FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, December 30, 2021

ஹம்மிங் பாடல்கள்


*🎶ஹம்மிங் பாடல்கள். அதாவது வார்த்தைகள் இல்லாமல் "அ..அ..ஆ, ல ல லா, ஹ ஹ ஹா, போன்ற சந்தங்களில் பாடுவது.*


*🎶இந்த ஹம்மிங் பாடல்களை மொத்தம் 8 வகையாக பிரிக்கலாம்..🤔*

*1.பாடல் முழுவதும் ஹம்மிங் வரும் பாடல்..*

*2. பாடலின் ஆரம்பம் மற்றும் நடுவில் பின்பு இறுதியில் மட்டும் வரும் ஹம்மிங் பாடல்கள்..*

*3.ஹேம் ஆரம்பத்தில் மட்டும் வரும் ஹம்மிங் பாடல்கள்..*

*4.பாடலின் இறுதியில் மட்டும் வரும் ஹம்மிங் பாடல்கள்.*

*5.ஆண் குரலில் மட்டும் ஹம்மிங் உள்ள பாடல்கள்*

*6.பெண் குரலில் மட்டும் ஹம்மிங் உள்ள பாடல்கள்*

*7.ஆண் பெண் என இருவரும் ஹம்மிங் செய்து பாடும் டூயட் பாடல்கள்.*

*8.பாடல் குழுவினர்கள் ஹம்மிங் செய்து பாடும் பாடல்கள்*


*🎶ஒவ்வொரு வகைக்கும் 40க்கும் மேற்பட்ட ஹம்மிங் பாடல்கள் தொகுப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது*


*🎶ஹம்மிங் பாடல்களில் பழைய பாடல்களே மிக அதிகம். அதிலும் குறிப்பாக மெல்லிசை மன்னர் MSV இசையமைத்த பாடல்களே அதிகம்...*


நன்றிகளுடன். கோகி, ரேடியோ மார்கோனி, புது தில்லியிலிருந்து...

🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔


*🎶இன்றய ஹம்மிங் பாடல் நிகழ்ச்சியில் MSV இசையில் பழைய பாடல்கள் வரும் என்று நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள்.. ஆனால் புது பாடல்களின் தொகுப்பில் ஒரு சில ஹம்மிங் பாடல்களை இன்றய நிகழ்ச்சியில் தந்துள்ளேன், தொடர்ந்து அடுத்த நிகழ்ச்சியில் மேலும் பல பாடல்களும் வரும்...😀👍🎶*

*😃💖ஆண் பெண் குரல் சேர்ந்த டூயட் ஹம்மிங் பாடல்கள்:- இந்த பாடலில் ஜாஸ் இசையில் முக்கியமாக.. மனசுக்கு குதூகலமாக துள்ளல்களை தரும்.. குழுவினர்களின் கோரஸ் குரல்... ஆனால் இந்த பாடலில் "பாடலின் ஆரம்பம் டூயட் குரல் ஹம்மிங் பாடலின் நடுவே வரும் ஹம்மிங் அதுவும் ஆண் குரலில் மட்டும் சோலோவாக ஹம்மிங் தந்திருப்பது தனி சிறப்பு" பாடலுக்கு மிக மிக இனிமை சேர்க்கும் SPB துள்ளல் குரலில் தூள் கிளப்பி இருப்பார்..*😃💕

*🎵பாடல்:-நெஞ்சம் பாடும் புதிய ராகம் தாளம் உன்னை தேடுது –படம் நெஞ்சில் ஓர் ராகம் [1982 ] – பாடியவர்: SPB+S.ஜானகி- இசை..T.ராஜேந்தர்*🎵

*💝இந்த பாடலின் சிறப்பை நாயகன் டிரம்ஸ் இசையில் ஹம்மிங் செய்து ஆரம்பித்து, வெட்டுக்கிளி கிறீச்சிடும் இசையில் பியானோ, எலக்ட்ரிக் கிட்டார் தொடர்ந்து  வயலின், புல்லாங்குழல்,  அக்கியூஸ்டிக் கிட்டார் பேஸ் கிட்டார்... டெரம்பெட்.. கிளாறினேட்  இசை வர... பாடலின் பின்னணியில் புல்லாங்குழல் இசை இடையில் விசில் இசையும் சேர்ந்து பாடலுக்கு சிறப்பு சேர்க்கிறது.. மற்றும் டோம் டோம் கிட் இசை "சச்சச் சா" மிக அமைதியாக தொடர.. இயாட் பெடல்.. போன்ற இசைக்கலவையில்.. அற்புத பாடல்.*💝

🍬👇👇👇👇👇👇👇👇👇🍬

 *😀💝பாடலின் ஆரம்பம் மற்றும் இடையிடையே பெண் குரலில் வரும் ஹம்மிங் சூப்பர்..🎼பாடல்:-சின்னப் புறா ஒன்று ...எண்ணக் கனாவினில் ..வண்ணம் கெடாமல் வாழ்கின்றது.. '  என்ற  வாலி அவர்கள்  எழுதிய இந்தப் பாடல் தெய்வீக கானம் போலவே எனக்கு ஒலித்தது.  இப்போதும் அப்படியே ஒலிக்கிறது.     இரண்டு  சரணம் ,  இரண்டு  வேறுபட்ட  இடையிசையோடு  உணர்ச்சிப் பெருக்கின் உச்சமாய்  எஸ்.பி.பி குரலில் பாடல் எங்கெங்கோ கூட்டிச் செல்லும். பாடல் முழுக்க கிடார் வயலின் கொண்டு இசை ராஜாங்கமே நடத்தப்பட்டிருக்கும். பாஸ் கிடார் பாட்டு முழுவதும் சற்று தூக்கலாகவே தெரியும். முதல் இடையிசையில் கிடாரில் கொடுத்திருக்கும் அந்த இசைக் கோர்வை அட்டகாசமானது. இரண்டாம் இடையிசையில் தனித்த வயலின் கொண்டு அழுதிருப்பது அற்புதமானது. இடையிடையே பெண் குரலின்  ஹம்மிங்  கூடுதல் சோகத்தை சுகமாய் மாற்றிக் கொடுக்கும்.*🎼💖

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 *😀💝பாடலின் இடையில் வரும் குழுவினர்களின் ஹம்மிங் அபூர்வமான ஹம்மிங் கோர்வை.. அதோடு இந்த பாடலில் அபூர்வமாக மேண்டலின் பின்னிசையும் வரும். பாடலை கவனித்து கேட்டால் மட்டுமே (மெண்டலி-மேண்டலின் இசையை) ரசிக்கமுடியும். பாடல்:- ரசாவே உன்னை நான் என்னிதான், பல ராத்திரி தூங்கள– தனிக்காட்டு ராஜா –SP.ஷைலஜா– இசை இளையராஜா பாடலுக்கு இரண்டாவது சரணத்தில் ஹம்மிங்.. து..துத்தி.. தூ.. பிறகு கிட்டார்+ மாண்டலின்  இழையோடும். எனது சிறப்பான புது பாடல் தொகுப்பில்  இது சிறப்பான பாடல்*

🎸🎼💖

*😀💝பாடலின் ஆரம்பம் மற்றும் இடை இடையே வரும் ஆன் குரல் ஹம்மிங் பாடலுக்கு மெருக்கேற்றுகிறது.. பாடல்:-யாரோடு யாரோ - இந்தப் பாடலை யுவனும், உஸ்தாத் சுல்தான் கானும் பாடியுள்ளார்கள். யுவன் தனது டிரேட்மார்க் குரலில் நன்றாகவே பாடியுள்ளார். பாடலில் வரும் குழந்தையின் கிரீச் குரலும், சாரங்கி இசையும் கேட்டவுடன் பிடித்துப் போகும் இசை, அற்புதமான லிரிக்ஸ், மற்றும் இடை இடையே வரும் உஸ்தாத் சுல்தான் கானின் ஹம்மிங், என சகலமும் சூப்பராக இருக்கும். இது எனது புது பாடல் தொகுப்புகளின் சிறந்த பாடல்👍💝*

*💝பாடலில் யோகி தீம் (சாரங்கியில்) - யோகி தீம் மியூசிக்கை உஸ்தாத் சுல்தான் கான் சாரங்கி எனும் இசைக்கருவியில் வாசித்திருக்கிறார். நடு நடுவே வரும் உஸ்தாதின் ஹம்மிங் குரலும், தீம் மியூசிக்கோடு கச்சிதமாகப் பொருந்துகிறது. சாரங்கி இசை அப்படியே நம் மனதை வருடுவதுபோல் ஒரு ஃபீலிங். தனிமையில் இருக்கும் போது கேட்டுப்பாருங்கள். மெய் மறந்துவிடுவீர்கள்.💝*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 

*😀💝பாடலின் ஆரம்பத்தில் மட்டும் ஹம்மிங் வரும் பாடல்கள் வரிசையில்.. பாடல்:- நான் தேடும் செவ்வந்தி பூ இது –படம்:- தர்ம பத்தினி, இசை இளையராஜா + எஸ்.ஜானகி பாடும் பாடல், ஆரம்ப ஹம்மிங் பாடல்களின் வரிசையில், அருமையாக ஹம்மிங் உடன் ஆரம்பமாகும் எழுச்சி தருகின்ற பாடல்..💝*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 *🏆ஹம்மிங் குயின்?🏆*

*💝"ஸ்வரங்களின் அரசி" எனவும் "இந்தியாவின் ஹம்மிங் குயின்" என்றும் அழைக்கப்படுபவர் யார்?*

*🏆ஹம்மிங் குயின்?🏆*

*💝"ஸ்வரங்களின் அரசி" எனவும் "இந்தியாவின் ஹம்மிங் குயின்" என்றும் அழைக்கப்படுபவர் பிரபல பாடகி சொர்ணலதா தனது 14 வயது முதல் திரைப்பாடல்களை பாடியவர் 1400 மேற்பட்ட பாடல்களில் பின்னணி ஹம்மிங் குழுவில் இடம்பெற்று பாடியவர். தேசிய விருது பெற்றவர்?*

 *💝ஹம்மிங் குயின் சொர்ணலதா பாடிய, வள்ளி படத்தில் வரும் என்னுள்ளே என்னுள்ளே குழு ஹம்மிக் பாடல் மற்றும்  சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, மிகவும் அருமையான பாடல்..💝*

👇👇👇👇👇👇👇👇👇👇👇

*😀💝பாடல்:- "வந்த நாள் முதல் இந்த நாள் வரை" பாடலின் அமைப்பு முறயில் மிகவும் புதுமையைக் கையாண்டார்கள மெல்லிசை மன்னர்கள்.பாடலின் ஆரம்பத்தில் விசில் சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை மட்டும் வரும் ஹம்மிங் பின்தொடர்ந்து முடிய, பாடல் ஆரம்பிக்கும். தொடர்ந்து விசில் சத்தத்தை பின்ணணி இசை வாத்தியங்களில் ஒன்று போல பயன்படுத்தியிருப்பார்கள்.இதில் புதுமையின் உச்சம் என்னவென்றால் இந்தப் பாடல் அமைக்கப்பட்ட ராகம். தமிழ் செவ்வியலிசையில் மிக முக்கிய ராகங்களில் ஒன்றான மோகனம்.💝😀*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 *🤣💝🎶ஹம்மிங் 95% சதவீதம் பெண் குரல்கள்தான்.காரணம்? மனதை கொள்ளைக்கொள்ளும் உணர்ச்சி பொங்கி வழிவதுதான். காதல்/ஒரு வித உருக்கம்/சோகம் போன்ற பல ரசங்களும் தெறிக்கும்.தேவதைகளின் மொழி இந்த ஹம்மிங்.*🎶

*💝🎶குழுவுனராக ஹம்மிங் செய்யும் பாடல்கள் நல்ல ரசனை...இந்த பாடல் அழைக்காதே (1957) மணாளனே மங்கையின் பாக்கியம் - ஆதி நாராயண ராவ்  அருமையான ஹிந்தோள ராக  (குரூப்) குழு பெண்கள் ஹம்மிங் பாடல்💝🎶*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 

*💝இந்த ஹம்மிங்கும் மனிதன் வாழ்நாளில் ஒரு நாளாவது கேட்க வேண்டும்... Stunning!அருமையான பாடல் வரிகள்... அருமையான ஹம்மிங் பாடல் இது பாடலின் ஆரம்பம் மற்றும் இடையிடையே வரும் பெண் குரல் ஹம்மிங் சூப்பரோ சூப்பர்.. பாடல்:-பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால் – படம்:-பணம் படைத்தவன்1965. விஸ்வநாதன்-ராமமூர்த்தி. அமானுஷ்ய உணர்வைத் தரும் இந்தப்பாடலில் எல்.ஆர் ஈஸ்வரியின் ஹம்மிங் மற்றும் சைலபோன் இயைந்து பாடலை இனிமையூட்டுகிறது.💝😀*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 *💝பாடல் முழுவதும் பெண் குரலில் ஹம்மிங் தொடர்வது... பாடல்:-கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா – படம்:-ஆலயமணி 1962 -விஸ்வநாதன்-ராமமூர்த்தி. பாடலில் தந்திக்கருவிகளின் சலசலப்பை தென்னங்கீற்றாய் பொலிவுடன் தரும் அமானுஷ்யப்பாடல். அலையலையாய் பொங்கி பெருகி மறைந்து மீண்டும் எழுந்து வரும் இனிமை பொங்கும் ஹம்மிங், இந்தப்பாடலுக்கு சைலபோன் பொலிவையும் தருகிறது. இதில் முதலில் வரும் புல்லாங்குழல்/எல்.ஆர்.ஈஸ்வரியின ஹம்மிங் மனிதன் வாழ்நாளில் ஒரு நாளாவது கேட்க வேண்டும்.வசீகரம். லட்சணமான இசை. அருமையான பாடல் வரிகள். 🌧️ஆகாயத்தில் மிதக்கும் உணர்வை தந்த பாடல்.🎶😀💝*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 

*💝🎶பாடல்:- மம்மா அம்மம்மா..கன்னத்தில் கன்னம் வைத்துக்... - (1966) - வல்லவன் ஒருவன் - இசை எஸ்.வேதா, எல்.ஆர்.ஈஸ்வரி குரல்/ஹம்மிங்  மனதை அள்ளுகிறது. ரொம்ப அபூர்வமான குரல்.அலட்சியமாகப் பாடுகிறார். Hats off L.R.Eswari.இவரைப் பற்றி ஒரு தனிப் பதிவே போட்டு இருக்கிறேன். இந்த பாடலின் அற்புதமான இசை. மேற்கத்திய இசைத் தாக்கம்(????) வேதாவுக்கு நிறைய  உண்டு.💝🎶*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

 


*💝🎶ஆண் குரலில் வித்தியாசமான துள்ளல்களோடு கூடிய ஹம்மிங் பாடல்:- உன்னை நான் பார்த்தது - (1975) -பட்டிக்காட்டு ராஜா -சங்கர் கணேஷ் - வித்தியாசமான ”பப்பப...பப....ப்பா” மற்றும் ஹம்மிங்.அட்டகாசம்.🎶💝🤣*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬


*💝🎶🤣பெண் குரல் மட்டுமா பாடல் முழுதும் ஹம்முவது.. ஆண் குரலில் நாங்களும் ஹம்முவோம் என்று போட்டி பாடல்போல TMS பாடல் முழுதும் ஹம்மி இயிருப்பார்.. பாடல்:- பாலிருக்கு

பழமிருக்கு பசியிருக்காது. பாவமன்னிப்பு படப்பாடல் MSV அருமையாக இசையமைத்து, இசைத்திருப்பார்.  அருமையான பாடல் முழுதும் ஆண் குரலில் சிறப்பான ஹம்மிங் பாடல்*🤣💝🎶

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

*😀💝 தொடரும் அடுத்த நிகழ்ச்சியிலும் ஹம்மிங்கின் பழைய பாடல் தொகுப்பு இடம்பெறும்...*

*🤣💝🎶மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுபவர்.. கோகி ரேடியோ மார்க்கோனி, புது தில்லியிலிருந்து...👍🙏🍬*


 *💝🎶👻திரில்லர் ஹம்மிங்:-பேய்/சுடுகாடு/நடுகாடு/நடுஇரவு/ என்று விதவித ஹம்மிங். தமிழ்ப் படங்களில் ”வெள்ளை உடை ஆவி ஹம்மிங்” ரொம்ப விசேஷமானது.(நெஞ்சம் மறப்பதில்லை,துணிவே துணை/யார் நீ,அதே கண்கள்)*

*பயங்கரத்திற்கும் (horror) (குரல்?) கொடுப்பதுண்டு.சிவப்பு ரோஜாக்கள் படத்தில் தோட்டத்தில் இருந்து ஒரு பிணத்தின் எழும்போது வரும் ஆணின் முரட்டு ஹம்மிங் பயமுறுத்தும்.*

*💝👻🎶பாடல்:-நானே வருவேன்  -(1960) யார் நீ -எஸ்.வேதா-அட்டகாசமான ஆரம்ப இசை.வெள்ளை உடை”ஆவி” ஹம்மிங்.🤣*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

*💝🎶சோலோ ஹம்மிங்.. பாடலின் ஆரம்பத்தில் வரும் AM.ராஜா அவர்களின் மிக இனிமையான நீண்ட ஹம்மிங்.. பாடலுக்கு இனிமை சேர்க்கிறது.*

*பாடல்:- காலையும் நீயே மாலையும் -(1960) -தேன் நிலவு -ஏ.எம்.ராஜா ஜானகியின் மயக்கும் ஹம்மிங். மயக்கும் ஹம்சாநந்தி ராக மெட்டு.ஏ.எம்.ராஜாவின் பெண்மை  பூசிய நளின குரல் சூப்பர்.*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

*💝🎶AM.ராஜாவும் .P.சுசீலா அவர்களும் இணைந்து அமைந்த அருமையான  டூயட் ஹம்மிங் பாடல் சித்தார் பின்னணி இசையில் தபேலா மிக நேர்த்தியான தாளத்தில் தொடரும் புல்லாங்குழல், வயலின் இசையும் அருமையான இசைக்கோர்வை கொண்ட அற்புதமான பாடல்*

*பாடல்:- கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய். மீண்ட சொர்க்கம் படத்தில் ,இசை T.சலாபதி ராவ், AM.ராஜா குரலில் இனிய பாடலில் பாடல் முழுதும் பி.சுசிலா அவர்கள் ஹம்மிங் செய்ய மிக அருமையான பாடல்..🎶💝*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

*💝🎶ஹம்மிங் பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரி ஹம்மிங்கும் மயக்கும்.வித்தியாசமான கம்போசிங்.*

*பாடல்:- நாம ஒருவரை ஒருவர் - (1971)குமரிக்கோட்டம்-எம் எஸ் வி-  டிஎம்எஸ்-3.51ல் கொடுக்கும் ஹம்மிங் புதுசு/ஸ்டைல்.”நான் தொடர்ந்து போக” என்று டிஎம்எஸ் எடுக்கும் இடம் அருமை.அச்சு தமிழன் குரல்.இப்போது பாடும் இளைய தலைமுறை இந்தப் பாட்டை ஒரு நாளைக்கு பத்து தடவை கேட்க வேண்டும்.*🎶💝👍

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

[12/11, 7:54 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💝🎶பாடல்:- காற்றுக்கென்ன வேலி -(1977) அவர்கள்  - எம் எஸ் வி. Stunning  orchestration! ஆரம்பமே ஹம்மிங்தான்.முதல் சரண இசை(interlude)  1.29 ல் நிறுத்தப்பட்டு 1.31ல் தொடரும் ஜதிகள் ஹம்மிங் பிறகு  அந்த ஹம்மிங்கில்  ஜானகி   தன் ஹம்மிங்கோடு சேருவது அருமை.*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

*💝🎶பாடல்:-ரவிவர்மன் எழுதாத கலையே - (1988) - வசந்தி-சந்திரபோஸ், ஜேசுதாஸ், KS.சித்திரா இருவரும் இணைந்து டூயட் ஹம்மிங் செய்யும் இனிமையான பாட்டு. மென்மையான சிக்கல் இல்லாத எதிர்பார்த்தபடி வரும் ஹம்மிங். வீணையின் நாதம் இனிமைதான், இசைக்கோர்வை பாட்டின் ஆயுளை கூட்டும் என்பதை தீவரமாக கடைப்பிடிப்பவர் என்பது இவர் பாடல்களில் தெரியும்.*

*பாடல் கம்போசிங்குகளில் நிறைய அமெச்சூர் நெடி🤣.*

🍬👇👇👇👇👇👇👇👇👇👇🍬

[15/11, 7:29 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💝🎤🎶வித்தியாசமான ஹம்மிங் பாடல்கள்...*

*பாடல்:- சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்.. சங்கீதத்தின்) தாலாட்டை கேட்டேன்...*🎶💝

[15/11, 7:33 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💝🎤🎶வித்தியாசமான ஹம்மிங் பாடல்கள்...*


*பாடல்:- ஆவணி மலரே ஐப்பசி மழையே கார்த்திகை விளக்கே..*🎶💝

[15/11, 7:45 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💝🎤🎶வித்தியாசமான ஹம்மிங் பாடல்கள்...*


*பாடல்:- நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்...நீந்தாமல் நீ தந்த மோகம் அல்லவா..*🎶💝

[15/11, 7:51 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💝🎤🎶வித்தியாசமான ஹம்மிங் பாடல்கள்...*


*பாடல்:- அவள் ஒரு பச்சை குழைந்தை, பாடும் பறவை, பருவம் 16..*🎶💝

[15/11, 8:03 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *💝🎤🎶வித்தியாசமான ஹம்மிங் பாடல்கள்...*


*பாடல்:- இன்றுமுதல் செல்வமிது என்னழகு தெய்வமிது வாழ வந்தது ....ல..லா.லா. ல லலா லலா...ய யா யா ய யா யயா யயா... சம் சம் சம்.. சம் சம் கிம்.. லா லி லா லி லா லாலி லாலி.. ம்..ம்..ம்..ம்..ம்....🎶💝*

No comments:

FREE JOBS EARN FROM HOME