நம்பிக்கை துரோகம், மற்றும், ஜீவராசிகளுக்கும்,மனித நேயத்திற்கும் தீங்கு விளைவிப்பவர்கள் அவர்களின் அடுத்த பிறவியின் ஜனன ஜாதகத்தில் சந்திராஷ்டம தோஷம் இருக்கும் ( அதாலால் அவர்களின் பிறந்த நட்சத்திரப்படி சந்திராஷ்டம நாட்களில் படாத பாடு படும்படி நேரும்) சந்திராஷ்டம தோஷம் நீங்க வேண்டுமானால் சங்கடஹர சதுர்த்தி அன்று ஸ்ரீ கணேஷ்- பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகச்சிறந்த வழியாகும். ஸ்ரீ கணேஷ் என்றாலே சந்திரனுக்கு பயமாம், ஆகவே அவரின் பெயரைக்கேட்டமாத்திரத்திலேயே மறைந்துகொண்டு தலை மறைவாக இருப்பாராம். அறிவியல் முறைப்படி சூரியனிலிருந்து சந்திரன் விலகிநிற்கும் எட்டாம் ராசிமானத்தில் (216*-228*) பாகை அளவில்தான் சங்கடஹர சதுர்த்தி வரும். இந்த காலம் சந்திராஷ்டமன காலத்தின் முடுவு காலமாகும். இந்த பாகைக்குப்பின் சந்திரன் தேய் பிறையாகவும் மறைவு நிலையிலும் இருக்கும்.
No comments:
Post a Comment