FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Monday, March 25, 2013

காகிதத்தில் ஒட்டகம் செய்ய தெரியுமா?

பாடல் -"அவா அவா ஆத்துக்குள்ள ஆயிரம் இருக்கு... தெரியாதோ நோக்கு தெரியாதோ"....... " தெரியாது ஆனா தெரியும்" வாழ்க்கையில் இதை நன்கு புரிந்துக்கொண்டால் வேகமாக முன்னேறமுடியும், எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் இது, LKG என்னும் பாலர் பள்ளியில் படிக்கும் என்னுடைய அக்காவின் மகனிடம் நான் கற்ற பாடம் தான் என்னுடைய வாழ்கையில் நான் வேகமாக முன்னேற எனக்கு உதவியது. சுமார் 25 வருடத்திற்கு முன்பு என் அக்காவின் மகன் என்னிடம் ஓடி வந்து காகிதத்தில் ஒட்டகம் செய்து தருமாறு கேட்கவே நான் பல யோசனைக்குப்பின், எனக்கு கப்பல், விமானம் போன்ற இன்னும் சில காகிதத்தில் செய்யத்தெரியும் ஆனால் ஒட்டகம் செய்ய தெரியாது என்றேன், அதற்க்கு அவன் "என்ன மாமா, இதுகூட தெரியலையே" என்று கூறி காகிதத்தின் ஒரு பகுதியை கிழித்து அதை நீண்ட உயர வடிவில் சுருட்டி இது தான் ஒட்டகத்தின் கழுத்து நீண்டு இருக்கும், பிறகு தலை மற்றும் கால், உடல்... என்று காகிதங்களை சுருட்டி ஒன்றன் பின் ஒன்றாக இணைத்து... ஒட்டகம் இதுதான் என்றான்..மிக எளிமையான இது எனக்கு தெரிந்தும் தெரியவில்லை என்றோமே. அன்று எடுத்த முடிவுதான் எதுவும் தெரியும் என்று சமாளிப்பது எப்படி என்று பழகிக்கொண்டேன், அது என் முன்னேற்றத்திற்கு மிகவும் உதவியது. பலருக்கு பலவிவரங்கள் தெரிந்திருக்கும் ஆனால் சரியான நேரத்தில் அதை பயன்படுத்திக்கொள்வது தெரியாது. உதாரணத்திற்கு வேலைவாய்ப்பின் நேர்காணலின் பொது கேட்கப்பட்ட சில கேள்விகள் "SIP பற்றி தெரியுமா அதில் அனுபவம் உள்ளத? " அந்த நேரத்தில் பதில் சொல்லமுடியாமல் பிறகு இது எனக்கு நன்கு தெரியுமே சரியான நேரத்தில் அதை சொல்லாமல் தவறவிட்டுவிட்டோமே என வருந்துவது. இப்போது சொல்லுங்கள் இன்று இந்த "பதிவு" உங்களுக்கும் உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். http://www.youtube.com/watch?v=NPN0vfxFYGw&feature=share&list=PL1F871F1F5D547425

No comments:

FREE JOBS EARN FROM HOME