நாலு விஷயம் சொல்றேன் கேளுங்க*

*🎶பாடல்:- நாலு பக்கம் கடலு... அது நடுவுல நான் படகு....படகுல குத்தமில்ல படைச்சவன் சுத்தமில்ல.. மனக்குற மல்லி முள்ள மனசுல வச்சேன் புள்ள...🎶*


நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி...இதில் நாலு என்பது.. நாலடியார்..


சைவ நெறியைப் பரப்பிய நாயன்மார்களில் முதன்மையானவர்கள் நான்கு பேர்.

அப்பர்,சம்பந்தர்,சுந்தரர்,மாணிக்க வாசகர்.இவர்களை நால்வர் என அழைக்கிறோம்.


தசரதனுக்கு நான்கு பிள்ளைகள்.

நான்கு புருஷார்த்தங்கள்..அவை

தர்ம, அர்த்த, காம, மோட்சம்.

பிரம்மாவுக்கு நான்கு தலைகள்.சதுர்முகன் என்ற பெயர் பிரம்மாவுக்கு.

ஆதிசங்கரர் பாரத நாட்டின் நான்கு மூலைகளிலும் நான்கு மடங்கள் நிறுவி,நான்கு சீடர்களை நியமித்தார்.

அக்னிக்கு கம்பீரா,யமலா,மஹதி,பஞ்சமி என நான்கு வடிவங்கள்.

ரத, கஜ, துரக, பதாதி (தேர், யானை, குதிரை, காலாட் படைகள்..என நால் வகைப் படைகள்.

யுகங்களும்..கிரதம், திரேதம், துவாபரம், கலி என நான்கு

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶



🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

*நான்கு என்ற எண், பல சிறப்புக்கள் கொண்டிருந்தாலும்..* 


*🤣4 பத்தி எழுதினத ஒரு நாலு பேராவது படிச்சா சரி... இதைப்பற்றி ஓர் 4 வார்த்தை சொல்லுங்க😂..*


*🎶பாடல்:- நாலு வார்த்த பேசலையே... நான் புடிச்ச பச்சைக்கிளி.. தேடிப்போனேன் பார்க்கலையே.. மாலையிட்ட மச்சி கிளி..*🎶

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶




FREE JOBS EARN FROM HOME