FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, February 20, 2015

சிரிக்க சிந்திக்க


#என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்,

#உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல; இங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்யாதீர்கள். செய்யும் செயலில் வெற்றியோ, தோல்வியோ கவலைப்பட்டு கொண்டிருக்க கூடாது. தொடர்ந்து பணியைச் செய்ய வேண்டும்.
மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளையும் கடந்து தான் ஆக வேண்டும்.
#மரணத்தைப் பற்றி கவலைப்படாதே. நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை. பிறகு எதற்கு அந்தக் கவலை?

# அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

#விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
#வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
=======================
#ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
#உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி
உங்கள் ஆன்மாவில் புத்துணர்வு
உங்கள் வாழ்வில் வெற்றி
உங்கள் முகத்தில் புன்னகை
உங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்
இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!

#டீச்சர்: உன்னோட பேர் என்னமா?
பெண்: ஐஸ்வர்யா
டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க?
பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டாகூப்பிடுவாங்க..
டீச்சர்: ??? ( எதுக்கு தாயி இந்த கொலை வெறி? )


#ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
"ஆலம் விழுதினை போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன‌
என் வேரென நீ இருந்தாய் ‍‍
அதில் வீழ்ந்து விடாதிருந்தேன்"
#உனது எதிரி எறும்பு போல இருந்தாலும்,
அவனை யானை போல கருது....

#வாழ்கையில் ரெண்டு விசயத்த எப்பவும் மறக்கக் கூடாது.
விரும்பி எது வந்தாலும் take care
விலகி எது போனாலும் don't care
தொ[ல்]லைப்பெசியிளிருந்து......

#என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
... வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.

#ஜோசியர் :-இன்னும் ஆறு மாதம் மட்டுமே உங்களுக்கு ரொம்ப கஷ்ட்டம்
ஜோசியம் பார்க்க வந்தவர் :- ஆறு மாதத்துக்கு அப்பறம்
ஜோசியர் :- கஷ்டம் தெரியாமல் பழகிவிடும்.

புது தில்லியில் ஒரு தொலைபேசி உரையாடல் - "சுந்தர் என்பவர் எனது ஆபீஸ் நண்பர், என் குழுவில் புதிதாக சேர்ந்த என்ஜினியர் ஒரு காஷ்மீரத்துப் பெண் பெயர் "மீனாக்ஷி மாண்டு" அன்று ஒரு தொலைபேசியில் ஹிந்தியில் அழைப்பு வர மறு முனையில் "மீனாக்ஷி ஹே" என கேட்க.... நான் "ஹே" இருக்கிறார் என்றேன் அடுத்து ஹிந்தியில் 'சுந்தர் ஹே" என்று கேட்டதும் நான் "பஹூத் சுந்தர்" என்றேன் (ஹிந்தியில் சுந்தர் என்றால் அழகு) ..... ரொம்ப அழகு என்றுகூற, ஆனால் தொலைபேசியில் கேட்டதோ சுந்தர் என்கிற எனது ஆபீஸ் நண்பரை என்பது தெரிந்த பிறகு ... சிரிப்புதான் ........

#பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
சொன்னா புரிஞ்சுக்கணம்... அவ்வளவுதான்
(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி) ம்)

#ஓடுற எலி வாலை புடிச்சா
நீ 'கிங்'கு.....
தூங்குற புலி வாலை மிதிச்சா
உனக்கு சங்கு......(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

#வேர்கடலை வேர்ல இருந்து வரும்,
அதே மாதிரி
கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?
(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் கைக்குதான் "ப்ரைஸ்" கிடைக்கும்.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)
...
என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும், Rewindலாம் பண்ண முடியாது.
(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

Tea கப்புல "Tea" இருக்கும், World கப்புல World இருக்குமா !!!!!!

# ரேஷன் கார்டு-a வச்சு சிம் கார்டு வாங்கலாம் ஆனா சிம் கார்டு-a வச்சு ரேஷன் கார்டு வாங்க முடியாது (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..! !(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதல Thank You சொல்ல முடியாது !!! !!!!! (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

#* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்

* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்..(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

* கார் ஓட டயரும் தேயும்

* சிகரெட் விரலளவு, சீக்கு உடலளவு....(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை..

* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்...

* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்

* துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது..

* பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல

* மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்

* முடியுள்ள போதே சீவிக்கொள்

* பழகின செறுப்பு காலை கடிக்காது

* ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே

#என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும்,
முட்டைதான் போடும். நூத்துக்கு நூறெல்லாம் போடாது.
(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால் விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

#கங்கை ஆத்தில மீன் பிடிக்கலாம், காவேரி ஆத்தில மீன் பிடிக்கலாம் ஆனா ஐயர் ஆத்தில மீன் பிடிக்க முடியுமா?

#என்னதான் உன் தலை சுத்தினாலும் உன் முதுகை நீ பாக்க முடியுமா?(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

#மீன் பிடிக்கிறவனை மீனவன்'னு சொல்லலாம்……. நாய் பிடிக்கிறவனை நாயவன் என்று சொல்ல முடியுமா? (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

என்னதான் ஒருவன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போட முடியாது.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொட்டினா வலிக்கும், முடி கொட்டினா வலிக்குமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

ஸ்கூல் டெஸ்டில பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்டில பிட் அடிக்கலாம், பிளட் டெஸ்டில பிட் அடிக்க முடியுமா?(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

பொங்கலுக்கு லீவு கொடுப்பாங்க.. ஆனா இட்லி வடைக்கு லீவு கொடுப்பாங்களா?? (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

கோல மாவில கோலம் போடலாம்… கடலை மாவில கடலை போட முடியுமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

தூக்க மருந்து சாப்பிட்ட தூக்கம் வரும்.. இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா??? (என்ன கொடுமை சார் இது)

வாழை மரம் தார் போடும் அதை வச்சு ரோடு போட முடியுமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..! (யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

பாலில இருந்து பால்கோவா பண்ணலாம்… ரசத்தில இருந்து ரசகுல்லா பண்ண முடியுமா??(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

சண்டே அன்னைக்கு சண்டை போட முடியும். ஆனா மண்டே அன்னிக்கு மண்டைய போட முடியாது.(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

#2 சொட்டு போட்டா அது போலியோ.
4 சொட்டு போட்டா அது உஜாலா
2880 சொட்டு போட்டா அது குவாட்டர்
இதுதான் இன்னிக்கு மேட்டர்.
(யான் பெற்ற தொ[ல்]லைப்பேசி குறுஞ் செய்தி)

நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.
அங்கே 5பேரும்மா.
மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.
திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டு
மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.
ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.

சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.
அங்கே 8 பேரும்மா.
... அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு கேள்வி கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?
அதுல ஒருத்தன் சொன்னான்
இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா
இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.
# பொருத்தமான பாடல்கள் கொண்ட குட்டி வானொலி கதைகள் ...தாங்களே முன்வந்து கேட்டதற்கு எனது நன்றிகள்
என்னிடம் தயாராக உள்ள கதைகளின் நடுவில் உள்ள பழைய பாடல்களை மாற்றி சற்று புதிய பாடல்களை பொருத்தி சரிசெய்து அனுப்பிவைக்கிறேன்.


*ஒரு இந்திய விவசாயியும் பாகிஸ்தான் விவசாயியும் சந்தித்துக் கொண்டார்கள்.. இந்தியர் தன் வயலைச் சுற்றிக் காட்டினார்..
பாகிஸ்தானி சொன்னார்.. என்னுடைய வயலை காரில் சுற்றிப் பார்க்க ஒரு முழுநாள் தேவைப்படும்..
இந்தியர் சொன்னார்.." என்கிட்டேயும் அது மாதிரி ஒரு ஓட்டைக் கார் இருந்தது. பழைய இரும்புக்கு போட்டுட்டேன்,,!

--------------------

மன்மோகன் சிங்கும், ஒபாமாவும்
பாரில் அருகருகே அமர்ந்து உள்ளனர். அப்போது ஒரு நபர் அந்த பாருக்கு வருகிறார்.

சிப்பந்தியிடம் அவர்கள் மன்மோகன் சிங்கும், ஒபாமாவும் தானே என்று கேட்கிறார்.

"ஆம்! அவர்கள்தான்!" என்றார் சிப்பந்தி.

உடனே அந்த நபர் அவர்களிடம் சென்று "ஹலோ! இங்கு என்ன செய்கிறீர்கள்?" என்றார்.

மன்மோகன் சிங் & ஒபாமா : "நாங்கள் மூன்றாம் உலகப் போரைப் பற்றி விவாதிக்கிறோம்."

அந்த நபர், "ஒ! உண்மையாகவா? என்ன நடக்கப் போகிறது? " என்று கேட்கிறார்.

மன்மோகன் சிங்: "நல்லது! நாங்கள் 14 மில்லியன் பாகிஸ்தானியர்களையும், ஒரு சைக்கிள்
ரிப்பேர் செய்கிறவரையும் கொல்லப் போகிறோம்"

உடனே அந்த நபர் மிகவும் ஆச்சரியத்துடன் "என்னது ஒரு சைக்கிள் ரிப்பேர் செய்பவரா?" என்று கேட்கிறார்.

மன்மோகன் சிங் ஒபாமா ஐப் பார்த்து, "பார்த்தீர்கள? நான் அப்பவே சொன்னேன், ஒருவரும் 14 மில்லியன் பாகிஸ்தானியர்களைப் பற்றி கவலைப் படமாட்டார்கள்! நாம் திட்டமிட்டபடி இதை செய்து முடித்துவிடுவோம்"
நான் படித்ததில் பிடித்த நகைச்சுவை இது. .....
==========

ஒரு ஆப்பிரிக்கன், ஒரு இந்தியன், ஒரு பாகிஸ்தானி மூவரும் மெக்சிகோவில் பயணம் செய்த போது ஒரு மெக்சிகனை ஏதோ ஒரு காரணத்துக்காக கொன்று விட்டனர்.அவர்கள் மூவருக்கும் மின்சார நாற்காலி மரண தண்டனை அளிக்கப்பட்டது.

ஆப்பிரிக்கன் ' நான் ஒரு டென்டிஸ்ட். நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன் .என்னை விட்டுவிடுங்கள் ' என்றான். ஆனால் அவன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது . சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது.ஒன்றுமே நிகழவில்லை. மரண தண்டனை விதிகளின்படி அவன் விடுவிக்கப்பட்டான்.

இந்தியன் ' நான் ஒரு டாக்டர் . நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன் ' என்றான். ஆனால் அவன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது .. சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது.ஒன்றுமே நிகழவில்லை. மரண தண்டனை விதிகளின்படி அவன் விடுவிக்கப்பட்டான்.

பாகிஸ்தானி ' நான் ஒரு எலெக்ட்ரிகல் இஞ்சினியர்.. . நான் இங்கேயே தங்கி உங்கள் மக்களுக்கு சேவை செய்வேன்...அதற்கு முன் ஒரு விஷயம்..அங்கே பாருங்கள் நீங்கள் ஒயரை மாற்றி கனெக்சன் கொடுத்துள்ளீர்கள்..அந்த கருப்பு ஒயரையும் சிவப்பு ஒயரையும் இடம் மாற்றினால் தான் மின்சாரம் பாயும்.'....... மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
========

ஒரு பாகிஸ்தானிய மாணவன் அமெரிக்க பள்ளி ஒன்றில் சேர்த்துக் கொள்ளப்பட்டான்.

ஆசிரியர்: உன் பெயர் என்ன?

மாணவன்: அஹமத்

ஆசிரியர்: தவறு. இப்பொழுது நீ அமெரிக்காவில் இருக்கிறாய். எனவே இன்றிலிருந்து உன் பெயர் ஜானி. சரியா...

பாகிஸ்தானிய மாணவன் யோசித்தபடியே வீட்டுக்கு சென்றான். வீட்டில் அவனது தாய் 'முதல் நாள் வகுப்பு எப்படி இருந்தது?' என்று கேட்டார்.

மாணவன்: ஓ....நன்றாகவே சென்றது. இன்றிலிருந்து நான் ஒரு அமெரிக்கன். என் பெயர் இனி ஜானி.

பையனின் தந்தையும் தாயும் இஸ்லாத்தை அடி பிறழாமல் பின் பற்றுபவர்கள். எனவே கிறித்தவ பெயரை வைக்கக் கூடாது என்று போதித்தனர். பையன் கேட்பதாக இல்லை. எனவே இவ்வாறு சொன்னதற்காக பையனை திருத்துவதற்காக அவனை அடித்து விட்டனர். அடி வாங்கிய மறு நாள் அதே யோசனையோடு பள்ளியினுள் நுழைந்தான் அஹமத். இவன் யோசனையில் ஆழ்ந்திருப்பதை கவனித்த ஆசிரியர் 'என்ன ஆச்சு உனக்கு ஜானி?' என்று கேட்டார்.

பையன் பொறுமையாக சொன்னான் "அமெரிக்கனாக மாறிய என்னை இரண்டு பாகிஸ்தானிகள் அடித்து விடடனர்"
============
கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக் காப்பாத்தினியே, அவ இபோ எப்படி இருக்கா?

முழுகாம இருக்கா..!!!???....
======
அப்பா : ஏண்டா ரொம்ப நேரமா அழுதுகிட்டிருக்கிறே?
மகன் : அம்மா அடிச்சிட்டாங்கப்பா...
அப்பா: சீ ..சீ...இதுக்கெல்லாமாடா அழுவாங்க?
மகன் : அட போங்கப்பா நீங்க எவ்வளவு அடி பட்டாலும் தாங்கிடுறீங்க என்னால முடியல
=======
சுதா: ஏன் அந்த கிளி ஜோசியக்காரர் வந்தாலே எல்லோரும் கதவை சாத்திக்கிறாங்க?
மகா: அவர் எல்லோரும் பயந்து சாகுறமாதிரி ‘கிலி' ஜோசியம் சொல்லுவாராம் அதான்....
=======
கமலா: கல்யாணம் வேண்டாம்னு சொன்ன நீ உடனே கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொல்றியே எப்படி?
விமலா: உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி ரொம்ப கம்மியா இருக்காம். டாக்டர் சத்தானதா சமைச்சு சாப்பிடச் சொன்னார். அதான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன்....
======
பெண்: டாக்டர் என்னோட கணவர் தினமும் தூக்கத்தில என்னைய திட்டுறாரு.
டாக்டர்: முழிச்சிட்டு இருக்கிறப்ப செய்ய முடியாததை
தூங்கும்போதாவது செய்யட்டுமே விடுங்க !..
=======
டாக்டர் : இன்னையில இருந்து உங்களுக்கு புது சிகிச்சையை அறிமுகம் செய்யப்போறோம்.
நோயாளி : புது சிகிச்சை இருக்கட்டும் டாக்டர். முதல்ல அந்த புது நர்ஸை அறிமுகப்படுத்துங்க !..
========
பப்பு - அப்பா, உங்களால இருட்டுல கையெழுத்துப் போட முடியாதுன்னு சொல்றேன், நீங்க என்ன சொல்றீங்க.
அப்பா - யார் சொன்னா, எப்படிப்பட்ட அமாவாசை இருட்டிலேயும் சூப்பரா கையெழுத்துப் போடுவேன் தெரியுமா.. எங்க போடனும் சொல்லு..
பப்பு - என்னோட பிராகரஸ் ரிப்போர்ட்ல தான்...!
=========
நோயாளி : ஆபரேசனுக்கு முன்னாடி டாக்டர் ஏன் நெத்தியில கோடு போட்டார்?
நர்ஸ் : டாக்டர் எந்த வேலை செஞ்சாலும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிப்பார் அதான்....
=======
ஒருவர் : அந்த டாக்டர் ஆபரேசன் பண்றப்ப கூட மயக்க மருந்து யூஸ் பண்ணமாட்டார்.
மற்றவர் : பரவாயில்லையே !
ஒருவர் : அட நீ வேற ஆபரேசன் பண்றதுக்கு முன்னாடியே பீஸ் எவ்வளவுன்னு சொல்லிடுவாரு அதுலையே நோயாளி மயங்கிடுவாங்க....
=========
மச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீதாண்டா காரணம்!!!??.........

நானா ....எப்படிடா??!!....

இப்பவோ......அப்பவோன்னு இருந்த என் மாமனார்கிட்ட நீ எழுதின ஒரு ஜோக்க படிச்சு காட்டினேண்டா......அவ்வளவுதான் பொட்டுன்னு போயி சேர்ந்துட்டாருடா.....அப்புறம் அவருடைய சொத்தெல்லாம் எனக்கு வந்துடுச்சில்ல??!!!.
=========
கட்சித் தொண்டர்கள்கிட்டே ‘மனு’ வாங்கிய
தலைவர், ஏன் கோபப்பட்டாராம்?

யாரோ ஒரு தொண்டர், பசங்களோட வீட்டு பாடத்தை செய்து கொடுக்க சொல்லி மனுவாக கொடுத்துட்டாராம்…அதான்!
========
உன் பேரு என்னம்மா?

"சனியாத்தா"

உன் புருஷன் பேரு என்னம்மா?

"சனியப்பன்"

உன் பெரிய பையன் பேரு?

"பாத சனி"

உன் சின்ன பையன் பேரு?

"அஷ்ட சனி"

உன் ஊரு பேரு?

"சனியாசிகுப்பம்"

உன் புருஷன் என்ன வேலை செய்கிறார்?

"சனிஸ்வரர் கோயில் வாசலில் சம்சா விற்கிறார்"!!!!!!!??......

சென்சஸ் எடுப்பவர் : அட... ச்சே...ராசி பலன்லே ..ஏழரை ஆரம்பம்னு போட்ருந்தான்...நான் நம்பலை....ஆரமபிசிடுச்சுடா..சாமி...
=======
ஒரு பேருந்து விபத்து!
பயணிகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தனர். கைகால்கள் இழந்தவர்களின் அலறல்.

"கண்டக்டர் என்னப்பா ஆனான்?"

பரபரப்போடு கண்டக்டரை அக்கறையோடு தேடிக்கொண்டிருந்தார் ஒருவர்.
"பாவம், கண்டக்டர் இவருக்கு ரொம்ப பழக்கமான ஆள் போலிருக்கு!" என்று நினைத்த சிலர், சற்று தொலைவில் ஒரு மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த கண்டக்டரை அவருக்கு சுட்டிக்காட்டினார்கள்.

பரபரப்போடு அவரை நோக்கி ஓடினார் அந்த ஆசாமி.
உடைந்துபோய் ரத்தம் வழிந்துகொண்டிருந்த தன் மூக்கைப் பொத்தியவாறு உட்கார்ந்திருந்த கண்டக்டரை நெருங்கினார் அவர்.

"என்னப்பா...இங்கேயா இருக்கறே.....ஆனது ஆயிப்போச்சு...நடக்கவேண்டியதைப் பார்க்கணுமுல்ல....எனக்கு வரவேண்டிய சில்லறை பாக்கி 15ரூபா அம்பது காசைக் குடுத்துடுப்பா!.....நான் வேற பஸ்சுல போய்க்கறேன்!"
என்னதான் ரகசியமோ இதயத்திலே...
நினைத்தால் எனக்கே சிரிப்புவரும் சமயத்திலே
http://youtu.be/TC_ewqr6eqk

விழியிலே மணி விழியினில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களின் பொன்னும் மின்னும்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
ம்ஹும்.. ம்ஹும்..:
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஓஓஓஓஓ.. அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீயும் ஓதலாம்
விழியிலே.. மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம்.... http://www.youtube.com/watch?v=xX9ZLClies4&feature=share&list=PL71E157D7E01C958E

கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாம் அதிசயம் ஆனந்தம் ..காற்றினிலே வரும் கீதம்.... http://youtu.be/od2N2tZnu14

" வெளிநாட்டு மதங்கள எவ்வள்வு தொகை கொடுத்தாலும் மாறத்தயாராக இல்லை!!! 

அவர் ஒரு சிறந்த மத போதகராக இருந்தார். ஆனால் அவர் பணியாற்றிய ஆலய நிர்வாகம் வேற்று மதத்தவர்களை அவர்களின் மதத்தில் சேர்க்க முயற்சிக்கும்படி ஆலய மத போதகரை கட்டாயப்படுத்தினார்கள்.  ஆகவே அவர் அருகில் இருந்த ஒரு கிராமத்திற்கு சென்று அங்குள்ள ஒரு கோவில் குளக்கரையில் இருந்த அரச மரத்தடி கற்சிலை கடவுளை மக்கள் வணங்கியபடி இருப்பதை  பார்த்த அந்த மத போதகருக்கு ஒரு யோசனை தோன்றியது, அதன்படி அவர் அங்கு கூடியிருந்த பொது  மக்களைப் பார்த்து "நீங்கள்  அனைவரும்  வணங்குவது  வெறும்  கற்சிலை அது  கடவுள் அல்ல, வேண்டுமானால்  இந்த  கற்சிலையும் இதோ  இங்கு அலைந்துகொண்டிருக்கும்  நாயையும் அந்த குளத்துக்குள் தூக்கி எரிந்தால் எது கரையை வந்து சேர்கிறது என்பதை நீங்களே பாருங்கள் அப்போது புரியும் என்றார்.
 
அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் வேறு முறையில் மாற்றி செய்யலாம் என்றார். அதற்க்கு அந்த மத போதகர் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்யுங்கள் கற்சிலையில் கடவுள் இல்லை என்றார். 

முதலில் கடவுள் சிலை மீது அந்த உயிர் உள்ள நாயை போடுங்கள், பிறகு நாய் மீது கடவுள் சிலையை போடலாம் பிறகு எது அதன் தன்மை மாறாமல் இருக்கிறது என்று பார்க்கலாம் என்றார். 

இதைக்கேட்ட மத போதகர், தமது போதனை இங்கு செல்லுபடியாகது என தெரிந்துகொண்டு  அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். 

" வெளிநாட்டு மதங்கள எவ்வள்வு தொகை கொடுத்தாலும் மாறத்தயாராக இல்லை!!! 

நம்மைசுற்றி ஏராளமான ஆன்மாக்கள் எப்பொதும் அனைத்து இடங்களிலும்.....

ஒரு ஆத்துமாவின் சுய கதை என்கிற புத்தகம் படித்தபோது, அந்த ஆத்துமா மறுபிறவியாக ஒரு குழந்தையாக பிறந்ததுவரை நடந்த நிகழ்வுகள் என்பது சரியான முடிவில்லை. அருமையான சிந்தனை, சிந்தனையின் தொடக்கத்தில் இருந்த தெளிவு முடிவில் இல்லை ... அதாவது  "நான்கு சுவற்றுக்கு நடுவில் யாரும் இல்லை என்று மனிதன் நினைப்பது இயல்பு, ஆனால்  நம்மைசுற்றி ஏராளமான ஆன்மாக்கள் எப்பொதும் அனைத்து இடங்களிலும் சுற்றிக்கொண்டு இருப்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மை. எனக்கும் அப்படிப்பட்ட எண்ணம் 12 வயதுவரை இருந்தது, அரவிந்தர் ஆசிரமத்தின் பிரதிநிதியான ஒரு குருவின் ஆசியில் பெற்ற ஆழ்நிலை தியானம் பயின்ற இளம் கன்று பயம் அறியாது என்பதற்கிணங்க, சவாசனத்தில்-ஆழ்நிலை தியானத்தில் இறங்கியபோது நடந்த நிகழ்வு அது(சவாசனத்தில்-அதாவது தரையில் படுத்தநிலையில் ஆழ்நிலை தியானம் செய்யக்கூடாது என்பது நியதி. உட்கார்ந்த நிலையில் மட்டுமே தியானம் செய்யவேண்டும் அதுவும் 20 அல்லது 30 நிமிடங்கள் மட்டுமே தியானத்தில் இருக்கலாம்) அப்படி தியானத்தில் இறங்கியபோதுமூன்று முறை என் உடலை நானே பார்த்த அனுபவம், என்னை சுற்றி ஏன் இப்படி ஒரு கூட்டம், கூச்சல், குழப்பம் தெளிவில்லாமல் ஒரு பயம் எனது கால்களை கால்பந்து விளையாடுவதுபோல எட்டி உதைத்து..... விழித்துக்கொண்டேன்... தூக்கத்தில் இருந்திருப்போமா?... தெரியவில்லை... என்ன நடந்தது தெரிந்துகொள்ள மேலும் ஒரு முயற்சி என மூன்று முறை... அதற்குமேல் ஆராய்வதற்கு நேரமில்லாமல் ஓடி ஓடி உழைத்து குடும்ப பொறுப்பு...வயதாகிப்போனதால் மனதுக்கிருந்த தைரியமும், சக்தியும் உடலுக்கு இல்லை... ஆனால் ஒன்று நிச்சயம் ஒவொருவரின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட உணர்வுகளின் நினைவுகள் ஆத்மாக்களுக்கு உண்டு ஆனால் ஆத்துமாக்கள் மீண்டும் பிறவி எடுக்கும்போது அவர்களின் புனர் ஜென்ம நினைவுகள் மங்கிவிடுகிறது அதாவது மறந்து போகும், ஏதோ ஒரு சிலர் மட்டும் புனர் ஜென்ம நினைவுகளை பெற்றிருக்கிறார்கள்.  நன்றிகளுடன் கோகி என்கிற கோபாலகிருஷ்ணன் ரேடியோ மார்கோனி.   

Saturday, January 10, 2015

அடுத்த சில நாட்களில் இந்திய வட மேற்கு எல்லைப்பகுதியில் ஒரு பூகம்பம் நிகழ சாத்தியக்கூறுகள் உள்ளது.

12-05-2015 12.30am இன்று நேபாளம் மற்றும் சீனா,  ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பாக, தில்லி மற்றும் வட இந்திய மாநிலங்களிலும் இன்று மதியம் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நேபாளத்தில் நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகளில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது. சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.4 ஆகப் பதிவாகியுள்ளது. இன்றைய இந்த நிலநடுக்கம் உலகம் முழுவதும் 82 இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “பூகம்பத்துக்குப் பிறகான பூமியின் ஊடாக சென்ற ஒலி அலைகளின் தரவுகளின் படி தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பூமியின் பாறை கிட்டத்தட்ட 6 மீட்டர்கள் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இது மிகப்பெரிய இடப்பெயர்வு” 

“பூகம்பம் காரணமாக பாறைகள் பூமிக்கு அடியில் இடப்பெயர்வு கண்டுள்ளதால் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் குறித்து ஆஸ்திரேலிய சுனாமி எச்சரிக்கை மையத்தின் டேனியல் ஜக்ஸா கூறும்போது, மேலும் ஒரு சுனாமி வருவதற்கான சூழல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்தார், அதாவது ஆசியப்பாரைத்தட்டு ஆஸ்திரேலிய பாரைத்தட்டான சுண்ணாம்பு பாறைக்கடியில் மிகப்பெரிய அழுத்தத்தால் தொடர்ந்து அழுத்திக்கொண்டிருப்பதால் எந்த நேரத்திலும் ஆசியப்பாரைத்தட்டு பசிபிக் கடல்பகுதியில் ஒரு பிளவை சந்திக்கக்கூடிய சூழல் எப்போதுவேண்டுமானாலும் ஏற்ப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அப்படி ஒரு பிளவு ஏற்ப்ப்படும்போது இந்திய மதுரம் இந்தோனேசிய பசிபிக் கடல்பகுதியில் மிகப்பெரிய சுனாமி பேராலை உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள். 

25-Apr-2015. Massive 7.5 Magnitude Earthquake in Nepal, Tremors Across Northern India.

சற்றுமுன் 25-ஏப்பரல்-2015 11.50 அளவில்  புது  தில்லி அதன் சுற்றுப்பகுதியில் மிகப்பெரிய பூகம்பம் 7.5 அளவில் இருக்கும் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது  நான் ஏற்க்கனெவே குறிப்பிட்டபடி பூகம்பம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை சென்ற மாதம் (மார்ச் மாதம்) வரும் என்று எதிர்ப்பார்த்தேன் ... விவரங்களுக்கு எனது வலைபூவில் ....
அடுத்த சில நாட்களில் இந்திய வட மேற்கு எல்லைப்பகுதியில் ஒரு பூகம்பம் நிகழ சாத்தியக்கூறுகள் உள்ளது. ....இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவின் மேற்கு கடலோரப்பகுதியின் வடக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.4 புள்ளிகளாக பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று 10-01-2015 காலை 4.29 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், கடலோரப்பகுதியின் வடக்கு பகுதியில் 48 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதாவது தென் கெழக்கு ஆசிய நிலப்பரப்பின் மேல் தட்டு சில அடிகள் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளது தெளிவாகத்தெரிகிறது, இதேபோல 1994 வருடம் இந்தோனேசியாவில் 6.2 புள்ளிகளாக நினலடுக்கம் பதிவானபோது, அடுத்த சில நாட்களில் இந்தியாவில்  உத்திரப்பிரதேசத்தின் வடக்கு பகுதியில் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.  ஆகவே அடுத்த சில நாட்களுக்குள் இந்தியாவின் வடபகுதியிலோ அல்லது வட கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியிலோ ஒரு பூகம்பம் நிகழ சாத்தியக்கூறுகள் உள்ளது.... இதற்க்கு முக்கியக்காரணம் ஆசியாவின் பூமத்தியரேகைக்கு கீழ் பகுதியில் அமைந்த பூமியின் மேல் உள்ள பாறைத்தட்டு கிழக்கு நோக்கி நகர்கிறது என்பதை சென்ற 10 ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள் தெள்ளத் தெளிவாக தெரிவிக்கிறது (இது குறித்து பலவிவரங்களை என்னுடைய Blogspot இணையப்பக்க பதிவில் காணலாம்) .. மேலும் நடக்கப்போவதை பொறுத்திருந்து பார்ப்போம் ..... ஆலோசகர் - கோகி 


24 மார்ச் மாதம் 2015. இந்திய தலைநகரான கிழக்கு தில்லியிலிருந்து சுமார் 49 கி மி தூரத்தில் அமைந்திருக்கும் உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் நேற்று மாலையில் 7 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகி இருந்தது.அடுத்த சில மணிநேரங்களிலேயே இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு 11.42 மணி அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சேத விவரம் ஏதும் ஏற்படவில்லை. [ஆஸ்திரேலியா  மற்றும் ஆசிய பூமி மேல்பரப்பு தட்டுக்கள்  ஒன்றன்மீது ஒன்று அமைந்திருக்கிறது,  இந்த தட்டுக்களின் எல்லை (முனை) இந்தியப்பெருங்கடலின் அடியில் உள்ளது. (குறிப்பாக :- ஆசியத்தட்டு கீழும் ஆஸ்திரேலியாவின் சுண்ணாம்பு பாறை தட்டுகள் மேல்புறமும் அழுத்தம் ஏற்ப்பட்டு நகர்ந்ததினால் ஏற்ப்பட்ட விளைவுதான் 00:58:53 நேரம் டிசம்பர் 26, 2004 அன்று இந்தியப் பெருங்கடலில் தென் இந்திய சுனாமியாக மாறியது. இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தாய்லாந்து,ந்தோனேசியாமலேசியாஇலங்கைந்தியாமாலைதீவுகள்ஆகிய நாடுகளைத் தாக்கியதில் 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர். அதோடு பல வருடங்களாக ஆசியத்தட்டு கீழ்நோக்கி நகர்கிறது ஆகவே தென் இந்தியப்பகுதி சிறிது சிறிதாக கடலுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கிறது. )] 

#டக்னா, மார்ச் 23-தென் அமெரிக்க நாடான பெரு மற்றும் சிலி எல்லைப்பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
பெருவின் தெற்குப்பகுதியில் உள்ள டக்னா நகரம் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நகரமான டக்னாவில் 2,50,000 மக்கள் வசிக்கின்றனர். சிலி நாட்டில் இருந்து 35 கி.மீ. தொலைவில் டக்னா உள்ள நிலையில், சிலியின் புட்ரே நகரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், பூமிக்கடியில் 128.1 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலநடுக்கத்தின் தாக்கம் டக்னா நகரத்திலிருந்து 105 கி.மீ. தூரம் வரையிலும், சிலியில் உள்ள மிகப்பெரிய நகரமான அரிக்கா மற்றும் புட்ரே ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டது. எனினும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

#19 March 2015 12:53 AM IST இந்தோனேசியாவின் மலுக்கா கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்தது.
ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகள் பதிவான இந்த நிலநடுக்கம், அந்த நாட்டின் கோடா டெர்னேட் நகருக்கு வடமேற்குக் கடல் பகுதியில், 41 கி.மீ. ஆழத்தில், செவ்வாய்க்கிழமை ஏற்பட்டதாக அந்த மையம் தெரிவித்தது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
புவித் தட்டுகள் ஒன்றோடு ஒன்று உராயும் "நெருப்பு வளையம்' என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால், அப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
கடந்த 2004-ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான சுனாமிக்கு இந்தோனேசியாவில் 1.7 லட்சம் பேரும், இந்தியப் பெருங்கடல் நாடுகள் பலவற்றில் ஆயிரக்கணக்கானோரும் பலியாகினர் என்பது நினைவுகூரத் தக்கது.

# டோக்கியோ, பிப். 23-2015 ஜப்பான் நாட்டின் கிழக்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.  கிழக்கு ஜப்பானில் உள்ள ஹோன்ஷூ கடற்பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், மிதமான நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று கூறியுள்ளது. இப்பூகம்பத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.

# February 11-2015 02:43 PM IST..அந்தமானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் இல்லை.



#புதுடெல்லி, பிப்.2-2015 மணிப்பூர் மாநிலம் சண்டல் மாவட்டத்தில் நேற்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.4 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 85 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கம் காரணமாக பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை

Sunday, December 7, 2014

வெற்றிலை சாறு "எபோலா" வைரஸ்சுக்கு எதிராக செயல்பட்டு....

வெற்றிலை சாறு "எபோலா" வைரஸ்சுக்கு எதிராக செயல்பட்டு அந்த வைரஸ்ஸை தாக்கி அழிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா ஒரு மூலிகைகளின் சொர்க்கம் என்கிற இரகசியம் இந்தியர்களைத்தவிர, உலகின் பிற நாட்டவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது.

இராமயணத்தில் வெற்றிலை:- அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த போது சீதையை தேடிப்போன அனுமன் சிம்சுகா மரத்தடியில் வீற்றிருந்த சீதையை கண்டதும் ஸ்ரீ ராமனை பற்றி சொல்லி சீதையின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். பொதுவாக யாரேனும் பெரியவர்களை நமஸ்கரித்தால் அவர்களை அட்சதை தூவி ஆசீர்வதிப்பது வழக்கம். அனுமன் சேவித்த போது சீதைக்கு அட்சதையோ புஷ்பமோ கிடைக்கவில்லை. ஆனால் அருகில் தடவிய போது வெற்றிலை இலைகள் கிடைக்க அதனையே அனுமன் தலை மீது தூவ அனுமனும் அந்த வெற்றிலைகளை ஒரு நூலில் கோர்த்து சீதையிடம் கொடுத்து தனக்கு மாலையாக அணிவிக்குமாறு கேட்டு அதை கழுத்தில் அணிந்ததாகவும் அதன் காரணமே அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

Wednesday, November 19, 2014

பார்ப்பதற்கு நானும் மானவனைப்போலவே இருந்தேன், என்னை ஆசிரியர் என தனிமைப்படுத்தி காண்பிப்பதற்காகவே "வேஷ்டி" உடை அணிந்து செல்லவேண்டியதாக இருந்தது...

எனது நாட்குறிப்பேட்டின் வாடாமலர்ப் பக்கங்கள்:-1987
# 1987என் குறிப்பேட்டின் வாடாமலர் பக்கங்கள்:- நினைத்துப்பார்க்கிறேன்.... நான் படித்த அதே அரசாங்கப் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராரக [LOE- LIFE ORIENTATION EDUCATION- வாழ்க்கைகல்வி(பொறியியல்)] பணியாற்றுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை,(Dr.Sarvepalli Radhakrishnan .சர்வபள்ளி, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் படித்த பள்ளி) எனக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியர்களுடன் சமமாக ஆசிரியர் ஒய்வு அறையில் உட்கார மிகவும் தர்ம சங்கடமான சூழ்நிலை, ஒரு ஆசிரியை, நான் படிக்கும் பொது எனக்கு ஆசிரியையாக இருந்தவர், அவர் என்னை "வாங்க தம்பி சார் உட்காருங்க" என்பார். இதை எல்லாம் விட, வகுப்பில் யார் ஆசிரியர் என தெரியாத அளவில் நானும் மானவனைப்போலவே இருந்தேன். என்னை ஆசிரியர் என தனிமைப்படுத்தி காண்பிப்பதற்காகவே "வேஷ்டி"  உடை அணிந்து செல்லவேண்டியதாக இருந்தது.

1987 இல் மாதம் 300 சம்பளம் பெரும் இந்த பகுதிநேர ஆசிரியற்பணி தேவைதான ? என்கிற அப்பாவின் நியாயமான கேள்விக்கு கிடைத்த பரிசுதான் 1300 சம்பளத்தில் ஒரு பிரபல தனியார் IT கம்பனியில் வேலையில் சேர்ந்தது.... நான் ஆசிரியர் பணியிலிருந்தபோது அதே பள்ளியில் என்னுடன் பணியாற்றிய பகுதிநேர வணிகவியல் ஆசிரியர் ஒருவரை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கும், பகலில் அவரின் மாணவனுக்கு ஆசிரியராகவும், மாலையில் அந்த மாணவனின் கீழ் அவனது தாத்தாவின் மொத்தவியாபாரக் கடையில் பணிபுரியும் கணக்கராக பணியாற்றிய அந்த ஆசிரிய நண்பர், அவரின் அந்த மாணவனால் பெற்ற கஷ்டங்கள் ...அந்த மாணவன் ஆசிரியர் என்று பாராமல் தனக்கு கீழ் வேலைசெய்கிறார் என்கிற மமதையால், கடையை பெருக்கி சுத்தம் செய்துவிட்டு பிறகு கணக்கு எழுதுங்கள் என்று கட்டளையிட்டது, போன்ற இன்னும் பல கொடுமைகளை அனுபவித்தார் என்பதை அந்த மாணவன் அவனது பள்ளி தோழர்களுடன் பேசியதிலிருந்து தெரிந்துகொண்டேன், பிறகு என்னுடன் பணியாற்றிய பகுதி நேர வணிகவியல் ஆசிரியரிடம் விசாரித்ததில், அவர் பெருந்தன்மையோடு " மாணவன்தானே  -போகப் போகப் தெரியும்.. ஆசிரியரின் அருமை புரியும் .... என்றார்....."  (கொடுமையிலும் கொடுமை ஏழ்மையில் படித்தவர்களுக்கு வேலையில்லா கொடுமை.... அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதனினும் ....கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது . என்னும் ஔவை வாக்கை நினைத்து வியக்கவைப்பது இந்த பாடல் http://youtu.be/O-zgx1UuvN0

ஓர் ஆயிரம் நிலவே வா- "நான் முதல் பரிசை பெற்றேன்" .

மலரும் நினைவுகள்:-"ஓர் ஆயிரம் நிலவே வா ... ஓர்.. ஆயிரம் நிலவே வா... (என்ன துடிப்போ அவள் நிலை, நீ உணர மாட்டாயா)என் கல்லூரி நாட்களை நினைக்கும்  போது  நிச்சயம் இந்த பாடல் ஞாபகம் வரும். ஏன் எனில், எனது கல்லூரி விழா ஒன்றில்,  யார் ஆதிகநேரம் சிறப்பான அறுவை நிகழ்ச்சி (பேசிப்பேசியே பொறுமையின் உச்சகட்ட கடலை வறுப்பது)  செய்கிறார்களோ அவர்களுக்கு "அறுவை மன்னன்" பரிசு என்கிற பந்தயத்தில் நான் முதல் பரிசை பெற்றேன் . இதோ அந்த பாடல்... 1000நிலவே வா , 999நிலவே வா , 998நிலவே வா, 997நிலவே வா, 996நிலவே வா, 995நிலவே வா........................தாங்கமுடியாமல் மேடயிலேருந்து குண்டுகட்டாக எனை துக்கி கீழ் இறக்கிவிட்டுவிட்டார்கள் (பின் குறிப்பு:- பரிசையும் தந்துதான் இறக்கிவிட்டார்கள்)  இப்படிக்கு கோகி. http://youtu.be/oHUsQGYEen4

பெண்களின் "சவுரி" முடியின் இரகசியம் .....

மலரும் நினைவுகள் :- மலரும் நினைவுகள் :- "கூந்தல் கருப்பு, குங்குமம் சிகப்பு " இந்த பாட்டை கேட்டாலே எனக்கு அந்த நாள் (பள்ளிக்கூட நாட்கள்) ஞாபகங்கள்.... ,

நானும் எனது நண்பனும் இப்படித்தான் எங்கு சென்றாலும் இணைந்தே செல்வோம்" அப்போது நாங்கள்(1976) உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது நடந்த இந்த இனிமையான சம்பவம்... 

நானும் எனது நண்பன் சுந்தர வடிவேல் இருவரும் காலையில் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் 6,7 பெண்கள் (மாணவிகள்) வழியை மறைத்தபடி... பேசியபடியே நடந்துவர.. எங்களுக்கு பின்னால் வரவும் சங்கடம் (பெண்கள் பின்னாடி போறாங்க பார் என்பார்கள்) முந்தி செல்லவும் முடியாமல் தர்மசங்கடமாக இருந்தது.....

ஒரு யோசனை தோன்ற சட்டேன்று...அங்கபாருடா.. அந்தப்பெண்ணின் தலை "சவுரிமுடி" பின்னல் பிரிந்துவிட்டது".... என கூற.  

எல்லா பெண்களும் தனது பின்னல் முடியை தடவிப்பார்க்க ... 

அதற்குள் என் நண்பன் அடடா எல்லாரும் "சவுரிமுடி" வச்சிருக்காங்க போளிருக்குடா என கூற... 

எல்லா பெண்களும் வேக்கப்பட்டுக்கொண்டே ஓர் ஓரமாக சென்று வழிவிட, 

நங்கள் வழி கிடைத்த சந்தோசத்தில் வேகமாக அவர்களை கடந்து முன்னே சென்றோம்... 

அதுமட்டுமின்றி அதன்பிறகு அந்த பெண்களின் கூட்டத்தை கண்டாலே, எனது நண்பன் இந்த பாடலை சத்தமாக பாடி அவர்களை வேக்கப்படவைப்பதை நானும் ரசித்திருக்கிறேன்... 

இன்றும் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அந்த நினைவுகள் நெஞ்சில் நீங்க நினைவுகள்.... 

பாடல் கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு...
திரைப்படம்:- பரிசு (1969)
கே வி மஹாதேவன் அவர்களின் இசையில்...
பாடியவர்  TMS மற்றும் P சுசீலா அவர்கள் 
காட்சியில் பாடியவர்கள் மக்கள் திலகம் எம் ஜி ராமச்சந்திரன் மற்றும் சாவித்திரி ஜோடி. 

வாங்க நாமும் அந்தப் பாடலை கேட்கலாம்.....

https://youtu.be/96RTkEvCiFw

நன்றிகளுடன் கோகி -ரேடியோ மார்கோனி.

"நான் அவரின் தீவிர ரசிகன் என்பதில் தற்போதுதான் இன்னும் அதிக பெருமைபடுகிறேன்"

மலரும் நினைவுகள்:- நான் எப்படி நடிகர் சிவகுமார் அவர்களின் ரசிகனானேன்? 

....அப்போது நான் ஏழாம் வகுப்பில் படித்துகொண்டிருந்தபோது நடந்த நிகழ்வு அது ... 

எனது வகுப்பில் படித்துகொண்டிருந்த மாணவர்கள் (மாணவிகளும் ) எம் ஜி ஆர் மற்றும் சிவாஜிகணேசன் அவர்களின் ரசிகர்களாக இருந்தார்கள், அத்துடன் அவர்களிடம் இருந்த வண்ண வண்ண படங்களை என்னிடம் காட்டி, என்னிடம் அது போல் இல்லை என்பதால் என்னை கேலி செய்துகொண்டிருந்தர்கள். ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் நான் நடிகர் சிவகுமார்அவர்களின் ரசிகன் என சொல்லிவிட்டேன்..... 

..சற்று சப்தமாக கத்திவிட்டேன் போலிருக்கு, வகுப்பில் இருந்த அணைத்து மாணவ மாணவிகள் (என்வகுப்பில் மொத்தம் அறுபத்தி ஏழு மாணவ மாணவிகள் ) என்பக்கம் திரும்ப... அன்று ஆரம்பித்ததுதான், ஒவ்வொரு முறையும் நடிகர் சிவகுமார் அவர்களின் திரைப்படம் திரை இடப்படும்போதேல்லாம் வகுப்பில் நாந்தான் "ஹீரோ". உங்கள் ஆளு நடிகர் சிவகுமார் இந்த படத்தில் 'சூப்பர்' அல்லது 'சொதப்பிவிட்டார்' என பல்வேறு விமரிசனங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கும்" 

..அன்று ஆரம்பித்ததுதான் இன்றும் எனது மனைவியும் குழந்தைகளும் நடிகர் சிவகுமார் அவர்களின் படமோ பாட்டோ சின்னத்திரையில் வந்தாலேபோதும், என் பக்கம் ஒரு பார்வை பார்க்காமல் இருந்ததில்லை... 
https://youtu.be/X2Ur779LsaE

..அப்படிப்பட்ட திரைப்பட நடிகர் சிவகுமார் அவர்களா?, இன்று மிகபெரிய இலக்கியவாதியாக மேடைகளில் கலக்குகிறார்... அவரின் இலக்கிய பேச்சுக்களை கேட்கும்போது என் கண்ணை என்னால் நம்பமுடியவில்லை... "நான் அவரின் தீவிர ரசிகன் என்பதில் தற்போதுதான் இன்னும் அதிக பெருமைபடுகிறேன்"

....நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி .

Tuesday, November 18, 2014

...."அந்த தொழிற்ச்சாலையில் மாத சம்பளம் தருவதே மிகவும் கடினமான நிலையில் இருந்தது. இந்த நிலையில்தான் கடன் வழங்கிய நிதி நிறுவனத்தின் நேரடி ஆய்வு அன்று!....."

# என் குறிப்பேட்டின் வாடாமலர் பக்கங்கள்;- "ஆடு பாம்பே விளையாடு பாம்பே - அடிபட்ட பாம்பு சார் அது???? ".....

அப்போது Dec-1989, பல மருத்துவமனைக்கு அறுவைசிகிச்சைக்கு பஞ்சு வழங்கும் ஒரு பிரபல பஞ்சு (Cotton MIlls)தொழிற்ச்சாலை அது,  அதன் அதிபரும் என் அப்பாவும் நண்பர்கள் (ஆலையின் அதிபர் அதிகம் படிக்காதவர்- தாத்தாவின் காலம் முதல் வணிக வழியில் குடும்ப நண்பர்) அவரின் பஞ்சு ஆலைக்காக கடன் தந்திருந்த, வங்கிக் கடன் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் வர இருப்பதால் உதவுமாறு கேட்டுக்கொண்டார். உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்த அப்பாவால், அலைய முடியாமல் இருந்த சமயம் அது, எனக்கு சில அறிவுரைகளை கூறி இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு பஞ்சு ஆலைக்கு சென்று உதவும் படி கேட்டுக்கொண்டார்,

கடன் பெற்று அதில் ஓடிக்கொண்டிருந்த பஞ்சு ஆலையில், தயாரித்த பொருட்களும் கடனில் விற்கப்பட்டு, ...."அந்த தொழிற்ச்சாலையில் மாத சம்பளம் தருவதே மிகவும் கடினமான நிலையில் இருந்தது. இந்த நிலையில்தான் கடன் வழங்கிய வாங்கி நிதி நிறுவனத்தின் நேரடி ஆய்வு (Bank Audit) அன்று!....." , அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து ஒரு வழியாக தயார்செய்தோம்..... முதல்நாள் ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி "நான்கு-4" வாட்ட சாட்டமான ஆட்களை "கையில் தடியுடன்", தயாரித்த பொருட்கள் வைக்கும் காலியான இருப்புக் கிடங்கின் (GODOWN) கதவை மூடி அதன் அருகே நிற்க வைத்தோம், ...தொழிற்ச்சாலையின் தயாரிப்புக்கூடத்தின் உள்ளிருந்த  மிகப்பெரிய காலியான தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி, மேற்ப்பரப்பில் செய்தித்தாள்களை பரப்பி, அதன் மீது சிறிதளவே இருந்த பஞ்சுகளை (Cotton) தூவி வைத்தோம். அதாவது தொட்டி நிறைய தயாரிப்பிற்கான பஞ்சு இருப்பில் (RAW COTTON STOCK) உள்ளது என்பதாக காண்பிப்பதற்கு.

குறிப்பிட்ட நேரப்படி இரண்டு வங்கிக்கடன் அதிகாரிகள் வந்தபோது, முதலில் (முன்பே சரி செய்யப்பட்ட) இருப்பு (STOCK-REGISTERS) புத்தகங்களை சோதனை செய்துவிட்டு , கிடங்கிற்கு (GODOWN) சென்று ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்றார்கள், அவர்களை அழைத்துக்கொண்டு கிடங்கு (GODOWN) இருக்குமிடம் சென்றோம். ஏற்கனவே பேசிவைத்தபடி பணியாட்கள் கையில் தடியுடன், நன்றாகவே நடித்தார்கள் " சார் கிட்ட வராதீங்க ...மிகப்பெரிய நல்ல பாம்பு ஒன்றை அடித்துவிட்டோம் மற்றொன்று தப்பித்து கிடங்கினுள் (GODOWN) நுழைந்துவிட்டது, அடிபட்ட பாம்பு சார்..!!!! " என்றார்கள்.... 

அவ்வளவுதான் ஆய்வுக்கு வந்தவர்கள் சற்று பயத்துடன் "GODOWN-கிடங்கின் உள்ளே என்ன பொருள் உள்ளது என்பதை சொன்னாலே போதும், வெளியில் இருந்தே குறித்துக்கொண்டு சென்றுவிடுகிறோம் என்றார்கள்." (பாம்பு என்றால் பயப்படாமல் இருப்பார்களா?) அதன் பிறகு தொழிற்ச்சாலையின் தயாரிப்புக்கூடத்தின் உள்ளிருந்த தொட்டி நிறைய தயாரிப்பதர்க்காக இருப்பு ஏற்ப்படுத்தி வைத்திருந்த "உற்பத்திக்கான பஞ்சு -RAW COTTON"-STOCK இருப்புக்களையும் குறித்துக்கொண்டு, பஞ்சு ஆலை சிறப்பாக செயல்படுகிறது என்று கூறியதோடு, அதிகாரிகளுக்கான தொழிலக பதிவேட்டுப் புத்தகத்தில் விவரங்களை எழுதி கையப்பமிட்டுச் சென்றனர். 

ஒருவழியாக ஏதேதோ செய்து அன்று அந்த பஞ்சு தொழிற்ச்சாலை அதிகாரிகளின் ஆய்வுகளில் தப்பித்துக்கொன்டாலும் பின்னாளில் நேர்ந்த அண்ணன் தம்பி சொத்துத்தகராறு ஒன்றில், ஒரேடியாக மூடுவிழா கண்டது என் மனதிற்கு வருத்தமாக இருந்தது.

"அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே. .." "https://youtu.be/pvp4dwUeUy0"

நன்றிகளுடன் கோகி-என்கிற கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி.


சில/ பல நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில்..

நிர்வாக செலவுகளை குறைக்கும் நோக்கிலும், வளர்ச்சிக்கான புதிய வழிவகைகளை ஊக்குவிக்கும் பொருட்டும் சில/ பல நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்வது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், வேலை செய்து சம்பாதிப்பது என்பது நிலைத்தன்மையற்றதாகிவிட்டது. ஆகவே (எதிர்காலச் சந்ததிகளுக்கு) எதிர்வரும் காலத்தில் வேலை செய்து சம்பாதிக்கும் திருமணமாகாத இளையவர்களுக்கு,  திருமண வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகிப் போகும் அவல நிலை உள்ளது. ஆகவே இனி,  மேல்நிலை அல்லது பட்டப் படிப்பை பயிலும் மாணவர்கள் வேலைபார்த்து சம்பாதிக்கும் கல்வியை கற்காமல், சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கும் தொழில்நுட்பக் கல்வியை கற்றுத்தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது. 

அப்படிப்பட்ட கல்விகள் எவை எவை? மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பக்கல்வி,  விவசாயம், பொறியியல், கட்டிடக் கட்டுமானம்,  அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி, ஆலோசகர் -பொறியியல் அல்லது வணிகவியல் மேலும் சட்ட ஆலோசகர் போன்ற படிப்புகளை படிப்பவர்கள் பிறரிடம் வேலைபார்த்து சம்பாதிக்காமல், தனது காலில் சுயமாக நின்று தொழில் செய்து சம்பாதிக்கும் திறமையை பெறலாம் அதன்மூலம் சிறப்பான ஒரு எதிர்காலம் அமையுமாறு  திட்டமிட்டு செயல்படும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படாமல் வாழமுடியும்.
    
ஆகவே இன்றைய இளைய மாணவர்களே! தொழில்நுட்பக் கல்வி பயில கனவு காணுங்கள், அந்த கனவுகளை நினைவுகளாக மாற்றுங்கள். உங்களின் அனுபவக்கல்வியை சுயதொழிலாக செய்து வருமானம் ஈட்டும் வகையில், நீங்கள் உங்களின் சொந்தக்கால்களில் நிற்க்கப்பழகுங்கள். வாழ்த்துக்களுடன், உங்களோடு உறுதுணையாக  ..(ஆலோசகர்-கோகி.) 

Thursday, November 13, 2014

ஆக்ரோஷமான இரட்டிப்பு வியாபார யுக்தி விருது-2002.

#எனக்குமட்டும் யோசிக்க இன்னும் சிறிது நேரம் தாருங்கள், மேலும் சிறப்பாக செய்யமுடியும் என்றேன் "அதை சரியாக புறிந்துகொள்ளாத நிறுவனத்தின் உரிமையாளர் "வேலையை விட்டுவிட்டு உன் வீட்டிற்கு சென்று உட்கார்ந்து யோசி என்றார்" எனக்கு வந்த கோபத்தை செயலில் காட்டினேன்... அடுத்த சில நாட்களிலேயே அவருக்கு புரியும் படி ஒரு நாளின் 24மணி நேர உற்பத்தியை, அதே 24மணி நேரத்தில் (ஒருநாளின்) 32மணிநேர உற்பத்தியாக்கி(அதாவது ஒவொரு 8 மணி நேரத்தில், 10 மணி நேர உற்பத்தி = 2 மணி நேர கூடுதல் உற்பத்தி 3shift x 8+2 =30Hrs)-லாபத்தை செயலில் செய்து காட்டியபோது அசந்த்துபோனார்கள்" நான் அவர்களிடம் சொன்னது நிறுவனம் எனக்கு சம்பளம் தரவில்லை நான்தான் நிறுவனத்திற்கு தருகிறேன் என்றேன், அதோடு நான்மட்டுமில்லாமல் என்னுடைய குழுவினரும் கூட அப்படித்தான் என்றேன் . "நேரத்தை மிச்சப்படுத்துவதுடன்,  இரட்டிப்பாக்குவது எப்படி என்று சிந்தியுங்கள் பல உண்மைகள் உங்களுக்கும் புரியும்" கோகி....  “Received an Award -Double the volume of Business-2002”  ஆக்ரோஷமான இரட்டிப்பு வியாபார  யுக்தி விருது-2002 கோகி....

காக்கா பாட்டியிடமிருந்து வடையை திருடவில்லை....!!!!

காக்கா பாட்டியிடமிருந்து வடையை திருடவில்லை. பாட்டிதான் தினமும் தனது வடை வியாபாரத்தின் முதல் வடையை காக்கைக்கு வைப்பது வழக்கம். ஆகவே அந்த கதையில் திருட்டு என்பது இல்லை ஆனால் தந்திர நரிதான் ஏமாற்றுகிறது என்றும்....எனவே ஏமாறுவதுதான் தவறு என்று கதை கருத்து கூறுகிறது...... 

பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியும் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை

ஊருக்கு வெளியே கடையிருக்கு
கடையில வெங்காய வடையிருக்கு
கடையில வடைய திருடிக்கிச்சாம்
காக்கா மரத்திலே குந்திக்கிச்சாம்

காக்கா மூக்கில வடையிருக்க
குள்ள நரியுமே பாத்திடுச்சாம்
லேசா வடையை வாங்கிடவே
நரியொரு தந்திரம் பண்ணிக்கிச்சாம்

காக்கா பாட்டு பாடச்சொல்லி
குள்ள நரியுமே கேட்டுக்கிச்சாம்
வாய திறந்து காக்காபாட
வடையும் கீழே விழுந்திடுச்சாம்

விழுந்தத நரியும் கௌவிக்கிச்சாம்
வாயில போட்டுத் தின்னுடிச்சாம்

பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியும் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !..வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !
வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !


பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூ...ர...மோ.... அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."
அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.
அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !
வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !
 நன்றி .... நட்புடன் கோகி

அது 2004 பிப்ரவரி மாதம் எனது மகள்,மகன் இருவரும்.....

அது 2004 பிப்ரவரி மாதம் எனது மகள்,மகன் இருவரும் ஒரே மாதத்தில் பிறந்தநாள் வரும், 4நாட்கள் வித்தியாசத்தில் பிறந்தவர்கள் (24 & 28 பிப்)ஆகவே இருவருக்கும் சேர்ந்து ஒரே நாளில் (24 அல்லது 28 இல் ) பிறந்தநாள் கொண்டாட்டம் நடப்பது வழக்கம். இரண்டு வாரத்திற்கு முன்பிருந்தே அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது நான் என் மகன் மற்றும் மகளிடம் உங்களுக்கு பரிசுப்பொருட்கள் வருவது மகிழ்ச்சிதானே, என்று கேட்க அவர்களிருவரும் ஆமாம் என்றார்கள்.  இந்த வருடம் அதை சற்று மாற்றி பரிசுப்பொருட்களை நீங்கள் மற்றவருக்கு வழங்கினால் எப்படி   இருக்கும்? என்று கூற... நன்றாக இருக்கிறதே என்ன செய்யலாம் என்று இருவரும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்..., இடையில் புகுந்த நான் நிறைய பேனா பென்சில் நோட்டு புத்தகம் போன்ற பொருட்களை வாங்கி எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் அரசு ஆரம்ப பள்ளிக்கு சென்று ஏழை மாணவ மாணவியருக்கு அந்த பொருட்களை வழங்கினால் எப்படி என்று கேட்க, அதுவே சரி என்று முடிவானது. எனது மகளும் மகனும் அன்றிலிருந்தே சிறுக சிறுக பொருட்களை வாங்கி சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள், 


அருகே இருந்த பள்ளியைப்பற்றி விசாரித்தபோது 500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் படிப்பதாக தெரிந்தது, எங்கே நம்முடைய பரிசுப்பொருட்கள் மிகவும் குறைவாக போதுமான அளவில் இருக்காதோ என்று நினைத்துக்கொண்டிருந்தபோது நண்பர்களிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்தேன். 



சரியாக இரண்டு நாட்கள் இருந்தபோது ஒரு லாரி நிறைய பள்ளிக்கூட மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களுடன் புத்தகப்பை உட்பட வீட்டின் முன்பு வந்திறங்கியதைப் பார்த்ததும் எங்கள் அனைவருக்கும் ஆச்சிரியமாகிவிட்டது. இரண்டு முன்னணி வர்த்தக நிறுவனத்திலிருந்து வந்திருந்த அந்த பரிசுப் பொருட்களுடன் ஒரு கடிதமும் இருந்தது. அந்தக்கடிதத்தில் உங்கள் குழந்தைகள் அவர்களின் பிறந்தநாளை கொண்டாட வகுத்த திட்டங்கள் எங்களின் நிறுவனத்தை மிகவும் கவர்ந்தது, ஆவகே எங்களின் நிறுவனம் அவர்களை பாராட்டி வாழ்த்துவதோடு, அவர்கள் செய்யும் சேவையில் இந்த பரிசுப்பொருட்களையும் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டிருந்தது. அதற்க்கு அடுத்த ஆண்டிலிருந்து இரண்டு நிறுவனம் என்பது மாறி 4,5 என நிறுவனக்கள் போட்டி போட்டுக்கொண்டு அவகளின் விளம்பரத்திர்க்காகவும் பரிசுகளை குவிக்கத்தொடகினார்கள்..... எது எப்படியோ சிறு துளி பேரு வெள்ளம் போல ஒரு சிறிய எண்ணம் மிகப்பிரிய வரவேற்ப்பை பெற்றதோடு ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படுமாறு அமைந்தது மகிழ்ச்சியான ஒன்று. இப்படிக்கு, நன்றிகளுடன்  கோகி.   

காதல் பெருங்காயத்தை காகிதத்தில் மூடி மறைக்க முடியாது ???

# காதல் பெருங்காயத்தை காகிதத்தில்  மூடி மறைக்க முடியாது !!!

# மனதில் ஏற்ப்பட்ட ஊமைக்காயம்- எப்போதும் 'கூட்டுப் -பெருங்காயம்' போல காட்டிக்கொடுக்காது .....

# பெருங்கயத்தை "கத்தரிக்காய்" கக்கிவிடும்.

# பெருங்காயம் வாயுத்தொல்லையை நீக்கிவிடும்

# பெருங்கயமும் தயிரும் ருசியை தூக்கிவிடும்.

# பெருங்காயம் வாய் துர்நாற்றத்தைப் போக்கிவிடும்.

"“காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” . http://youtu.be/HS_O1JkstfU

அப்போ எனக்கு 12 வயது (1976)

அப்போ எனக்கு 12 வயது (1976), பள்ளியில் சாரண சாரணியர் பிரிவில் சேர அப்பாவிடம் அடம்பிடித்து மறுநாளே அதற்க்கான உடைகள், மற்றும் (SHOES-ஷூ-பாத உறை கவச அணி- அகராதியில் தேடி கண்டுபிடித்தது) போன்றவைகள் அணிந்துகொண்டு பள்ளிக்கு சென்று ஒரு கலக்கு கலக்கியது ஞபகம்..... அதற்க்கு "போர்டர் கந்தன்" திரைப்படமும் பார்த்ததும் ஒரு முக்கியக்காரணம்."நல்ல நல்ல சேவை நாட்டுக்கு தேவை நாம் இதை நாடுதல் நன்றே"http://youtu.be/D4sb1X2EqGQ


பள்ளி மாணவனாக இருந்தபோது "போர்டர் கந்தன்" திரைப்படம் பார்த்தது மனதில் வேறுஒரு இனம்புரியா வருத்தத்தையும் தந்தது, இந்த பாடலில் வரும் காட்சிகளை அப்போதைய "சென்னை மூர் மார்கெட்" நான் அடிக்கடி பழைய புத்தகங்கள் வாங்க அப்பாவுடன் செல்லும் வழக்கமான பகுதியில் இரவு நேரங்களில் நான் நேரில் பார்த்த காட்சிகள் தான் இந்த பாடலில் பார்த்ததாக ஞபகம், அந்தக்கால "மூர் மார்கெட்" பகுதி தற்போது சென்னை சென்ட்ரல் புறநகர் இரயில் நிலையமாக உள்ளது.http://youtu.be/FS_Fs5PXRCo

நிலநடுக்கங்கள் காரணமாக "புவியின் மேற்ப்பரப்பில் அமைந்துள்ள பாரைத்தட்டுகள் நகர்கின்றன!!!!!!

தினமலர் செய்தி 11-11-2014. "அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.7 என்ற அளவில் இருந்த இந்த நிலநடுக்கத்தின் மையம் அந்தமான் கடலில் இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் இல்லை"  நான்  தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஆசியாவின் பல்வேறு பகுதியில் ஏற்ப்படும் நிலநடுக்கங்களை பதிவு செய்து ஆராய்ந்து வருகிறேன். இன்னும் 2 அல்லது 4 வாரங்களுக்குள் இந்தியாவின் வடபகுதி அல்லது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு  சென்ற ஆண்டு (ஏப்பரல் 2013) நான் எனது இனைய பக்கத்தில் குறிப்பிட்டிருந்த ஒன்றை திரும்பவும் இப்போது பதிவு செய்கிறேன்....... ....நிலநடுக்கங்கள் காரணமாக "புவியின் மேற்ப்பரப்பில் அமைந்துள்ள பாரைத்தட்டுகள் நகர்கின்றன என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது".  சென்ற இரண்டு வாரங்களாக உலகின் பல பகுதிகளில் நடந்த பூமி அதிர்வுகள் மேலும் அதை உறுதிபடுத்தும்படி அமைந்துள்ளது. ஆசிய கண்டத்தின் பூமத்தியரேகைக்கு மேற்பகுதி மற்றும் கீழ் பகுதி என பல பாறை அடுக்குகளால் ஆனது என்றும், இதில் எந்த ஒரு பாறை தட்டும் நகரும்போது அதனால் ஏற்ப்படும் இடைவெளியை மற்றொரு பாறை தட்டு நகர்ந்து சரிசெய்யும் என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜப்பானில் நில அதிர்வு உணரப்பட்டதும் அடுத்த சில வாரங்களில் ஆசிய பாறைத் தட்டுகளின் கிழக்கு பகுதியான இந்தோனேசியா அல்லது மேற்கு முனையான ஆப்கனிஸ்தான் மற்றும் வளைகுடா பாரைத்தட்டுகள் பகுதியில் எதிரொலிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, நேற்றைய ஈரான் பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட கடுமையான நில அதிர்வும் இன்று விடியற்காலையில் ஏற்ப்பட்ட இந்தோனேசியா நில அதிர்வும் அதை உறுதிப்படுத்தின. இப்படிக்கு கோகி  

Friday, November 7, 2014

எனக்கு பிடித்த ஒரு சின்ன கற்பனை.....

ஒரு சின்ன கற்பனை.

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.
பரிசு என்னவென்றால் -
ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -
1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற முடியாது.
3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு
4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக் கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய் வரவு வைக்கப்படும்
5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.
6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவுதான். வங்கிக் கணக்கு மூடப்படும், மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.
இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?
உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள் இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம்
இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் - அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?
உண்மையில் இது ஆட்டமில்லை 

- நிதர்சனமான உண்மை

ஆம்

நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை. அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம். 
ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும் 
போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக 
86400வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.
இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை. அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான். நேற்றைய பொழுது போனது போனது தான். ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில் 86400நொடிகள். எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.

அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா? 
இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் 
ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க 
மாட்டோமா?
காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும். 
எனவே உங்களைப் பொன் போல பேணுங்கள் 
சந்தோஷமாக இருங்கள்
சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்...... 

வாய்ப்புகள் மட்டுமே வாழ்க்கையை வளமாக்குவதில்லை,

வாய்ப்புகள் மட்டுமே வாழ்க்கையை வளமாக்குவதில்லை, அதற்க்கேற்ப்ப மாறத்தயாராக இருந்தால் மட்டுமே,.......அப்போதும்  வாய்ப்புகள்- வளமான வாழ்க்கைக்குரிய வழியைமட்டுமே காட்டும். http://youtu.be/uyNrqgjBaQQ

" வெளிநாட்டு மதங்கள எவ்வள்வு தொகை கொடுத்தாலும் மாறத்தயாராக இல்லை!!! " http://youtu.be/OiAD_5iGSOA
ஏட்டில் எழுதிவைத்தேன் எழுதியதை சொல்லிவைத்தேன்- "உலகளவில், பல எழுத்தாளர்களின் நிலை இன்னமும் வறுமைக்கோட்டின் கீழ்தான் உள்ளது - தினகரன் வசந்தம்"  

வாசகர்கள் அதிகரித்தால் மட்டுமே இந்த நிலை மாறும்..... வாழ்க வாசகர் மன்றங்கள், வாசகர் வட்டங்கள், வாசகர் பேரவைகள் ....http://youtu.be/arPkgsUyjR0 

"எனது மே- தின வானொலி தொகுப்பிலிருந்து ஒரு பகுதி"

"எனது மே- தின வானொலி தொகுப்பிலிருந்து ஒரு பகுதி" ஹெர்குலஸ்  என்பவர், கிரேக்க கதைகளில் வரும்,நம்ம ஊர் பீமன் மாதிரி. மிகுந்த பலசாலி. இவர் ஒரு முறை உலகத்தின் கோடிக்கு யாத்திரை செல்கிறார்.அப்போது அட்லஸ் என்பவர் தான், உலகத்தை தன் தோளில் சுமந்து கொண்டிருந்ததாய் புராணம். ரொம்ப நாளா தூக்கி வச்சிருந்ததாலே,அவருக்கு தோள் நோவு கண்டுடுச்சு. இந்த சுமையை தூக்க கூடிய ஆள் யாரும், அந்த நாளிலே இல்லை. ஹெர்குலசை பார்த்தவுடன், அட்லஸ் ரொம்ப சந்தோஷப் பட்டார்.கிட்ட வந்தவுடன் "அப்பா என் சுமையை கொஞ்சம் தாங்கிக்கோ", இயற்கை உபாதையை முடிச்சிட்டு வர்றேன்னார். ஹெர்குலஸ் உலகத்தை தூக்கிக் கொள்ள அட்லஸ் "ஜூட்", விட்டார். அட்லாசின் நோக்கம் விளங்கிக் கொண்ட ஹெர்குலஸ், "அண்ணே, ஒரு நிமிடம், "இங்கே வாங்க" அப்படின்னு கூப்பிட்டார். "என்ன ?" என்று, எட்டியே நின்று கேட்ட அட்லாசிடம், "முண்டாசை சரியாகக் கட்டிகிட்டேன்னா, எவ்வளவு நேரம் வேணுமின்னாலும் என்னாலே தூக்க முடியும், நீங்க பொறுமையா திரும்பி வரலாம்", இன்னு சொல்ல, அட்லசும் உடனே, உலகத்தை மீண்டும் தோளில் சுமக்க. ஹெர்குலஸ் "எஸ்கேப்", ஆயிட்டார்.

எதுக்கு இந்த கதையின்னா "உலகத்தில் யாரும் சுமையை தூக்க விரும்பறதில்லே. எப்போடா இறக்கி வைப்போம்", என்பது தான் யதார்த்தம். ஒரு நிறுவனத்தின் தலைவருக்கோ, முதலாளிக்கோ வேலைப் பளுக்கள், நிறைய பொறுப்புகள். இந்த பொறுப்புகளை எடுத்துக் கொள்ள, நாம் தயாரானால், குறிப்பு அறிந்து முன் கூட்டியே செயல்பட்டால்,உங்கள் முன்னேற்றத்தின் எல்லாப் படிகளிலும் உறு துணையாய் இருப்பார்", ஆகவே சுமை தாங்கியாக நீங்கள் ஒருவருடைய பளுவை பகிர்ந்தால்,அவர் மற்ற வேலைகளை முடிக்க, அவருக்கு அவகாசம் கிடைக்கும் அதன்மூலம் நீங்களும் பயன்பெறலாம். அதோடு 
"நாணயம், நம்பிக்கை இரண்டையும் பயன் படுத்தி இன்னமும் முன்னேறலாம்", "சுமைதாங்கி சாய்ந்தால்..."  http://youtu.be/NqIwYf-gbV8

FREE JOBS EARN FROM HOME