கோகி-ரேடியோ மார்கோனி: பார்ப்பதற்கு நானும் மானவனைப்போலவே இருந்தேன், என்னை ஆசிரியர் என தனிமைப்படுத்தி காண்பிப்பதற்காகவே "வேஷ்டி" உடை அணிந்து செல்லவேண்டியதாக இருந்தது...

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Wednesday, November 19, 2014

பார்ப்பதற்கு நானும் மானவனைப்போலவே இருந்தேன், என்னை ஆசிரியர் என தனிமைப்படுத்தி காண்பிப்பதற்காகவே "வேஷ்டி" உடை அணிந்து செல்லவேண்டியதாக இருந்தது...

எனது நாட்குறிப்பேட்டின் வாடாமலர்ப் பக்கங்கள்:-1987
# 1987என் குறிப்பேட்டின் வாடாமலர் பக்கங்கள்:- நினைத்துப்பார்க்கிறேன்.... நான் படித்த அதே அரசாங்கப் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராரக [LOE- LIFE ORIENTATION EDUCATION- வாழ்க்கைகல்வி(பொறியியல்)] பணியாற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை,(Dr.Sarvepalli Radhakrishnan .சர்வபள்ளி, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் படித்த பள்ளி) எனக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியர்களுடன் சமமாக ஆசிரியர் ஒய்வு அறையில் உட்கார மிகவும் தர்ம சங்கடமான சூழ்நிலை, ஒரு ஆசிரியை, நான் படிக்கும் பொது எனக்கு ஆசிரியையாக இருந்தவர், அவர் என்னை "வாங்க தம்பி சார் உட்காருங்க" என்பார். இதை எல்லாம் விட, வகுப்பில் யார் ஆசிரியர் என தெரியாத அளவில் நானும் மானவனைப்போலவே இருந்தேன். என்னை ஆசிரியர் என தனிமைப்படுத்தி காண்பிப்பதற்காகவே "வேஷ்டி"  உடை அணிந்து செல்லவேண்டியதாக இருந்தது.

1987 இல் மாதம் 300 சம்பளம் பெரும் இந்த பகுதிநேர ஆசிரியற்பணி தேவைதான ? என்கிற அப்பாவின் நியாயமான கேள்விக்கு கிடைத்த பரிசுதான் 1300 சம்பளத்தில் ஒரு பிரபல தனியார் IT கம்பனியில் வேலையில் சேர்ந்தது.... நான் ஆசிரியர் பணியிலிருந்தபோது அதே பள்ளியில் என்னுடன் பணியாற்றிய பகுதிநேர வணிகவியல் ஆசிரியர் ஒருவரை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கும், பகலில் அவரின் மாணவனுக்கு ஆசிரியராகவும், மாலையில் அந்த மாணவனின் கீழ் அவனது தாத்தாவின் மொத்தவியாபாரக் கடையில் பணிபுரியும் கணக்கராக பணியாற்றிய அந்த ஆசிரிய நண்பர், அவரின் அந்த மாணவனால் பெற்ற கஷ்டங்கள் ...அந்த மாணவன் ஆசிரியர் என்று பாராமல் தனக்கு கீழ் வேலைசெய்கிறார் என்கிற மமதையால், கடையை பெருக்கி சுத்தம் செய்துவிட்டு பிறகு கணக்கு எழுதுங்கள் என்று கட்டளையிட்டது, போன்ற இன்னும் பல கொடுமைகளை அனுபவித்தார் என்பதை அந்த மாணவன் அவனது பள்ளி தோழர்களுடன் பேசியதிலிருந்து தெரிந்துகொண்டேன், பிறகு என்னுடன் பணியாற்றிய பகுதி நேர வணிகவியல் ஆசிரியரிடம் விசாரித்ததில், அவர் பெருந்தன்மையோடு " மாணவன்தானே  -போகப் போகப் தெரியும்.. ஆசிரியரின் அருமை புரியும் .... என்றார்....."  (கொடுமையிலும் கொடுமை ஏழ்மையில் படித்தவர்களுக்கு வேலையில்லா கொடுமை.... அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினும் ....கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது . என்னும் ஔவை வாக்கை நினைத்து வியக்கவைப்பது இந்த பாடல் http://youtu.be/O-zgx1UuvN0
Post a Comment

FREE JOBS EARN FROM HOME