"மிட்டாய் கடை மூடியிருந்தால் வாங்கித்தருவேன், திறந்திருந்தால் வாங்கித்தரமாட்டேன்"......... 2003ல் நடந்த சம்பவம் இது. எப்போதும் என் மனைவி குழந்தைகளிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்வார், எனவே என் மகன், மகள் இருவரும் "அப்பா" செல்லம். அன்று வழக்கம்போல அலுவலகத்திலிருந்து வீடு வந்ததும் குழந்தைகள் இருவரும் ஓடிவந்து, அப்பா இன்று சின்னத்திரையின் விளம்பரத்தில் புதியதாக அறிமுகமான "லாலி பாப்" மிட்டாய் பற்றி கூறி..... அப்பா, அப்பா, (பிளீஸ்)தயவுசெய்து வாங்கித்தாருங்கள் என்றனர். கண்டதையும் வாங்கித்தந்து குழந்தைகளின் உடல் நலனை கெடுக்காதீர்கள் என்று மனைவி கோபித்துக்கொண்டார். ஆகவே இதற்க்கு ஒரு தீர்வு காண, குழந்தகளிருவரிடமும், நான் சொல்லப்போவதை கவனமாக கவனியுங்கள் "மிட்டாய் கடை மூடியிருந்தால் வாங்கித்தருவேன், திறந்திருந்தால் வாங்கித்தரமாட்டேன்" என்றேன். அப்பா நீங்க எங்களை ஏமாத்தறீங்க என்று சிணுங்கிய குழந்தைகள், சிறிது நேரம் சென்றதும் இரு குழந்தைகளும் வேகமாக ஓடிவந்து அப்பா, அப்பா, கடை மூடி இருக்கிறது வாருங்கள் எங்களுக்கு மிட்டாய் வாங்கித்தாருங்கள் என்றனர்.
எனக்கு ஆச்சரியம், மூடியிருக்கும் கடையில் எப்படி வாங்குவது, இதை குழந்தைகளுக்கு பேசி புரியவைப்பதை விட, எதற்கும் நேரில் சென்று மூடிய கடையில் எதுவும் வாங்கமுடியாது என்று சொல்லி தப்பித்துக்கொள்ளவேண்டியதுதான், என நினைத்து அவர்களுடன் கடைக்கு சென்றேன். குழந்தைகள் ஒரு திறந்திருந்த மிட்டாய் கடையை காட்டி வாங்கித்தாருங்கள் என்றனர், ... நான் குழந்தைகளைப்பார்த்து "கடை மூடியிருந்தால் வாங்கித்தருவேன்" என்றல்லாவா கூறியிருந்தேன். இங்கோ கடை திறந்திருப்பதால் வாங்கித்தரமுடியாது என்றேன். அதற்க்கு குழந்தைகள் அருகிலிருந்த மற்றொரு மூடிய கடையை காட்டி, கடை மூடியிருப்பதால் வாங்கித்தாருங்கள் என்று கூறினார். எனக்கு குழந்தைகளின் சாமர்த்தியத்தை நினைத்து வியந்து சிரித்துவிட்டேன். அகவே குழந்தைகள் சாமர்த்தியமாக, அவர்கள் நினைத்ததை சாதித்துக்கொண்டார்கள்.
பெரும்பாலும் பெற்ற பிள்ளைகள், பெற்றோர்களிடம் போட்டியிட்டு வெற்றிபெறும் "குழந்தைகளாகத்தான்" இருக்கிறார்கள். அதாவது சில காதலர்களும் அப்படித்தான் பெற்றவர்களை எதிர்த்து வெற்றிபெற்றதாக நினைக்கும் "குழந்தைகளாகத்தான்" இருக்கிறார்கள்.
ஒரு உண்மை சம்பவம் கதையானது என்பதைவிட, பல கதைகள் பல உண்மையை போதிக்கின்றன என்பதை புரிந்துகொள்வது சிறந்ததல்லாவா???????...... உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை. ஒரு கதை இங்கு முடியலாம், முடிவிலும் ஒன்று தொடரலாம். இனி எல்லாம் சுகமே.... http://youtu.be/52lDnAYzCUk
.......நன்றிகளுடன் கோகி.
No comments:
Post a Comment