குறிப்பு :- இது நான் எழுதிய, எனது வானொலி நிகழ்ச்சியிலிருந்து ஒரு பகுதி "உத்தி + யோகம் = உத்யோகம்". ["Strategy + Yogam =Profession"....The Yogam is not Luck and it is your Performance] (தூய தமிழில் "புரிந்துணர்வு செயல்திறன் + கைவசமாவது") இங்கு யோகம் என்பது அதிர்ஷ்டம் அல்ல அது "கர்ம வினை" அல்லது, சாமர்த்தியம் அல்லது, சாதுர்யம்.... அதாவது சாமர்த்தியமாக சம்பாதிப்பது..... அட கர்மமே !!! என கூறுவது,.. அட யோகமே!! என்பதுதான் சரியான பொருள் ... கர்மம் என்றால் செய்யும் செயல்கள்... நாம் செய்யும் செயல்கள்தான் யோகமாக நம்மை வந்தடைகிறது அது நல்ல யோகமா அல்லது கேட்ட யோகமா என்பது நாம் செய்யும் செயல்களைப்பொருத்து அமைகிறது.
" நீ எதை தூக்கியெரிகிராயொ அது திரும்ப உன்னிடம் வந்தடையும் - மகாபாரதம்"
ஒரு தந்தையும் அவனது பத்து வயது மகனும் காட்டுப் பாதை வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தனர்.
மகனுக்குத் திடீரெனக் காலில் ஏதோ குத்தியது. வலி பொறுக்க முடியாமல் "ஆ" என்று கத்தினான். காட்டிலிருந்து இன்னொரு "ஆ" என்று திரும்பக் கத்தியது. கோபங்கொண்ட அவன் "நீ யார்?" என்று குரல் கொடுத்தான். "நீ யார்?" சுவரில் எறிந்த பந்தாக அது திருப்பி வந்தது. "நீ ஒரு முட்டாள்" என்றான். அதே வாசகம் திரும்ப வந்தது.
வருத்தமுற்ற அவன் தந்தையிடம் கேட்டான். "இங்கே என்ன நடக்கிறது அப்பா?"
"பேசாமல் என்னைக் கவனி பின்பு புரியும்" என்று மெதுவாகச் சொன்ன தந்தை
"நீ ரொம்ப நல்லவன்" நன்றாகக் கத்தியபடி சொன்னார்.
"நீ ரொம்ப நல்லவன்" எனப் பதில் வந்தது.
"நீ அழகாக இருக்கிறாய்" அதே வார்த்தைகள் திரும்பக் கிடைத்தன.
தந்தை மெதுவான குரலில் அவனிடம் பேச ஆரம்பித்தார்.
"உலகில் எல்லோரும் இதை எதிரொலி எனக் கூறுவார்கள். ஆனால் நான் சொல்வேன், இது தான் வாழ்க்கை என்று."
"வாழ்வின் உண்மையான தத்துவம் என்ன என்பது உனக்குச் சொல்லட்டுமா?" என்றவர் தொடர்ந்தார்.
"நீ எதைக் கொடுக்கிறாயோ அதுவே உனக்குத் திரும்பக் கிடைக்கும். மதிப்பைக் கொடு. மதிப்பு திரும்பக் கிடைக்கும். நன்கு புரிதலைக் கொடு, அது அப்படியே கிடைக்கும். "மாறாக வெறுப்பை உமிழ்ந்தால் வெறுப்பு உனக்குத் திரும்ப வரும். கசப்பைக் காட்டினால் அதுவே உன்னை வந்தடையும்."
எனவே எதை அடுத்தவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறாயோ அதையே அடுத்தவர்களுக்குக் கொடு. அது உனக்கு அப்படியே கிடைக்கும். நல்லதையே கொடு அல்லாததை ஒரு போதும் அளிக்காதே" என்றார்.
"நன்றி அப்பா! நல்ல பாடத்தைக் கற்றேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.
"ஆ ஜாலி" என்று கத்தினான். "ஆ ஜாலி" என்றது குரல்.
நமது வாழ்வு என்பது தற்செயலாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சி அல்ல. அது நமது செய்கைகளின் அப்பட்டமான பிரதிபலிப்பு.
நாம் எதைக் கொடுக்கிறோமோ அதுவே நம்மை வந்து அடையும். நமது வாழ்வின் ஒவ்வொரு கோணத்திலும் இது பொருந்தும்.
அதுவே வாழ்வின் தத்துவம். ....நன்றிகளுடன் கோகி.
No comments:
Post a Comment