கோகி-ரேடியோ மார்கோனி: "எனது மே- தின வானொலி தொகுப்பிலிருந்து ஒரு பகுதி"

FREELANCER

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, November 7, 2014

"எனது மே- தின வானொலி தொகுப்பிலிருந்து ஒரு பகுதி"

"எனது மே- தின வானொலி தொகுப்பிலிருந்து ஒரு பகுதி" ஹெர்குலஸ்  என்பவர், கிரேக்க கதைகளில் வரும்,நம்ம ஊர் பீமன் மாதிரி. மிகுந்த பலசாலி. இவர் ஒரு முறை உலகத்தின் கோடிக்கு யாத்திரை செல்கிறார்.அப்போது அட்லஸ் என்பவர் தான், உலகத்தை தன் தோளில் சுமந்து கொண்டிருந்ததாய் புராணம். ரொம்ப நாளா தூக்கி வச்சிருந்ததாலே,அவருக்கு தோள் நோவு கண்டுடுச்சு. இந்த சுமையை தூக்க கூடிய ஆள் யாரும், அந்த நாளிலே இல்லை. ஹெர்குலசை பார்த்தவுடன், அட்லஸ் ரொம்ப சந்தோஷப் பட்டார்.கிட்ட வந்தவுடன் "அப்பா என் சுமையை கொஞ்சம் தாங்கிக்கோ", இயற்கை உபாதையை முடிச்சிட்டு வர்றேன்னார். ஹெர்குலஸ் உலகத்தை தூக்கிக் கொள்ள அட்லஸ் "ஜூட்", விட்டார். அட்லாசின் நோக்கம் விளங்கிக் கொண்ட ஹெர்குலஸ், "அண்ணே, ஒரு நிமிடம், "இங்கே வாங்க" அப்படின்னு கூப்பிட்டார். "என்ன ?" என்று, எட்டியே நின்று கேட்ட அட்லாசிடம், "முண்டாசை சரியாகக் கட்டிகிட்டேன்னா, எவ்வளவு நேரம் வேணுமின்னாலும் என்னாலே தூக்க முடியும், நீங்க பொறுமையா திரும்பி வரலாம்", இன்னு சொல்ல, அட்லசும் உடனே, உலகத்தை மீண்டும் தோளில் சுமக்க. ஹெர்குலஸ் "எஸ்கேப்", ஆயிட்டார்.

எதுக்கு இந்த கதையின்னா "உலகத்தில் யாரும் சுமையை தூக்க விரும்பறதில்லே. எப்போடா இறக்கி வைப்போம்", என்பது தான் யதார்த்தம். ஒரு நிறுவனத்தின் தலைவருக்கோ, முதலாளிக்கோ வேலைப் பளுக்கள், நிறைய பொறுப்புகள். இந்த பொறுப்புகளை எடுத்துக் கொள்ள, நாம் தயாரானால், குறிப்பு அறிந்து முன் கூட்டியே செயல்பட்டால்,உங்கள் முன்னேற்றத்தின் எல்லாப் படிகளிலும் உறு துணையாய் இருப்பார்", ஆகவே சுமை தாங்கியாக நீங்கள் ஒருவருடைய பளுவை பகிர்ந்தால்,அவர் மற்ற வேலைகளை முடிக்க, அவருக்கு அவகாசம் கிடைக்கும் அதன்மூலம் நீங்களும் பயன்பெறலாம். அதோடு 
"நாணயம், நம்பிக்கை இரண்டையும் பயன் படுத்தி இன்னமும் முன்னேறலாம்", "சுமைதாங்கி சாய்ந்தால்..."  http://youtu.be/NqIwYf-gbV8
Post a Comment

FREE JOBS EARN FROM HOME