FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, April 19, 2013

இன்றைய உலகளாவிய பார்வையில் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளித்திரை,

இன்றைய உலகளாவிய பார்வையில் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளித்திரை, வளைகுடா நாடுகளில் வெள்ளிக்கிழமையும், மற்ற நாடுகளில் சனி ஞாயிறு வார விடுமுறைநாட்கள் என்பதால், சர்வதேச அளவில் திரை அரங்குகளும், சின்னத்திரை நிகழிச்யிலும், வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு திரைப்பட காட்சி என்பது தற்ப்போது நிச்சயமாகிவிட்ட ஒன்று. சில நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத ஆங்கில திரைப்படம் ஒன்றிற்கு வடகொரிய அரசு அனுமதி அளித்துள்ளது இன்று அங்கு அந்த திரைப்படம் திரையிடப்படுகிறது. ஒரு சிறந்த திரைப்படம் சமுதாயத்தை சீரடயச்செயும் என்றாலும் சில திரைப்படம் சமுதாயத்திற்கு சீர்கீடாகவும் உள்ளது. நான் சந்தித்த ஒரு பிரபல திரையரங்கு நிறுவனத்தின் மேலாளர் ஒருவரது திறமையும் பாராட்டவேண்டிய ஒன்று, அவர் ஒரு தமிழர் அல்ல, தமிழில் அவருக்கு வெறும் நான்கு சொற்களே (வணக்கம், வாருங்கள், சாப்பிட்டீர்களா, நன்றி) தெரியும் இருந்தும் அவருக்கு ஏராளமான தமிழ் பேசும் நபர்கள் இருக்கிறார்கள், தமிழ் பேசத்தெரியாத அவர் பல தமிழ் இலக்கிய கூட்டத்தில் கலந்துகொள்கிறார். மேலும் அவரிடம் ஆயிரக்கணக்கிலான ரசிகர்களின் மினஞ்சல் மற்றும் கைத்தொலைபேசி விவரங்களின் தொகுப்பை உருவாக்கி அதை சிறப்பாக பயன்படுத்திவருகிறார். ஒவ் ஒரு வார இறுதி விடுமுறை நாட்களுக்கு அவர் பணிபுரியும் திரையரங்கில் திரையிடப்படும் திரைப்படம் குறித்த விவரங்கள் மற்றும் அந்த திரையரங்கில் கூட்டமில்லாத நாட்களில் வழங்கப்படும் நுழைவுச்சீட்டின் தள்ளுபடி விவரங்களையும் தவறாமல் அனைவருக்கும் தெரிவித்துவருகிறார். நன்கு பிழைக்கத் தெரிந்தவர்....... தமிழர்கள் மற்ற மொழி, நாடு, இனத்தவர்களிடம் நட்புடன் நல்ல பெயர் பெற்றாலும், ஒரு தமிழனுக்கு மற்றொரு தமிழன்தான் எதிரி என்கிற அளவில் தமிழருக்கிடயில்தான் நட்புமுறை சிறப்பாக இல்லை என்று தோன்றுகிறது. http://youtu.be/HYVmsb7q7zc

No comments:

FREE JOBS EARN FROM HOME