இன்றைய பார்வையில், இது ஒரு ஆராய்ச்சியின் குட்டி (கொசுறு) உங்களுக்காக:- உலக வர்த்தக வரலாற்றில், இரண்டே வாரங்களில் 25% அசுரவளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிற (Mar-2013)ஜப்பானிய நாணய "என்" பல வர்த்தக ஆராய்ச்சி வல்லுனர்களின் கவனத்தை கவர்ந்திழுத்திருக்கிறது. ஜப்பானின் மிக அருகே இருக்கும் வடகொரியாவில் வன்மம் எந்தநேரமும் வெடிக்கலாம் (அங்கு இன்னும் இரண்டு நாளில் பிறந்தநாள் கொண்டாட்டம் வேறு பல விளைவுகளுக்கு அடிபோட்டுக்கொண்டிருக்கிறது) இப்படிப்பட்ட ஒரு கவலையான சூழ்நிலையில் மேலும் பல நாடுகளில் உலக வர்த்தகம் சரிந்திருக்கிற இந்த நேரத்தில், இப்படி ஒரு அபரிவிதமான ஜப்பான் பங்கு வர்த்தக வளர்ச்சி பலருக்கு மேலும் ஆச்சரியத்தை தந்திருக்கிறது. இன்னும் சில ஜோதிடம் சாஸ்திர வல்லுனர்கள், சூரியன் உதிக்கும்-சூரிய நாடான ஜப்பானுக்கு, சூரியன் தன்னாட்சி பெரும் சித்திரை மாதப்பிரப்பின் விளைவு இது என்கிறார்கள். இதைப்போலவே ஐரோப்பாவின் "யுரோ" நாணயத்தின் அசுர வளர்ச்சியையும், அங்கு ஏற்ப்பட்ட பொருளாதார சீர்கேட்டையும் பெற்ற வர்த்தக வரலாறு இப்போது இதையும் தனது வரலாற்றுப் பதிவில் பாதிக்கின்றது.."காசேதான் கடவுளப்பா" .. http://youtu.be/qHkjZ_ceV-c
No comments:
Post a Comment