FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Tuesday, April 25, 2017

திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:- "ஷெனாய்" பின்னணி இசையில் அமைந்த சிறப்பான பாடல்கள்....

வலைப்பதிவர் உலகத்தில், எனது வலைப்பதிவு பக்கங்களில் இளைப்பாற வந்த உங்களை அன்போடு வரவேற்கிறேன்.....   

நமக்கு மிகவும் பிடித்த எப்போதும் நமது மனதிலே முணுமுணுத்துக்கொண்டிருக்கும், ஏராளமான மனதிற்கு இதம் தரும், எழுச்சியைத் தரும் திரைப்படப் பாடல்கள், அப்பாடல்களின் பின்னணி இசையில் உருவாகும் மாறுபட்ட, பலவித உணர்ச்சிகளின் எழுச்சியை நமது மனதிற்கு கொண்டுசேர்க்கும் சில வாத்தியக்கருவிகளின் இனிய ஓசை அந்தப்பாடலொடு சேரும்போது,  அந்தப்பாடல் எப்படியெல்லாம் சிறப்பு பெறுகிறது, என்பதை ஒவ்வொரு வாத்தியக்கருவிகளின் இசையை நன்கு உணர்ந்து,  நாம் ரசிப்பதற்காகவே இந்த தொடரை நான் எழுதிவருகிறேன்.  இதை ஏற்கனவே எனது வானொலி நிகழ்ச்சிக்காக தொகுத்திருந்தாலும் மீண்டும் அவைகளை செம்மைப்படுத்தி வலைப்பதிவுகளில் பதிவு செய்தாலும்.... இன்னமும் இவற்றை மெருகேற்றி மேலும் சிறப்பான ஒரு நிகழ்ச்சியாக வடிவமைக்கவேண்டும் என்கிற ஆர்வம், என் நினைவில் ஒரு ஏக்கமாகவே இருந்துவருகிறது.  வாருங்கள் திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு என்ற நமது ஐந்தாவது தொடர் பதிவிற்கு செல்லலாம்.... இந்த நிகழ்ச்சிப்பதிவின் மேலும் பல இசைக்கருவிகளின் பின்னணி இசையிலமைந்த திரைப்படப் பாடல்களை "சங்கீத சாம்ராஜ்யம்" என்கிற எனது முகநூல் பக்கங்களில் காணலாம். 

திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:-"ஷெனாய்" என்கிற பாரம்பரிய இசைக் கருவியின் பங்கு -05 / 108 (Episodu-05 of 108) 
வட இந்தியாவில் திருமணம் போன்ற நன்னாட்களிலும் ஊர்வலங்களிலும் வாசிக்கப்படும் இசைக்கருவி "ஷெனாய்" என்கிற பாரம்பரிய இசைக் கருவி இதுவும் நாதஸ்வரம்  போன்ற குழல்வகை காற்றிசைக் கருவி வகையினை சார்ந்தது. 

தமிழகத்தில் மங்கள இசையாக நாதஸ்வரம் வாசிப்பதைப்போல வட இந்தியாவில் ஷெனாய், மங்களகரமான திருமண நிகழ்ச்சிகளுக்கு வாசிக்கப்படுகிறது. தமிழர்களுக்கு  தேசத் தலைவர்கள் இயற்கை எய்தினால் ரேடியோவில் வாசிக்கப்படும் "ஷெனாய்" சோக இசைக்கருவி என்கிற ஒரு பார்வை உள்ளது. 

குழல் போன்ற இக்கருவி, வாய் வைத்து ஊதும் மேற்புறத்தில் இருந்து கீழாக செல்லும் பொழுது குழாய் விரிவாகிக்கொண்டே போவது. இதில் ஆறு முதல் ஒன்பது துளைகள் இருக்கும். இதில் வாய் வைத்து ஊதும் பகுதியில் இரண்டு இரட்டைச் சீவாளிகள் (நான்கு) இருக்கும்.

உசுத்தாது பிசுமில்லா கான் புகழ்பெற்ற செனாய்க் கலைஞர். 

வட இந்தியர்களின் விழாக்களுக்கான மங்கள இசையாக ஷெனாய் இசை இருந்தாலும், திரைப்படங்களில்  இந்த இசையை சோகங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவே அதிகம்   பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.   

எனக்கு மிகவும் பிடித்த பழைய ஷெனாய் இசைப் பாடல் பற்றி:
ஷெனாய் வாத்தியத்தைப் பொருத்தமட்டில் பிஸ்மில்லாகானுக்கு இணையாக இன்னொரு பிஸ்மில்லாகான் இல்லை. அலி அகம்மத்கான், நந்தலால், ரமேஷ் கலாதிக்கர், அனந்தலால், சரத் குமார், பிஸ்மில்லாகானின் சீடர்களான பாகேஸ்வரி கமர் இவர்கள் அனைவரும் ஷெனாய் வாசிப்பில் விற்பன்னர்கள்தாம். எனினும் பிஸ்மில்லாகானுக்கு நிகராக மற்றொரு பிஸ்மில்லாகான் இல்லை.

@ ஒவ்வொரு வருடமும் மே மாதம் 3ம்  மற்றும் 4&5ம் தேதியில் தாஜ் மஹால் என்ற சலவைக்கல் காவியத்தை, மனைவி மும்தாஜின் நினைவாக உருவாக்கிய மொகலாய மன்னர் ஷாஜஹானின் பிறந்தநாளையொட்டி அவரது சமாதியில் மலரஞ்சலி செலுத்தப்படுகிறது. அனைத்து மதங்களையும் ஒருங்கிணைக்கும் விதமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் "உருஸ் விழா" மூன்று நாட்களிலும் தாஜ் மஹால் வளாகத்தில் ஷெனாய் இசை மற்றும் கவாலி இசை கச்சேரிகள் பெரிய இசைவிழாவாக தாஜ் மஹால் முழுவதும் மெல்லிய மன அழுத்த அதிவுகளை ஏற்படுத்துவதை நேரில் கேட்பவர்களால் மட்டுமே அதை முழுக்கையாக உணரமுடியும். ஒவ்வொரு வருடமும் ஷாஜஹானின் பிறந்தநாளில் நடைபெறும் இந்த "உருஸ்"  விழாவில்  ஷாஜஹானின் சமாதி கழுவி, தூய்மைப்படுத்தப்பட்டு, 810 மீட்டர் அளவிலான மலர்போர்வை சமாதியின்மேல் சாத்தப்படுகிறது. இந்த போர்வைக்கான துணிகள், இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், ஜைனர்கள், முஸ்லிம்கள் என பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் சிறு, சிறு துண்டு துணிகளாக அளித்த காணிக்கைகளால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 

@ தமிழ் திரையுலகின் வீணை எஸ் பாலச்சந்தர், வீணை கற்றுக்கொள்ளும் முன்பே அவர் ஒரு சிறந்த கஞ்சிரா இசைக்கலைஞ்சர், தனது 5வது வயது பிறந்தநாள் கஞ்சிரா பரிசாக கிடைத்ததை கற்றுக்கொண்டு வாசிக்க தொடங்கியவர்  அவரது வாழ்நாளில் அவருக்கு பல இசைக்கருவிகள் பரிசுகளாக கிடைத்தது அவற்றைக்கொண்டே அவர் மேலும் பல இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டு பல் இசைக்கச்சேரிகளை செய்து பெருமைப்பெற்றவர். அவருக்கு ஷெனாய் இசை என்றால்  கொள்ளை பிரியம். திரையிசையில் இந்துஸ்தானிய செனாய் இசையை முதன் முதலாய்  கொண்டுவந்தவர் என்ற பெருமையும் அவருடையதே.    

@ நான் எனது பள்ளியில் பயிலும் நாட்களிலேயே நாகூர் திரு. ஈ எம். ஹனீஃபா அவர்களின் பாடல் கச்சேரி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் எனது பள்ளிக்கூட இஸ்லாமிய  நண்பர்களின் சகோதர சகோதரிகளின் திருமண விழாவில் நடக்கும் அவரது கச்சேரிக்கு எனது நண்பர்கள் என்னை விரும்பி அழைத்துச்சென்றிருக்கிறார்கள். அவரது இசைக்கச்சேரியில் செனாய் இசை நிச்சயம் இருக்கும். இஸ்லாமிய திருமண விழாவில் நெற்றியில் திருநூறு பொட்டு வைத்த இந்து குடும்ப மாணவனாக நானும் தலையில் கைக்குட்டை போட்டுக்கொண்டு மசூதிக்குள் சென்ற அந்த நாட்கள் என்நெஞ்சோடு  என்றும் மறக்கமுடியாத நினைவுகள் ...   
@திரையிசையில் ஷெனாய் பின்னணி இசைக் கருவியின் இசையால் பல திரைப்படப்பாடல்கள் பலரது மனங்களிலும், அன்றும், இன்றும், என்றும் அழியாத இடம்பெற்று விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. இன்றய இந்த நிகழ்சியில் / பதிவில், திரைப்படப் பாடல்களில் ஷெனாய் பின்னணி இசையின் பங்கு பற்றி தெரிந்துகொள்ளலாம். 

முதலில் பழைய திரைப்படப் பாடல்கள் வரிசையில்:-

@ மிக அருமையான மனதை வருடும் ஷெனாய் பின்னணி இசையில் அமைந்த பாடல்:- "நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை.. மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும் வகையில் நான் இல்லை https://youtu.be/F0xW0-EfOrQ

ஷெனாய் பின்னணி இசையில் அமைந்த பாடல் :- ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம்! படம்:- இராமு, பாடியவர்:- PBS, இசையமைப்பாளர்: எம்.எஸ்.வி, பாடலாசிரியர்:கண்ணதாசன். https://youtu.be/Ik38lU80tMg

ஷெனாய் பின்னணி இசையில் அமைந்த பாடல்:-ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் உன் இறைவன் அவனே அவனே என பாடும் மொழி...இந்தப்பாடலில் ஷெனாய் இசை மிக அருமையாக பொருந்தியிருக்கும் அழகே தனி ... படம் - பாலும் பழமும் இசை - விஸ்வநாதன்- ராம்முர்த்தி பாடியவர் - பி. சுசீலா .. https://youtu.be/GN2a7WO3wkI

ஷெனாய் பின்னணி இசையில் அமைந்த:- "கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்" G.ராமநாதன் அவர்கள், அவரின் இசையில் உருவானதுதான் "தெய்வத்தின் தெய்வம்" படப்பாடல்கள் இந்தப் படத்தில் மஹாகவி சுப்ரமணிய பாரதியாரின் அற்புதமான தெய்வீக வரிகளுக்குள் வீணை இசை பின்னிப் பிணைத்திருக்கும் "கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்" அசத்தலான வீணை விருந்துடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடல் தொடர்ந்து பாடல் முழுதும் வீணை இசைதான் ஆக்கிரமித்தாலும் "ஆற்றங் கரை அதனில் முன்னம் ஒருநாள் " என்று ஜானகி அவர்கள் ரொம்பவே உருக்கமாகப் பாடும்போது வட இந்தியக் இசைக் கருவியான ஷெனாய் இசை இடையில் வந்து மனதை எதோ செய்துவிடுகிறது...https://youtu.be/5TtJG4fbA_A

ஷெனாய் பின்னணி இசையில் அமைந்த பாடல்:-  தேவி ஸ்ரீதேவி, தேடி அலைகின்றேன். அன்பு தெய்வம் நீ எங்கே, தேடி அலைகின்றேன்’ ...."சங்கம் வழங்கிய தமிழில், உன் மங்கள கீதத்தைக் கேட்டேன்..." இந்தப் பாடலில் ஷெனாய் இசை, கதாநாயகனின் பரிதாப  நிலையை பாடல்காட்சியில் கொண்டுவரும்  அழகை பாடலைக் கேட்கும் ஒவ்வொருவரின் மனதிலும் அருமையாக முன்னிறுத்துகிறது ...பார்வையற்றவரின் ...அருமையான எண்ணங்களாக..இந்தப் பாடலை தமிழில் பி.சுசீலா அவர்களும், .ஜேசுதாசு அவர்களும் தனித்தனியே பாடிய திரைப்படப் பாடல். பாடலின் திரைப்படம்:- காவ்யமேளா (1965), பலரும் விரும்பிய புகழ்பெற்ற இந்த பாடலை மலையாளப் படத்தில் பி.லீலா அவர்கள் பாடியதைத்தான், தமிழில் பி.சுசீலா அவர்களும், ஜேசுதாசு அவர்களும் படியிருந்தார்கள். இலங்கை வானொலியில் மட்டும் இந்தப்பாடல் பலமுறை ஒலிபரப்பானது குறிப்பிடத்தக்கது. இந்தப்பாடலுக்கு தென்னக நான்கு மொழியிலும் பலர் விரும்பிக்கேட்கும் வகையில் அனைத்துமொழியிலும் ஒரே மெட்டில் பாடப்பட்ட ஒரு ரம்யமான பாடலிது..https://youtu.be/xwXNmcawnDk

ஷெனாய் பின்னணி இசையில் அமைந்த பாடல்:-மதுரா நகரில் தமிழ் சங்கம்,  அதில் மங்கல கீதம் முழங்கும், கவி மன்னனின் காவியம் பொங்கும், அதில் காதலர் உள்ளம் அடங்கும்.. பாடல் திரைப் படம்: பார் மகளே பார், பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா மற்றும் குழுவினர் , நடிப்பு: முத்துராமன் – விஜயகுமாரி.  https://youtu.be/vvJDcqvvVA0

ஷெனாய் பின்னணி இசையில் அமைந்த பாடல்:- மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையை தொட்டு அள்ளி அள்ளி அணைக்க தாவுவேன் நீயும் அச்சத்தோடு விலகி...  MOVIE : SARADHA, MUSIC : KVM,  SINGER : TMS.  https://youtu.be/_WqwmxjP1R0

ஷெனாய் பின்னணி இசையில் அமைந்த பாடல்:  என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய், நான் அவள் பேரை தினம் பாடும் குயில் ...   படம்.-பாலும் பழமும் பாடியவர்கள். டி.எம்.எஸ்- பி.சுஷீலா ...https://youtu.be/AtrOLDpmaT8

ஷெனாய் பின்னணி இசையில் அமைந்த பாடல்:- மலர்களை போல் தங்கை உறங்குகிறாள், அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள், கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள், அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்.. https://youtu.be/9P8Hynotz1M

@ மகிழ்ச்சிக்கும் வாசிக்கப்பட்டிருக்கிறது.”கண்ணன் பிறந்தான்”படம்: பெற்றால்தான் பிள்ளையா-1966 (எம்.எஸ்.விஸ்வநாதன்). "நிலவே என்னிடம் நெருங்காதே” (சோகம்)- ராமு-1966. காதலுக்கும் ஷெனாய்  வாசிக்கப்பட்டிருக்கிறது. https://youtu.be/i2_uKP1KZ2A 




சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.....நடிகை பிரமீளாவே வருத்தமாக மாமனாரிடம் புலம்புகிறார். பின்னணியில் ஷெனாய்  அதை சோகத்தில் பிழிந்து வடிக்கட்டுகிறது.சூப்பர் சோக effect கொடுக்கிறது ஷெனாய்.கொடுத்தவர் எம்.எஸ்.வி.  Shehnai-1Thangapathakkam-74-sodhanaimelsodhanai.mp3

@ மூன்று ஷெனாய் மூன்று வித உணர்ச்சிகளில் வாசிக்கப்படுகிறது.0.06-0.15, 0.43-0.56, 1.06-1.08. கடைசி ஷெனாயை நெருங்கும் திகில் வயலின்(செல்லோ) அருமை. Shehnai-1Mann Vaasanai-Pothivacha-83-SAD.mp3

@ இந்தப்பாடலில்  தனி ஸ்டைல்.0.33ல் கோரஸ் வயலின் ஷெனாயின் மொழியை அப்படியே ராயலாக வாரியிறைப்பது அருமை.கடைசியிலும் ஸ்டைல் அருமை. https://youtu.be/r7hpIQZE4Q0


இந்தப்பாடலில் Fast beat. 0.13-0.26 அட்டகாசம்.ஷெனாயுடன் அதே வேகத்தில் அதே மாதிரி இன்னொரு இசைநாதமும் வருகிறது.அது என்ன? Shehnai-Rakshasadu-86-Giliga Gili Giliga.mp3

@ இந்தப்பாடலில் இசை உணர்ச்சிகள் படுத்தும்.ராஜாவின் இசையில் ஒரு மைல் கல்.  முடிந்தால் முழுப் பாட்டையும் கேட்கவும்.

@ இந்தப்பாடலில் வயலின் சுனாமிகளுக்கிடையே மாட்டிக்கொண்ட ஷெனாயின் கதறல் அருமை.stunning emotions!  "Shehnai-Panner Pushpangal-81-Anantha raagam ketkum.mp3"

@ இந்தப்பாடலில் ஷெனாயின் இசையில் "கன்னிப் பெண்ணின் குஷி"

@ இந்தப்பாடலில் ஷெனாயிக்கு முன் வாசிக்கப்படும் தாளம் ஆத்மாவை வருடும். Shehnai-1Manassinakkare-03- Marakkudayal.mp3

@வித்தியாசமான தாளக்கட்டுடன் ஷெனாய் நாதம் அருமை.கொண்டாட்ட மன நிலை. Shehnai-Ninaivellam -82-Nithya-Kanniponnu.mp3

@ வித்தியாசமானது.புல்லாங்குழல்-ஷெனாய் உரையாடல் அருமை.

@ இந்தப்பாடலில் 0.00-0.10 கிடார்- ஷெனாய் கலவை புதுசு.

@இந்தப்பாடலில் வயலின் - ஷெனாய் உக்கிர உரையாடல். மேஸ்ட்ரோவைத்  தவிர யாரால் போட முடியும்.

@ மிருதங்கம்-ஷெனாய் இவற்றின் இணைவில் ஒரு பாடல் 

@ பாடல்:- அண்ணன் காட்டிய வழியம்மா இது அன்பால் விளைந்த பழியம்மா கண்ணை இமையே கெடுத்ததம்மா என் கையே கழுத்தை நெரித்ததம்மா... படித்தால் மட்டும் போதுமா-1962,  இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்,  இசை: எம்.எஸ். விஸ்வநாதன். https://youtu.be/877VoyR6JkM 

@ பாடல்:  ஒண்ணுமே புரியலை உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது...  பாடியவர் சந்திரபாபு https://youtu.be/L0PIhl4LVrk 

@ பாடல்: பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே. தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்கவிட்டாளே.. படம்: மணமகன் தேவை பாடியவர்: சந்திரபாபு இசை: எம். எஸ். வி.https://youtu.be/6O3aYl8HpPA 

இடைக்கால திரைப்படப் பாடல்கள் வரிசையில் 
@ பாடல்:  ஜின்ஜினிக்கான் சின்னக்கிளி, சிரிக்கும் பச்சை கிளி...( ராஜபார்ட் ரங்கதுரை ) https://youtu.be/XjZP2reKBlU

@ பாடல்: தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தன் கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க ...   படம் : படகோட்டி, இசை : விஸ்வநாதன் & ராமமூர்த்தி, பாடல் வரிகள் : வாலி, குரல் : T.M.சௌந்தரராஜன். https://youtu.be/Sw8yn3JcNXc

@ பாடல்:- ”பாலூட்டி வளர்த்தகிளி பழம் கொடுத்து பார்த்த கிளி”  கவுரவம் படத்தில் அப்பாடலை  முதலில்  பாடியவர்  எம் எஸ்  விஸ்வநாதன் அவர்களே, அதை திரையில் போட்டு பார்த்த எம்.எஸ்.வி., ‘சிவாஜியின் செழுமையான நடிப்போடு, அக்குரல் ஒட்டவில்லை...’ என்றார்.உடனே, டி.எம்.சவுந்திரராஜனை ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்தார். வழக்கமாக, டி.எம்.எஸ்., பாடிய பாடலுக்கு ஏற்ப, வாய் அசைப்பார் சிவாஜி. ஆனால், இதில் அப்படியே தலைகீழாகி, சிவாஜியின் வாய் அசைவிற்கு ஏற்ப, டி.எம்.எஸ்., பாடினார்.   https://youtu.be/54HL4BSefHA

@ பாடல்:-  அவளா சொன்னால் இருக்காது அப்படி எதுவும் நடக்காது நடக்கவும் கூடாது நம்ப முடியவில்லை இல்லை இல்லை... திரைப்படம்:- செல்வம் (1966), இசை கே வி மஹாதேவன் , பாடியவர் டி எம் எஸ் https://youtu.be/3VuXLy-ZWZo

@ பாடல்:- பாடல்: பல்லாக்கு வாங்கப் போனேன்... திரைப்படம்: பணக்காரக் குடும்பம் (1964) பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்,  இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி https://youtu.be/OVsncWv63FE 

@ பாடல்:- "கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு " டிஎம் எஸ்.. https://youtu.be/C7P7I3eAtO4

@ பாடல்:- பொதுவாக எம் மனசு தங்கம் ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம் ... என்கிற முரட்டுக்காளை படப்பாடலில் மலேசியா வாசுதேவன் அவர்களின் குரலில் அமைந்த இந்தப் பாடலில் ஷெனாய் இசையை சற்று வித்தியாசமாக பீப்பீ ஊதுவதைப்போல பயன்படுத்தியிருப்பார் இசையமைப்பாளர் இளையராஜா. https://youtu.be/7SoPNpeJLog 

@ இந்தப் பாடலின் ஆரம்பத்தில் வரும் ஷெனாய் இசை மிக இனிமையான ஆரம்பமாக பாடலை சிறப்பித்திருக்கும்.  பாடல் :- "தென்றல் என்னை முத்தமிட்டது, இதழில் இனிக்க இதயம் கொதிக்க, எல்லோரும் பார்க்க.". பாடலின் படம்: ஒரு ஓடை நதியாகிறது,  https://youtu.be/EBNSOnrJh8E

@ இந்தப் பாடலின் சரணத்தில் வரும் ஆரம்ப இசையில் மட்டும் புல்லாங்குழல் வீணையோடு ஷெனாய் இசை பாடலுக்கு அருமை சேர்த்திருக்கும் பாடல்:- காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தூண்டுதே களைந்து போகும் மேகங்கள் கவனமாகக் கேட்குதே, கேட்ட பாடல் காற்றிலே ... படம்: அம்மன் கோவில் கிழக்காலே, பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமண்யம், இசை: இளையராஜா, வரிகள்: கங்கை அமரன்... https://youtu.be/VwgYDmmqaCc

@ புல்லாங்குழல் vs ஷெனாய்.  இசைக்கு கீழ்வரும் சில பாடல்களை உதாரணமாக சொல்லலாம் இரண்டும் வெவ்வேறு உணர்ச்சிகளில்.புல்லாங்குழல் மென்மையாக.ஷெனாய் கொஞ்சம் பச்சையான சோகம். Shehnai-1-Kadhal Oviyum-82-KuyileKuyile.mp3

@ஷெனாய் இசை வயலின் கலந்த வித்தியாசமான உணர்ச்சிகள்.

@ ஷெனாய் நாதத்தின் மெட்டு ஒரே பாணியில்(pattern) வந்து அசத்துகிறது.

@ குழந்தைத்தனமான ஷெனாயின் இடையே மேகங்களாக கடந்துச் செல்லும் வயலின் கவிதை. Hats off Maestro! பாமரத்தனமாக மெட்டமைக்கப்பாட்டில் இடையிடையே வெஸ்டர்ன் கிளாசிகல் வயலின்கள். Shehnai-1Mullum78 Malarum-Senthazham Poovil.mp3

@ தமிழ்ப்படங்களில் சோகக் காட்சிகளில் ஒப்பாரியாக இசைக்கப்படும்.90க்கு பிறகு மிகவும் குறைந்து விட்டது. முஸ்லீம் கதாபாத்திரங்கள் இருந்தால் கட்டாயம் ஷெனாய் இசை இருக்கும். உதாரணம்-சாதனை/சகலகலாவல்லவன்.

புதிய திரைப்படப் பாடல்கள் வரிசையில்:-
@ பாடல்:- அந்த அரபிக்கடலோரம் ... அந்த அரபிக்கடலோரம் ஒரே அழகைக் கண்டேனே. அந்தக் ... உன் பட்டு தாவணி சரியச் சரிய மீதம் கண்டேனே....திரைப்படம்: Bombay, குரல்+ இசை :A. R. Rahman, இயற்றியவர்: Vairamuthu.  https://youtu.be/V7UpENWElEU

@ பாடல்:- பிரபு தேவா நடனம் அமைத்த "தேவி" படப் பாடல்   "சல் மார்" பத்துமணிவாக்கிலே பச்சையப்பா ரோட்டிலே ஜெனிபர்.... என்ற  பாடலில் ஷெனாய் இசை சற்று புதிய விதத்தில் அமி ஜாக்சன் பயன்படுத்தியுள்ளார்...  https://youtu.be/ydmACPWdZ5E 

@ பாடல்:- ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல். தூணாக தாங்குவது காதல் தான் ஆண்டாண்டு காலங்கள் ...படம்:- உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்  https://youtu.be/9JGwKQysQqI

@ பாடல்:- இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா. அவங்க கண்ணு நம்ம கலருன்னு தெரிஞ்சுபோச்சுடா என்கிற பாடலில் ஷெனாய் இசையை சற்று வித்தியாசமாக பீப்பீ ஊதுவதைப்போல பயன்படுத்தியிருப்பார் இசையமைப்பாளர் அனிரூத்...  https://youtu.be/fN0NlljjGrc

@ பாடல்:-  ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள அத சொல்லப் போறேன் நானும் இந்த சாங்குல. என்கிற பாடலில் ஷெனாய் இசையா? அல்லது ஏதாவது பீப் பீ ஊதுகிறார்களா என்பதைப்போல இசையை சற்று வித்தியாசமாக இசையமைத்திருப்பார்  இசையமைப்பாளர் சி. சத்யா அவர்கள்,  பாடல் இடம்பெற்ற திரைப்படம்- "வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன்" ..... https://youtu.be/nVXtnn3a_3U

இப்படி "ஷெனாய் " என்கிற பாரம்பரிய இசைக் கருவியின் அற்புதமான இசையை மற்ற வாத்தியத்திற்கு தகுந்தாற்போல் பல பாடல்களில் இசைக்கப்பட்டு, திரைப்படப் பாடல்களை மேலும் மேலும் மெருகு சேர்த்திருப்பது மறுக்கமுடியாத உண்மை. காலங்களைக்கடந்த இந்த இசைக்கருவிக்கு ரசிகர்களின் மத்தியில் என்றைக்கும் நிரந்தரமான ஒரு இடம் இருக்கும் என்பது திண்ணம். 

ஷெனாய் வாத்தியக்கருவியில் மேலும் பல திரைப்படப்பாடல்கள், பழைய பாடல், புதிய பாடல் என வரிசைப்படுத்தப்பட்டு எனது சங்கீத சாம்ராஜ்யம் என்கிற முகநூல் பதிவில் பதிவிட்டுருப்பதை கண்டு, கேட்டு ரசிக்கலாம். 

இந்தத்தொடரின் அடுத்த பகுதியில், தமிழ்  திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக் கருவிகளின் பங்கு என்ற பகுதியில் நாம் ரசிக்க இருப்பது "வீணை" வாத்திய இசைக் கருவி எத்தனை வகைகள் உள்ளது அதன் சிறப்பு என்ன? வீணை இசை எப்படியெல்லாம் தமிழ் திரைப்படப்பாடல்களை சிறப்புப்படுத்தியிருக்கிறது  என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.... 
ஒரு முன்னோட்டமாக:- 

@ வீணை ஒரு நரம்பு இசைக்கருவி,  இந்தியாவின் பாரம்பரிய இசைக்கருவியாக பல அதிசய நுட்பாங்களையும் தத்துவங்களையும், தெய்வீக தன்மைகளையும் பொருந்தியதாக இசைக்கலையில் பல தெய்வீக சம்பவங்களும், புராணங்களும் இந்த வீணை இசைக்கருவியை பெருமைப்படுத்தியிருக்கிறது. மிகப்பழமை வாய்ந்த காலகட்டங்களிலேயே வீணை இசைக்கப்பட்டதாக புராணங்கள் கூறினாலும் கி.பி 14ம் நூற்றாண்டிற்கு முபே வீணை இசைக்கருவி இருந்ததற்கான சான்றுகள் இருந்தாலும், 17ம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் வீணை  தற்போதைய வடிவமான, ஒரே சீரான ஒரு உருவத்தை பெற்றது என்பதை 17ம் நூற்றாண்டில் தமிழகத்தின் தஞ்சையை ஆண்ட மன்னர் ஸ்ரீ ரகுநாத வர்மரின் ஆட்சிக்காலத்திய கல்வெட்டுக்களும், தாமிரத்தகடுகள் மற்றும்  ஓலைச் சுவடி குறிப்புகளிலிருந்து தெரியவந்துள்ளது.    

@ சங்க இலக்கியங்கள் என்று போற்றப்பட்ட எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், போன்றவற்றில் கி பி ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்னமே  "யாழ்" என்கிற நரம்பு  இசைக்கருவி, தற்போதைய வீணை நரம்பு இசைக்கருவியைப் போன்றே வடிவமைக்கப்பட்டு இசைக்கப்பட்டது என்ற குறிப்புகள் கூறுகிறது. 

@ 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன. 1. பிரம்மதேவனின் வீணை- அண்டம், 2. விஷ்ணு- பிண்டகம், 3. ருத்திரர்- சராசுரம், 4. கவுரி- ருத்ரிகை, 5. காளி- காந்தாரி, 6. லட்சுமி- சாரங்கி, 7. சரஸ்வதி- கச்சபி எனும் களாவதி, 8. இந்திரன்- சித்தரம், 9. குபேரன்- அதிசித்திரம், 10. வருணன்- கின்னரி, 11. வாயு- திக்குச்சிகை யாழ். 12. அக்கினி- கோழாவளி, 13. நமன்- அஸ்த கூர்மம், 14. நிருதி- வராளி யாழ், 15. ஆதிசேடன்- விபஞ்சகம், 16. சந்திரன்- சரவீணை, 17. சூரியன்- நாவீதம், 18. வியாழன்- வல்லகி யாழ், 19. சுக்கிரன்- வாதினி, 20- நாரதர்- மகதி யாழ், 21. தும்புரு- களாவதி (மகதி), 22. விசுவாவசு- பிரகரதி, 23. புதன்- வித்யாவதி, 24. ரம்பை- ஏக வீணை, 25. திலோத்தமை- நாராயணி. 26. மேனகை- வாணி, 27. ஊர்வசி-லகுவாக்ஷி, 28. ஜயந்தன்- சதுசும், 29. ஆஹா, ஊஹூ தேவர்கள்- நிர்மதி, 30. சித்திரசேனன்- தர்மவதி (கச்சளா)
31. அனுமன்- அனுமதம். 32 ராவணாசுரம். (இந்த வகை வீணையை வாசித்தவன், ராவணன்). 

@ வீணை இசையில் சிறந்த திரைப்படப்பாடல்கள் வரிசையில்:-
@ இந்தப்பாடலில் வீணையின் இசை பாடல்முழுவதும் தனித்தன்மை பெற்று பாடலுக்கு இனிமைசேர்த்திருக்கும் பாடல்:- இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே.. படம் : வீரபாண்டிய கட்டபொம்மன் (16.05.1959) பாடியவர்கள் : பி.பீ.ஸ்ரீநிவாஸ் - பி.சுசீலா https://youtu.be/DjbFwPJgDTE

@ பாடல்: இசை மஹாதேவன்,  இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் ஆண்டு: 1965 திரைப் படம்: வீர அபிமன்யு 
பாடியவர்கள்: பீ. சுசீலா - பி.பி.ஸ்ரீனிவாஸ்,  பாடல் பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன் என்கிற இந்தப்பாடலில் வீணையின் நாதம் நமது மனதையும் மீட்டும் இசையாக மிக இனிமையான பாடல் இது.   https://youtu.be/elN6YABgMn8
@ பாடல்: எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ராதா ஜெயலட்சுமி குரலில் ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் ஒலித்த ‘மனமே முருகனின் மயில்வாகனம்’ இந்தப்பாடலில் வீணையின் இசை பாடலை மேலும் சிறப்படையவைக்கிறது. https://youtu.be/-uKUXueJYDc

@ பாடல் :- மலரே மௌளனமா, மௌனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா என்கிற  இளையராஜா இசையில்  S.P பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ் ஜானகி  அவர்களின் குரலில், கர்ணா திரைப்படத்தில் ஒலிக்கும் இந்தப்பாடலில் வீணையின் நாதம் மிக மென்மையாக இதமாக வருடுகிறது https://youtu.be/AFPOgNmkLZs  
திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:- என்கிற எனது வானொலி நிகழ்ச்சிக்காக தொகுக்கப்பட்ட தொகுப்புகளை வரிசைப்படுத்தி வாரம் ஒரு பதிவுகளாக "சங்கீத சாம்ராஜ்யம்" (https://www.facebook.com/சங்கீதசாம்ராஜ்யம்-Music-Empire-615119045365788/) என்கிற எனது முகநூல் சுவற்றுப் பதிவில் பதிவிடுகிறேன். உங்களுக்குத் பிடித்த இசைக்கருவி மற்றும் அந்த இசைக்கருவியின் திரைப்பாடலை நீங்களும் என்னுடன் சேர்ந்து பதிவுசெய்து மகிழலாம்.  வாருங்கள் நிகழ்ச்சி பதிவின் "சங்கீத சாம்ராஜ்யம்"என்கிற முகநூல் பக்கத்திற்கு உங்களையும் அன்போடு அழைத்துச்செல்கிறேன்.......   
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.   

Friday, April 21, 2017

தோழ'மை' சக்தி தோற்றுப்போகுமா?

பணப்பெட்டி உங்களின் கையில் இருக்கிறது, அதன் சாவி இல்லையே என்று கலக்கமா?

ஒரு நிஜ சம்பவத்தை கூறுகிறேன்.. சில வருடங்களுக்கு முன்பு-என நினைக்கிறேன்.... அனைவரும் அலுவலகம் செல்லும் பரபரப்புமிகுந்த காலைநேரம்,  நான் உட்கார்ந்திருந்த அந்த தனியார் பேரூந்தில் இனிமையான பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது...." பாடல்:-வேலை வேலை வேலை மேல மேல வேலை ஆம்பளைக்கும் வேலைபொம்பளைக்கும் வேலை பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேலை..என்ற அவ்வை ஷண்முகியின் பட பாடல்  ஒலித்துக்கொண்டிருந்தது  https://youtu.be/efx5qNSJDNI 

அன்று நான் அலுவலகம் சென்று கொண்டிருந்த அந்த பேருந்து, வழியில் ஒரு இடத்தில் சட்டென்று நின்றுவிட, பேரூந்து நின்ற இடத்தில் எந்த பேருந்து நிறுத்தமும் இல்லை, சுற்றுவட்டத்தில் வெகு தொலைவில் ஒரு சிறு வீடு தெரிந்தது, சாலையிலும்  யாரும் பேருந்தை நிறுத்தாதபோது, பேருந்து ஏன் நின்றது? பேரூந்தின் சன்னல் வழியே எட்டிப்பார்த்தேன், பேரூந்து ஏன் நின்றது என எனக்கு எதுவும் புரியவில்லை.  பேருந்தின் ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் ஒலி செய்துகொண்டிருந்தார்,.... யாரையோ அழைக்கிறார் என்பது தெரிந்தது. அங்கு நின்றுகொண்டிருந்த அந்தப் பேரூந்தில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் ஓசை சற்று ஒலி குறைக்கப்பட்டிருந்தது.....   "பாடி அழைத்தேன் உன்னை இதோ, தேடும் நெஞ்சம் வாராய் ..என் தேவி..பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை...என்ற ரசிகன் ஒரு ரசிகை படப்பாடல்  ஒலித்துக்கொண்டிருந்தது https://youtu.be/pcWUqm8T-Pw 


வெகு தொலைவில் இருந்த அந்த வீட்டின் கதவு  ஒன்று திறக்கப்பட்டதும் அங்கிருந்து ஒருவர் பேரூந்தை நோக்கி ஓடி வந்தார்..... அப்போது பேரூந்தில் இருந்த அனைவரும் வாருங்கள் ஷர்மா ஜி என்று ஜன்னல் வழியாக கையை அசைத்து அழைத்தது எனக்கு பெரும் வியப்பைத் தந்தது. ஆகவே பேருந்தை நோக்கி ஓடி வரும் அவர் இந்த பேருந்துக்கு சொந்தக்காரரோ? அல்லது இந்த பேருந்தின் நிறுவனத்தில் பெரிய அதிகாரியோ? அல்லது மிகவும் பிரபலமான ஒருவராக இருப்பார், என்று நினைத்தேன்.  இப்போது அந்தப் பேரூந்தில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் முடிவடைந்து வேறு ஒரு பாடல் ஒலிக்கத்தொடங்கியது .. வா வா வா வெண்ணிலா ஆ ஹா, உன் கண்கள் வெண்ணிலா, ஆ ஹா, என் நெஞ்சில் நீயும் இறங்கி, ஏதோ மாயம் செய்தாய் ஆ ஹா, என் அன்பே வா ஆ ஹா, என் அன்பே வா ஆ ஹா  https://youtu.be/J28_McaEl50 

அப்படி வேகமாக ஓடிவந்த அவர் பேருந்தில் ஏறியதும், முதலில் பேருந்து ஓட்டுனரை நலம் விசாரிக்க... தொடர்ந்து பேருந்தில் இருந்த அனைவரையும், முன் பின் தெரியாத என்னையும் சேர்த்து  நலம் விசாரித்து வணக்கம் கூறினார். மரியாதை நிமித்தம் நானும் வணக்கம் கூறி நன்றி தெரிவித்தேன். அப்போது அந்தப் பேரூந்தில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் அடுத்தப் பாடலுக்கு தாவியிருந்தது .. நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்.. https://youtu.be/JjRs0KjYzbo

அந்த நிறுத்தத்திலிருந்து கிளம்பிய பேரூந்து சிறிது தூரம் சென்றுகொண்டிருக்கும்போது நான் எனது அருகில் அமர்ந்திருந்தவரிடம்..... சற்றுமுன் ஓடிவந்து பேரூந்தில் ஏறினாரே "ஷர்மா ஜி"  அவர் உங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவரா? உங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவரா? என கேட்டபோது.  அதற்கு எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் "அதெல்லாம் இல்லை, அவர் எந்த அலுவலகத்தில் வேலை செய்கிறார் என்றே தெரியாது, தினமும் இந்த நேர பேருந்தில் பயணம் செய்பவர். தினமும் நலம் விசாரிப்பவர்.  ஏதோ அவரை எங்களுக்கு பிடித்துவிட்டது, அப்படி தொடங்கி எங்களது நட்பு அறிமுகமானது, நாளடைவில் தொடர்ந்து நாங்கள் அவரின் இனிய நண்பரகளாகிவிட்டோம் என்றார். இப்போது என்னுடைய மனது "மயிண்ட்வாய்ஸ்" இந்தப் பாடலை முணுமுணுத்தது ..." என் பிரெண்ட போல யாரு மச்சான்.. அவன் டிரெண்ட யெல்லாம் மாத்தி வச்சான். .படம்: நண்பன்,  இசை: ஹாரிஸ் ஜெயராஜ், பாடலாசிரியர்: விவேகா, பாடியவர்கள்: கிரிஷ், சுசித் சுரேசன். https://youtu.be/97G5LfyFrrI

பேரூந்தில்  அவசர அவசரமாக ஓடி வந்து ஏறிய "சர்மா ஜி" அனைவரையும் பார்த்து சப்தமாக பேசினார்  "இன்று காலையிலிருந்தே எனக்கு தலைவலியாக இருந்தது, எனவே பேருந்து வருவதற்கு முன்பாகவே சாலை ஓரம் காத்திருக்கமுடியவில்லை" ஆகவே பேருந்தை, சற்று காலதாமதமாக்கியதற்கு மன்னிக்கவும் என்று சொன்னவுடனே .... அந்தப்பெருந்திலிருந்த பலரது கைகளில் தலைவலி மாத்திரையும் தண்ணீர் பாட்டிலும் "சர்மா-ஜி" அவர்களை நோக்கி குவிந்ததைப்பார்த்த எனக்கு மேலும் வியப்பைத்தந்தது. அதோடு பேருந்து ஓட்டுநர் குரல்கொடுத்தார் "சர்மா-ஜி வண்டியை மருந்துக்கடையில் நிறுத்தவா?"  என்று கூறி  ... மேலும் எனது வியப்பை அதிகப்படுத்தினார்....  அந்தநேரத்திற்கு ஏற்றாற்போல் பேருந்தில் இந்தப்பாடல் ஒலித்தது....  நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது  https://youtu.be/g3k1BdS-t2Y 
       
எனக்கு மிகுந்த ஆச்சரியமும், அவரின் ஏராளமான நட்பு வட்டத்தைப்பார்த்து பொறாமையாகவும் இருந்தது.  அன்று நான் அது பற்றி யோசிக்க தொடங்கியதின் விளைவாக,  இன்று எனக்கு கடல் கடந்த நிலையிலும் ஏராளமான நட்பு வட்டங்கள் மேலும் மேலும் தொடர்ந்து பெருகிவருகிறது. அப்படிப்பட்ட ஏராளமான நட்பு வட்டத்தைப் பெற்று ஏதாவது பயனுள்ளதாக இருக்கவேண்டாமா? அப்படி மனம் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது இந்தப்பாடல் இனிமையாக ஒலித்தது.... "கோ" என்ற கே. வி. ஆனந்த் இயக்கத்தில் 2011 இல் வெளிவந்தபடத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல்  "கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு நிட்டம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு..https://youtu.be/700-GQQGm_k

அன்று அப்படி உருவான சிந்தனையில் ஒரு பகுதிதான், இலவச வேலைவாய்ப்பு சேவை என்கிற "FREE JOBS" G+ and Face Book ஜி+ குழுப்பக்கம் மற்றும் முகநூல் குழு  போன்ற உதவும் குழுக்கள் உருவானது ... இருந்தும் முக்கியமாக பொருளுதவி மற்றும் பணம், செலவு போன்ற எந்த செயல்களும் நட்பை முறிக்கும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன்.  என்னதான் கவனமாக இருந்தாலும், ஆர்வமிகுதியால் எனக்கு கிடைத்த சில நன்மைகள் மற்றவர்களுக்கும் கிடைக்கட்டும் என்கிறநோக்கில், சில  நண்பர்களுக்கு சொன்ன சில இலவச ஆலோசனையால் எனது மூக்கை நானே  உடைத்துக்கொண்ட அனுபவங்களும் உண்டு.  

உங்களின் தொடர்பில் இருக்கும் நட்பு வட்டத்தில் அனைவரிடமும் அவர்களின் அலுவலங்களில் இருக்கும் காலி இட வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை கேட்டு வாங்கி சேகரித்து அதை வேலை தேடும் புதிய முகங்களுக்கு இலவசமாக உதவினால்... உங்களின் நட்பு மேலும் மேலும் பெருகும் அல்லவா?. அப்படி உருவாகிய புதிய பல நட்புக்களின் மகிழ்ச்சியால், மேலும் மேலும் நமது வலிமை கூடும் அல்லவா? அப்படிப்பட்டவர்களின் ஏராளமான நட்பு வட்டம் விரிவடைவது, மிகப் பெரிய வரப்பிரசாதம்.  இப்படிப்பட்ட விசாலமான நட்புவட்டம் அமைவது எத்தனைபேருக்கு நடைமுறையில் சாத்தியமாகிறது?. 
நீங்கள் எந்த நாட்டில், எந்த அலுவலகத்தில் வேளையில் இருந்தாலும், உங்களது நிறுவனத்தில் இருக்கும் காலி வேலைவாய்ப்பு விவரங்களை இந்த FREE JOBS G+ மற்றும் FREE JOBS -Face-Book-group முகநூல் குழு பக்கங்களில் பதிவுசெய்தால் அல்லது தெரியப்படுத்தினால், அது புதியதாக படிப்பை முடித்துவிட்டு வேலைதேடுபவர்களுக்கும், தற்போதைய வேலையிலிருந்து மேலும் சிறப்பான வேறு ஒரு வேலை தேடுபவர்களுக்கு உதவியாக இருக்கும் அல்லவா?... இப்படி யோசித்துக்கொண்டிருக்கும்போது இந்தப்பாடல் எனது செவிகளுக்கு உணவளித்தது.... வாரணம் ஆயிரம் படப்பாடல் "அடியே கொல்லுதே! அழகோ அள்ளுதே! உலகம் சுருங்குதே! இருவரில் அடங்குதே! உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்....  https://youtu.be/oNTOpHEpGiA


உங்களின் தொடர்பில் இருக்கும் நட்பு வட்டத்தில், அனைவரிடமும் அவர்களின் அலுவலங்களில் இருக்கும் காலி இட வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை கேட்டு வாங்கி சேகரித்து அதை வேலை தேடும் புதிய முகங்களுக்கு இலவசமாக உதவினால்... காசா? பணமா? இலவசம்தானே..... ஒருமுறை இந்த FREE-JOBS G+ கூகுள் + குழு பக்கத்திற்கு வந்துதான் பாருங்களேன் இந்த முகவரியில் https://plus.google.com/communities/110765544331828488794
 FREE JOBS
இப்போது சொல்லுங்கள் உங்களைச்சுற்றி உங்களுக்கு தெரியாதவர்கள் என நிறைய மனிதர்கள் இருக்கிறார்களா? அப்படியென்றால் நீங்கள் உடனடியாக அனைவரையும் தெரிந்தவர்களாக நடப்பை ஏற்படுத்திக்கொள்ள, அவர்களோடு நலம்விசாரித்து பழக முயற்சிக்கவேண்டுமல்லவா????  மின்னலே படத்திலிருந்து பாடல் "ஓ மாமா மாமா மாமா மாம மாம மாமோமியா, ஓ SUNDAY MONDAY TUESDAY ஏழு நாளும் KEEP IT FREEயா, பிஸ்மில்லா பிஸ்மில்லா நம் வாழ்வை வாழ்வோம் PLAYFUL ஆ, ஊ லால்லா ஊ லால்லா இது WESTERN கானா கோபாலா, உலகத்தை இது கலக்கிடும் கலக்கிடும் மின்சாரப் பாடலா" ... https://youtu.be/TpbFPbxi8Fk

ஏராளமான பணம் நிறைந்த பணப்பெட்டி உங்களின் கையில் இருக்கிறது, அதன் சாவி இல்லையே என்று கலக்கமா?  குரல் கொடுங்கள்... நலம் விசாரியுங்கள்... ஏராளமான நட்புக் கைகள் உங்களுக்காக உங்கள் பணப்பெட்டியின் சாவியை தேடிக் கொண்டுவந்து உங்கள் கையில் தருவார்கள்....  (ம் ம் ....உங்களது மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது... இருந்தாலும் கொஞ்சம் உண்மையை பேசுங்களேன்).... 
பாடல் .....கொஞ்சம் உளறிக் கொட்டவா? கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா? கொஞ்சம் வாயை மூடவா? கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா?... பாடலின் படம்: "நான் ஈ" இசை: மரகதமணி பாடியவர்: விஜய் பிரகாஷ்... https://youtu.be/FWuAwZs13SI    

என்ன நண்பர்களே இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஏன் என்ற கேள்விஇங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்றஎண்ணம். கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை..... https://youtu.be/2wX5E6qlqdI 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்க்கோனி....புது தில்லியிலிருந்து.   

Friday, April 7, 2017

உலகின் எதோ ஒரு முனையிலிருந்து ஒருவர், மற்றவரது தொலைப்பேசி செயலியை முடக்கி செயல்படாமல் செய்யமுடியும் என்றால்...

ஏமாறுவதற்கும், ஏமாற்றப்படுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது...  
அதிர்ச்சிதரும் செய்தி: சென்னையில் தொலைப்பேசி சிம்கார்டுகளை முடக்கி வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணம் திருடப்பட்டதால் அந்த குறிப்பிட்ட தொலைப்பேசி நிறுவனத்திற்கு  சென்னை பெரு நகர காவல்துறை, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது...... 



தெரிந்தே ஏமாற்றப்படுவதற்கான உதாரணமாக...  ஒரு கற்பனை தொலைப்பேசி உரையாடல்......        


ஹலோ ... ஐயா என்னய்யா சொல்றீங்க... 

நீங்க "ரி" நிறுவனத்திலிருந்து பேசுறீங்களா, சரி... என்னதுங்கய்யா? 
ஒருவருடம் இலவச சேவையா? ... 

ஆஹா ரொம்ப அருமையா இருக்கே... ஆமாம்யா... நான் "காற்று- சொல்லு" நிறுவனத்தின் தொலைப்பேசி எண்களைத்தான் உபயோகிக்கிறேன்... 

அட ஆமாங்க...  அந்த எண்ணிலிருந்துதான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் ....  

அட என்ன சொல்றீங்க ...இந்த "காற்று-சொல்லு" தொலைபேசி எண்னை   "ரி" தொலைபேசி எண்களாக இலவசமா  மாற்றித்தருவீங்களா?  அட ரொம்ப நல்லாயிருக்கே... அப்புறம்.... 

என்னது? .... என்னைப்பற்றிய விவரங்களை தரணுமா?... சரி குறித்துக்கொள்ளுங்கள் ... என் பெயர், பிறந்த தேதி, ஊர்,....அப்புறம் .. 

...வங்கி கணக்கு என் மற்றும் விவரமா? அது எதுக்குங்க?... 

ஓ..... இப்போது வரை உபயோகித்த "காற்று-சொல்லு" தொலைபேசி கட்டணத்தை கட்டி முடித்தபிறகுதான், ரி- நிறுவனத்தின் இலவச சேவையைப் பெறமுடியுமா!!... 

அப்பா சரி எல்லா விவரத்தையும் குறித்துக்கொள்ளுங்கள் ....  

ஹலோ "ஏம்ப்பா இந்த ஒரு வருட இலவச சேவை எப்போதிலிருந்து எனக்கு கிடைக்கும்? அட இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாகவா?  ரொம்ப நன்றிங்க ... சீக்கிரமா இலவச இணைப்பு குடுங்க"  இந்த தொலைப்பேசி கட்டணமாவது, சிலவு இல்லாம மிச்சமாகட்டும்....  

அடுத்து இரண்டாவது நாள் முதல் அவரது தொலைப்பேசி இயங்காமல் போனது... தொலைப்பேசியில் பேசக்கூட முடியாது போனதால் அந்த தொலைப்பேசி நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்திற்கு நேரில் சென்று கேட்கும்போது வாடிக்கையாளர் மைய அதிகாரி கூறிய விவரத்தைக் கேட்ட அவருக்கு பெரிய அதிர்ச்சி உண்டானது காரணம் "நீங்கள்தானே உங்களது தொலைப்பேசி, தொலைந்துபோனது என்று கூறி, அதே எண்ணில் வேறு ஒரு இணைப்பை பெற்றிருக்கிறீர்கள்" அது கூட உங்களுக்கு தெரியாதா?"   என்று கேட்க ...   நான் அப்படி எந்த புகாரும் தரவில்லை என்று கூற..... விளைவுகள் என்னவாகியிருக்கும் என்று உங்களுக்கும் புரிகிறதா? 

பிறகு மீண்டும் ஒரு விண்ணப்பம் தரப்பட்டு அவரது அதே பழைய தொலைப்பேசி எண்களில் புதிய இணைப்பை பெற்றபோது,  அவரது வங்கியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது..... அதாவது ...." உங்களது வங்கியிருப்பு  பூஜ்யமாகி,  வாங்கிக்கணக்கிலிருந்த வங்கி வைப்புத் தொகை- இருப்பு,  முழுவதுமாக செலவு செய்யப்பட்டிருப்பதால் உடனே வங்கியை தொடர்புகொள்ளவும்"....என்றிருந்ததை பார்த்து பதறிப்போய் வங்கியை அணுகினால்... 

அவரது வாங்கிக்கணக்கிலிருந்த அனைத்துப்பணமும் திருடப்பட்டிருந்தது தெரியவர ... அவரது வாங்கிக்கணக்கிலிருந்து யாருடைய வாங்கிக்கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது என்று தெரிந்துகொண்டு அவரை பிடிக்கலாம் என்று பார்த்தால் யாரோ "வா. அக்ரம் - பாகிஸ்தான்"  என்று தெரியவர எங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்று அவனை பிடிப்பது? ... கோவிந்தா கோவிந்தா... என்று கையை தலையில் வைத்துக்கொண்டு   இடிந்துபோய் உட்கார்ந்தவர்களைத்தான் காணமுடிகிறது...          


தெரியாமல் ஏமாறுவதற்கான ஒரு உதாரணம்:- 
அந்தப்பெண்மணி அலுவலகம் செல்லும் வழியில் தனது கைப்பையை தொலைத்துவிட்டார். அதோடு அதிலிருந்த தனது கைத் தொலைபேசியையும், வங்கிக்கணக்கு ATM அட்டை மற்றும் வாங்கி காசோலை "செக் புத்தகம்" போன்றவைகளும் தொலைந்துபோனது.

அந்தப்பெண்மணியின் கணவருக்கு ஒரு குறுஞ்செய்தி SMS வந்தது அந்த செய்தியில் ATM -PIN ரகசிய பின் எண்களை மறந்துவிட்டேன் உடனே SMS (எஸ் எம் எஸ்) செய்யவும் என்றிருந்தது. 

தனது மனைவிதான் செய்தி அனுப்பியிருக்கிறார், என்று நினைத்து அந்தப்பெண்மணியின் கணவரும் உடனே வங்கியின் ATM ரகசிய பின் எண்களை SMS (எஸ் எம் எஸ்) செய்தார்.

அடுத்த சில நிமிடங்களில் அந்தப்பெண்மணியின் வங்கிக்கணக்கில் இருந்த பணம் முழுவதும் ATM இயந்திரத்தின் வழியே எடுக்கப்பட்டிருந்தது. 

இப்போது வானொலியில் இந்தப் பாடல் ஒலித்தது " ஏமாற சொன்னது நானா.. என்மீது கோபம் ஏனோ?... ....எங்கே நீ சென்றாலும் விடமாட்டேன்.... லெப்ட், ரைட், லெப்ட், ரைட், அபோட்டேன்.... 
  
உலகின் எதோ ஒரு முனையிலிருந்து ஒருவர், மற்றவரது தொலைப்பேசி செயலியை முடக்கி செயல்படாமல் செய்யமுடியும் என்றால்... தொலைபேசிவழியாக வங்கிக்கணக்கை இயக்கும் சேவையை பயன்படுத்துமாறு கவர்ச்சிகரமான திட்டங்களை அதிரடியாக அறிவித்து வாடிக்கையாளர்களை கவரும் வாங்கி நிறுவனங்கள், அதனால் உண்டாகும் பாதிப்புகளைப்பற்றிய விழிப்புணர்வை மட்டும் மிக அமைதியாக வாசிக்கிறார்களே... அப்படியென்றால் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் உயர்ந்த படிப்பறிவும், கணினி செயலி பயன்பாட்டுத் தொழில்நுட்பமும்  தெரிந்தவர்கள் என்கிற அர்த்தத்தில், வாங்கி நிறுவனங்கள் செயல்படுகிறதோ?  விஷம் உயிருக்கு ஆபத்து என்று கூறிவிட்டு... விஷத்தை குடியுங்கள் என்று கூறுவது புத்திசாலித்தனம் என்கிற என்னமா?        

"MINDS ON FIRE" அறியாமை என்கிற இருட்டை விரட்டி, உங்களது மனதில் எப்போதும் பிரகாசமாக எரியும் அறிவு விளக்கை ஏற்றிவையுங்கள்.... விழித்திருங்கள் ... செழித்திருங்கள்...  
தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்...  
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. 

பாடல்:- 
"ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே"
https://youtu.be/Qqt3D_umg-o
பாடல் இடம்பெற்ற திரைப்படம்: குடியிருந்த கோவில்(1969), இயற்றியவர்: வாலி அவர்கள், இசை: கே.வி. மஹாதேவன் அவர்கள், குரல்: டி.எம். சௌந்தரராஜன் அவர்கள்... 

FREE JOBS EARN FROM HOME