அது 2004 பிப்ரவரி மாதம் எனது மகள்,மகன் இருவரும் ஒரே மாதத்தில் பிறந்தநாள் வரும், 4நாட்கள் வித்தியாசத்தில் பிறந்தவர்கள் (24 & 28 பிப்)ஆகவே இருவருக்கும் சேர்ந்து ஒரே நாளில் (24 அல்லது 28 இல் ) பிறந்தநாள் கொண்டாட்டம் நடப்பது வழக்கம். இரண்டு வாரத்திற்கு முன்பிருந்தே அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது நான் என் மகன் மற்றும் மகளிடம் உங்களுக்கு பரிசுப்பொருட்கள் வருவது மகிழ்ச்சிதானே, என்று கேட்க அவர்களிருவரும் ஆமாம் என்றார்கள். இந்த வருடம் அதை சற்று மாற்றி பரிசுப்பொருட்களை நீங்கள் மற்றவருக்கு வழங்கினால் எப்படி இருக்கும்? என்று கூற... நன்றாக இருக்கிறதே என்ன செய்யலாம் என்று இருவரும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்..., இடையில் புகுந்த நான் நிறைய பேனா பென்சில் நோட்டு புத்தகம் போன்ற பொருட்களை வாங்கி எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் அரசு ஆரம்ப பள்ளிக்கு சென்று ஏழை மாணவ மாணவியருக்கு அந்த பொருட்களை வழங்கினால் எப்படி என்று கேட்க, அதுவே சரி என்று முடிவானது. எனது மகளும் மகனும் அன்றிலிருந்தே சிறுக சிறுக பொருட்களை வாங்கி சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்,
அருகே இருந்த பள்ளியைப்பற்றி விசாரித்தபோது 500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் படிப்பதாக தெரிந்தது, எங்கே நம்முடைய பரிசுப்பொருட்கள் மிகவும் குறைவாக போதுமான அளவில் இருக்காதோ என்று நினைத்துக்கொண்டிருந்தபோது நண்பர்களிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.
சரியாக இரண்டு நாட்கள் இருந்தபோது ஒரு லாரி நிறைய பள்ளிக்கூட மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களுடன் புத்தகப்பை உட்பட வீட்டின் முன்பு வந்திறங்கியதைப் பார்த்ததும் எங்கள் அனைவருக்கும் ஆச்சிரியமாகிவிட்டது. இரண்டு முன்னணி வர்த்தக நிறுவனத்திலிருந்து வந்திருந்த அந்த பரிசுப் பொருட்களுடன் ஒரு கடிதமும் இருந்தது. அந்தக்கடிதத்தில் உங்கள் குழந்தைகள் அவர்களின் பிறந்தநாளை கொண்டாட வகுத்த திட்டங்கள் எங்களின் நிறுவனத்தை மிகவும் கவர்ந்தது, ஆவகே எங்களின் நிறுவனம் அவர்களை பாராட்டி வாழ்த்துவதோடு, அவர்கள் செய்யும் சேவையில் இந்த பரிசுப்பொருட்களையும் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டிருந்தது. அதற்க்கு அடுத்த ஆண்டிலிருந்து இரண்டு நிறுவனம் என்பது மாறி 4,5 என நிறுவனக்கள் போட்டி போட்டுக்கொண்டு அவகளின் விளம்பரத்திர்க்காகவும் பரிசுகளை குவிக்கத்தொடகினார்கள்..... எது எப்படியோ சிறு துளி பேரு வெள்ளம் போல ஒரு சிறிய எண்ணம் மிகப்பிரிய வரவேற்ப்பை பெற்றதோடு ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படுமாறு அமைந்தது மகிழ்ச்சியான ஒன்று. இப்படிக்கு, நன்றிகளுடன் கோகி.
No comments:
Post a Comment