FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, April 19, 2013

25வது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடிய த‌ம்ப‌தி‌யினரை‌ப் ப‌ற்‌றி

திருமண வா‌ழ்‌க்கையை எ‌ந்த ‌பிர‌ச்‌சினை‌யு‌ம் இ‌ல்லாம‌ல் 25வது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடிய த‌ம்ப‌தி‌யினரை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்த அ‌ந்த ஊ‌ர் செ‌ய்‌தியாள‌ர் ஒருவ‌ர், அவர்களைப் பே‌ட்டி‌க் க‌ண்டு ப‌த்‌தி‌ரி‌க்கை‌யி‌ல் ‌பிரசு‌ரி‌க்க ‌விரு‌ம்‌பினா‌ர்.

... நேராக அ‌ந்த த‌ம்ப‌திக‌ளிட‌ம் செ‌ன்று, 25ஆ‌ம் ‌திருமண நாளை‌ ஒ‌ற்றுமையாக‌க் கொ‌ண்டாடுவது எ‌ன்பது பெ‌ரிய ‌விஷய‌ம். இது உ‌ங்களா‌ல் எ‌ப்படி முடி‌ந்தது. உ‌ங்களது ‌திருமண வா‌ழ்‌‌வி‌ன் வெ‌ற்‌றி ரக‌சிய‌ம் எ‌ன்ன எ‌ன்று கே‌ட்டா‌ர்.

இ‌ந்த கே‌ள்‌வியை கே‌ட்டது‌ம், அ‌ந்த கணவ‌ரு‌க்கு தனது பழைய தே‌னிலவு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் ‌நினைவு‌க்கு வ‌ந்தது. "நா‌ங்க‌ள் ‌திருமண‌ம் முடி‌ந்தது‌ம் தே‌னிலவு‌க்காக ‌ஒரு ரம்மியமான மலைப்பகுதிக்கு செ‌‌ன்றோ‌ம். அ‌ங்கு எ‌ங்களது பயண‌ம் ‌சிற‌ப்பாக அமை‌ந்தது. அ‌ப்பகு‌தியை சு‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்க நா‌ங்க‌ள் கு‌திரை ஏ‌ற்ற‌ம் செ‌ல்வது எ‌ன்று ‌தீ‌ர...்மா‌னி‌த்தோ‌ம். அத‌ற்காக இர‌ண்டு கு‌திரைகளை‌த் தே‌ர்‌ந்தெடு‌த்து, இருவரு‌ம் ஒ‌வ்வொரு கு‌‌திரை‌யி‌ல் ஏ‌றி‌க் கொ‌ண்டோ‌ம். எ‌னது கு‌திரை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது. ஆனா‌ல் எ‌ன் மனை‌வி செ‌ன்ற கு‌திரை ‌மிகவு‌ம் குறு‌ம்பு‌த்தனமானதாக இரு‌ந்தது. ‌திடீரென ஒரு து‌ள்ள‌லி‌ல் எ‌ன் மனை‌வியை ‌அது கீழே‌த் த‌ள்‌ளியது. அவ‌ள் ‌‌கீழே இரு‌ந்து எழு‌ந்து சுதா‌ரி‌த்து‌க் கொ‌ண்டு அ‌ந்த கு‌திரை‌யி‌ன் ‌மீது ‌மீ‌ண்டு‌ம் ஏ‌றி அம‌ர்‌ந்து கொ‌ண்டு, "இதுதா‌ன் உன‌க்கு முத‌ல் முறை" எ‌ன்று அமை‌தியாக‌க் கூ‌றினா‌ள்.‌ சி‌றிது தூர‌ம் செ‌ன்றது‌ம் ‌மீ‌ண்டு‌ம் அ‌ந்த கு‌திரை அ‌வ்வாறே செ‌ய்தது. அ‌ப்போது‌ம் எ‌ன் மனை‌வி ‌மிக அமை‌தியாக எழு‌ந்து கு‌திரை‌யி‌ன் ‌மீது அம‌ர்‌ந்து கொ‌ண்டு "இதுதா‌ன் உன‌க்கு இர‌ண்டா‌ம் முறை" எ‌ன்று கூ‌றியவாறு பய‌ணி‌க்க‌த் தொட‌ங்‌கினா‌ள்.

மூ‌ன்றா‌ம் முறையு‌ம் கு‌திரை அ‌வ்வாறு செ‌ய்தது‌ம், அவ‌ள் வேகமாக அவளது கை‌த்து‌ப்பா‌க்‌கியை எடு‌த்து அ‌ந்த கு‌திரையை சு‌ட்டு‌க் கொ‌ன்று‌வி‌ட்டா‌ள்!!!

இதை‌க் க‌ண்டு அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த என‌க்கு ‌மிகவு‌‌ம் கோப‌ம் வ‌ந்து‌வி‌ட்டது. நா‌ன் அவளை ‌தி‌ட்டினே‌ன். "ஏ‌ன் இ‌ப்படி செ‌ய்தா‌ய்? ‌நீ எ‌ன்ன மு‌ட்டாளா? ஒரு ‌வில‌ங்கை‌க் கொ‌ன்று‌வி‌ட்டாயே? அ‌றி‌வி‌ல்லையா?" எ‌ன்று கே‌ட்டே‌ன்.

அவ‌ள் ‌மிகவு‌ம் அமைதியாக எ‌ன்னை‌ப் பா‌ர்‌த்து, "இதுதா‌ன் உ‌ங்களு‌க்கு முத‌ல் முறை" எ‌ன்றா‌ள். அ‌வ்வளவுதா‌ன். அத‌ன்‌பிறகு எ‌ங்களது வா‌ழ்‌க்கை ‌மிகவு‌ம் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ர் கணவ‌ர். !!!

No comments:

FREE JOBS EARN FROM HOME