தமிழகத்தில் அவள் ஒரு தமிழ் பேராசிரியையாக பணியாற்றியபோதும், அவளது படைப்புக்கள் அவளது பெயரை பறைசாற்றிக்கொண்டிருந்தன. அவளது பெயர் தமிழ் பத்திரிக்கைகளிலும், தமிழ் அவை/சபை மற்றும் தமிழ் மன்றங்களிலும், அரசிதழ்களிலும் (அரசின் மொழிபெயர்ப்பாளர்) சிறந்த மொழிப்பற்றுடயவர் என்று குறிப்பிட்டிருந்தது குறித்து அவளுக்கு மிகுந்த பெருமிதமும்கூட.
புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் மற்றொரு நாட்டிலிருந்து வந்த அன்பு அழைப்பினை ஏற்று அங்கு உரையாட வான்வழிப்பயணம் மேற்க்கொண்டிருந்தபோதுதான் அந்த துயர சம்பவம் நடந்தேறியது. இயந்திரக்கோளாறு காரணமாக அந்த வானூர்தி நடுக்கடலில் விழுந்தது.....
மீட்பு நடவடிக்கயிளிருந்து விடுபட்டு தனது உற்றார் உறவினர்களின் வட்டத்திற்குள் இருந்த அவள் மௌனமாகவே இருந்தால், மிடுக்காக தோற்றமளிக்கும் அவள் அப்போது மிகவும் சோர்வுடன் காணப்பட்டால், அந்த முப்பது நாட்கள் அவளின் மனதில் மிகப்பெரிய மாற்றங்களை எர்ப்படுத்தியிருந்தது. சுற்றியிருந்த பத்திரிக்கை கூட்டமும் அவர்களின் புகைப்பட கருவிகள் கண்சிமிட்டியபடி இருந்தது. வாய்திறந்தால் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் அவள் அன்று மௌனமாகவே இருந்தால், அந்த மௌனமான மொழிதான் தன்னைக் காப்பாற்றியது என்பது இவர்களுக்கு தெரிந்திருந்தால் இப்படி கேள்வி கேட்க்கமாட்டார்கள். வாழ்க்கைப்பயனத்திர்க்கு மொழி அவசியம் என்றாலும் மொழிதான் வாழ்க்கை என்றிருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம். இனி இதை உரியமுறையில் அனைவர்க்கும் புரியும் வகையில் கொண்டு சேர்க்கவேண்டும் என்கிற என்னாத்தில் தனது சுற்றமும் நட்பும் சூழ, இல்லம் நோக்கி சென்றுகொண்டிருந்தாள்.
No comments:
Post a Comment