FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Monday, March 25, 2013

திரு ராஜேஷ் வைத்யாவின் வீணை நாதம்

எங்கெங்கு காணினும் வீணையின் பாடல்கள்... பேசாம இதை வீணை வாரம் என்று கொண்டாடிடலாம். வீணை அழகாக பாடுவதை கேட்டதுண்டா? நான் வீணையின் ரசிகன்...வீணை மீட்டும் கைகளே மாலை சூட்டவா என்றால் அதற்க்கு பொருத்தமானவர், தற்போது புகழின் உச்சியில் இருக்கும் வீணை விற்பன்னர், கலைமாமணி "திரு .ராஜேஷ் வித்தியா" அவர்கள். இவரின் பெரியப்பா ஒரு இசைமேதை G.ராமநாதன் அவர்கள், அவரின் இசையில் உருவானதுதான் "தெய்வத்தின் தெய்வம்" படப்பாடல்கள் இந்தப் படத்தில் மஹாகவி சுப்ரமணிய பாரதியாரின் அற்புதமான தெய்வீக வரிகளுக்குள் வீணை இசை பின்னிப் பிணைத்திருக்கும் "கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம்" அசத்தலான வீணை விருந்துடன் ஆரம்பிக்கும் இந்தப் பாடல் தொடர்ந்து பாடல் முழுதும் வீணை இசைதான் ஆக்கிரமித்தாலும் "ஆற்றங் கரை அதனில் முன்னம் ஒருநாள் " என்று ஜானகி அவர்கள் ரொம்பவே உருக்கமாகப் பாடும்போது வட இந்தியக் இசைக் கருவியான ஷெனாய் இசை இடையில் வந்து மனதை எதோ செய்துவிடுகிறது...அப்படிப்பட்ட இசைமரபில் வந்தவர்தான் "ராஜேஷ் வைத்யா" என்ற இந்த வீணை இசைக் கலைஞர், மெய் சிலிர்க்க வீணையை வாசிப்பார். பாட்டின் ஸ்வரங்களை அழமாக உள் வாங்கி உருக்கமாக வீணையை மீட்டுவார். இவரின் கைகள் வீணையில் விளயடுவதைப்பார்க்க அருமையாக இருக்கும் அத்தனை இலகுவாக வேறு எவராலும் வாசிக்கமுடியுமா? சில வாரங்களுக்கு முன்பு இவரின் நேர்காணல் "பாட்டு தர்பார்" நிகழ்ச்சி ஒன்று சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்டது. இவர் "விஷ்வ துளசி" என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். Kurai Ondrum Illai http://youtu.be/ufBJBjEO4F8
Rajesh Vaidhya - திரு ராஜேஷ் வைத்யாவின் வீணை நாதம் என்னுள் இருக்கும் இசை நரம்புகளை என்னவோ செய்கிறது!!! இனிமை.. Thunbam Nergayil - Veena Art வித விதவிதமான வீணைகள் http://youtu.be/n9LXyg1gapE

No comments:

FREE JOBS EARN FROM HOME