நிர்வாக செலவுகளை குறைக்கும் நோக்கிலும், வளர்ச்சிக்கான புதிய வழிவகைகளை ஊக்குவிக்கும் பொருட்டும் சில/ பல நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், வேலை செய்து சம்பாதிப்பது என்பது நிலைத்தன்மையற்றதாகிவிட்டது. ஆகவே (எதிர்காலச் சந்ததிகளுக்கு) எதிர்வரும் காலத்தில் வேலை செய்து சம்பாதிக்கும் திருமணமாகாத இளையவர்களுக்கு, திருமண வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகிப் போகும் அவல நிலை உள்ளது. ஆகவே இனி, மேல்நிலை அல்லது பட்டப் படிப்பை பயிலும் மாணவர்கள் வேலைபார்த்து சம்பாதிக்கும் கல்வியை கற்காமல், சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கும் தொழில்நுட்பக் கல்வியை கற்றுத்தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட கல்விகள் எவை எவை? மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பக்கல்வி, விவசாயம், பொறியியல், கட்டிடக் கட்டுமானம், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி, ஆலோசகர் -பொறியியல் அல்லது வணிகவியல் மேலும் சட்ட ஆலோசகர் போன்ற படிப்புகளை படிப்பவர்கள் பிறரிடம் வேலைபார்த்து சம்பாதிக்காமல், தனது காலில் சுயமாக நின்று தொழில் செய்து சம்பாதிக்கும் திறமையை பெறலாம் அதன்மூலம் சிறப்பான ஒரு எதிர்காலம் அமையுமாறு திட்டமிட்டு செயல்படும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படாமல் வாழமுடியும்.
ஆகவே இன்றைய இளைய மாணவர்களே! தொழில்நுட்பக் கல்வி பயில கனவு காணுங்கள், அந்த கனவுகளை நினைவுகளாக மாற்றுங்கள். உங்களின் அனுபவக்கல்வியை சுயதொழிலாக செய்து வருமானம் ஈட்டும் வகையில், நீங்கள் உங்களின் சொந்தக்கால்களில் நிற்க்கப்பழகுங்கள். வாழ்த்துக்களுடன், உங்களோடு உறுதுணையாக ..(ஆலோசகர்-கோகி.)
No comments:
Post a Comment