மலரும் நினைவுகள் :- மலரும் நினைவுகள் :- "கூந்தல் கருப்பு, குங்குமம் சிகப்பு " இந்த பாட்டை கேட்டாலே எனக்கு அந்த நாள் (பள்ளிக்கூட நாட்கள்) ஞாபகங்கள்.... ,
நானும் எனது நண்பனும் இப்படித்தான் எங்கு சென்றாலும் இணைந்தே செல்வோம்" அப்போது நாங்கள்(1976) உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது நடந்த இந்த இனிமையான சம்பவம்...
நானும் எனது நண்பன் சுந்தர வடிவேல் இருவரும் காலையில் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் 6,7 பெண்கள் (மாணவிகள்) வழியை மறைத்தபடி... பேசியபடியே நடந்துவர.. எங்களுக்கு பின்னால் வரவும் சங்கடம் (பெண்கள் பின்னாடி போறாங்க பார் என்பார்கள்) முந்தி செல்லவும் முடியாமல் தர்மசங்கடமாக இருந்தது.....
ஒரு யோசனை தோன்ற சட்டேன்று...அங்கபாருடா.. அந்தப்பெண்ணின் தலை "சவுரிமுடி" பின்னல் பிரிந்துவிட்டது".... என கூற.
எல்லா பெண்களும் தனது பின்னல் முடியை தடவிப்பார்க்க ...
அதற்குள் என் நண்பன் அடடா எல்லாரும் "சவுரிமுடி" வச்சிருக்காங்க போளிருக்குடா என கூற...
எல்லா பெண்களும் வேக்கப்பட்டுக்கொண்டே ஓர் ஓரமாக சென்று வழிவிட,
நங்கள் வழி கிடைத்த சந்தோசத்தில் வேகமாக அவர்களை கடந்து முன்னே சென்றோம்...
அதுமட்டுமின்றி அதன்பிறகு அந்த பெண்களின் கூட்டத்தை கண்டாலே, எனது நண்பன் இந்த பாடலை சத்தமாக பாடி அவர்களை வேக்கப்படவைப்பதை நானும் ரசித்திருக்கிறேன்...
இன்றும் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த நினைவுகள் நெஞ்சில் நீங்க நினைவுகள்....
பாடல் கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு...
திரைப்படம்:- பரிசு (1969)
திரைப்படம்:- பரிசு (1969)
கே வி மஹாதேவன் அவர்களின் இசையில்...
பாடியவர் TMS மற்றும் P சுசீலா அவர்கள்
காட்சியில் பாடியவர்கள் மக்கள் திலகம் எம் ஜி ராமச்சந்திரன் மற்றும் சாவித்திரி ஜோடி.
வாங்க நாமும் அந்தப் பாடலை கேட்கலாம்.....
நன்றிகளுடன் கோகி -ரேடியோ மார்கோனி.
No comments:
Post a Comment