FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, November 7, 2014

அன்னையர்த்தினத்தன்று எனது சர்வதேச பண்பலை மற்றும் இனைய வழி வானொலி நிகழ்ச்சி ஒன்றை இங்கு பகிர்ந்திருக்கிறேன்.


எனது நிகழ்ச்சி தயாரிப்பில் பல மேடை நிகழ்சிகள் மற்றும் பொது கண்காட்சி நிகழ்சிகள் (சர்வதேச கண்காட்சி நிகழ்சிகளும்), கல்வி நிகழ்சிகள், பொதுக்கூட்ட நிகழ்சிகள் மற்றும் கோவில் -சமய அறநிலையத்துறை நிகழ்சிகள் என பல்வேறு நிகழ்சிகள் செய்திருந்தாலும் சர்வதேச வானொலிக்காக செய்த சில  சிறு சிறு  நிகழ்சிகள் பல மனதிற்கு மகிழ்ச்சிதருவதாக இருந்தது, உதாரணமாக எனது வானொலி நிகழ்ச்சிகளிலிருந்து ஒரு சில பகுதிகளை இங்கு பகிர்ந்துள்ளேன்.

பொதுவாக சிறு சிறு நிகழ்சிகள் என்றால் அன்னையர்தினம், உழைப்பாளர் தினம்(மேதினம்), மற்றும் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் இதுபோன்ற பண்டிகை தின குறிப்புக்களுடன் அது சம்பந்தப்பட்ட  பாடல்களின் தொகுப்புகளை, ஒரு அரைமணிநேர அல்லது ஒருமணிநேர விளம்பரதாரர் நிகழ்சிகளாக தொகுத்து தருவதாகும்.... உதரனத்திற்க்கு (சிங்கை, மலேசிய, லண்டன், கனடா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா  போன்ற 7-சர்வதேச வெவ்வேறு சர்வதேச பண்பலை மற்றும் இனைய வழி வானொலியிலும் ஒளிபரப்பப்பட்ட)  எனது அன்னையர் தின நிகழ்ச்சி ஒன்றை இங்கு பகிர்ந்திருக்கிறேன்.  


நன்றியுரை:- திரு பொன் சிவா வரதராஜன் அவர்கள்13-05-2012அன்று  வாசித்து வழங்கிய  எனது நிகழ்ச்சித்தொகுப்பான அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி, மிகவும் சிறப்பாக இருந்தது. ஒவ் வொரு வரியையும் மிகத்தெளிவாக வாசித்து வழங்கிய விதம் மிகவும் அருமை. உலக தமிழ் நேயர்கள் அவர்களது தாய்க்கு அவர்களே வழங்கிய நிகழ்ச்சியை போல் இருந்தது.  எனது இந்த நிகிழ்ச்சி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும்போது நான் மலேசியாவில் என்னுடைய நண்பர்களுடன் கேட்டு மகிழ்தோம், கனடாவின்-A9 வானொலிக்கு இப்போது மேலும் நிறைய மலேசியா ரசிகர்கள் விரும்பி கேட்டுக்கொண்டிருக்கிரர்கள். என்னுடைய இந்த நிகழ்ச்சியை வழங்கிய  கனடாவின் A9 சர்வதேச தமிழ் வானொலி நிலையத்திற்கும்  எனது நன்றிகளுடன் சிங்கை-கோகி. 

(குறிப்பு:-அன்னையர்த்தினத்தன்று எனது இதே நிகழ்ச்சி சிறிது மாறுபட்ட வடிவில், மேலும் 7 சர்வதேச பண்பலை மற்றும் இனைய வழி வானொலியிலும் ஒளிபரப்பானது . )
இந்த நிகழ்ச்சியை இணையதளத்தில் WWW.A9RADIO.COM  எப்போதுவேண்டுமானாலும்,  இனைய முகவரியை சொடுக்கி கேட்குமாறு  இணைக்கப்பட்டுள்ளது.

13-05-2012-அன்னையர் தின சிறப்பு நிகிழ்ச்சி -WWW.A9RADIO.COM 
உலகிலே புனிதமான பாசம் தனது தாயின் பாசம்!
தாய் – நமது ஆரம்பம், அவ்வை- தமிழின் ஆரம்பம், சரஸ்வதி – இசையின் ஆரம்பம் என மகளிர் சக்தி எங்கும் எதிலும் உண்டு. ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்று உரைச்சொல்லும் உண்டு. இச்சக்திகள் ஒன்றிணைந்து முன்னே வந்தால் வெற்றி, மிகப் பெரும் வெற்றியாக மாறும்.
I LOVE YOU AMMA...GOD PLEASE GIVE LONG LIFE TO AMMA.... TO LIVE MORE AND MORE 100 YEARS....
கருவில் தாங்கி உருவினில் உயிர் பெற உழைத்தவள் அம்மா, உயிர் எழுத்தின் உண்மை பெயர் அம்மா, பிரியாமல் இருப்பதற்காய் பிரிவை வரமாய் கேட்கிறேன்... பிரிவால் கூட முடியாதம்மா என்னிடம் இருந்து உன்னை பிரிப்பதற்கு....
பாசம் மிகுந்த ரசிக நெஞ்சங்களே ..அன்னையர் தினம்னா ஒருநாள் மட்டும் தானான்னு... கேட்டீர்கள் என்றால், இல்லவே இல்லை என்றுதான் சொல்லுவேன்... இருந்தும் அம்மாவுக்கு இப்படி ஒரு மகிழ்ச்சியான, எதிர்பாரத, இன்ப அதிர்ச்சி தரும் கொன்ன்டாட்டமான நாளை அன்பளிப்பாக தந்தாள் அது இப்படித்தான் இருக்கும்...(முக்கியமாக ஒரு விவரம் தெரிந்துகொள்ளவேண்டும் திடீர் என்று அம்மாவுக்கு பரிசு தந்தாள் அது வேறுவிதமாக மாரிவிட்டக்கூடும் "மகனே நீ என்னிடம் எதாவது எதிர்பார்கிறாயா " என அம்மா நம்மை கேட்க நேரிடும் ஆகவேதான் எதிர்பாரத, இன்ப அதிர்ச்சி தரும் கொன்ன்டாட்டமான நாளை அன்பளிப்பாக தரலாம்...... XXXXXXXXX) 

இந்தநாள் தாய்க்குலத்திற்கு மற்றுமல்லாது நமக்கும் மகிழ்ச்சியான நாள்தானே ...இந்த படத்திலும் அப்படியே ...எதிர்பார்போடு இருந்த அம்மாவுக்கு எதிர்பாராமல் தந்த பரிசு எப்படி இருக்கும்.... வாங்க இந்த படத்தின் பாட்டை கேட்டாலே புரியும்...இப்ப இந்த பாட்டை கேட்போமா #Neeye Neeye song - M Kumaran S/O Mahalakshmi , நீயே நீயே, நானே நீயே ... நெஞ்சம் பாடும் வுயர் தீயே தீயே.

அம்மா பாட்டு என்றாலே MGR, SHIVAJI, RAJINI, KAMAL பாட்டுதான், முதலில் நமக்கு ஞபகம் வரும் ..சூப்பர் STAR அவர்களுக்கு அமைந்த அம்மா பாடல்களில் இது தான் டாப், அதோடு இசை ஞானி இளையராஜா அவர்களுக்கும் அம்மாவுக்காக பாடிய பாடலில் இதுதான் டாப், இந்த பாட்டை கேட்டால் நாம் மேழுகுவத்திபோல உருகி போய்விடுவோம்...(இந்த பாடலில் இளையராஜா அவர்களும், KJ யேசுதாஸ் அவர்களும் கூட அன்னையின் பாசத்தில் உருக உருக இசைத்து பாடிய ஒரு சாதனை பாடல் இது. வாங்க நாமும் அவர்களுடன் மெழுகுவர்த்தியாக உருகி இந்த பாடலை கேட்போமா ?
#அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே Amma Endru Azhaikadha Movie - Mannan
Music Director - இளையராஜா, Director - P வாசு, Singer - KJ யேசுதாஸ் ...


இதுவும் சூப்பர் ஸ்டார் அம்மாவுக்காக உருக்கமான பாடல் #SUPER STAR RAJINI'S Amma Amma Enthan Aaruyire, அம்மா, அம்மா, என் ஆருயிரே .....

அட நம்ம பத்மஸ்ரீ கமலஹாசன் எப்பிடின்னு பார்கலாமா ..அவரு குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே அம்மா பாட்டைத்தான் பாடி "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே.. அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயேநு தனது திரை உலகத்தில் காலடி எடுத்துவைத்தார், அவருக்காக அமைந்த அம்மா பாடல்களில் இது தான் டாப்.. வாங்க பாடலை கேட்போம்
#கமலின் அம்மா பாட்டு :- SONG:- NANAGA NANILLAI THAYE(படம் THUNGATHEY தம்பி THUNGATHEY) நானாக நான் இல்லை தாயே நல்வாழ்க்கை தந்தாயே நீயே.

#மக்கள்திலகம் எம் ஜி ராமச்சந்திரன் MGR-.... அப்பப்பா ...அம்மா என்கிற தாய்க்குலத்திர்க்காக இவருக்கு அமைந்த பாடல்களுக்கு கணக்கே இல்லை...எராளமான பாடல்கள் ..."தாய் மேல் ஆணை தமிழ்மேல் ஆனைன்னு ஆரம்பித்தால் ....எராளமான அம்மா பாடல்கள்... இவருக்கு அம்மான்னா உயிர்,... அப்படி ஓர் "அம்மா பாசம்". அவ்வளவு ஏன் இவர் ஓர் அம்மா பயித்தியம்னுகூட சொல்லலாம், இவர் பார்வையில் தாய்குலம் அனைவரும் "அன்னையின் உருவம்"... அம்மா பிள்ளையான MRG... அவருக்கு இணை அவரே... இப்ப அவரின் தாய்ப்பாசத்தில் அவருக்கு அமைந்த பாடல்களில் இது தான் சூப்பர் ஹிட் டாப் 1-முதல் இடம் ...என்ன பாடல் அது ....
#தாய் இல்லாமல் நான் இல்லை தானே எவரும் பிறப்பதில்லை எனக்கொருதாய் இருக்கின்றாள் என்றும் என்னை காக்கின்றாள் -TMS அவர்களின் குரலில் என்ன இனிமையான பாடல் ...(ஜீவா நதியாய் வருவாள், என் தாகம் தீர்த்து மகிழ்வாள் ..தவறினை பொறுப்பாள் தர்மத்தை வளர்ப்பால், தரணியிலே வளம் சேர்த்திடுவாள்- அந்த தாய் இல்லாமல் நான் இல்லை) (ஆதி அந்தமும் அவள்தான், நமை ஆளும் நீதியும் அவள்தான், அகந்தையை அழிப்பாள் ...ஆற்றலை கொடுப்பாள் , அவள்தான் அன்னை மகாசக்தி -அந்த தாய் இல்லாமல் நான் இல்லை ...)
#அடுத்த அம்மாவுக்கான MGR அவர்களின் வெற்றிப்பாட்டு இது, படம் -தேடிவந்த மாப்பிள்ளை :- பாடல் :-வெற்றிமீது வெற்றி வந்து என்னைச்சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும் (தாயே )
#அடுத்தது இந்த பாடலில் MGR அவர்கள் நாட்டு மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள், என்று பாடி நம்முடைய தேசப்பற்றை ஒரு தாய்க்கு சமமாக அந்த தேசத் தாய்மைக்கு மிக உயர்ந்த நிலையான "இமயமலையின் உச்சிக்கு உயர்த்தி" பாடும்படி அமைந்த பாடல் இது .. வாங்க நமது தேசத் தாய்க்காக ஒரு பாடல் கேட்போம் .
# ஒருதாய் மக்கள் நாம் என்போம் ..ஒன்றே எங்கள் குலம் என்போம்.. Oru Thai Makkal from the 1963 movie "Ananda Jothi" starring MGR / M.G. Ramachandran, Devika, M.R. Radha, S.A. Asokan, S.V. Sahasranamam, P.S. Veerappa, Manorama, Master Kamal Haasan & Javar Sitaraman.
அப்பாவும் பிள்ளையும் (மக்கள்திலகம் சிவாஜிகணேசன் , இளையதிலகம் பிரபு ) இருவருக்கும் அமைந்த அம்மா பாட்டு, அந்த வரிசையில் மக்கள்திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு அமைந்த அம்மா பாட்டு.. எண்ணி பார்க்கமுடியாத பாடல்கள் உள்ளது அதில் இதுதான் மிகவும் உயர்ந்த ஒன்று. இந்த பாடலை கேட்டாலே அன்னையை விட்டு விலகி இருப்பவர் அனைவரும் ஓடி சென்று அன்னையின் காலில் விழுந்து ..அன்னையை ஆசையாக அரவணைத்து இருப்பர் .. "One of the greatest songs dedicated to mothers worldwide.என்ன பாட்டு அது வாங்க கேட்போம்
#அன்னையை போலொரு தெய்வமில்லை அவள் அடி தொழமறுப்பவர் மனிதரில்லை,மண்ணில் மனிதரில்லை!!
அப்பாவைவிட பிள்ளை ஒரு படி மேலே என மக்கள்திலகம் சிவாஜிகணேசன் பிள்ளை இளைய திலகம் பிரபு அவர்களுக்கு அமைந்த அம்மா பாட்டு இது வாங்க பட்டை கேட்போம் :-
#AMMA ENUM VARTHAITHAN(THALATTU KETKUTHAMMA)PRABU -அம்மா எனும் வார்த்தைதான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்! எல்லோருக்கும் வாய்க்குமா அதை காதால் கேக்கிற பாக்கியம்!
#SOLLI SOLLI VANTHATHILLAI(SENTHAMIL PAATTU)PRABU -
இசை புயல் AR ரகுமான் மற்றும் வைரமுத்து அவர்களும் இந்த பாடலில் தாய்க்காக உருகி உருகி பாடலை அமைத்திருக்கும் விதத்திலிருந்தே அவர்களுக்கு தாய்மேல் உள்ள பாசம் நன்கு தெரியும்... இந்த பாடலை கேளுங்களேன் மனம் இலகிப்போகும்.Song உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே… உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே.....! [உன்னிகிருஷ்ணன் அவர்களின் இனிமையான குரலில் உயிரும் நீயே என்ற அம்மாப் பாடல் ] - Movi-Pavithra, Singer: Unni Krishnan, Music: AR ரஹ்மான்.
#காதல் மன்னன் ஜெமினிகணேசன் அவர்கள் நடித்த படத்தில் (கணவனே கண் கண்ட தெய்வம் ) கண்டசாலாவின் அருமையான அம்மா பாடல் இது( "அம்மா நீ கலங்காதே" ..நீ அல்லவோ பெண் தெய்வம் ..பாரத நாட்டிற்கு பெருமை அளித்திடும் அணிகலன் பெண்குலம் )
# நடிகர் சிவகுமார் மற்றும் நடிகை சுஜாதா அவர்களுக்கு அமைந்த பாடல் :- தாலாட்டு மாறிப்போனதே...என் கண்ணில் தூக்கம் போனதே பெண்பூவே வந்தாடு :- S.Janaki-Isai-Ilayaraja-Movi "UNNAI NAAN SANTHITHEN"
#நடிகர் சூர்யா அவருக்கு அமைந்த அம்மா பாட்டு "காலையில் தினமும் கண் விழித்தெழுந்தால் அம்மா -உன்னிக்ருஷ்ணன் குரலில் நியூ பட பாடல் இது ...அடுத்து "ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா ?"
# இந்த பாடல் கொஞ்சம் கவனித்து கேட்டீர்கள் என்றால் (இது ஒரு தாய்க்கு மகன்/மகள் பாடுவதுபோலவும் .. ஒரு தாய், மகள் /மகனுக்காக பாடுவதுபோலவும் இருக்கும் )
#Nenjil Jil - Kannathil Muthamittal ... ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
#இந்த பாடல் ஒரு டிஸ்கோ பாடல் அதுவும் அம்மாக்காக ஒரு டிஸ்கோ பாடல் :-song:- அன்னை என்னும் ஆலயம் , அன்பில் வந்த காவியம், கண்ணில் வந்த ஓவியம் -Movi-Aboorva Sagotharigal- by Janaki Music-Bappilahari.
#இப்ப நாம நம்ம தமிழ் தாய் கடவுளுக்கு ஒரு பாட்டு கேட்கலாமா
ஆத்தி சூடி தந்த அவ்வை சொல்லியது அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் , மாதாவை ஒருநாளும் மறக்கவேண்டாம்
பால்... தமிழ் பால் , என்னும் நினைப்பால் , இதழ் துடிப்பால், அதன் பிடிப்பாள் , சுவை அறிந்தென்........அதுவல்லவோ நமக்கு தாய்ப்பால் ..முதன் முதலில் நமக்கு உட்டிய தமிழ் பால் அல்லவா அது
#அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை (டீச்சரம்மா படத்தில் KR விஜயா அவர்களுக்கு அமைந்த பாடல்)
# அடிமைப்பெண் படத்தில் தற்போதைய தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களுக்காக அமைந்த திரைப்பட பாடல் இது . "அம்மா என்றால் அன்பு , அப்பா என்றால் அறிவு, ஆசான் என்றால் கல்வி ...அவர்களே இவ் உலகின் தெய்வம்"
# தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை....
# Thiyagaraja bhagavathar - Movi-HARIDAS- அன்னையும் தந்தையும் தானே, பாரில் அண்ட சராசரங்கள்
# கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ - Song from Annai வேளாங்கண்ணி
# எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரிமாதா "படம் -மிஸ்ஸிஅம்மா"
# நீலக் கடலின் ஓரத்தில் - Neelakadalin - Song from அன்னை வேளாங்கண்ணி
தமிழுக்கு அது (RAHI தேவையில்ல போலிருக்கிறது
சோகமான "அம்மா" பாட்டுக்கள் :-sentimental song about a mother

# நடிகர் கார்த்திக் அவர்களுக்கு அமைந்த பாடல் :- அம்மான்னா சும்மா இல்லைட .. அவ இல்லேன்னா யாரும் இல்லே டா - hero karthik ,music Ilayaraja
# Movie:-Raam. ஆராரிராரோ நான் இங்கு பாட தாயே நி கண்ணுறங்கு …(அம்மா என்னும் மந்திரமே அகிலுலகம் வாழ்கிறதே )
#அரண்மனை கிளியில்- இளையராஜாவின் இசையில், ராஜ்கிரண் அவர்களுக்கு அமைந்த பாடல் "உன்னை போல ஆத்த என்னை பெத்து போட்டா, என்ன பெத்த ஆத்தா கண்ணீர்தான் பாத்தா..."
#என் தாயின் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடி கிளியே ..என் வாயும் வயிறும் போற்றிவலத்திட்ட (ARANMANAI KILI MOVIE)RAJKIRAN.............
#சிவாஜி -ஆரரிரோ படியதரோ , தூங்கிபோனதரோ …Movi-Thaiku Oru Thalattu-
நம்ம இளைய தளபதி "விஜய் அவர்களுக்கு அமைந்த இந்த பாடல் :-Song:- தெய்வத்துக்கே மாருவேசமா,படம் -சிவகாசி.
ரஜினி அவர்களுக்கு அமைந்த சோகமான அம்மா பாட்டு "அம்மா உன் பிள்ளை நான் "-படம் தளபதி .
நல்ல பொன்னால் இதுபோலே வருமா இனிமேலே
இனிய ரசிக நெஞ்சங்களே, இந்த நிகழ்ச்சியைப்பற்றிய   உங்களது மேலான விமர்சனங்களை அள்ளித்தெளியுங்கள் ..
A9 வானொலியின் FACEBOOK-முகநூல் வாயிலாகவும் தெரிவிக்கலாம்
A9 வானொலியின் வலைத்தளத்திலும், அல்லது  மின் அஞ்சல் (E-MAIL )வழியாகவும் தெரிவிக்கலாம்  
A9 வானொலியின் "SKYPE" -என்கிற "வான்முகவின்" வழியிலும் தெரிவிக்கலாம்
 #AMMA ENUM VARTHAITHAN(THALATTU KETKUTHAMMA)PRABU -அம்மா எனும் வார்த்தைதான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்! எல்லோருக்கும் வாய்க்குமா அதை காதால் கேக்கிற பாக்கியம்!
# நடிகர் கார்த்திக் அவர்களுக்கு அமைந்த பாடல் :- அம்மான்னா சும்மா இல்லைட .. அவ இல்லேன்னா யாரும் இல்லே டா - hero karthik ,music Ilayaraja
#அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை (டீச்சரம்மா படத்தில் KR விஜயா அவர்களுக்கு அமைந்த பாடல்)
# அடிமைப்பெண் படத்தில் தற்போதைய தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களுக்காக அமைந்த திரைப்பட பாடல் இது . "அம்மா என்றால் அன்பு , அப்பா என்றால் அறிவு, ஆசான் என்றால் கல்வி ...அவர்களே இவ் உலகின் தெய்வம்"
# ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா ?"
#Thiyagaraja bhagavathar - Movi-HARIDAS- அன்னையும் தந்தையும் தானே, பாரில் அண்ட சராசரங்கள்

No comments:

FREE JOBS EARN FROM HOME