FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Thursday, December 30, 2021

மேகமே மேகமே பாடல்கள்

 *மேகமே மேகமே பால் நிலா தேயுதே*

*தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே*

*(மேகமே..)*

*தேகமே தேயினும் தேன்ஒளி வீசுதே*

*(மேகமே..)*


தந்தியில்லா வீணை சுரம் தருமோ

தநிரிசா ரிமதநிச தநிபக

தந்தியில்லா வீணை சுரம் தருமே

புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ

பாவையின் ராகம் சோகங்களோ

ஆ....ஆ ஆ

பாவையின் ராகம் சோகங்களோ

நீரலை போடும் கோலங்களோ

*(மேகமே..)*


தூரிகை எறிகின்றபோது இந்த

தாள்களில் ஏதும் எழுதாது

தினம் கனவு எனதுணவு

நிலம் புதிது விதை பழுது

எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்

எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்

அதை எதற்கோ... ஓ...

*(மேகமே..)*


*படம்: பாலைவனச் சோலை*

*இசை: கங்கை அமரன்*

*பாடியவர்: வாணி ஜெயராம்*


 *காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா*

*காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா*

*அவன் வாய் குழலில் அழகாக ஆ...*

*அமுதம் ததும்பும் இசையாக*

*மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து*


காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

பசு அறியும் அந்த சிசு அறியும்

பாலை மறந்து அந்த பாம்பறியும்

பசு அறியும் அந்த சிசு அறியும்

பாலை மறந்து அந்த பாம்பறியும்

வருந்தும் உயிருக்கு ஆ..

வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும்

இசை அருந்தும் முகம் மலரும் ஒரு அரும்பாகும்

இசையின் பயனே இறைவன் தானே


காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக ஆ...

அமுதம் ததும்பும் இசையாக

மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து


ஆதார ஸ்ருதி அந்த அன்னை என்பேன்

அதுக்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன்

ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்

உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்


திறந்த கதவு என்றும் மூடாது

இங்கு சிறந்த இசை விருந்து குறையாது

இது போல் இல்லம் ஏது சொல் தோழி


காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக ஆ...

அமுதம் ததும்பும் இசையாக

மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து


*படம்: ஒரு நாள் ஒரு கனவு*

*இசை: இளையராஜா*

*பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், பவதாரினி, சாதனா சர்கம்*

[06/10, 3:55 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *லலலால லலலால லலலா*

*லலலால லலலால லலலா*

*லலலால லலலால* *லலலாஆஆஆ*


*ரவிவர்மன் எழுதாத கலையோ*

*அஹஹா*

*ரதி தேவி வடிவான சிலையோ*

*அஹஹா*


*கவி ராஜன் எழுதாத கவியோ ஓஹோ*

*கரை போட்டு நடக்காத நதியோ*

*ஓஓஓஓ*

*ம்ம்ம்ம்*

*[ரவிவர்மன்...]*


விழியோர சிறு பார்வை போதும்

நாம் விளையாடும் மைதானம் ஆகும்

இதழோர சிரிப்பொன்று போதும்

நான் இளைப்பாற மணப்பந்தலாகும்

கையேந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே

கருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே

*[ரவிவர்மன்...]*


பூமாலையே உன்னை மணப்பேன்

புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்

மகராணி போலுன்னை மதிப்பேன்

உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்

என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்

அதுபோதுமே ஜீவன் அமைதி கொள்ளும்

*[ரவிவர்மன்...]*


*இசை: சந்திரபோஸ்*

*பாடியவர்: K.J. யேசுதாஸ், சித்ரா*

*படம்: வசந்தி*


 *காதலெனும் வடிவம் கண்டேன்..*

*கற்பனையில் இன்பம் கொண்டேன்*

*மாலையிடும் நாளை எண்ணி மயங்குகிறேன்..*

*ஆசைக்கன்னி....*

*( காதலெனும்)*


ஹோ ஹோ ஹோ ஒஓ ஓஒ ஓ ஹோஹோ

ஆஅ ஆஹா ஆஹாஅ ஆ ஆ


துள்ளாமல் துள்ளும் உள்ளம்

மின்னாமல் மின்னும் கன்னம் *(2)*

தொட்டவுடன் மேனி எல்லாம்

துவண்டுவிடும் கொடியைப்போல

*( காதலெனும்)*

ஹோ ஹோ ஹோ ஒஓ ஓஒ ஓ ஹோஹோ

ஆஅ ஹா ஹாஅ ஆ ஆ


நாளெல்லாம் திருநாளாகும்

நடையெல்லாம் நாட்டியமாகும் *(2)*

தென்றலெனும் தேரின் மேலே

சென்றிடுவோம் ஆசையாலே

*( காதலெனும்)*


*திரைப்படம் : பாக்யலக்ஷ்மி*

*பாடியவர் : பி.சுசீலா*

*இசையமைத்தவர்: எம்.எஸ்.வி*

[06/10, 4:53 PM] GOPAL & ARTHI  KRISHNAN: *ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது*

*இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது*

*பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது*

*காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது*


*.........ஒரு ஜீவன் தான்..........*


ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்

வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்

உருவானது நல்ல சிவரஞ்சனி

உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி

ராகங்களின் ஆலாபனை

மோகங்களின் ஆராதனை

உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்


*..........ஒரு ஜீவன் தான்..........*


காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையோ

ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ

வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்

வளையோசைதான் நல்ல மணிமந்திரம்

நாந்தானைய்யா நீலாம்பரி

தாலாட்டவா நடுராத்திரி

சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்


*..........ஒரு ஜீவன் தான்..........*


*படம் : நான் அடிமை இல்லை (1985)*

*இசை : விஜய் ஆனந்த்*

*பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஜானகி*

No comments:

FREE JOBS EARN FROM HOME