'சாருகேசி' சுந்தரராஜன் பற்றி உங்களுக்கு தெரியுமோ?...அவர் வெவ்வேறு ராகங்களில் அமைந்த கர்னாடக சங்கீத பாடல்களை பிடிவாதமாக "சாருகேசி" ராகத்திலேயே பாடக்கூடியவர். இவரின் "சாருகேசி" ரகத்தில் அமைந்த கர்நாடக சங்கீத கச்சேரிக்கு தனி ரசிகர் கூட்டமும் உண்டு. "வாதாபி கணபதிம் பஜேயை" ஹம்சத்வனி ராகத்தில் பாட வேண்டியதை, சர்வ சாதாரணமாக சாருகேஸியில் பாடுகிறார், மேலும் சிந்துபைரவி திரைப்படத்தில் இளையராஜா காம்போஜியில் உள்ள 'மரிமரி நின்னே' கீர்த்தனையை சாருமதியில் மாற்றிப் பாடியதை கேட்ட அனைவரும் இவரைப்பற்றி பெருமையாக பேசுகிறார்கள் என்றால் பாருங்களேன் !!!!!!!!!!!! சாருகேசி ராகம், இதன் பூர்வாங்கம் சங்கராபரணத்தைப் போன்றும், உத்தராங்கம் தோடியைப் போன்றும் இருப்பது கவனிக்கத் தக்கது. அது சரி இந்த ராகத்தில் அமைந்த திரைப்படப்பாடல் ஒன்று உலக தமிழ் ரசிகர்களை விழுங்கி ஏப்பம் விட்டது அது இந்த பாடல்தான் மன்மத லீலையை வென்றாருண்டோ..: ஹரிதாஸ் http://youtu.be/Lt3MRCvAtao
No comments:
Post a Comment