FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, April 7, 2017

உலகின் எதோ ஒரு முனையிலிருந்து ஒருவர், மற்றவரது தொலைப்பேசி செயலியை முடக்கி செயல்படாமல் செய்யமுடியும் என்றால்...

ஏமாறுவதற்கும், ஏமாற்றப்படுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது...  
அதிர்ச்சிதரும் செய்தி: சென்னையில் தொலைப்பேசி சிம்கார்டுகளை முடக்கி வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணம் திருடப்பட்டதால் அந்த குறிப்பிட்ட தொலைப்பேசி நிறுவனத்திற்கு  சென்னை பெரு நகர காவல்துறை, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது...... 



தெரிந்தே ஏமாற்றப்படுவதற்கான உதாரணமாக...  ஒரு கற்பனை தொலைப்பேசி உரையாடல்......        


ஹலோ ... ஐயா என்னய்யா சொல்றீங்க... 

நீங்க "ரி" நிறுவனத்திலிருந்து பேசுறீங்களா, சரி... என்னதுங்கய்யா? 
ஒருவருடம் இலவச சேவையா? ... 

ஆஹா ரொம்ப அருமையா இருக்கே... ஆமாம்யா... நான் "காற்று- சொல்லு" நிறுவனத்தின் தொலைப்பேசி எண்களைத்தான் உபயோகிக்கிறேன்... 

அட ஆமாங்க...  அந்த எண்ணிலிருந்துதான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் ....  

அட என்ன சொல்றீங்க ...இந்த "காற்று-சொல்லு" தொலைபேசி எண்னை   "ரி" தொலைபேசி எண்களாக இலவசமா  மாற்றித்தருவீங்களா?  அட ரொம்ப நல்லாயிருக்கே... அப்புறம்.... 

என்னது? .... என்னைப்பற்றிய விவரங்களை தரணுமா?... சரி குறித்துக்கொள்ளுங்கள் ... என் பெயர், பிறந்த தேதி, ஊர்,....அப்புறம் .. 

...வங்கி கணக்கு என் மற்றும் விவரமா? அது எதுக்குங்க?... 

ஓ..... இப்போது வரை உபயோகித்த "காற்று-சொல்லு" தொலைபேசி கட்டணத்தை கட்டி முடித்தபிறகுதான், ரி- நிறுவனத்தின் இலவச சேவையைப் பெறமுடியுமா!!... 

அப்பா சரி எல்லா விவரத்தையும் குறித்துக்கொள்ளுங்கள் ....  

ஹலோ "ஏம்ப்பா இந்த ஒரு வருட இலவச சேவை எப்போதிலிருந்து எனக்கு கிடைக்கும்? அட இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாகவா?  ரொம்ப நன்றிங்க ... சீக்கிரமா இலவச இணைப்பு குடுங்க"  இந்த தொலைப்பேசி கட்டணமாவது, சிலவு இல்லாம மிச்சமாகட்டும்....  

அடுத்து இரண்டாவது நாள் முதல் அவரது தொலைப்பேசி இயங்காமல் போனது... தொலைப்பேசியில் பேசக்கூட முடியாது போனதால் அந்த தொலைப்பேசி நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்திற்கு நேரில் சென்று கேட்கும்போது வாடிக்கையாளர் மைய அதிகாரி கூறிய விவரத்தைக் கேட்ட அவருக்கு பெரிய அதிர்ச்சி உண்டானது காரணம் "நீங்கள்தானே உங்களது தொலைப்பேசி, தொலைந்துபோனது என்று கூறி, அதே எண்ணில் வேறு ஒரு இணைப்பை பெற்றிருக்கிறீர்கள்" அது கூட உங்களுக்கு தெரியாதா?"   என்று கேட்க ...   நான் அப்படி எந்த புகாரும் தரவில்லை என்று கூற..... விளைவுகள் என்னவாகியிருக்கும் என்று உங்களுக்கும் புரிகிறதா? 

பிறகு மீண்டும் ஒரு விண்ணப்பம் தரப்பட்டு அவரது அதே பழைய தொலைப்பேசி எண்களில் புதிய இணைப்பை பெற்றபோது,  அவரது வங்கியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது..... அதாவது ...." உங்களது வங்கியிருப்பு  பூஜ்யமாகி,  வாங்கிக்கணக்கிலிருந்த வங்கி வைப்புத் தொகை- இருப்பு,  முழுவதுமாக செலவு செய்யப்பட்டிருப்பதால் உடனே வங்கியை தொடர்புகொள்ளவும்"....என்றிருந்ததை பார்த்து பதறிப்போய் வங்கியை அணுகினால்... 

அவரது வாங்கிக்கணக்கிலிருந்த அனைத்துப்பணமும் திருடப்பட்டிருந்தது தெரியவர ... அவரது வாங்கிக்கணக்கிலிருந்து யாருடைய வாங்கிக்கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது என்று தெரிந்துகொண்டு அவரை பிடிக்கலாம் என்று பார்த்தால் யாரோ "வா. அக்ரம் - பாகிஸ்தான்"  என்று தெரியவர எங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்று அவனை பிடிப்பது? ... கோவிந்தா கோவிந்தா... என்று கையை தலையில் வைத்துக்கொண்டு   இடிந்துபோய் உட்கார்ந்தவர்களைத்தான் காணமுடிகிறது...          


தெரியாமல் ஏமாறுவதற்கான ஒரு உதாரணம்:- 
அந்தப்பெண்மணி அலுவலகம் செல்லும் வழியில் தனது கைப்பையை தொலைத்துவிட்டார். அதோடு அதிலிருந்த தனது கைத் தொலைபேசியையும், வங்கிக்கணக்கு ATM அட்டை மற்றும் வாங்கி காசோலை "செக் புத்தகம்" போன்றவைகளும் தொலைந்துபோனது.

அந்தப்பெண்மணியின் கணவருக்கு ஒரு குறுஞ்செய்தி SMS வந்தது அந்த செய்தியில் ATM -PIN ரகசிய பின் எண்களை மறந்துவிட்டேன் உடனே SMS (எஸ் எம் எஸ்) செய்யவும் என்றிருந்தது. 

தனது மனைவிதான் செய்தி அனுப்பியிருக்கிறார், என்று நினைத்து அந்தப்பெண்மணியின் கணவரும் உடனே வங்கியின் ATM ரகசிய பின் எண்களை SMS (எஸ் எம் எஸ்) செய்தார்.

அடுத்த சில நிமிடங்களில் அந்தப்பெண்மணியின் வங்கிக்கணக்கில் இருந்த பணம் முழுவதும் ATM இயந்திரத்தின் வழியே எடுக்கப்பட்டிருந்தது. 

இப்போது வானொலியில் இந்தப் பாடல் ஒலித்தது " ஏமாற சொன்னது நானா.. என்மீது கோபம் ஏனோ?... ....எங்கே நீ சென்றாலும் விடமாட்டேன்.... லெப்ட், ரைட், லெப்ட், ரைட், அபோட்டேன்.... 
  
உலகின் எதோ ஒரு முனையிலிருந்து ஒருவர், மற்றவரது தொலைப்பேசி செயலியை முடக்கி செயல்படாமல் செய்யமுடியும் என்றால்... தொலைபேசிவழியாக வங்கிக்கணக்கை இயக்கும் சேவையை பயன்படுத்துமாறு கவர்ச்சிகரமான திட்டங்களை அதிரடியாக அறிவித்து வாடிக்கையாளர்களை கவரும் வாங்கி நிறுவனங்கள், அதனால் உண்டாகும் பாதிப்புகளைப்பற்றிய விழிப்புணர்வை மட்டும் மிக அமைதியாக வாசிக்கிறார்களே... அப்படியென்றால் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் உயர்ந்த படிப்பறிவும், கணினி செயலி பயன்பாட்டுத் தொழில்நுட்பமும்  தெரிந்தவர்கள் என்கிற அர்த்தத்தில், வாங்கி நிறுவனங்கள் செயல்படுகிறதோ?  விஷம் உயிருக்கு ஆபத்து என்று கூறிவிட்டு... விஷத்தை குடியுங்கள் என்று கூறுவது புத்திசாலித்தனம் என்கிற என்னமா?        

"MINDS ON FIRE" அறியாமை என்கிற இருட்டை விரட்டி, உங்களது மனதில் எப்போதும் பிரகாசமாக எரியும் அறிவு விளக்கை ஏற்றிவையுங்கள்.... விழித்திருங்கள் ... செழித்திருங்கள்...  
தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்...  
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. 

பாடல்:- 
"ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே"
https://youtu.be/Qqt3D_umg-o
பாடல் இடம்பெற்ற திரைப்படம்: குடியிருந்த கோவில்(1969), இயற்றியவர்: வாலி அவர்கள், இசை: கே.வி. மஹாதேவன் அவர்கள், குரல்: டி.எம். சௌந்தரராஜன் அவர்கள்... 

No comments:

FREE JOBS EARN FROM HOME