# என் குறிப்பேட்டின் வாடாமலர் பக்கங்கள்;- "ஆடு பாம்பே விளையாடு பாம்பே - அடிபட்ட பாம்பு சார் அது???? ".....
அப்போது Dec-1989, பல மருத்துவமனைக்கு அறுவைசிகிச்சைக்கு பஞ்சு வழங்கும் ஒரு பிரபல பஞ்சு (Cotton MIlls)தொழிற்ச்சாலை அது, அதன் அதிபரும் என் அப்பாவும் நண்பர்கள் (ஆலையின் அதிபர் அதிகம் படிக்காதவர்- தாத்தாவின் காலம் முதல் வணிக வழியில் குடும்ப நண்பர்) அவரின் பஞ்சு ஆலைக்காக கடன் தந்திருந்த, வங்கிக் கடன் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் வர இருப்பதால் உதவுமாறு கேட்டுக்கொண்டார். உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்த அப்பாவால், அலைய முடியாமல் இருந்த சமயம் அது, எனக்கு சில அறிவுரைகளை கூறி இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பஞ்சு ஆலைக்கு சென்று உதவும் படி கேட்டுக்கொண்டார்,
கடன் பெற்று அதில் ஓடிக்கொண்டிருந்த பஞ்சு ஆலையில், தயாரித்த பொருட்களும் கடனில் விற்கப்பட்டு, ...."அந்த தொழிற்ச்சாலையில் மாத சம்பளம் தருவதே மிகவும் கடினமான நிலையில் இருந்தது. இந்த நிலையில்தான் கடன் வழங்கிய வாங்கி நிதி நிறுவனத்தின் நேரடி ஆய்வு (Bank Audit) அன்று!....." , அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து ஒரு வழியாக தயார்செய்தோம்..... முதல்நாள் ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி "நான்கு-4" வாட்ட சாட்டமான ஆட்களை "கையில் தடியுடன்", தயாரித்த பொருட்கள் வைக்கும் காலியான இருப்புக் கிடங்கின் (GODOWN) கதவை மூடி அதன் அருகே நிற்க வைத்தோம், ...தொழிற்ச்சாலையின் தயாரிப்புக்கூடத்தின் உள்ளிருந்த மிகப்பெரிய காலியான தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி, மேற்ப்பரப்பில் செய்தித்தாள்களை பரப்பி, அதன் மீது சிறிதளவே இருந்த பஞ்சுகளை (Cotton) தூவி வைத்தோம். அதாவது தொட்டி நிறைய தயாரிப்பிற்கான பஞ்சு இருப்பில் (RAW COTTON STOCK) உள்ளது என்பதாக காண்பிப்பதற்கு.
குறிப்பிட்ட நேரப்படி இரண்டு வங்கிக்கடன் அதிகாரிகள் வந்தபோது, முதலில் (முன்பே சரி செய்யப்பட்ட) இருப்பு (STOCK-REGISTERS) புத்தகங்களை சோதனை செய்துவிட்டு , கிடங்கிற்கு (GODOWN) சென்று ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்றார்கள், அவர்களை அழைத்துக்கொண்டு கிடங்கு (GODOWN) இருக்குமிடம் சென்றோம். ஏற்கனவே பேசிவைத்தபடி பணியாட்கள் கையில் தடியுடன், நன்றாகவே நடித்தார்கள் " சார் கிட்ட வராதீங்க ...மிகப்பெரிய நல்ல பாம்பு ஒன்றை அடித்துவிட்டோம் மற்றொன்று தப்பித்து கிடங்கினுள் (GODOWN) நுழைந்துவிட்டது, அடிபட்ட பாம்பு சார்..!!!! " என்றார்கள்....
அவ்வளவுதான் ஆய்வுக்கு வந்தவர்கள் சற்று பயத்துடன் "GODOWN-கிடங்கின் உள்ளே என்ன பொருள் உள்ளது என்பதை சொன்னாலே போதும், வெளியில் இருந்தே குறித்துக்கொண்டு சென்றுவிடுகிறோம் என்றார்கள்." (பாம்பு என்றால் பயப்படாமல் இருப்பார்களா?) அதன் பிறகு தொழிற்ச்சாலையின் தயாரிப்புக்கூடத்தின் உள்ளிருந்த தொட்டி நிறைய தயாரிப்பதர்க்காக இருப்பு ஏற்ப்படுத்தி வைத்திருந்த "உற்பத்திக்கான பஞ்சு -RAW COTTON"-STOCK இருப்புக்களையும் குறித்துக்கொண்டு, பஞ்சு ஆலை சிறப்பாக செயல்படுகிறது என்று கூறியதோடு, அதிகாரிகளுக்கான தொழிலக பதிவேட்டுப் புத்தகத்தில் விவரங்களை எழுதி கையப்பமிட்டுச் சென்றனர்.
ஒருவழியாக ஏதேதோ செய்து அன்று அந்த பஞ்சு தொழிற்ச்சாலை அதிகாரிகளின் ஆய்வுகளில் தப்பித்துக்கொன்டாலும் பின்னாளில் நேர்ந்த அண்ணன் தம்பி சொத்துத்தகராறு ஒன்றில், ஒரேடியாக மூடுவிழா கண்டது என் மனதிற்கு வருத்தமாக இருந்தது.
"அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே. .." "https://youtu.be/pvp4dwUeUy0"
நன்றிகளுடன் கோகி-என்கிற கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி.
No comments:
Post a Comment