கோகி-ரேடியோ மார்கோனி

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, March 9, 2013

எனது நாட்குறிப்பேட்டின் வாடாமலர்ப் பக்கங்கள்:-1985-87
# 1985-87என் குறிப்பேட்டின் வாடாமலர் பக்கங்கள்:- நினைத்துப்பார்க்கிறேன்.... நான் படித்த அதே அரசாங்கப் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராரக பணியாற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை,(Dr Sir Sarvepalli Radhakrishnan....சர்வபள்ளி, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் படித்த பள்ளி) எனக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியர்களுடன் சமமாக ஆசிரியர் ஒய்வு அறையில் உட்கார மிகவும் தர்ம சங்கடமான சூழ்நிலை, ஒரு ஆசிரியை, நான் படிக்கும் பொது எனக்கு ஆசிரியையாக இருந்தவர், அவர் என்னை "வாங்க தம்பி சார் உட்காருங்க" என்பார். இதை எல்லாம் விட, வகுப்பில் யார் ஆசிரியர் என தெரியாத அளவில் நானும் மானவனைப்போலவே இருந்தேன். என்னை ஆசிரியர் என தனிமைப்படுத்தி காண்பிப்பதற்காகவே வேஷ்டி உடை அணிந்து செல்லவேண்டியதாக இருந்தது. 1987 இல் மாதம் 300 சம்பளம் பெரும் இந்த பகுதிநேர ஆசிரியற்பணி தேவைதான ? என்கிற அப்பாவின் நியாயமான கேள்விக்கு கிடைத்த பரிசுதான் 1300 சம்பளத்தில் ஒரு பிரபல தனியார் IT கம்பனியில் வேலையில் சேர்ந்தது.... நான் ஆசிரியர் பணியிலிருந்தபோது அதே பள்ளியில் என்னுடன் பணியாற்றிய பகுதிநேர வணிகவியல் ஆசிரியர் ஒருவரை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கும், பகலில் அவரின் மாணவனுக்கு ஆசிரியராகவும், மாலையில் அந்த மாணவனின் கீழ் அவனது தாத்தாவின் மொத்தவியாபாரக் கடையில் பணிபுரியும் கணக்கராக பணியாற்றிய அந்த ஆசிரிய நண்பர், அவரின் அந்த மாணவனால் பெற்ற கஷ்டங்கள் ...(அந்த மாணவன் ஆசிரியர் என்று பாராமல் தனக்கு கீழ் வேலைசெய்கிறார் என்கிற மமதையால் கடையை பெருக்கி சுத்தம் செய்துவிட்டு பிறகு கணக்கு எழுதுங்கள் என்று கட்டளையிட்டது) போன்ற இன்னும் பல கொடுமைகளை அனுபவித்தார் என்பதை அந்த மாணவன் அவனது பள்ளி தோழர்களுடன் பேசியதிலிருந்து தெரிந்துகொண்டேன், பிறகு என்னுடன் பணியாற்றிய பகுதி நேர வணிகவியல் ஆசிரியரிடம் விசாரித்ததில், அவர் பெருந்தன்மையோடு " மாணவன்தானே  -போகப் போகப் தெரியும்.. ஆசிரியரின் அருமை புரியும் .... என்றார்....."  (கொடுமையிலும் கொடுமை ஏழ்மையில் படித்தவர்களுக்கு வேலையில்லா கொடுமை.... அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினும் ....கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது . என்னும் ஔவை வாக்கை நினைத்து வியக்கவைப்பது இந்த பாடல் http://youtu.be/O-zgx1UuvN0

# என் குறிப்பேட்டின் வாடாமலர் பக்கங்கள்:- http://youtu.be/ac4aT3sGO2M
"குறிப்பாக காரைக்கால் அம்மையார் படம் பார்க்கும் பொது எலும்புக்கூடுகள் நடன காட்சி" .....நான் சிறுவனாக இருந்த பொது அதிகம் பார்த்த திரைப்படம்கள் அனைத்தும் பக்திப்படங்கலாகவே இருந்தது, காரணம் என்னுடைய பாட்டியும் அதே ஊரில் வசித்த அவரின் தங்கை எனக்கு "சின்ன பாட்டி" இருவரும் திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் இரவு நேரத்தில் அவர்களின் கைபிடித்து அழைத்துவர துணைக்கு நானும் அவர்களுடன் திரைப்படம் பார்க்க செல்லவேண்டும் என்பதால் நான் பார்த்த படங்கள் திருவருட்செல்வர் , திருவிளையாடல், ஒளவையார், கோமாதா என் குலமாதா, காரைக்கால் அம்மையார்... இப்படி பல பக்திப்படங்கலாகவே இருக்கும், அதில் குறிப்பாக காரைக்கால் அம்மையார் படம் பார்க்கும் பொது எலும்புக்கூடுகள் நடன காட்சி வந்த பொது என் பாட்டி தனது புடவை தலைப்புபகுதியால் என் முகத்தை மூடி "பார்க்காதே பயந்துவிடுவாய்" என்று சொல்லியும் விடாமல் பிடிவாதமாக பார்த்த அந்த காட்சி என்றும் என் நினைவில் இருப்பவை.

# என் குறிப்பேட்டின் வாடாமலர் பக்கங்கள்;-
"ஆடு பாம்பே விளையாடு பாம்பே - அடிபட்ட பாம்பு சார் "..... அப்போது Dec-1989, பல மருத்துவமனைக்கு பஞ்சு வழங்கும் ஒரு பிரபல பஞ்சு தொழிற்ச்சாலை அது, அதன் அதிபரும் என் அப்பாவும் நண்பர்கள் (ஆலையின் அதிபர் அதிகம் படிக்காதவர்- தாத்தாவின் காலம் முதல் வணிக வழியில் குடும்ப நண்பர்) அவரின் பஞ்சு ஆலைக்காக கடன் தந்திருந்த, கடன் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் வர இருப்பதால் உதவுமாறு கேட்டுக்கொண்டார். உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்த அப்பாவால், அலைய முடியாமல் இருந்த சமயம் அது, எனக்கு சில அறிவுரைகளை கூறி இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பஞ்சு ஆலைக்கு சென்று உதவும் படி கேட்டுக்கொண்டார், கடன் பெற்று அதில் ஓடிக்கொண்டிருந்த பஞ்சு ஆலையில், தயாரித்த பொருட்களும் கடனில் விற்கப்பட்டு, தொழிற்ச்சாலையில் மாத சம்பளம் தருவதே மிகவும் கடினமான நிலையில் இருந்தது. இந்த நிலையில்தான் கடன் வழங்கிய நிறுவனத்தின் நேரடி ஆய்வு, அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து ஒரு வழியாக தயார்செய்தோம். மறுநாள் ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி நான்கு வாட்ட சாட்டமான ஆட்களை கையில் தடியுடன், தயாரித்த பொருட்கள் வைக்கும் காலியான இருப்புக் கிடங்கின் (GODOWN) கதவை மூடி அதன் அருகே நிற்க வைத்தோம், மிகப்பெரிய காலியான தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி மேற்ப்பரப்பில் செய்தித்தாள்களை பரப்பி அதன் மீது சிறிதளவே இருந்த பஞ்சுகளை தூவி வைத்தோம். அதாவது தொட்டி நிறைய தயாரிப்பிற்கான பஞ்சு இருப்பில் (STOCK) உள்ளது என்பதாக காண்பிப்பதற்கு.

குறிப்பிட்ட நேரப்படி இரண்டு கடன் நிறுவன அதிகாரிகள் வந்தபோது, முதலில் (முன்பே சரி செய்யப்பட்ட)இருப்பு (STOCK) புத்தகங்களை சோதனை செய்துவிட்டு , கிடங்கிற்கு சென்று ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்றார்கள், அவர்களை அழைத்துக்கொண்டு கிடங்கு (GODOWN) இருக்குமிடம் சென்றோம். ஏற்கனவே பேசிவைத்தபடி பணியாட்கள் நன்றாகவே நடித்தார்கள் " சார் கிட்ட வராதீங்க ...மிகப்பெரிய நல்ல பாம்பு ஒன்றை அடித்துவிட்டோம் மற்றொன்று தப்பித்து கிடங்கினுள் (GODOWN) நுழைந்துவிட்டது, அடிபட்ட பாம்பு சார் " என்றார்கள்.... அவ்வளவுதான் ஆய்வுக்கு வந்தவர்கள் "கிடங்கின் உள்ளே என்ன பொருள் உள்ளது என்பதை சொன்னாலே போதும் வெளியில் இருந்தே குறித்துக்கொண்டு சென்றுவிடுகிறோம் என்றார்கள்" பிறகு தொட்டி நிறைய தயாரிப்பதர்க்காக தாயாராக இருந்த "பஞ்சு-Cotton" -STOCK இருப்புக்களையும் குறித்துக்கொண்டு, பஞ்சு ஆலை சிறப்பாக செயல்படுகிறது என்றுகூறி சென்றனர். அன்று அந்த தொழிற்ச்சாலை தப்பித்துக்கொன்டாலும் பின்னாளில் நேர்ந்த அண்ணன் தம்பி சொத்து தகராறில் ஒரேடியாக மூடுவிழா கண்டது என் மனதிற்கு வருத்தமாக இருந்தது. "அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே..." http://youtu.be/drBTwOv1QWk

"மனநிறைவான வாழ்க்கையை தேடுவதைவிட
வாழும் வாழ்கையில் மனநிறைவை பெற முயற்சித்தேன்.
சிறப்பான வேலை என்பதைவிட
செய்யும் வேலையே சிறப்பாக செய்தேன்
அது வேதனை போன்றதொரு சோதனை என்பது
புரிந்ததும்... தெரிந்தது
மனம் கரைந்ததும்... தெளிந்தது http://www.youtube.com/watch?v=1VKqj92W73k&feature=share&list=PLpg7WQR5RCCztT3u5tcLqjyhktTHC7kPb


#
HFCL-தாயாரிப்பின் நேர்காணல் பணி நிமித்தம் நான் அடிக்கடி செல்லும் இமாச்சல் "சிம்லாவின்" ஒரு பிரபல பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இந்த பழைய சோறு எப்படி செய்வது என்பதை சொல்லிக்கொடுத்து செய்யச்சொல்லி சாப்பிட்ட ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன் என் நினைக்கிறேன் "என் மனைவி இதுகுறித்து இன்றளவும் கேலி செய்துக்கொண்டிருப்பார்கள்) "பழைய சோறு" உண்டு அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமை தெரியும்.


#என்னுடைய அப்பாவழி பாட்டி அவர்களின் வீட்டு திண்ணையில் இதுபோலவே அவர்களின் தோட்டத்தில் விளைந்த காய்களை பறித்து வைத்துவிடுவார்களாம், வேண்டுபவர்கள் அதை எடுத்துக்கொண்டு செல்லலாம். அதேபோல நான் வசிப்பது (1990முதல்)புது தில்லியில் என்பதால் எங்களது வாடிக்கயரான வீடு வீடாக செல்லும் காய் வண்டிக்காரரிடம் ஒவொரு மாதமும் வரும் அம்மாவசை அன்றும் 20 கிலோ வாழக்கைக்கு பணம் தந்து அதை அன்று முழுவதும் இலவசமாக பலருக்கு வழங்கவேண்டும் என்று கட்டளையிட்டதுண்டு .. தற்போது ப்ராஜெக்ட் வேலைநிமித்தம் பல இடங்களுக்கு செல்வதால் தொடர்ந்து செய்ய முடியாமல் போனது.... ஒரு மாமி என்னிடம் "ஏண்டாப்ப இப்போதெல்லாம் இலவச வாழக்காய் தருவதில்லை" என்று கோபித்துக்கொண்டார்..... பாட்டிக்கு ஆங்கில காய் வகைகள் பிடிக்காது (கோஸ், பீன்ஸ், கேரட், முள்ளங்கி நூகோல் போன்றவை) பின்னாளில்1912- தாதாவுக்கு ஊட்டி தாவரவியல் தோட்டத்தில் கார்டன் (botanical garden superintendent) இருந்தபோது அவருக்கு வரும் ஆங்கில காய்கறிகளை அப்படியே மாட்டுக்கு வைத்துவிடுவார்களாம். 1989கலீல் பாட்டி எங்களது தலைநகர் வாழ்க்கையை பார்த்து, காய்கறிகள் அரைகிலோ, ஒருகிலோ என்று வாங்கி குளிர் போட்டியில் வைத்து வாழ்வதைப்பார்த்த பாட்டி, எங்கல் காலத்தில் எப்படியெல்லாம் வாழ்ந்தொமடா என்று கண்ணீர்விட்டது... என் நினைவில் நின்றவை....

#பாடல் -"அவா அவா ஆத்துக்குள்ள ஆயிரம் இருக்கு... தெரியாதோ நோக்கு தெரியாதோ"....... " தெரியாது ஆனா தெரியும்"
வாழ்க்கையில் இதை நன்கு புரிந்துக்கொண்டால் வேகமாக முன்னேறமுடியும், எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் இது, LKG என்னும் பாலர் பள்ளியில் படிக்கும் என்னுடைய அக்காவின் மகனிடம் நான் கற்ற பாடம் தான் என்னுடைய வாழ்கையில் நான் வேகமாக முன்னேற எனக்கு உதவியது. சுமார் 25 வருடத்திற்கு முன்பு என் அக்காவின் மகன் என்னிடம் ஓடி வந்து காகிதத்தில் ஒட்டகம் செய்து தருமாறு கேட்கவே நான் பல யோசனைக்குப்பின், எனக்கு கப்பல், விமானம் போன்ற இன்னும் சில காகிதத்தில் செய்யத்தெரியும் ஆனால் ஒட்டகம் செய்ய தெரியாது என்றேன், அதற்க்கு அவன் "என்ன மாமா, இதுகூட தெரியலையே" என்று கூறி காகிதத்தின் ஒரு பகுதியை கிழித்து அதை நீண்ட உயர வடிவில் சுருட்டி இது தான் ஒட்டகத்தின் கழுத்து நீண்டு இருக்கும், பிறகு தலை மற்றும் கால், உடல்... என்று காகிதங்களை சுருட்டி ஒன்றன் பின் ஒன்றாக இணைத்து... ஒட்டகம் இதுதான் என்றான்..மிக எளிமையான இது எனக்கு தெரிந்தும் தெரியவில்லை என்றோமே. அன்று எடுத்த முடிவுதான் எதுவும் தெரியும் என்று சமாளிப்பது எப்படி என்று பழகிக்கொண்டேன், அது என் முன்னேற்றத்திற்கு மிகவும் உதவியது. பலருக்கு பலவிவரங்கள் தெரிந்திருக்கும் ஆனால் சரியான நேரத்தில் அதை பயன்படுத்திக்கொள்வது தெரியாது. உதாரணத்திற்கு வேலைவாய்ப்பின் நேர்காணலின் பொது கேட்கப்பட்ட சில கேள்விகள் "SIP பற்றி தெரியுமா அதில் அனுபவம் உள்ளத? " அந்த நேரத்தில் பதில் சொல்லமுடியாமல் பிறகு இது எனக்கு நன்கு தெரியுமே சரியான நேரத்தில் அதை சொல்லாமல் தவறவிட்டுவிட்டோமே என வருந்துவது. இப்போது சொல்லுங்கள் இன்று இந்த "பதிவு" உங்களுக்கும் உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

# "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் ..."

இனிமையான பல நினைவுகளைக்கொண்ட ஓய்வுக்காலம், சிறிது ஏக்கமான இறுக்கத்தையும் தருகிறது என்பது எனது கருத்து. 2008-2009 கலீல் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த GVG கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் பல நேரம் அவருடைய கிழக்கு டெல்லி உத்தரப்பிரதேச எல்லையில் அமைந்திருக்கும் அவருக்காக அவர் வாங்கிய இல்லத்தில் பேசிக் கொண்டிருப்போம், அவரும் அவரது மனைவி "அம்மையார்" அவர்களும் தெலுங்கில்தான் பேசிக்கொள்வார்கள். நானும் அம்மையார் அவர்களுடன் தெலுங்கிலும், GVG கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் தமிழிலும் பேசுவோம். அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டின் தேர்தல் ஆணையராக பணியாற்றியதை பற்றி பெருமைப்படுவதாகவும் மேலும் அவருக்கு ஏற்ப்பட்ட இனிமையான அனுபவங்களைப்பற்றி பேசுவார், ஒரு தொகுதியில் 3500 க்கும் மேல் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்குவதற்காக அதிக சிரமப்பட்டதாக நினவுகூரினார், நாட்டின் பல முக்கிய பிரதமர்களுடன் பணியாற்றியது பற்றி அவரது அனுபவங்களை புகைப்படங்களுடன் கூடிய குறிப்புகளை வருடத்திற்கு ஒரு கோப்புக்கள் என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறார். முன்னாள் இந்திய ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்களுக்கு நூறாவது பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று மிகவும் விருப்பத்தோடு இருந்தார், அது முடியாமல் போன பொது மிகவும் வருந்தினார்(கண்கலங்கினார்). தற்போதும் தன்னைப்பற்றிய எந்த ஒரு செய்தியும் வெளிவரக்கூடாது என்பதை ஒரு கொள்கையாக கடைப்பிடிக்கிறார். மனதளவில் ஏக்கங்கள் இருந்தும் கொள்கையை இன்னும் விடாது பிடித்துக்கொண்டிருக்கிறார். அவரின் மனதிற்கு ஆறுதலாகவும் சந்தோசம் தரும் வகையில், அவரின் இருப்பிடத்திற்கு அருகாமையில் அமைந்த ஒரு சில பள்ளிகளின் விழாக்களுக்கும், கோவில் மற்றும் சில பொது நல சங்கங்களின் விழாக்களுக்கும் தலைமை ஏற்கும் சேவைக்கு அன்புக்கட்டளையாக அடம்பிடித்து அழைத்து சென்றிருக்கிறோம். http://youtu.be/3euUGyKp7_4

Post a Comment

FREE JOBS EARN FROM HOME