மந்திரச் சொற்கள்" ... வாழ்க்கை"யில் அவற்றை உபயோகித்தால் ஆனந்தத்தின் எல்லை வரை சென்று வரலாம்....படிப்படியாக முன்னேறி, வாழ்க்கையில் வெற்றி பெற, நமக்குத்தேவை "நம்பிக்கையும், உத்வேகமும்" மிக முக்கியமானவை. தடையில்லா உத்வேகத்தை, சாதகமாக அமைத்துக்கொண்டு முன்னேற "மந்திரச் சொற்கள்" நமக்கு பெரும் உதவியாக உள்ளன... அப்படி என்ன சொற்கள் அவை? எப்படி, எந்தச் சொற்கள், மந்திரச்சொர்க்களாக மாறுகின்றன? அந்த சொற்களை எப்படி, எங்கு, எவ்வாறு தெரிந்துகொண்டு உபயோகப்படுத்தமுடியும்?
மறைமொழி அல்லது மந்திரச்சொற்கள் என்பது காட்டும் தன்மை உடையதே அன்றி உரைக்கும் தன்மை உடையது அல்ல..... அதாவது புத்தகத்தில் இருக்கும் சொற்கள் எடுத்துரைப்பவை என்றும், உயிர் வாய் வழி சொற்கள் "சுட்டிக் காட்டும்" தன்மையுடையது எனலாம்..... மேலும் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் "வாய் வழி சொற்கள்" வழிகாட்டும் தன்மையுடையது எனலாம்.... அப்படிப்பட்ட வாய்வழி மந்திரச்சொற்கள் காட்டும் வழியை மனதில் கெட்டியாக பிடித்துக்கொண்டால் மட்டுமே முன்னேறமுடியும்.....
1."அழகு"என்ற மந்திரச்சொல்லை எப்படி பயன்படுத்தலாம்?
......முதலில் உங்களின் முகத்தை "சிரித்த முகமாக" வைத்துக்கொள்ளுங்கள் பிறகு உங்களின் அலுவலகத்தில் உங்களோடு பணியாற்றும், உங்களின் மேலதிகாரியை பார்த்து வழக்கமாக சொல்லும் "வணக்கம்" சொல்லியபிறகு, இன்று நீங்கள் அணிந்திருக்கும் சட்டை புதியதா? "அழகாகவும்" பொருத்தமாகவும் உள்ளது என்று கூறுங்கள்... பிறகு பாருங்கள் நீங்கள் பேசிய அனைத்தும் மந்திரங்களாக மாறி வேலை செய்யும், உங்களின் மேலதிகாரிக்கு உங்களின்மீது ஒரு தனி மதிப்பும் மரியாதையும் ஏற்ப்படும் அதை நீங்கள் உங்களின் முன்னேற்றத்திற்க்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது, உங்களை ஒரு படி முன்னேற்றிக்கொள்ள உதவியாக இருக்கும். இப்படியே மேலும் மேலும் பல மந்திர சொற்களை பயன்படுத்தி மேலும் மேலும் முன்னேறுங்கள். (முக்கிய குறிப்பு:- மந்திர சொற்க்களை சரியான முறையில் சரியான நேரத்தில் பயன்படுத்தினால்தான் பலன் தரும். ஒருஇடத்தில் ஒருமுறை பயன்படுத்திய மந்திரச்சொல்லை திரும்ப திரும்ப அதே இடத்தில் பயன்படுத்தினால் மந்திரம் பயனற்றதாகிவிடும்) ....
விடாமல் முயலுங்கள், விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....மீண்டும் சந்திப்போம்! நன்றி.
2.""சிக்கனம்" "என்ற மந்திரச்சொல்லை எப்படி பயன்படுத்தலாம்?
விலைவாசி என்றைக்கும் ஏறுமுகமாகத்தான் உள்ளது, கடந்த 5 அல்லது 10 ஆண்டுகளில் எந்த ஒரு பொருளும் "விலை குறைந்ததுவிட்டது" என்கிற பேச்சுக்குகூட இடமில்லாமல் போனது. இப்படிப்பட்ட சூழலில் "சிக்கனம்" என்பது வெறும் சொல்லாக மட்டுமே பார்க்கும் சூழ்நிலை உள்ளது.
அலுவலகங்களில் சிக்கனமாக இருக்கவேண்டும் என்பது செலவுகளை குறைப்பது என்பதைவிட, செலவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பதுதான் சிறந்த நிர்வாகத்திரமையாகும். விரயங் களைக் குறைப்பதன் மூலமாகவே செலவினங்களைக் குறைக்க முடியும். அதாவது விரயமாகும் நேரங்களும், தேவையில்லாத செயல்பாடுகளும் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டாலே, சிக்கனமும் சேமிப்பும் கிடைத்துவிடும். அதாவது 100 ரூபாய் சிலவு செய்யவேண்டிய இடத்தில் 80 ரூபாயில் அந்த பணியை திறம்பட செய்து முடிப்பதுதான் " சிக்கனத்தின்" இலக்கணம்.
உங்களின் அலுவலக மேலதிகாரியிடம் சென்ற வருட செலவுகளில் 20%சதவிகிதம் குறைத்து மீதமுள்ள 80%சதவிகிதத்துக்குள் இந்த வருட செலவுகளை கட்டுக்குள் வைப்பேன் என்று சொல்லுவதோடு செயலிலும் செய்து காட்டுங்கள். பிறகு பாருங்கள் "சிக்கனம்" என்கிற சொல் மற்றும் செயலின் மந்திர சக்தியை நீங்களும் உணருவீர்கள். நூற்றுக் கணக்கில் செய்யப்பட்ட சின்னச் சின்ன திருத்தங்கள், இலட்சக்கணக்கான செலவுகளை மிச் சம் செய்ய வழி வகுத்தது. எனவே, தொலைநோக்குடன் திட்டமிட்டு, உரிய மாற்றங்கள் செய்யும் வாய்ப்பு வசதிகளோடும் உங்கள் நிதியாண்டுத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துங்கள். அதன் வழியாக மிகச் சிறந்த மாற்றங்களைக் கண்கூடாகக் காணமுடியும்.
விடாமல் முயலுங்கள், விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....மீண்டும் சந்திப்போம்! நன்றி.
3. "முன்னேற்றம்" "ஒரு அடி முன்னே" என்ற மந்திரச்சொல்லை எப்படி பயன்படுத்தலாம்?
"நாம் ஒரு அடி முன்னே எடுத்துவைத்தால் உலகம் நம் அருகில் வந்து நிற்கும் என்று மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கம் கொடுத்தேன்". சொன்னவர் "நம்பிக்கை வாசல்" என்ற அறக்கட்டளையின் நிறுவனர், 28 விருதுகளை பெற்ற மாற்றுத் திரனாளியான "ஏகலைவன்" என்பவர்.
நம்மால் முடியுமா? என்கிற சந்தேக யோசனையில் இருக்கும் எந்த ஒரு செயலும் நிறைவு பெற்றதாக சரித்திரமில்லை. நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையில் நாம் "ஒரு அடி முன்னே" சென்று செயலாற்றும்போது அந்த செயல் படிப்படியாக சிறப்பான முறையில் நடப்பதோடு நமக்கு வெற்றியையும் தேடித்தரும். ஆகவே எந்த ஒரு செயலாக இருந்தாலும் என்னால் இதை திறம்பட செய்ய முடியும் என்கிற நம்பிக்கையோடு ஒரு அடி முன்வைத்து ஆரம்பித்துவிடுங்கள். பிறகு பாருங்கள் எந்த செயலையும் என்னால் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையூட்டும் நிலையை நீங்கள் அடையமுடியும். ஆகவே எப்பொழுதும் "ஒரு படி முன்னே" என்பது உங்களின் தாரக மந்திரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
.
விடாமல் முயலுங்கள், விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....மீண்டும் சந்திப்போம்! நன்றி.
இந்த மந்திரம் உங்களுக்காக, நீங்கள் நினைவில் வைத்து சொல்லிக்கொள்ளவேண்டிய மந்திரச்சொல்லாகும்.
"நிதானம் என்பது வேகத்தோடு சம்மந்தப்பட்ட சொல்லாக இருந்தாலும், நான் இங்கு குறிப்பிட வந்தது உடல் நலம், அது சிறப்பாக இருந்தால் எதையும் நம்மால் சாதிக்க முடியும்.
அதாவது ஒவ்வொரு முறையும் நாம், நமது உணவை உட்கொள்ளும்போது நமக்கு நாமே நினைவில் நிறுத்தி சொல்லிக்கொள்ளவேண்டிய மந்திரச்சொல் இது.
இந்த அவசர யுகத்தில் அவசர அவசரமாக சரியாக மென்று தின்று விழுங்காத உணவுப்பழக்கத்தினால் செரிமானம் கேட்டு, உடல் நலத்தோடு மனநலமும் கெட்டுப்போவதால் ஏற்ப்படும் விளைவுகளுக்கு ஒரு அளவு என்பது இல்லை. அது எப்படிப்பட்ட இழப்புக்களை உருவாக்கும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது. ஆகவே ஒவொரு முறையும் உங்களின் உணவை நீங்கள் உட்கொள்ள ஆரம்பிப்பதிலிருந்து உணவை உண்டு முடிக்கும்வரை இந்த "நிதானம்"....(நிதானமாக உணவை நன்கு மென்று விழுங்கவேண்டும்) என்கிற மந்திரத்தை நினைவில் நிறுத்தி செயல்படவேண்டிய கட்டாய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த மந்திரத்தின் தன்மையையும் அதன் சக்தியையும் நீங்கள் உணர்வீர்கள் என்றால், நீங்கள் மிகப்பெரிய பயனை பெற்றவராவீர்.
விடாமல் முயலுங்கள், விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....மீண்டும் சந்திப்போம்! நன்றி.
5. "வெற்றி" (எதிலும் வெற்றி) என்ற மந்திரச்சொல்லை எப்படி பயன்படுத்தலாம்?
வெற்றியைக் கரம்பற்ற நாம் மூன்று படிகளில் ஏறினால் போதும். அந்த மூன்று படிகள்… ‘ஆசைப்படு-ஆசைப்படுவதை அடையமுடியும் என்று நம்பு – அந்த நம்பிக்கை நிறைவேறும் வரை இடையறாது செயற்படு’. இதுதான் வெற்றிக்கான மூலமந்திரம். இந்த சூத்திரத்தின் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டால் போதும். வெற்றித் தேவதையின் கைகளில் இருக்கும் மாலை ஒரு நாள் உங்கள் கழுத்தை அலங்கரிக்கும்..
வெற்றி என்கிற கனவு காணுங்கள். தீவிரமாகக் காணும் கனவுகள், எண்ணங்களாக மாறி ஒருநாள் நிச்சயம் நனவாகும். உந்துதலோடு செயர்ப்படுவதர்க்கு ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு தேவை’ என்கிறார், அறிவியல் விஞ்ஞானி திரு.அப்துல் கலாம் அவர்கள்... ......அதே நேரத்தில் வெற்றிக்கு வழி என்ன?’ என்ற தேடலிலேயே வாழ்க்கையைத் தொலைத்து விடலாகாது. அதோடு வெற்றி என்பது சிலருக்கு மட்டுமே ஆண்டவன் விசேஷமாய் வழங்கும் ஆசீர்வாதமில்லை. ஆகவே வெற்றி என்பதை எப்போதும் தாரக மந்திரமாக நினைத்து உச்சரிப்பதொ டு அதன் பாதையில் தொடர்ந்து பயணிக்கவேண்டும்.
விடாமல் முயலுங்கள், விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....மீண்டும் சந்திப்போம்! நன்றி.
No comments:
Post a Comment