கோகி-ரேடியோ மார்கோனி: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, March 8, 2013

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

மனைவி அமைவதெல்லாம் Manmadha Leelai (1976), Music: MS. விஸ்வநாதன், Cast: Kamal Hassan, Aalam, Y. Vijaya
Artist(s): Yesudas. http://youtu.be/d03mavMw2Ig
மனைவி அமைவதெல்லாம் ......
பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

* அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
...
* மனது புண்படும்படி பேசக்கூடாது.

* கோபப்படக்கூடாது.

* சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

* பலர் முன் திட்டக்கூடாது.

* எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.

* முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

* மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

* சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

* மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

* பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

* வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.

* பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

* ஒளிவு, மறைவு கூடாது.

* மனைவியை நம்ப வேண்டும்.

* முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

* தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

* உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

* அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.

* நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.

* எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, சொல்ல வேண்டும்.

* மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.

* மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

* பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.

* மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.

* கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

* சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.

* எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.

* சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

* சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

* சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
* குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால்
“இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.

* மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.

* அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.

* மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

* ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

* வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
தொடரும்...... http://youtu.be/d03mavMw2Ig
"காமன் வுமேன்" - காமன் மேனின் பார்வையில்
ஆர்.கே.லக்ஷ்மண் அவர்களால் பிரபலமான காமன் மேன், சமீப காலத்தில் "உன்னைப்போல் ஒருவன்" படத்திற்கு பிறகு பரபரப்பாக பேசப்பட்டார்.முக்கியமாக தமிழ்ப் பதிவுலகில்... எனக்கு ஒரு மன வருத்தம்.அது என்ன இந்த காமன் வுமேனை மட்டும் யாரும் கண்டு கொள்ளவே இல்லையே என்று....

எனவே வீட்டுக்கு வீடு வாசப்படியாக சில இல்லத்தரசிகளை சிறப்பிக்கும்மாறு... "காமன் வுமேனின் குணாதியசங்கள்" - ஒரு காமன் மேன் பார்வையில்.

1. ஆன்லைன் ஷாப்பிங், ஃபோன் ஷாப்பிங் என்று பல வசதிகள் இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை காலையில் மறக்காமல் காபி பொடியோ, சர்க்கரையோ வாங்க கணவனை கடைக்கு அனுப்புபவர்கள்.

2. தன் குழந்தையின் அழகுக்கும் புத்திசாலிதனத்துக்கும் தன் பரம்பரையும், தவறுகளுக்கும் துர்குணங்களுக்கும் தன் கணவனின் ஜீன்களும் காரணம் என்று சர்வ நிச்ச்யமாக நம்புபவர்கள்.

3. நான்கு மணி நேரம் நாப்பது கடை ஏறி இறங்கி துணிகள் வாங்கிய பிறகு எதிரில் வரும் பெண்ணின் உடையோ அல்லது நாப்பத்தி ஒண்ணாவது கடை பொம்மையின் சேலையோ அழகாக இருப்பதாக சொல்பவர்கள்.

4. தொலைக்காட்சியில் TV துக்கமான சம்பவ செய்தியை படிக்கும், பெண்ணின் தோடு டிசைன் நன்றாக இருப்பதாக ரசிப்பவர்கள்.

5. ஒரு கிலோவுக்கு 200 கிராம் எடையில் அடிக்கும் காய்கறிக்காரனிடம் கொசுறாக கிடைக்கும் கறிவேப்பிலை கொத்தமல்லிக்காக சந்தோஷப்படுபவர்கள்.

6. உலகச் செய்திகளை விட லோக்கல் (அக்கம் பக்கத்து வீட்டு) செய்திகளில் அதிக நாட்டம் கொண்டவர்கள்.

7. சொந்த சோகங்களை தொலைக்காட்சித் தொடர் சோகங்களில் மூழ்கி மறப்பவர்கள்.

8. மருமகளாக இருக்கும் போது தானே சிறந்த மருமகள் என்றும் மாமியாராக இருக்கும் போது தானே சிறந்த மாமியார் என்றும் நினைத்துக் கொள்பவர்கள்.

9. சமையல் செய்ததில் எது மீதமானாலும் மறக்காமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு ஒரு வாரம் கழித்து First in First Out (FIFO) அடிப்படையில் குப்பைத் தொட்டியில் கொட்டுபவர்கள்.

10. தமிழின் மிகச் சிறந்த நாவல்களை எழுதியவர் லஷ்மி என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்பவர்கள்.

11. "எங்கியோ பாத்தா மாதிரி இருக்கே", என்று ஏதாவது பெண்ணை விகல்பமில்லாமல் பார்க்கும் கணவன்மார்களை முறைப்பவர்கள்.

12. ஒழுங்காக பாத்திரம் தேய்க்காத வீடு பெருக்காத வேலைக்காரப் பெண் ஒரு நாள் வேலைக்கு வராவிட்டாலும் புலம்புபவர்கள்.

13. கடினமாக உழைத்து நல்ல பெயரும் பதவி உயர்வும் வாங்கும் கணவனை சரியாக ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்துவிடும் பக்கத்து வீட்டுகாரனின் சாமார்த்தியம் வராது என்று இடித்துரைப்பவர்கள்.

20. ப்ளக்கை சொருகி லைட்டை போடும் மகனை வருங்கால எடிசனாகவும், கிளியை நினைத்து காகம் வரையும் போது பின்னாள் பிகாஸோவாகவும், ரெண்டக்க ரெண்டக்க பாட்டுக்கு இடுப்பில் கை வத்துக் கொண்டு தலையை ஆட்டும் பெண்ணை "பத்மா சுப்ரமணியத்துகிட்ட சேத்து விட்டா நல்லா வருவா" என்றும், "பாலும் தெளி தேனும்" சொல்லும்போது எஸ்.பி.பி யாகவோ, எம்.எஸ்.சுப்புலஷ்மியாகவோ நினைத்து புளகாங்கிதமடைவார்கள்.

பி.கு: 20 எழுதிரலாம்னு ஒரு வேகத்துல ஆரம்பிச்சேன். 6 மிஸ்ஸிங். பின்னாடி ஏதாவது தோணினாலோ, பின்னூட்டங்களில் வந்தாலோ இடையில் சேர்க்கப்படலாம்.

பிற்சேர்க்கை:
14.உலகத்திலேயே தனக்கு மட்டும் தான் மோசமான கணவன் வாய்த்ததாக புலம்புவார்கள்.(உபயம்: கோவி.கண்ணண்)
இது நன்றியுடன்.. ரசித்து சுட்ட பழம். "இப்படிக்கு கோகி" http://youtu.be/FkRV2zhjZB0
Post a Comment

FREE JOBS EARN FROM HOME