FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, January 14, 2016

உங்களது வங்கிக்கணக்கில் ருபாய் 25,000/- செலுத்தப்பட்டது....

"Your Bank Accounts ###### is Credited Rs. 25,000/- We assure you every moth the same amount will be credited in to your account. If you want to see this SMS every month give a missed call on this phone number xxxxxxx889."  உங்களது வங்கிக்கணக்கில் ருபாய் 25,000/- செலுத்தப்பட்டது என மேற்கூறியவாறு உங்கள் தொலைபேசியில் ஓர் குறுஞ்செய்தி வந்தால் உடனே மகிழ்ந்துவிடாதீர்கள்...!!!!!!.

ஒரு கட்டிடக் கட்டுமானத்துறையின் பிரபல நிறுவனம் ஒன்று மேற்கண்ட தொலைப்பேசி குறுஞ்செய்தியை அனுப்புகிறது. ஒருமுறை நீங்கள் உங்களின் தொலைபேசியில் அவர்களோடு  தொடர்பு ஏற்ப்படுத்திக்கொண்டாலே போதும், தொடர்ந்து பல அழைப்புகளை நீங்க சந்திக்கவேண்டியிருக்கும். அனைத்து அழைப்புக்களும் உங்களது நிலையை முழுமையாக தெரிந்துகொண்டு  எப்படியாவது அவர்கள் நிறுவனத்தில் உங்களது பணத்தை (கடன்வாங்கியாவது)  முதலீடு செய்யுமாறு செய்வதுதான் அவர்களின் நோக்கம்.  விளைவு பரிதாபத்திற்குரியவர் பட்டியலில் உங்களது பெயரும் சேர்ந்துவிடும். அதோடு  வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி மாலத துயரத்திற்கும் நீங்கள் தள்ளப்படுவீர்கள்.   

மக்களை ஏமாற்றுவதற்கு இப்படி பல வியாபார ராஜ தந்திரிகள் நாட்டில் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்.  ஒரு நான்கு முறை உங்களோடு தொலைப்பேசி தொடர்பு கிடைத்துவிட்டாலே போதும் உங்களது குடும்ப பொருளாதார நிலையை முழுவதுமாக தெரிந்துகொண்டு உங்களுக்கு மிகக் கச்சிதமான வலை ஒன்று பின்னப்பட்டு அதில் உங்களை மாட்டி பாழும் கிணற்றில் தள்ளிவிடுவார்கள். 

அப்படித்தான் ஒரு பிரபல விடுமுறை பயண மன்றம் (கிளப்) ஒன்று எனது நண்பனுக்கு குலுக்கல் முறையில் ருபாய் 25,000/- பரிசு விழுந்துள்ளது என்றும் தாங்களின் மணைவியுடன் வந்து பெற்றுச் செல்லுமாறு கூற, அவரும் அந்த நிறுவனம் கூறிய விலாசத்திற்கு சென்றதும், பரிசினைப் பெற ருபாய் 5000/- செலுத்தவேண்டும் என்று கூறியதும்  அவர் பணத்தை செலுத்தி பரிசைக்கேட்டபோது அவருக்கு கிடைத்தது ருபாய் 25000/- மதிப்பிலான விடுமுறை பயண கட்டணத்தில் தள்ளுபடிக் கூப்பன்/சீட்டு. பிறகுதான் அவருக்குப் புரிந்தது அந்த நிறுவனத்தின் வலையில் அவர் சிக்கிக்கொண்டார் என்பது. அதைவிட பெரிய கூத்தாக மாதா மாதம் செலுத்திய தொகைக்கு அந்த நிறுவனம் ஏற்பாடு செய்துதந்த விடுமுறைப் பயண அனுபவத்தை அவர் கூறியபோது மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த துயர அனுபவத்தால அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்ப்பட்டது என்று கூறியபோது மேலும் மனதிற்கு வருத்தமாக இருந்தது.

இந்தக் கலியுகத்தில் எவரும் அவ்வளவு எளிதில் பணத்தை உங்களுக்கு வாரிக் குடுக்க முன்வரமாட்டார்கள். நீங்கள் தருபவரோ அல்லது பெறுபவரோ, 'ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு' என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆகவே மேற்க்கண்டவாறு உங்களுக்கு மினஞ்சல் வந்தாலோ அல்லது தொலைப்பேசி குறுஞ்செய்தி வந்தாலோ, உடனே உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக யோசித்து செயல்படுங்கள். அப்படி ஏமாற்றுபவர்களின் இடங்களுக்கு செல்லும்போது உங்களின் சட்டைப் பையை காலியாக வைத்திருக்க மறந்துவிடார்தீர்கள்...... அதாவது "சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்" உங்களது சட்டைப்பையில் பணம் இருந்தால்தானே நீங்கள் அந்த பணத்தை இழந்து ஏமாற்றமடைய..... 

விழித்திருங்கள் வாழ்க்கயில் செழித்திருங்கள்.......   

"பாடல்:- ஏமாற்றாதே ஏமாற்றாதே!!!!... ஏமாறாதே ஏமாறாதே...!!!!!"

நட்புடன்.......  கோகி-ரேடியோ மார்கோனி. 
          

No comments:

FREE JOBS EARN FROM HOME