இன்று எஸ்.வி. *ரங்கா ராவ்* (03-July)அவர்களின் பிறந்த தினம், இவரைப்போன்ற சிறந்த குணச்சித்திர *நடிகரை, தமிழ் திரையில் இனி பார்ப்பது கடினம். அவரின் ஒவ்வொரு திரைப்படத்திலும் இவரின் நடிப்புதான் கதனாயகனைப்போன்று ஒரு தனி ஆளுகைத்தன்மையுடன் இருக்கும் ...அவர் நடித்த படப்பாடல்களில் அவருக்கு அதிக போரையும் புகழையும் தந்த பாடல் மாயாபஜார் -"கல்யாண சமையல் சாதம்", மற்றும் "கண்ணா கருமை நிறக்கண்ணா" *'முத்துக்கு முத்தாக' ஆகிய பாடல்கள் முத்தான பாடல்கள். இதுபோன்ற பல பாடல்கள் உள்ளது ...... (1963)நானும் ஒரு பெண், படப் பிடிப்பின் க்ளைமாக்ஸ் ஷூட்டிங்குக்கு எம்.ஆர் .ராதா சரியான நேரத்தில் வந்து காத்திருந்து பொறுமை இழக்கின்ற நிலை. ரங்காராவ் ரொம்ப தாமதமாக உள்ளே நுழையும்போது ராதா அவர் பாணியிலேயே ரங்காராவ் காதில் விழும்படியே கமென்ட் அடித்திருக்கிறார் " கெட்டவனா நடிக்கிறவன் ஒழுங்கா கரெக்டா நடந்துக்கிறான். நல்லவனா நடிக்கிறவன பாரு . ஒரு ஒழுங்கு இல்ல.படாத பாடு படுத்துறான்." ரங்கா ராவ் ரொம்ப மனம் புண்பட்டு இயக்குனரிடம் ''இன்றைக்கு விடிய விடிய எவ்வளவு நேரம் ஆனாலும் சரி.
ஷூட்டிங் வைத்து க்ளைமாக்ஸ் காட்சியை முடித்துக்கொள்ளுங்கள் .எனக்கு உடம்பு சரியில்லை.ஆனால் அது பற்றி கவலையில்லை." என்று ரோசத்தோடு சொல்லி அதன் படியே நடித்துக்கொடுத்தாராம்....நானும் ஒரு பெண்ணில் மரணப் படுக்கையில் இருக்கும் ரங்காராவை " அத்தான்... ஒரே ஒரு கையெழுத்து போடு அத்தான்...." - ராதா படாத
No comments:
Post a Comment