ஒரு ஆத்துமாவின் சுய கதை என்கிற புத்தகம் படித்தபோது, அந்த ஆத்துமா மறுபிறவியாக ஒரு குழந்தையாக பிறந்ததுவரை நடந்த நிகழ்வுகள் என்பது சரியான முடிவில்லை. அருமையான சிந்தனை, சிந்தனையின் தொடக்கத்தில் இருந்த தெளிவு முடிவில் இல்லை ... அதாவது "நான்கு சுவற்றுக்கு நடுவில் யாரும் இல்லை என்று மனிதன் நினைப்பது இயல்பு, ஆனால் நம்மைசுற்றி ஏராளமான ஆன்மாக்கள் எப்பொதும் அனைத்து இடங்களிலும் சுற்றிக்கொண்டு இருப்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மை. எனக்கும் அப்படிப்பட்ட எண்ணம் 12 வயதுவரை இருந்தது, அரவிந்தர் ஆசிரமத்தின் பிரதிநிதியான ஒரு குருவின் ஆசியில் பெற்ற ஆழ்நிலை தியானம் பயின்ற இளம் கன்று பயம் அறியாது என்பதற்கிணங்க, சவாசனத்தில்-ஆழ்நிலை தியானத்தில் இறங்கியபோது நடந்த நிகழ்வு அது(சவாசனத்தில்-அதாவது தரையில் படுத்தநிலையில் ஆழ்நிலை தியானம் செய்யக்கூடாது என்பது நியதி. உட்கார்ந்த நிலையில் மட்டுமே தியானம் செய்யவேண்டும் அதுவும் 20 அல்லது 30 நிமிடங்கள் மட்டுமே தியானத்தில் இருக்கலாம்) அப்படி தியானத்தில் இறங்கியபோதுமூன்று முறை என் உடலை நானே பார்த்த அனுபவம், என்னை சுற்றி ஏன் இப்படி ஒரு கூட்டம், கூச்சல், குழப்பம் தெளிவில்லாமல் ஒரு பயம் எனது கால்களை கால்பந்து விளையாடுவதுபோல எட்டி உதைத்து..... விழித்துக்கொண்டேன்... தூக்கத்தில் இருந்திருப்போமா?... தெரியவில்லை... என்ன நடந்தது தெரிந்துகொள்ள மேலும் ஒரு முயற்சி என மூன்று முறை... அதற்குமேல் ஆராய்வதற்கு நேரமில்லாமல் ஓடி ஓடி உழைத்து குடும்ப பொறுப்பு...வயதாகிப்போனதால் மனதுக்கிருந்த தைரியமும், சக்தியும் உடலுக்கு இல்லை... ஆனால் ஒன்று நிச்சயம் ஒவொருவரின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட உணர்வுகளின் நினைவுகள் ஆத்மாக்களுக்கு உண்டு ஆனால் ஆத்துமாக்கள் மீண்டும் பிறவி எடுக்கும்போது அவர்களின் புனர் ஜென்ம நினைவுகள் மங்கிவிடுகிறது அதாவது மறந்து போகும், ஏதோ ஒரு சிலர் மட்டும் புனர் ஜென்ம நினைவுகளை பெற்றிருக்கிறார்கள். நன்றிகளுடன் கோகி என்கிற கோபாலகிருஷ்ணன் ரேடியோ மார்கோனி.
No comments:
Post a Comment