ஆண்பால் ராகமான ‘காபி ராகம்’ ரம்யமான மாலை வேலையில் பாட ஏற்ற ரகமாகும். சங்கீத கச்சேரிகளில் காபியில் கட்டிப்போட 'என்ன தவம் செய்தனை'.... யசோதை கண்ணனை உரலில்தானே கட்டினார், கச்சேரியில் பாடகரோ "ரசிகர்களை குரலில் கட்டி வாய் பொத்தி, கண்ணனைக் கெஞ்ச வைத்து, ரசிக்கும்படி பாடிக்கொண்டிருப்பார். காணரம் ரசிகர்களை இடையில் காப்பி குடிக்க எழுந்துபோகாமல், செவி வழியே காபி இராகத்தை புகுத்தும் இந்த நுணுக்கத்தை சங்கீத கச்சேரிகளில் காபி இராகம் பாடாத சங்கீத கச்சேரியா? என்று பயன்படுத்திக்கொண்டார்கள். http://youtu.be/a0RGxUXOZRs
"காபி ராகம்" ராகத்தின் ஸ்வரங்கள்: ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், அந்தர காந்தாரம்,சுத்த மத்யமம்(ஹிந்துஸ்தானி மரபில் ‘ப்ரதி மத்யமம்’அன்னிய ஸ்வரங்கள் வ ரும்) பஞ்சமம், சுத்த தைவதம்.
"காபி ராகம்" இந்த ராகம் 22ஆவது ‘மேளகர்த்தா’வான ‘கரஹரப்ரியா’விலிருந்து உருவானது. (அதாவது ஜன்ய ராகங்கள்’ என்பவை ‘தாய் – ராகங்களின் ’ ஸ்வரங்களின் எண்ணிக்கையை மாற்றியமைப்பதன் மூலம் பிறப்பவை)
ஆண்பால் ராகமான ‘காபி ராகம்’ ரம்யமான மாலை வேலையில் பாட ஏற்ற ரகமாகும்.(மாலையில் காப்பி குடிக்கும் நேரத்தின் பொது) இந்த
ராகத்தில் கர்னாடக கச்சேரி பாடல் நிறைய இருக்கு, அதில் அதிகம் கச்சேரியில் இந்த 'என்ன தவம் செய்தனை' என்ற பாடலை பலரும் விரும்பி பாடுகின்றனர். திரைப்படப்பாடல்கள் வரிசையில் -பழைய பாடல்கள் :-
# ஔவையார்(1953) படத்தில் வரும் இந்த பாடல் "நல்லார் ஒருவருக்கு", பாடியவர் K.B.சுந்தராம்பாள், பாடலுக்கு இசை மாயவரம் வேணு.
# காளிதாஸ் படத்தில் வரும் "காலத்தில் அழியாத காவியம் தரவந்த மாபெரும் கவி மன்னனனே- K.B.சுந்தராம்பாள், பாடலுக்கு இசை திரையிசை திலகம் கே வி மகாதேவன் அவர்கள்.
#. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி(1954) படத்தில் அழகே பெண் வடிவான பிம்பமே என்கிற பாட்டை பாடியவர் V.N.சுந்தரம் , இசை T.G.லிங்கப்பா, பாலை இயற்றியவர் K.D.சந்தானம்.
இடைக்காலப்பாடல்கள் :-
# ப்ரியா (1978) படத்தில் வரும் ஒரே பாடல் ஒன்று என்ற பாடலை பாடியவர் S.ஜானகி, மற்றும் K.J.யேசுதாஸ் அவர்கள், இசை இளையராஜா.
#. மூன்றாம் பிறை(1982) படத்தில் வரும் பாடல் கண்ணே கலைமானே, பாடியவர் K.J.யேசுதாஸ், கண்ணதாசன் அவர்களின் இந்த பாடலுக்கு இசை இளையராஜா.
புதிய பாடல்கள் :-
#. மே மாதம் (1994) படத்தில், என்மேல் விழுந்த மழைத் துளியே என்கிற பாடலை பாடியவர் ஜெயச்சந்திரன், இசை A.R.ரஹ்மான்.
#. பம்பாய்(1995) படத்தில் குச்சி குச்சி ராக்கம்மா என்கிற பாடலை பாடியவர் ஹரிஹரன் குழுவினர், இசை A.R.ரஹ்மான்.
எனது குறிப்புக்கள் அனைத்தும் வானொலி நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு நிலையத்தார்களின் விருப்பாப்படி மூன்று பிரிவுகளில் அமைத்திருக்கும் அதாவது திரைப்பாடல்கள் பழைய பாடல்கள், இடைக்காலப்பாடல்கள், புதியபாடல்கள் என பிரித்து அமைத்திருப்பேன்.
No comments:
Post a Comment