FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, April 19, 2013

அரசர் மெச்சிய பரிசு!


அரசர் மெச்சிய பரிசு!

அரசருக்கு பிறந்தநாள் என்பதால் மக்களிடையே பெரும் சந்தோஷம் நிரம்பியிருந்தது. அரசர் அளித்த அறுசுவை உணவை வயிறார உண்டு, அரசரை வாழ்த்த மக்கள் காத்திருந் தார்கள். அரசருக்குப் பரிசளிக்க தங்களால் இயன்ற பொருட்களை கொண்டு வந்திருந்தார்கள்.
அங்கு அரசர் வந்தார்...

... ஒவ்வொருவராக பரிசுகளை அளித்து வணங்கிச் சென்றனர். பிறகு அரசர் அவர்கள் அளித்த பரிசு பொருட்களை கண்ட பிறகு, மக்களைப் பார்த்து... "நீங்கள் அன்புடன் எனக்கு பரிசுகளை அளித்து கௌரவித்தீர்கள். நன்றி... அவற்றில் மிக மிகச் சிறந்த பரிசு ஒன்றைக் கண்டேன்" என்று நிறுத்தினார். இதைக் கேட்ட மக்களுக்கு ஆவலாக இருந்தது. ‘அந்த உயர்ந்த பரிசு எது? யார் அளித்திருப்பார்கள்?’ தங்களுக்குள் முணுமுணுத்தார்கள்.

"நான் கொடுத்த மாணிக்கக்கல்லாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் உலகில் அதைப்போல் வேறொன்றைக் காணமுடியாது" என்றான் மாணிக்க வியாபாரி.

இதைக் கேட்ட வைர வணிகரோ,"உலகின் தலைசிறந்த வைரம். அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. எனவே என்னுடையதுதான் சிறந்த பரிசாக இருக்க முடியும்" என்று கூறினார்.

அதற்கு நெசவாளி... "நான் அரும்பாடுபட்டு நெய்து அளித்த பட்டாடைகள் மேலை நாடுகளில் கூட கிடைக்காது. அதைத்தான் மன்னர் சொல்லி இருப்பார்" என்றார். இவர்கள் பேசுவதைக் கேட்ட பூக்காரி... "ஆடையோ, ஆபரணங்களோ அரசரைக் கவர்ந்திருக்க முடியாது. நான் புத்தம் புதிய மலர்களை வண்ணமிகு மாலையாக்கி அரசருக்கு அளித்தேன். வாசம் மிகுந்த மென்மையான மலர் மாலையை விடவும் சிறந்தது உண்டோ? இதைத்தான் அவர் குறிப்பிட்டிருக் கிறார்" என்றாள்.

இப்படி ஒருவருக்கொருவர் தாங்கள் அளித்த பரிசைத்தான் அரசர் மெச்சியிருக்கிறார் என்று பேசிக்கொண்டனர். இந்த சலசலப்பைக் கேட்ட பிறகு அரசரே பதில் கூற ஆரம்பித்தார். "எல்லா பரிசுகளும் சிறந்தவையே. இதில் என்னை மிகவும் கவர்ந்த பரிசு, காலத்துக்கும் நிலைத்து நிற்கக்கூடியது. எல்லோருக்கும் பலன் தரக்கூடியது. அதுதான் இது..."என்று ஒரு சிறிய மரக் கன்றைக் காட்டினார்.

"பொன்னையும் பொருளையும் சேமிப்பதைவிட உயிருள்ள மரங்களையும் செடிகளையும் சேமிப்பதே புத்திசாலித்தனம்" என்று கூறி மரக்கன்றை பரிசளித்த விவசா யியை மெச்சி, அரசர் பரிசளித்துப் பாராட்டினார்.

No comments:

FREE JOBS EARN FROM HOME