FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, April 19, 2013

குறைந்த செலவில் மிக விரைவிலும் எளிதாகவும் வேலைவாய்ப்பை பெரும் கல்வி


#கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... மேல்நிலை படிப்பு என்று வரும்போதே என்ன படிப்பது என்று மாணவ மாணவியரும், என்ன படிக்கவைகலாம் என்று பெற்றவர்களும் சிந்தனை செய்யத்தொடங்கிவிடுகின்றனர். தற்போதைய நிலையில் படிப்பு என்றாலே மிகப்பெரிய தொகையை செலவு செய்யவேண்டி கட்டாயம் உள்ளது. கடன் பெற்று செய்த கல்வி செலவுகள் எத்தனை விரைவாக கடனையும் அடைத்து குடும்பத்திற்கும் உபயோகமாக சம்பாதிக்கமுடியும் என்பதில் எவருக்கும் ஒரு

தீர்கமான முடிவோ சிந்தனை இல்லை என்பதுதான் உண்மை. இப்படிப்பட்ட சூழலில்தான்..தற்போதைய கல்விக் கண்காட்சியிலும, மற்றும் பல நிறுவனங்களின் [Campus interview] கல்லூரியில் நேர்காணலின்போதும் அனைத்து மாணவர்களுக்கும் இதை எதிர்கொள்வது எப்படி என்பதை கூறிவருகிறேன். குறைந்த செலவில் மிக விரைவிலும் எளிதாகவும் வேலைவாய்ப்பை பெரும் கல்வியாக கீழ்வரும் 5 பாடப்பிரிவுகள் உள்ளது குறிப்பிடத்தக...்கது.

1. வணிகவியல் (Commerce) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் மூன்று ஆண்டுகள் கல்லூரி பட்டப் படிப்பையும் முடித்தாலே போதுமானது-மேற்கொண்டு வேலையில் சம்பாதித்துக்கொண்டே படித்துக்கொள்ளலாம்) 5years course of BCOM-BL, or FICA, BCS...போன்றவை....

2. மருத்துவ செவிலியர் (Nursing) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் மூன்று ஆண்டுகள் கல்லூரி பட்டப் படிப்பையும் முடித்தாலே போதுமானது அல்லது பட்டயப்படிப்பை(Diploma) படித்தாலும் போதும்)

3. கணினிக்கல்வி (Computer) (பல்வேறு விதமான கணினி சார்ந்த பட்டய மற்றும் உயர் பட்டப் படிப்புகள் )

4. ஆசிரியர் பயிற்சி.(Teachers Training)

5. சட்டக்கல்வி (Law) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் 5 ஆண்டு சட்டக் கல்வி அல்லது ஒரு சிறு சட்டம் சார்ந்த பட்டயப்படிப்பை(Diploma) படித்தாலும் போதும், தனியார் பணியிடங்களில் அதிக வேலைவாய்ப்புகள் நிறைந்திருக்கும் கல்வி இது)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு http://youtu.be/qvCDPf1_Qeg

No comments:

FREE JOBS EARN FROM HOME