அவரின் இசைக்கச்சேரிக்கு சென்றிருக்கிறேன், அவர் எப்போதும் ஜம்மென்று ஜிப்பா போட்டுக்கொண்டு காட்சியளிப்பது அவருக்கென்றே அமைந்த ஒரு தனி சிறப்பு, அவரின் கர்நாடக இசைக்கச்சேரி ஆரம்பித்துவிட்டால் ரசிகர்களை உட்கார்ந்த இடத்திலிருந்து எழமுடியாதபடி அவரின் தெளிவான குரலின் இனிமையால் கட்டிப்போட்டுவிடுவார். உன்னி கிருஷ்ணன் அவர்களின் குரலில் ஒருவிதமான கெஞ்சல் தொனி எப்போதும் இருக்கும்.
அவர் எந்தப் பாடலைப் பாடினாலும் தெய்வத்திடம் எதற்காகவோ இரங்கிக் கேட்பதுபோன்ற ஓர் உணர்வு உண்டாகிறது. அவர் பாடும்போது, அவருடைய கைகள் ஒரு தேர்ந்த நாட்டியக் கலைஞரைப்போல் பாவம் காட்டுகின்றன, மனதை உருகவைக்கும் மகிழ்ச்சி, சோகம், அழுகை, அரற்றல், கிண்டல், துள்ளல், எதையும் அவரின் குரலிலேயே கொண்டுவந்துவிடக்கூடிய வித்தகர். அவரின் தெள்ளத்தெளிவான உச்சரிப்பு, காதுகளில் தேன் வந்து பாயுது என்று நம்மையும் பாட வைக்கும் குரல் ஜாலம் கொண்டவர். நாம் இன்று அவரின் பிறந்தநாளுக்காக, தேசிய விருதைப்பெற்றுத்தந்த அவர் பாடிய
"என்னவளே அடி என்னவளே" A. R. ஹ்மான்<http://en.wikipedia. org/wiki/A._R._Rahman> இசையில்
அமைந்த இந்த பாடலை கேட்போமா. http://youtu.be/E_vMpqTSXxM
No comments:
Post a Comment