கோகி-ரேடியோ மார்கோனி: அனுமதியில்ல என்று கூறிவிட்டார்கள் காரணம் "A" சான்று

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Monday, March 25, 2013

அனுமதியில்ல என்று கூறிவிட்டார்கள் காரணம் "A" சான்று

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பி. பாரதிராஜா அவர்களின் பிறந்த தினம்;( born 17 July 1941). கிராமத்து மண்வாசனை நிறைந்த தமிழ் படங்களை தயாரித்தவர் என்ற பெயர் பெற்றவர். இவரின் முதல் திரைப்படம் "பதினாறு வயதினிலே" நானும் எனது நண்பர்களும் பலமுறை பார்த்திருக்கிறோம் இந்த படம் ஒரு சிறந்த படமாக பாரதிராஜா அவர்களுக்கு பெயரும் புகழும் தந்தது. மேலும் இவரின் தயாரிப்பில் எனக்கு பிடித்த படங்களின் வரிசையில் "முதல் மரியாதையை", "வேதம் புதிது", "கருத்தம்மா", "கிழக்கு சீமையிலே" போன்ற கிராமத்து படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறந்த திரைப்பட தயாரிப்பாளராக ஆறு முறை தேசிய திரைப்பட விருதையும், இரண்டு முறை தமிழக அரசின் திரைப்பட விருதையும் , நந்தி விருது, தெனிந்தியா திரைப்பட தயாரிப்பாளர் விருது போன்ற மேலும் பல விருதுகளையும் பெற்ற சிறந்த தயரிப்பாளும் இவரே , அவரின் தயாரிப்பில் பல நடிகர், நடிகைகளை அறிமுகமாகி பின்பு பிரபலமானவர்களும் உள்ளனர். அவர்களில் புதியவார்ப்புகள் படத்தின் முலம் அறிமுகமாகிய நடிகர் (முருங்கக்காய் புகழ்) பாக்யராஜ் அவர்களும் அந்த படமும் பாடலும் எனக்கு பிடிக்கும். என் வாழ்கையில் படம் பார்க்கசென்று பார்க்கமுடியாமல் திரும்ப நேர்ந்த படம். இந்த படம் வெளிவந்தபோது(1979) இந்த படம் திரையிடப்பட்ட சென்னை தேவி-(3-திரை) திரைஅரங்கில், நான் பார்பதற்கு சற்று ஒல்லியாக குள்ளமாக இருந்ததினால், தாவணி உடை அணிந்திருந்த என்னைவிட 4 வயது குறைந்த எனது தங்கையை பார்க்க அனுமதித்து எனக்கு பார்க்க அனுமதியில்ல என்று கூறிவிட்டார்கள் காரணம் "A" சான்று பெற்ற படமானதால் அப்போது என்னால் பார்க்கமுடியாமல் போனது, ஆறும் மாதத்திற்கு பிறகு ஒரு கிராமத்து கொட்டகை திரைஅரங்கில் வாடகை மிதிவண்டியில் நண்பர்களுடன் சென்று இந்த திரைப்படத்தை பார்த்தேன். அந்த படத்திலிருந்து இந்த அருமையான MARAKKAMUDIYAAபாடல்
Post a Comment

FREE JOBS EARN FROM HOME