FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Sunday, January 17, 2016

அதிர்ச்சி :-(சிம்லா) இந்தியாவில் எரிமலையா? வேடிக்கப்போகுதா?

அதிர்ச்சி :- (சிம்லா) இந்தியாவில் எரிமலையா? வேடிக்கப்போகுதா?
(குறிப்பு:- 28-04-2013 கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டெக்டானிக் ஆய்வியல் நிபுணர் ஜேம்ஸ் ஜாக்சன் கூறும்போது, “நேபாள பூகம்பத்துக்குப் பிறகான பூமியின் ஊடாக சென்ற ஒலி அலைகளின் தரவுகளின் படி தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பூமியின் பாறை 3 மீட்டர்கள் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இது மிகப்பெரிய இடப்பெயர்வு” என்று கூறினார். இந்தியாவைச் சுமக்கும் கண்டத்தட்டு, ஐரோப்பா, ஆசியாவை தாங்கும் கண்டத்தட்டை நோக்கி ஆண்டுக்கு 2 செமீ நகர்கிறது. தற்போது பூகம்பம் ஏற்பட்ட ஃபால்ட் இந்த இரண்டு கண்டத்தட்டுகளுக்கு இடையே உள்ளது.) 

சென்ற பத்து மாதமாக இந்தியாவில் யாருக்கும் தெரியாமல் உலக வெப்பமயமாதலின் இயற்க்கை தனது அறிகுறிகளை வெளிக்காட்டத் தொடங்கிவிட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லா போன்ற இந்தியாவின் வட மாநிலங்களில் இதுவரை கிட்டத்தட்ட 1500 மனிதர்களுக்குமேல் (விலங்குகள் இன்னும் கணக்கிடப்படவில்லை) மஞ்சள் காமாலை நோய் ஏற்ப்பட்டு கடுமையான சிகிச்சைக்காக ஹிமாச்சல் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மருத்துவமனையில் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். விவரம் அறிந்த புதுதில்லியின் அனைத்திந்திய மருத்துவக்கழகம் விழித்துக்கொண்டு  ஆராய்ந்துவருகிறது.  இன்னமும் உறுதிபடுத்தப்படாத தகவலின்படி மேற்கண்ட இரண்டு வட மாநிலங்களின் நிலத்தடி நீரில் அடர் கந்தகம் கலந்த நீராக வெளிவருவது கண்டறியப் பட்டுள்ளதாக தெரிகிறது. http://www.tribuneindia.com/news/himachal/more-than-500-jaundice-cases-in-shimla/180093.html


பின்குறிப்பு:- ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லா பகுதியில்தான் 15-01-2016 நிலவரப்படி 1000-க்கும் அதிகமானவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய்  தாக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகவே அந்தப்பகுதிக்கு சுற்றுலா செல்பவர்கள் உணவகங்களில் நீர் அருந்தவோ உணவு உன்னாவோ உகந்ததல்ல என தெரிகிறது, உங்களது உறவினர்கள் யாராவது ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்தால் நிலத்தடி நீரை பயன்படுத்தவேண்டாம் என எச்சரிக்கை செய்வது சிறந்தது. தற்போது நான் பணியாற்றிக்கொண்டிருக்கும் உத்திரா கண்ட மாநிலத்தின் நிலத்தடி நீரும் சுவை மாறியிருப்பது என்னால் உணரமுடிகிறது. கங்கை நதிப்படுகைக்கு அருகில் இருப்பதால் நீரின் நிறம் தெளிவாக இருந்தும் நீரின் சுவை சென்ற ஆண்டைப்போல் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. 

1992-ம் ஆண்டு முதல் நில  நடுக்கம் சார்ந்த பல புள்ளிவிவரங்களை சேகரித்து ஆராய்ந்து வருகிறேன்.    நான் ஏற்க்கனெவே எனது மே-2015 மாத பதிவில் குறிப்பிட்டதுபோல இந்தியாவின் வடமாநில எல்லைப்பகுதியில் மிகப்பெரிய பூகம்பம் நிகழ வாய்ப்புக்கள் உள்ளது என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் நிருபிப்பதைப்போல் இருப்பதால் நமது இந்தியாவைச் சுமக்கும் கண்டத்தட்டு பூமி அடுக்குகளுக்கு கீழ் (பூமித்தட்டின் கீழ்) மிக உயர்ந்த வெப்பம் நிறைந்த எரிக்குழம்பு ஒன்று உருவாகியுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது. இந்தியாவின் வடமாநில எல்லைப்பகுதியில் பல இடங்களில் நிலத்தடிநீர் கெட்டுப்போனது எரிகுழம்புகளின் வீரியம் கலந்திருக்குமோ என்று தற்ப்போது ஆராசிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி இந்த ஆராச்சி அதை உருதிபடுத்துமேயானால், வட இந்தியாவில் ஒரு பெரிய எரிமலை உருவாகுமா? என்பது தெள்ளத் தெளிவாகிவிடும். 

வழக்கமாக பூமிக்கடியில் உள்ள ‘டெக்டானிக் பிளேட்ஸ்’ என்றழைக்கப்படும் கண்டத் தட்டு கள் நகர்வதாலும், ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதாலும் நிலநடுக் கம் ஏற்படுகிறது.  இந்தியா - யுரேசியா கண்டத் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வ தற்கு காரணமாகும் ஒரு முக்கிய ‘ஃபால்ட்’ நேபாளத்தில் இருக்கிறது. இந்த ஃபால்ட்டில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் இருப்ப தாக கண்டறியப்பட்டுள்ளன.

கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழுக்கு, ‘சென்டர் பார் மேத்தமெட்டிக்கல் மாடலிங் அண்ட் கம்ப்யூட்டர் சிமுலேஷன்’ என்ற ஆராய்ச்சி மையத்தின், நிலநடுக்கவியல் ஆய்வாளர் வினோத் குமார் கவுர் என்பவர் பேட்டி அளித்துள்ளார். அதில், ‘‘இந்த ஃபால்ட்டில் அதிகமான ஆற்றல் சேர்ந்துள்ளதற்கான ஆதாரங்களை கணக்கீடுகள் காட்டுகின்றன. 8 புள்ளி அளவுக்கு ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் பதிவாவதற்கான வாய்ப்பு இந்த ஃபால்ட்டில் உள்ளது. சென்ற நேபாள பூகம்பத்திற்குப் பிறகு பல இயற்க்கை மாற்றங்கள் இந்தியாவில் ஏற்ப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. நேபாள பூகம்பத்திற்குப் பிறகு இந்தியாவைச் சுமக்கும் கண்டத்தட்டு கிழக்கு நோக்கி இந்தியாவின் தென் பகுதிக்கு கீழ் பக்கமாக 6 மீட்டார் அளவு நகர்ந்திருக்கிறது என்ற புவியியல் ஆராய்ச்சியாளர்களின் விவரத்தை  ஏற்க்கனெவே எனது முந்தய பதிவில் குறிப்பிட்டிருந்தேன் அதன் விளைவாகத்தான் தென்னிந்தியாவின் நிலப்பரப்பு கிழக்கு நோக்கி நகர்ந்திருக்கலாம் அதனால் ஏற்ப்பட்ட காற்றுமண்டலத்தின் அழுத்தம் காரணமாக கடல்நீர் மேகங்களால் உறுஞ்சப்பட்டு தென் மாநிலங்களில் மழையாக கொட்டித்தீர்த்தது என தீர்மானிக்கலாம். அதுமட்டுமல்ல தற்போது இந்தியாவைச் சுமக்கும் கண்டத்தட்டு (இந்திய பூமித் தட்டானது) ஆஸ்திரேலிய மற்றும் இந்தோனேசிய கடல் எல்லையில் கண்டத்தட்டு விளிம்பு உள்ளதால், கடலின் வெப்பம் அதிகமாகும்போது ஆஸ்திரேலியாவின் சுண்ணாம்புப்  பாரை நிறைந்த கடல் எல்லை நிலபரப்பு வேப்பத்தின்காரனமாக சுண்ணாம்பு பாறை இருகும்போது  இந்தியாவைச் சுமக்கும் கண்டத்தட்டு இளகி உடையும் அபாயம் உள்ளது அப்படி உடையும்போது கடலில் இந்திய நிலப்பரப்பின் கண்டத்தட்டானது அமிழும்போது மிகப்பெரிய சுனாமி அலைகள் உருவாகலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஆஸ்திரேலியாவின் கடல் ஆராய்ச்சியாளர் ஒருவர், அப்படி ஒரு வாப்பு இருப்பதாக ஒப்புக்கொள்கிறார். ஆழிப் பேரலையான சுனாமியானது கடல் பகுதி ஆழமாக இருக்கும் சிங்கப்பூர் மலேசியா போன்ற இடங்களில் அதிக ஆபத்தை ஏற்ப்படுத்தாது. அதிகம் ஆழமில்லா கடற்ப பரப்பைக் கொண்ட இந்தியாவின் தென் மாநிலங்களுக்குத்தான் அதிக அபாயம் உள்ளது. 

@ 11-01-2016-இந்தோனேசியா 6.8 ரிக்டர் அலகில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:-நிலநடுக்கத்தால் தாலத் தீவில் கட்டிடங்கள் குலுங்கி பொதுமக்கள் பெரும் பீதியடைந்தனர். வீடுகளைவிட்டு வெளியேறிய அவர்கள் அதிகாலை வரை வீதிகளிலேயே தஞ்சம் அடைந்திருந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படவாய்ப்பு இல்லை என பசுபிக் சுனாமி ஆய்வு மையம் கூறியுள்ளது.

04-01-2016  A powerful earthquake shook parts of India, Bangladesh, Bhutan and Myanmar at 4:35 a.m. local time Monday morning, leaving at least four dead and 100 more injured.People rushed out of their homes before dawn on Monday morning as the tremor knocked over furniture and caused books to fall from their shelves, according to the Associated Press.

@  25-12-2015 ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 6.2 ஆகி பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. ஆப்கனிஸ்தானில், உள்ளூர் நேரப்படி, 25-12-2015 இரவு 11.44க்கு தலைநகர் காபூலுக்கு வடகிழக்கே 280 கிலோ மீட்டர் தொலைவில், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

@ வங்க தேசத்தில் இன்று காலை 11-12-2015 லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் வடமாநிலங்களிங்களான அசாம், மேகாலாயா, மிசோரம், திரிபுரா, நாகாலாந்த், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், ஆகிய மாநிலங்களிலும் இது உணரப்பட்டது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. அதிகாலை 3.45 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 12 விநாடி வரை இந்த நிலநடுக்கம் இருந்ததாக தெரிகிறது.

@ 13-06-2015 அந்தமான் பகுதியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அலகில் 5.2 பதிவான இந்த நிலநடுக்கம், 38 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

@ 13-05-2015 இன்று  ஜப்பான் கடற்பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடகிழக்கு கடற்பகுதியில் 6.8 என்ற ரிக்டர் அளவில் இன்று காலை 6 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியாகி கடற்பகுதியில் ஹோன்சு தீவு அருகே 46 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த மோசமான நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகள் தாக்கியதில் ஜப்பானில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.  இருப்பினும் இன்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

@ நேபாளம், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நேற்று (12-05-2015) நிலநடுக்கம் ஏற்பட்டது. 12-05-2015 12.30am இன்று நேபாளம் மற்றும் சீனா,  ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பாக, தில்லி மற்றும் வட இந்திய மாநிலங்களிலும் இன்று மதியம் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நேபாளத்தில் நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகளில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது. இன்றைய இந்த நிலநடுக்கம் உலகம் முழுவதும் 82 இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

@ 12-05-2015 12.30am ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பாக, தில்லி மற்றும் வட இந்திய மாநிலங்களிலும் இன்று மதியம் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நில அதிர்வு காரணமாக கட்டடங்கள் குலுங்கின. நில அதிர்வை உணர்ந்த மக்கள் கட்டடங்களில் இருந்து வெளியேறி திறந்த வெளிக்கு வந்தனர். தில்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தில்லி மட்டும் அல்லாமல் பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

@ 01-05-2015...பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.1 ஆக பதிவு... பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இருந்தாலும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

நேற்று (வியாழக்கிழமையும்) இதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.7 ஆக பதிவாகியிருந்தது. இருப்பினும் பெருமளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் குறித்து ஆஸ்திரேலிய சுனாமி எச்சரிக்கை மையத்தின் டேனியல் ஜக்ஸா கூறும்போது, "இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்புள்ளியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில்தான் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இந்தப் பகுதிகளில் மக்கள் அதிகளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

@ 01-05-2015 அந்தமானில் நிலநடுக்கம்: அந்தமான் தீவுகளிலும் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.45 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டரில் 5.4 ஆக இருந்தது. இத்தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும், உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ பெருமளவில் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

@ 28-04-2013 நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தின் எதிரொலியாக தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பெரும்பாறைகள் தெற்கு நோக்கி பல மீட்டர்கள் இடம்பெயர்ந்துள்ளன. ஆனால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாறுதல் எதுவும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு எனது முந்தய மே -2015 பதிப்பை வாசிக்கவும்,

"துணிந்து நில் ஹ ஹ .. தொடர்ந்து செல் ...ஹ ஹ ஹ ... தோல்வி கிடையாது  தம்பி ... உள்ளதை சொல், நல்லதை செய்... தெய்வம் இருப்பதை நம்பி ......"

நன்றிகளுடன்  கோகி-ரேடியோ மார்கோனி .... தற்ப்போது உத்திராகண்ட் மாநில திட்டப் பணிமனையிலிருந்து .....



Thursday, January 14, 2016

உங்களது வங்கிக்கணக்கில் ருபாய் 25,000/- செலுத்தப்பட்டது....

"Your Bank Accounts ###### is Credited Rs. 25,000/- We assure you every moth the same amount will be credited in to your account. If you want to see this SMS every month give a missed call on this phone number xxxxxxx889."  உங்களது வங்கிக்கணக்கில் ருபாய் 25,000/- செலுத்தப்பட்டது என மேற்கூறியவாறு உங்கள் தொலைபேசியில் ஓர் குறுஞ்செய்தி வந்தால் உடனே மகிழ்ந்துவிடாதீர்கள்...!!!!!!.

ஒரு கட்டிடக் கட்டுமானத்துறையின் பிரபல நிறுவனம் ஒன்று மேற்கண்ட தொலைப்பேசி குறுஞ்செய்தியை அனுப்புகிறது. ஒருமுறை நீங்கள் உங்களின் தொலைபேசியில் அவர்களோடு  தொடர்பு ஏற்ப்படுத்திக்கொண்டாலே போதும், தொடர்ந்து பல அழைப்புகளை நீங்க சந்திக்கவேண்டியிருக்கும். அனைத்து அழைப்புக்களும் உங்களது நிலையை முழுமையாக தெரிந்துகொண்டு  எப்படியாவது அவர்கள் நிறுவனத்தில் உங்களது பணத்தை (கடன்வாங்கியாவது)  முதலீடு செய்யுமாறு செய்வதுதான் அவர்களின் நோக்கம்.  விளைவு பரிதாபத்திற்குரியவர் பட்டியலில் உங்களது பெயரும் சேர்ந்துவிடும். அதோடு  வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி மாலத துயரத்திற்கும் நீங்கள் தள்ளப்படுவீர்கள்.   

மக்களை ஏமாற்றுவதற்கு இப்படி பல வியாபார ராஜ தந்திரிகள் நாட்டில் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்.  ஒரு நான்கு முறை உங்களோடு தொலைப்பேசி தொடர்பு கிடைத்துவிட்டாலே போதும் உங்களது குடும்ப பொருளாதார நிலையை முழுவதுமாக தெரிந்துகொண்டு உங்களுக்கு மிகக் கச்சிதமான வலை ஒன்று பின்னப்பட்டு அதில் உங்களை மாட்டி பாழும் கிணற்றில் தள்ளிவிடுவார்கள். 

அப்படித்தான் ஒரு பிரபல விடுமுறை பயண மன்றம் (கிளப்) ஒன்று எனது நண்பனுக்கு குலுக்கல் முறையில் ருபாய் 25,000/- பரிசு விழுந்துள்ளது என்றும் தாங்களின் மணைவியுடன் வந்து பெற்றுச் செல்லுமாறு கூற, அவரும் அந்த நிறுவனம் கூறிய விலாசத்திற்கு சென்றதும், பரிசினைப் பெற ருபாய் 5000/- செலுத்தவேண்டும் என்று கூறியதும்  அவர் பணத்தை செலுத்தி பரிசைக்கேட்டபோது அவருக்கு கிடைத்தது ருபாய் 25000/- மதிப்பிலான விடுமுறை பயண கட்டணத்தில் தள்ளுபடிக் கூப்பன்/சீட்டு. பிறகுதான் அவருக்குப் புரிந்தது அந்த நிறுவனத்தின் வலையில் அவர் சிக்கிக்கொண்டார் என்பது. அதைவிட பெரிய கூத்தாக மாதா மாதம் செலுத்திய தொகைக்கு அந்த நிறுவனம் ஏற்பாடு செய்துதந்த விடுமுறைப் பயண அனுபவத்தை அவர் கூறியபோது மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த துயர அனுபவத்தால அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்ப்பட்டது என்று கூறியபோது மேலும் மனதிற்கு வருத்தமாக இருந்தது.

இந்தக் கலியுகத்தில் எவரும் அவ்வளவு எளிதில் பணத்தை உங்களுக்கு வாரிக் குடுக்க முன்வரமாட்டார்கள். நீங்கள் தருபவரோ அல்லது பெறுபவரோ, 'ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு' என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆகவே மேற்க்கண்டவாறு உங்களுக்கு மினஞ்சல் வந்தாலோ அல்லது தொலைப்பேசி குறுஞ்செய்தி வந்தாலோ, உடனே உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக யோசித்து செயல்படுங்கள். அப்படி ஏமாற்றுபவர்களின் இடங்களுக்கு செல்லும்போது உங்களின் சட்டைப் பையை காலியாக வைத்திருக்க மறந்துவிடார்தீர்கள்...... அதாவது "சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்" உங்களது சட்டைப்பையில் பணம் இருந்தால்தானே நீங்கள் அந்த பணத்தை இழந்து ஏமாற்றமடைய..... 

விழித்திருங்கள் வாழ்க்கயில் செழித்திருங்கள்.......   

"பாடல்:- ஏமாற்றாதே ஏமாற்றாதே!!!!... ஏமாறாதே ஏமாறாதே...!!!!!"

நட்புடன்.......  கோகி-ரேடியோ மார்கோனி. 
          

FREE JOBS EARN FROM HOME