"நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் ..."
இனிமையான பல நினைவுகளைக்கொண்ட ஓய்வுக்காலம், சிறிது ஏக்கமான இறுக்கத்தையும் தருகிறது என்பது எனது கருத்து. 2008-2009 கலீல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த GVG கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் பல நேரம் அவருடைய கிழக்கு டெல்லி உத்தரப்பிரதேச எல்லையில் அமைந்திருக்கும் அவருக்காக அவர் வாங்கிய இல்லத்தில் பேசிக் கொண்டிருப்போம், அவரும் அவரது மனைவி "அம்மையார்" அவர்களும் தெலுங்கில்தான் பேசிக்கொள்வார்கள். நானும் அம்மையார் அவர்களுடன் தெலுங்கிலும், GVG கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் தமிழிலும் பேசுவோம். அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டின் தேர்தல் ஆணையராக பணியாற்றியதை பற்றி பெருமைப்படுவதாகவும் மேலும் அவருக்கு ஏற்ப்பட்ட இனிமையான அனுபவங்களைப்பற்றி பேசுவார், ஒரு தொகுதியில் 3500 க்கும் மேல் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்குவதற்காக அதிக சிரமப்பட்டதாக நினவுகூரினார், நாட்டின் பல முக்கிய பிரதமர்களுடன் பணியாற்றியது பற்றி அவரது அனுபவங்களை புகைப்படங்களுடன் கூடிய குறிப்புகளை வருடத்திற்கு ஒரு கோப்புக்கள் என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறார். முன்னாள் இந்திய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்களுக்கு நூறாவது பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று மிகவும் விருப்பத்தோடு இருந்தார், அது முடியாமல் போன பொது மிகவும் வருந்தினார்(கண்கலங்கினார்). தற்போதும் தன்னைப்பற்றிய எந்த ஒரு செய்தியும் வெளிவரக்கூடாது என்பதை ஒரு கொள்கையாக கடைப்பிடிக்கிறார். மனதளவில் ஏக்கங்கள் இருந்தும் கொள்கையை இன்னும் விடாது பிடித்துக்கொண்டிருக்கிறார். அவரின் மனதிற்கு ஆறுதலாகவும் சந்தோசம் தரும் வகையில், அவரின் இருப்பிடத்திற்கு அருகாமையில் அமைந்த ஒரு சில பள்ளிகளின் விழாக்களுக்கும், கோவில் மற்றும் சில பொது நல சங்கங்களின் விழாக்களுக்கும் தலைமை ஏற்கும் சேவைக்கு அன்புக்கட்டளையாக அடம்பிடித்து அழைத்து சென்றிருக்கிறோம். http://youtu.be/3euUGyKp7_4
No comments:
Post a Comment