தினமலர் செய்தி 11-11-2014. "அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.7 என்ற அளவில் இருந்த இந்த நிலநடுக்கத்தின் மையம் அந்தமான் கடலில் இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் இல்லை" நான் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆசியாவின் பல்வேறு பகுதியில் ஏற்ப்படும் நிலநடுக்கங்களை பதிவு செய்து ஆராய்ந்து வருகிறேன். இன்னும் 2 அல்லது 4 வாரங்களுக்குள் இந்தியாவின் வடபகுதி அல்லது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு சென்ற ஆண்டு (ஏப்பரல் 2013) நான் எனது இனைய பக்கத்தில் குறிப்பிட்டிருந்த ஒன்றை திரும்பவும் இப்போது பதிவு செய்கிறேன்....... ....நிலநடுக்கங்கள் காரணமாக "புவியின் மேற்ப்பரப்பில் அமைந்துள்ள பாரைத்தட்டுகள் நகர்கின்றன என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது". சென்ற இரண்டு வாரங்களாக உலகின் பல பகுதிகளில் நடந்த பூமி அதிர்வுகள் மேலும் அதை உறுதிபடுத்தும்படி அமைந்துள்ளது. ஆசிய கண்டத்தின் பூமத்தியரேகைக்கு மேற்பகுதி மற்றும் கீழ் பகுதி என பல பாறை அடுக்குகளால் ஆனது என்றும், இதில் எந்த ஒரு பாறை தட்டும் நகரும்போது அதனால் ஏற்ப்படும் இடைவெளியை மற்றொரு பாறை தட்டு நகர்ந்து சரிசெய்யும் என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜப்பானில் நில அதிர்வு உணரப்பட்டதும் அடுத்த சில வாரங்களில் ஆசிய பாறைத் தட்டுகளின் கிழக்கு பகுதியான இந்தோனேசியா அல்லது மேற்கு முனையான ஆப்கனிஸ்தான் மற்றும் வளைகுடா பாரைத்தட்டுகள் பகுதியில் எதிரொலிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, நேற்றைய ஈரான் பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட கடுமையான நில அதிர்வும் இன்று விடியற்காலையில் ஏற்ப்பட்ட இந்தோனேசியா நில அதிர்வும் அதை உறுதிப்படுத்தின. இப்படிக்கு கோகி
No comments:
Post a Comment