FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Monday, March 25, 2013

எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா

a1951-52 ஆம் ஆண்டு பலரின் மனதை கொள்ளை அடித்துச்சென்ற பாடல், வானொலியில் இந்த பாட்டின் தட்டு தேய்ந்து போனதால் இந்தபாடலோடு மழை பெய்வதுபோல சத்தம் கேட்கும். இந்த பாடல் ஒலிக்காத அந்தகாலத்து வால்வு செட் ரேடியோ இல்லை எனலாம் "பாடல் " சம் சமா சம் சம்".... மேலும் தபால் நிலையத்தில் வருடத்திற்கு ஒருமுறை கட்டவேண்டிய ரேடியோ வரி, கட்டாத ரேடியோவை பறிமுதல் செய்ய வரும் அதிகாரியிடம் எங்கள் வீட்டில் ரேடியோ இல்லை... என்று மாட்டுக்கொட்டகையில் மறைத்து வைத்தவர்கள் ஏராளம்..இருந்தும் பக்கத்து வீட்டுகாரர்கள் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் ..... இது அந்தக்காலத்தில் 1975 வரையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடந்த சுவையான சம்பவம் இது. Vyjayanthimala & Shamshad - Chham Chhama Chham Chham - Bahar [1951] http://youtu.be/b0HA5h5Nc0k
நான் படித்த புத்தகத்தின் மீது எனக்கு அதிக காதல்
என் நாட்குறிப்பு புத்தகத்தை தவிர
மற்றவை இப்போது என்னிடம் இல்லை
என்னைவிட அதிக புத்தகக் காதல்
என் மாணவர்களிடம் இருந்ததினால்
http://youtu.be/41t6DNDIo50
ஹலோ நண்பா.. நான் பெங்களூரிலிருந்து பேசுறேன்...பணமும் பர்சும் தொலைந்த்துபோனதால ஊர் திரும்ப முடியல ஏதாவது ஹெல்ப் செய்யுடா....
அட கவலைப்படாதடா அக்கம் பக்கம் இருப்பவரிடம் "தமிழில்" தண்ணி வேணும்னு சப்தமா கேளு, ஊர் மக்கள் எல்லோரும் உனக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து இலவசமா பஸ் எத்தி அனுப்பிவச்சுடுவாங்க...... "ஆரோடும் மண்ணில் எங்கும் தேரோடும்.." http://youtu.be/i7wZg2jW2ag
J: சின்ன பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே...
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்

சின்ன பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே...
எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்

வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் தான் என்றாள்
வெண்ணிலா நிலா

கன்னி என் ஆசை காதலே
கண்டேன் மணாளன் நேரிலே
என் ஆசை காதல் இன்பம் உண்டோ
தோழி நீ சொல் என்றேன்

வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் தான் என்றாள்
வெண்ணிலா நிலா

கண் ஜாடை பேசும் வெண்ணிலா
கண்ணாளன் எங்கே சொல் நிலா..
என் கண்கள் தேடும் உண்மைதானே
சொல் நிலவே என்றேன்

AMR: வெண்ணிலா நிலா
என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே
இன்பம் காணலாம்

J, AMR: ஆ.... http://www.youtube.com/watch?v=zpBvdajJ0Js&feature=share&list=PL3VMvdB6-Ua0dFgNye1OPcVrEEZWD7WZ7

1941-Dance http://www.youtube.com/watch?v=guNcA4P_7zI&feature=share&list=PL3VMvdB6-Ua0dFgNye1OPcVrEEZWD7WZ7வாழ்க்கையின் "ஆதாரம்" என்று எதைச் சொல்லலாம் ?
ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்
அவதாரமில்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடீ நான் எவ்விடம் செல்ல - எனக்கு
அதிகாரமில்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல - அந்தத்
திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல!
(சோதனைமேல்) http://youtu.be/gtzxeWqeejw
மாமா, காஞ்சுபோன பூமியெல்லாம்
வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்
அந்த நதியே காஞ்சி போயிட்டா....
துன்பப் படுற்வங்க எல்லாம்
அவங்க கவலையை தெய்வத்துக்கிட்ட
முறையிடுவாங்க, ஆனா, தெய்வமே
கலங்கிநின்னா - அந்த தெய்வத்துக்கு
யாராலே ஆறுதல் சொல்ல முடியும்?
தானாடவில்லையம்மா சதையாடுது - அது
http://youtu.be/aN_Q_mYuaJA
ஸ்ரீரங்கமோ ஸ்ரீதேவியோ வடிவேலனோ தெய்வானையோ http://youtu.be/aN_Q_mYuaJA
சிவகாமி நினைப்பினிலே பாடம் சொல்ல மறந்துவிட்டேன் http://youtu.be/h-mGG5XwQik

ஒரு சிப்பாயின் சீப்பான கருத்தும் சீறுமா?
...கொல்லப்பக்கம் போகதே கொட்டி கிடக்கு ஜாங்கிரி.....
சரி வாங்க ஒரு கோப்பை டீ சாப்பிடலாம்..... சாப்பிடலாமா

#மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய்..
என் மவுனத்தை இசையாக மொழிப்பெயர்த்தாய்...
இளகாத என்நெஞ்சில் இடம் பிடித்தாய்,
இன்று என்"காதல்" தேருக்கு வடம்பிடித்தாய் ..... http://youtu.be/JxUUL9bUBDk
எங்கிருந்தோ வந்தான், இடைசாதி நான் என்றான், இங்கிவனை நான் பெறவே என்னதவம் செய்துவிட்டேன்.... கண்ணன் http://youtu.be/-2ZgZKVkOkg

எனது நாட்குறிப்பேட்டின் வாடாமலர்ப் பக்கங்கள்:-1987
"மனநிறைவான வாழ்க்கையை தேடுவதைவிட
வாழும் வாழ்கையில் மனநிறைவை பெற முயற்சித்தேன்.
சிறப்பான வேலை என்பதைவிட
செய்யும் வேலையே சிறப்பாக செய்தேன்
அது வேதனை போன்றதொரு சோதனை என்பது
புரிந்ததும்... தெரிந்தது
மனம் கரைந்ததும்... தெளிந்தது http://www.youtube.com/watch?v=1VKqj92W73k&feature=share&list=PLpg7WQR5RCCztT3u5tcLqjyhktTHC7kPb
தந்தையின் பணியிட மாற்றம் காரணமாக நான் ஒன்றாம் வகுப்பை இரண்டு முறை படித்தேன் (இரண்டு ஆண்டுகள்) காரணம் ஆங்கிலப்பள்ளியில் (KG +1) ஒன்றாம் வகுப்பை படித்து முடித்தவர்கள் தமிழ் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேரமுடியாது என்று கூறியதோடு என்னை முதல் வகுப்பில் சேர்த்துக்கொண்டார்கள் அப்போது எனக்கு ஆசிரியர்களாக இருந்த (1968)-காமாட்சி டீச்சர் மற்றும் பலராமன் சார், மிகச்சிறந்த ஆசிரியர்களான இவர்கள் தற்போது உயிருடன் இல்லை ஆனாலும் இவர்களின் பெயர் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.... சென்னைக்கு அருகே கூடுவாஞ்சேரி அரசு இடைநிலைப்பள்ளியில் (நான் படித்தபோது 1முதல் 5 வகுப்புகள் மட்டுமே) இன்றளவும் அவர்களின் பெயர்களை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது ...... வெற்றிலை பாக்கு 2வாழைப்பழம் (2 பழங்களுக்கு மேல் வைக்க கூடாதாம்)அதோடு 4அனா-25பைசா தட்சிணை (பின் குறிப்பு:- தட்சிணை கூடாது என மறுக்கப்பட்டு திரும்பி வந்துவிட்டது. மேலும் இரண்டு வாழைப்பழத்தில் ஒன்றை தலைமை ஆசிரியர் என் கையில் தந்துவிட்டார்) இவைகள்தான் நான் பள்ளியில் சேரும்போது குரு தட்சிணையாக தந்தது இன்னமும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. (அம்மா எனக்கு மிட்டாய் வாங்க ஐந்து ஒரு பைசா நாணயமாக (5பைசா) தந்ததும் கூட ஞபகம் உள்ளது) என் கணக்கு படி ஐந்து பைசா என்றால் ஐந்து எண்ணிக்கை இருக்கவேண்டும் ...இரண்டு பைசா மற்றும் அரையணா-3பைசா இவைகள் ஒரு பைசா என்பது என் கணக்கு..... வீட்டிலிருந்து பள்ளிக்கு நான்கு மையில் தூரம் அக்காவின் கையை பிடித்துக்கொண்டு நடந்தே சென்ற அந்த நாட்கள்..... இன்றைய நிலையில் அடுத்த தெருவிலிருக்கும் பள்ளிக்கு பேருந்தில் செல்லவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது... இது ஓர் முன்னேற்றமா?.

HFCL-தாயாரிப்பின் நேர்காணல் பணி நிமித்தம் நான் அடிக்கடி செல்லும் இமாச்சல் "சிம்லாவின்" ஒரு பிரபல பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இந்த பழைய சோறு எப்படி செய்வது என்பதை சொல்லிக்கொடுத்து செய்யச்சொல்லி சாப்பிட்ட ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன் என் நினைக்கிறேன் "என் மனைவி இதுகுறித்து இன்றளவும் கேலி செய்துக்கொண்டிருப்பார்கள்) "பழைய சோறு" உண்டு அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமை தெரியும்.

  • சுற்றுக்களை எண்ணிக்கொண்டு கேட்கவேண்டியதை மறந்துவிட்டு கோவிலுக்கு போவதால் என்ன பயன்? "பிள்ளையாரு கோவிலுக்கு பொழுதிருக்க வந்திருக்கும் புள்ளையாரு, இந்தப் புள்ளையாரு?" http://youtu.be/juVSazxOH8c
  • .காலையில் பத்திரிகை படிக்கும் கணவனை கோபித்துக்கொள்ளும் மனைவிக்கு, (கல்யாண) பத்திரிக்கையால் தனக்கு வாழ்க்கை வந்தது என்பதை மறந்துவிட்டால் எப்படி ? "வளர்ந்த கலை மறந்துவிட்டால் கேளடா கண்ணா.." http://youtu.be/5cmfqO-e020

  • சாகடித்து சென்ற உன்னை சாதாரணமாய் மறந்துவிட்டால், சர்வகாலமும் நீதான் நான். (மண்டையில் புகுந்ததா? ... இன்னும் வால் மட்டும் உள்ளே போகவில்லை ) "நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே நீங்கிடாத துன்பம் பெருகுதே..." http://youtu.be/bqRlw-ZemL4
  • சில நேரம் சிலரின் முகத்தில் ஒருவித ஒளி வட்டம் தெரியும் பார்த்த அனுபவம் உண்டா (இது "ஹரிசாடு" போன்றவர்களும் பொருந்தும்)

  • மனதில் "மறதி" என்ற இருள் சூழ்ந்திருந்தால், "சுச்சு" போட்டதும் விளக்கு எரியாது!!!!!!. (YOU-TUBE...LIGHT) ....என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா .....http://youtu.be/WxGP-yQj7r0
    ஓடுவது சாக்கடையே ஆனாலும், அதில் மிதக்கும் வண்ண மலரைக்கண்டு ரசிக்க பழகவேண்டும்.
    இந்தியாவிற்கு மட்டுமல்ல "முகநூல்" ஒரு சர்வதேச புத்தகம் .. ஆழம் காணமுடியாத... மிக நீண்ட தொடர் இது
    "பொன்னான வாழ்வே மண்ணாகிப்போனால் துயரம் நிலைதானா" பலமுறை என் மணைவியிடம் இதுகுறித்து பேசியதுண்டு, தொட்டி நிறைய தண்ணீர் இருக்கும்போது சில வாளிகளே தேவைப்படுகிறது, ஆனால் ஒரு நாள் தொட்டி நிரப்ப மிசாரம் இல்லாதபோது, இரண்டு தொட்டி அளவுக்கு தண்ணீர் செலவானது. ஏழைகள் எப்போதும் ஏழையாகவும் இருக்க இந்த உதாரணம் சரியாக பொருந்தும், ....ஒரு நூறு ருபாய் தாளை ஒரு ஏழைக்கும், பணக்காரனுக்கும் தரப்பட்டபோது, ஏழை மிக மகிழ்ச்சியாக அதை செலவு செய்து, குடிப்பதற்கு சாராயமும், விலை குறைந்த (அழுகிய) காய்கறிகளுடன் பன்றியின் மாமிசமும், மனைவியிடம் தந்தது சமைக்க சொன்னான், குடித்துவிட்டு பன்றியின் மாமிசம் உண்டதில் அதுவும் மிக அதிக சூட்டில் வேகவிக்க போதிய வசதி ஏழையிடம் இல்லாததால் அதில் இருந்த சில கிருமிகள் அன்று இரவே அவனை மிகப்பிரிய நோயில் தல்லா, அவனது மனைவியின் தாலி சில ஆயிரங்களுக்கு அடகுவைக்கப்பட்டு உயிர் பிழைத்தான் , பணக்காரனோ அந்த நூறு பணத்தில் இரண்டு தரமான ஆப்பிள் பழத்தை தோல்சீவி உண்டான், வயறு நிரம்பாத சத்துள்ள உணவின் மகிமை அவனை உறங்கவிடாமல் (வயிறு நிறைய சாப்பிட்டால்தானே உறக்கம் வரும்) அவனது சில லட்சங்களை மேலும் பல லட்ச்சங்கலாக பெருக்கியது. "பாடலுடன்- கதையும், கருத்தும்" என்கிற நிகழ்ச்சிக்காக நான் எழுதிய வானொலி நிகழ்ச்சியின் ஒரு பகுதி இது. ....பாடல் "பொன்னான வாழ்வே மண்ணாகிப்போனால் துயரம் நிலைதானா" http://youtu.be/wBq_ecZbO9M
  •  
  • No comments:

    FREE JOBS EARN FROM HOME