மலரும் நினைவுகள்:- நான் எப்படி நடிகர் சிவகுமார் அவர்களின் ரசிகனானேன்?
....அப்போது நான் ஏழாம் வகுப்பில் படித்துகொண்டிருந்தபோது நடந்த நிகழ்வு அது ...
எனது வகுப்பில் படித்துகொண்டிருந்த மாணவர்கள் (மாணவிகளும் ) எம் ஜி ஆர் மற்றும் சிவாஜிகணேசன் அவர்களின் ரசிகர்களாக இருந்தார்கள், அத்துடன் அவர்களிடம் இருந்த வண்ண வண்ண படங்களை என்னிடம் காட்டி, என்னிடம் அது போல் இல்லை என்பதால் என்னை கேலி செய்துகொண்டிருந்தர்கள். ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் நான் நடிகர் சிவகுமார்அவர்களின் ரசிகன் என சொல்லிவிட்டேன்.....
..சற்று சப்தமாக கத்திவிட்டேன் போலிருக்கு, வகுப்பில் இருந்த அணைத்து மாணவ மாணவிகள் (என்வகுப்பில் மொத்தம் அறுபத்தி ஏழு மாணவ மாணவிகள் ) என்பக்கம் திரும்ப... அன்று ஆரம்பித்ததுதான், ஒவ்வொரு முறையும் நடிகர் சிவகுமார் அவர்களின் திரைப்படம் திரை இடப்படும்போதேல்லாம் வகுப்பில் நாந்தான் "ஹீரோ". உங்கள் ஆளு நடிகர் சிவகுமார் இந்த படத்தில் 'சூப்பர்' அல்லது 'சொதப்பிவிட்டார்' என பல்வேறு விமரிசனங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கும்"
..அன்று ஆரம்பித்ததுதான் இன்றும் எனது மனைவியும் குழந்தைகளும் நடிகர் சிவகுமார் அவர்களின் படமோ பாட்டோ சின்னத்திரையில் வந்தாலேபோதும், என் பக்கம் ஒரு பார்வை பார்க்காமல் இருந்ததில்லை...
https://youtu.be/X2Ur779LsaE
..அப்படிப்பட்ட திரைப்பட நடிகர் சிவகுமார் அவர்களா?, இன்று மிகபெரிய இலக்கியவாதியாக மேடைகளில் கலக்குகிறார்... அவரின் இலக்கிய பேச்சுக்களை கேட்கும்போது என் கண்ணை என்னால் நம்பமுடியவில்லை... "நான் அவரின் தீவிர ரசிகன் என்பதில் தற்போதுதான் இன்னும் அதிக பெருமைபடுகிறேன்"
....நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி .
No comments:
Post a Comment