FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Tuesday, July 19, 2016

ஆங்கில இலக்கண வகுப்பில், தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள்...

ஆங்கில இலக்கண வகுப்பில், தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள்...
தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களைப்பற்றி  (அவரின் வாழ்க்கை காலம் 1946 முதல், செப்டம்பர் 16, 2009வரை) இவர் என்றும் நம் மனதில் நீங்காப் புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார். அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். பல சிறுகதைகளையும் எழுதியிருந்தார்.


அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ. சுவாமிநாதன் அவர்கள்  சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். வேளாண்மைப் பட்டதாரியான இவர் நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் நிலையான இடம் பிடித்தவர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர்....

நான் படித்த அதே பள்ளியில், 2 வருடம் பகுதிநேர ஆசிரியராக பணியாற்றிய நாட்கள் எனக்கு என்றும் மறக்கமுடியாதவை, அப்போதெல்லாம் (1980)  கிராமப் பகுதியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள், 10ம் வகுப்புக்கு செல்லாமலே படிப்பை நிறுத்திவிடுவார்கள், காரணம் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறுவது கடினம் என்கிற ஒரு எண்ணம் பரவலாக இருந்தது. 

அந்தக்கால கட்டத்தில்,  நிரந்தரம் செய்யப்படாத, தற்காலிக பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியராக  பணியாற்றிக்கொண்டிருந்த நானும், மேலும் சில அரசுப்பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு அருகில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று... தேர்தல் கூட்டத்தில் பேசுவதைப் போல மேடையில் பிரசாரம் செய்வோம்.... கிராமத்திற்கு சென்றதும் கிராம மக்களை கவருவதற்கு முதலில்  பாடல் ஒலிக்கும்:- "பாடசாலை செல்லவேண்டும் பாப்பா எழுந்திரு.." என்கிற பாடல் டி ஆர் பாப்பா அவர்கள் இசையமைத்திருந்த பாடல்... அப்போதெல்லாம் மிகவும் பிரபலமான வானொலிப் பாட்டு இது ......
பிறகு ஒவ்வொரு ஆசிரியர்களாக கிராமத்து மக்களுக்கு எளிமையாக புரியுமாறு எடுத்துக்கூறி பேசவேண்டும்... அப்போது நான் கூறியது "A, B, C, D...." கூட சரியாக சொல்லத் தெரியாதவர்களும் 10ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் பாஸ் மார்க் எடுக்கலாம், அதற்க்கான எளிமையான வழியில் பாடம் சொல்லிக்கொடுத்து உங்களின் மகன்/மகளின் வெற்றிக்கு உறுதியளிக்கிறோம்..... என்று,.....எதோ டுடோரியல் காலேஜ் விளம்பரம் போல, நாங்கள் பணியாற்றிய அரசுப்  பள்ளியின் 10ம் வகுப்பிற்கு ஆள் சேர்க்கவேண்டிய நிலை இருந்தது....... 

(பின் குறிப்பு:-அன்று மேடையில் பேசிய, என்னுடன் பணியாற்றிய பகுதிநேர ஆசிரியர் ஒருவர் தற்போது ஒரு முக்கிய கட்சியின் மாவட்ட செயலாளராக இருக்கிறார். ஆசிரியர் பணியைவிட அரசியல்பணி எளிமனானது என்கிற முடிவுக்கு வந்ததே... அன்று நாங்கள் செய்த பிரசாரத்தின் விளைவு என்றானது......  நல்லவேளை எனது தொழில் படிப்பும், மனசும் அதற்க்கு இடம்கொடுக்கவில்லை. ஆகவே நான் பல்வேறு திட்டப் பணியில் பல ஊர், உலகம் என்று இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கிறேன்).
கிராமம் கிராமமாக அலைந்து பேசியதற்கு பெற்றோர்களைவிட மாணவர்களிடம் நல்ல பலன் இருந்தது. பல மாணவ மாணவிகள் 9ம் வகுப்போடு நின்றுவிடாமல் 10ம் வகுப்பு படிப்பைத் தொடர்ந்தார்கள். அப்படி படிப்பைத் தொடர்ந்த பல மாணவர்களுக்கு A, B, C, D.. கூட சரியாக சொல்லத் தெரியாது என 90% மாணவர்கள் இருந்தது தெரிந்தபோது எனக்கு சற்று மனதுக்கு கவலை வந்தாலும்.... தொழிற்பாடப் பிரிவின், "பொது எந்திர தொழில் கல்வி" (General Machinist- Vocational Education)- பகுதிநேர ஆசிரியராக இருந்த எனக்கு, அதை ஒரு சவாலாக எடுத்து ஆங்கில ஆசிரியராக மாறிய அந்த நாட்களில்.... எனக்கு புது உற்சாகம் தந்தவர் "இன்று ஒரு தகவல்" என்கிற வானொலி நிகழ்ச்சியில் புகழ் பெற்ற தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களை மறக்கமுடியாது. 

அவரின் வானொலி  நிகழ்ச்சியின் பல தகவல்கள், கதைகள், சம்பவங்களை, என பலவற்றை மாணவர்களுக்கு எடுத்துக்கூறி மாணவர்களின் ஆங்கிலப்பாடத்தின் பயத்தை போக்கி அவர்களை ஊக்கப்படுத்தி வெற்றியடையச் செய்தோம்.... 

(பின் குறிப்பு:- A,B,C,D....யிலிருந்து ஆரம்பித்து ... ஒரு சில திரும்ப திரும்ப கேட்கும் கேள்வி பதில்களை தினமும் இரண்டு வரி என்று மனப்பாடம் செய்யவைத்து... பல மாணவர்களை ஒருவழியாக 10ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில்  35 to 38... என பாஸ் மார்க் எடுக்க வைத்தபொது... ஸ் ஸ் ஸ் ஸ் அப்பாடா என...... மாணவர்களைவிட, ஆசிரியராக இருந்த நாங்கள்தான் மிகவும் சந்தோஷமடைந்தோம்...)  

அந்த அனுபவத்தின் ஒரு பகுதியைத்தான் இதோ இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்...... அன்று மாணவர்களுக்கு எளிமையான ஆங்கில இலக்கணம் - இரண்டாம் விடைத்தாள் (கிராமர்) வகுப்புக்கு..... தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் சுவையான நிகழ்ச்சிகளை... சுவைபட எடுத்துக்கூறி, மாணவர்களின் மனதில் அன்றைய ஆங்கில இலக்கண பாடத்தை பசுமரத்தாணி போல ஆழமாக பதியவைத்தோம்......

அன்றைய ஆங்கில இலக்கண பாடம் :-
The lesson is Grammatical Person in nominative case English Pronouns. 
Fill in the blanks questions:-
First Person Singular= " I " Plural = "We" 
Second Person Singular & Plural = "You"
Third Person Singular= " He/She/It" Plural = "They"
வயதானவர்களில் பெரும்பாலோனோர் விரும்பும் ஒரு அமர்வு நாற்காலி என்றால் அது "ஈஸி சேர்-Easy Chair" என்று ஆங்கிலத்தில் அழைக்கும் வசதியான சாய்வு அமர்வு நாற்காலி. அதாவது "டூ இன் ஒன்" என்று ஆங்கிலத்தில் கூறுவதைப்போல இரண்டு பயன்கள் தரும் ஒரே அமர்வு சாய் நாற்காலி இது  இதில் உட்கார்ந்துகொள்வதையும் படுத்துக்கொள்வதையும் ஒரே நேரத்தில் செய்யலாம். வயதானவர்களுக்கு ஜீரண சக்தி குறைவு ஆகவே உண்ட உணவு செரிப்பதற்கு நீண்ட நேரம் பிடிக்கும் அதுவரை நீண்ட நேரம் உட்காருவதற்கு வயது மூப்பின் காரணமாக உடல் எலும்புகள் ஒத்துழைப்பு தருவதில்லை. ஆகவே இந்த சாய் நாற்காலியில் உட்கார்ந்தபடியே (முதுகு எலும்புகளுக்கு இதமாக) படுக்கை நிலையில் அமர வசதியான இருக்கையாக இருப்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த அமர்வு நாற்காலியாக "ஈஸி சேர்" திகழ்கிறது. 

ஓய்வு பெற அந்த முதியவர் சாய்வு நாற்காலியில்  "ஈஸி சேர்" அமர்ந்திருக்கிறார். இவர்தான் இந்த நிகழ்வின் முதல் கதாநாயகன் அதாவது First Person Singular= " I "

வயதானவர்களுக்கு  தலையில் "முடி" என்பது அவ்வளவாக இருக்காது... பல வருடங்களாக முடி கொட்டி போயிருக்கும் அல்லது வழுக்கை விழுந்திருக்கும் . ஆக சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அந்தப் பெரியவருக்கு  தலையில் ஏதோ அரிப்பு ஏற்பட... தமது கையால் தலையை சொறிந்தவண்ணம் இருக்கும் நிலையில்... 

அந்தப் பெரியவரின் வீட்டு தெருவழியாக ஒரு (Post Man) தபால்காரர் செல்கிறார்.  இவர்தான் இந்தக் நிகழ்வின் 3வது நபர் அதாவது... Third Person Singular= " He/She/It" 

இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்களாக நாம் அதாவது...Second Person Singular & Plural = "You" "We

தபால்காரரை பார்த்த சாய்வு நாற்காலியில் கையை தலையில் வைத்து சொரிந்துகொண்டிருக்கும் அந்தப் பெரியவர் "ஏம்ப்பா எனக்கு ஏதாவது இருக்கா?"  என்கிறார்...

கை தலையில் இருக்கும்போது தபால்காரரிடம் எனக்கு ஏதாவது இருக்கா என்று கேட்பது பார்வையாளர்களாகிய நமக்கு என்ன தோன்றும் ... பெரியவர் தலையில் ஏதாவது இருக்கா என்று தபால்காரரை கேட்பதுபோல இருக்கும்!!!..... 

பெரியவரின் கேள்விக்கு பதிலாக தபால்காரர் கூறினார் "உங்களுக்கு எதுவும் இல்லைங்க!!!"

அதோடு அந்தப் பெரியவர் விட்டிருக்கலாம்.. ஆனாலும் பெரியவர் தொடர்ந்து...."நல்லா பார்த்து சொல்லப்ப.... எனக்கு ஏதாவது இருக்கா????" என்கிறார்...

அதற்கு அந்த தபால்காரர் "பெரியவரே... நல்ல பார்த்துவிட்டேன்... கொஞ்சம் நாளாகவே உங்களுக்கு ஒன்றும் இல்லை..." என்று நிச்சயம் செய்துவிட்டு சென்றார். 

பார்வையாளர்களாகிய நமக்கு என்ன தோன்றும்... இதெல்லாம் இந்தப் பெரியவருக்கு தேவையா??? கொஞ்சம் நாட்களாக உங்களுக்கு மூளையே இல்லை... என்பதை அந்த தாபால்காரர் சான்று தந்துவிட்டு செல்வது போல நமக்கு தெரியும். 

மற்றவர்களின் பார்வையில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்கிற நினைப்புகூட..... பல நேரங்களில், பலருக்கும், இருப்பதில்லை என்பதுதான் உண்மை...

மீண்டும் சந்திப்போம் நன்றிகளுடன் ... கோகி-ரேடியோ மார்க்கோனி..... 


Thursday, June 30, 2016

உத்தரகண்டில் மீண்டும் பெருமழை… அலக்நந்தா ஆறு உடையும் அபாயம்! கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்கள் செல்லும் வழித்தடம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உத்தரகண்டில் மீண்டும் பெருமழை… அலக்நந்தா ஆறு உடையும் அபாயம்! கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்கள் செல்லும் வழித்தடம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரு தினங்களாகப் (ஜூன்-30 மற்றும் இன்று  ஜூலை-01) பெய்து வரும் பெருமழையால் வெள்ளப் பெருக்கு அபாயத்தை எட்டியுள்ளது. கடுவாளி என்னும்  மலைவாழ் மக்கள்தான் இதனால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

அலக்கநந்தா ஆறு இமயமலைத் தொடரில் உற்பத்தியாகி இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் உயர்ந்த மலைகளின்  வழியாகப் பாயும் ஓர் அபாய ஆறு. பத்திரிநாத்திற்கு அருகவே அமைந்த சமோலி பகுதி ஆற்றில் இன்று வெள்ளப்பெருக்கு அபாயகட்டத்தை எட்டியுள்ளது சென்ற 2013-வருடத்தில் ஏற்பட்ட அபாயம் மீண்டும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  

இதற்கிடையே பத்ரிநாத் நகருக்கு மீண்டும் ஆபத்தான சூழ்நிலை ஏற்படும் என்று கருதப்படுகிறது. உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்கள் செல்லும் வழித்தடம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கேதர்நாதத்துக்கு புனிதப் பயணம் செல்லும் அனைவரையும் மிக அதிக எச்க்கறிக்கை தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்கு தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ராணுவத்தினர் மேற்கொண்டுவருகிறார்கள்.    

அலக்நந்தா என்கிற பெரிய நதிக்கு, சரஸ்வதி, டவுளிகங்கா,  மந்தாகினி, நந்தாகினி, பிந்தார் ஆகியன இதன் துணையாறுகள். இவைகளோடு பாகீரதி ஆறும் தேவப்பிரயாகை என்னும் இடத்தில் சேர்ந்து தான் கங்கை ஆறாக மிகப் பெரிய நதியாக பெருக்கெடுத்து ஓடும்.

உத்தரகண்டில் இவ்வாற்றின் குறுக்கே 37 அணைகள் கட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் முயற்சி மேற்கொண்டுள்ளது.  அதில் 11 நீர் மின்சார அணைகள் கட்டி முடித்து பயன்பாட்டில் உள்ளது. மேலும் பல்வேறு காரணங்களால் 25-கும் மேற்பட்ட அணைகள் கட்டுமானப்பணியானது முழுமையாக கட்டி முடிக்காமல் உள்ளது. இப்படி கட்டி முடிக்காமல் இருக்கும் அணைகள் கூட நதிகளில் ஏற்படும் பெருவெள்ளத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

இப்படிக்கு கோகி-ரேடியோ மார்க்கோனி- உத்திரகாண்ட திட்டப் பணிமனையிலிருந்து. 

Wednesday, June 1, 2016

"டிஜிட்டல் மார்கெடிங்" (Digital Marketing) என்று அழைக்கும் வீட்டிலிருந்தபடியே இணையவழி கணினியில் சம்பாதிக்கும் இலவச பயிற்சி.

ஒவ்வொரு மாதமும் NCR-NEW DELHI-வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் கலந்துகொண்டு ஏராளமான பரிசுகளை வெல்லலாம்.
http://vaishalireaderscircle.blogspot.in/

NCR-NEW DELHI என்று குறிப்பிடும் நமது தேசிய தலைநகரான புது தில்லி மற்றும் அதன் சுற்றுவட்ட எல்லைப்பகுதியில் அமைந்த ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேச மாநில எல்லைப்பகுதியை ஒட்டிய இடங்களில்  வசிக்கும் தமிழர்களும், கிழக்கு தில்லியின்  "வைஷாலி" டெல்லி மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்த செக்டர்-4 மையப் பூங்காவில் (Central Park) நடைபெறும் வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பு  நிகழ்ச்சியில் பங்குபெறலாம். 
1. வாசகர் வட்ட சந்திப்பின் அனைத்துப் போட்டிகளிலும் பங்குபெற்று பரிசினை வெல்லுங்கள்.
2. வாசகர் வட்ட வலைப்பதிவு இதழின்  6-வித்தியாசங்களைக் கண்டுபிடித்து பரிசுகளை வெல்லுங்கள்.
3. வாசகர் வட்ட வலைப்பதிவு போட்டிக் கேள்வியின் சரியான விடை கூறி பரிசினை வெல்லுங்கள்.
4. வாசகர் வட்ட வலைப்பதிவு கதையின் தொடர்ச்சியான "மீதிக் கதையைக்" கூறி பரிசினை வெல்லுங்கள்.
5. எனக்குப் பிடித்த எழுத்தாளர் பகுதியில், கதை / கவிதைப்  புத்தக விமர்சனங்களைக் கூறி பதிப்பாளர்களின் பணமுடிப்பு பரிசைப் பெறுங்கள்.
6. ஒவ்வொரு மாதமும் 3-வது  ஞயிறு அன்றைய வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் கலந்துகொண்டு குலுக்கல் முறையில் திடீர் அதிர்ஷ்ட பரிசுகளை வெல்லுங்கள்.  மேலும் பல பரிசுகளும் உண்டு. 

முக்கியமாக வரும் 28வது (19-06-2016-அன்றைய) வாசகர் வட்ட சந்திப்பிலிருந்து, தொடங்கும் வீட்டிலிருந்தபடியே இணையவழி கணினியில் சம்பாதிக்கும் இலவச பயிற்சி மற்றும் அதற்க்கான முழு விவரங்களையும் பெறலாம். ருபாய் 50,000 மதிப்புகொண்ட "டிஜிட்டல் மார்கெடிங்" (Digital Marketing) என்று அழைக்கும் இந்த இலவச பயிற்சியை ஒவ்வொரு வாசகர்வட்ட சந்திப்பு நிகழ்ச்சியிலும் பெறலாம். 
வைஷாலி வாசகர் வட்டத்தின் உறுப்பினர்கள் பலர் அவரது இல்லத்தில், அவர்களது அலுவலக வேலை செய்யவும், குழைந்தைகளின் கல்விக்காகவும் High-Speed Internet Broadband /WiFi Connection . என்னும் இனைய வசதி பெற்றிருக்கிறார்கள். அவர்களின் ஆதங்கம் என்னவென்றால்,  ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை இனைய சேவைக்கு செலுத்துவது தவிர்க்கமுடியாததாகிவிட்ட நிலையில், இணையத்திற்காக செய்யும் செலவை மிச்சப்படுத்தவும், வீட்டிலிருந்துகொண்டு அவர்களின் ஒய்வு நேரத்தில் சம்பாதிக்கவும் எளிமையான இலவச பயிற்சி மற்றும் விவரங்களை வரும் வாசகர் வட்ட சந்திப்புகளில் கலந்துகொள்ளும் அனைவரும் பெறலாம். 
முக்கியக் குறிப்பு:- பயிற்சி முழுதும் தமிழில்மட்டுமே  எளியமுறையில் கூகுளின் அனைத்து இலவச செயலி மற்றும் மென்பொருட்களை எப்படி பெறுவது மற்றும் எப்படி கையாள்வது என்கிற அனைத்து இலவச பயிற்சியினக் கொண்டதாக இருக்கும். 
மேலும் இணையவழியில் எப்படி பாதுகாப்பான பண பரிவர்த்தனை செய்வது, பே-பால்(Paypal) என்னும் வெளிநாட்டு பணம், அந்நிய செலவாணியை பெறுவது மற்றும் பே-யு-மணி(Pay-U-Money)என்கிற இந்திய ரூபாய் பணமதிப்பில் பணத்தினை செலுத்தவும் பெறவும், இணையத்தில் சம்பாதிக்கும் பணத்தை வங்கிக் கணக்கிற்கு எப்படி மாற்றிக்கொள்வது என்கிற இலவச மென்பொருட்களை எப்படி பெற்று வலைப்பதிவில் பொருத்துவது போன்ற எளிய பயிற்சி வகுப்பாகவும் இருக்கும்      
பின் குறிப்பு :- பயிற்சி முழுதும் தமிழில்மட்டுமே  எளியமுறையில் கூகுளின் அனைத்து இலவச செயலி மற்றும் மென்பொருட்களை எப்படி பெறுவது மற்றும் எப்படி கையாள்வது என்கிற அனைத்து இலவச பயிற்சியினக் கொண்டதாக இருக்கும். அனைத்து பயிற்சி மற்றும் பரிசுகளும் வாசகர் வட்ட சந்திப்பில் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். 

நன்றி 
இப்படிக்கு, 
கோகி. 

Friday, April 15, 2016

இணையத்திலும் "அம்மா" யூனிகோடுகள் .....

Re: [FTC] புதிய தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள்:-

Font Name: uniAmma-11

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Font Name: uniAmma-12

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Font Name: uniAmma-13

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Font Name: uniAmma-14

Re: [FTC] புதிய தமிழ் யுனிகோடு எழுத்துருக்கள்

இன்பாக்ஸ்
x
மன்றங்கள்
x

இரா.சுகுமாரன் rajasugumaran@gmail.com

பிற்பகல் 12:20 (28 நிமிடத்திற்கு முன்)
பெறுநர்: freetamilcompu.
எழுத்தும் அம்மா என்றால் !!! வேறு பெயர் கிடைக்கவில்லையா?
On Apr 14, 2016 10:51 AM, "Selva Murali" <murali1309@gmail.com> wrote:
வணக்கம் நண்பர்களே!!

இணையத்தில் யுனிகோடு என்றாலே லதா எழுத்துருவும், ஏரியல் யுனிகோடு எம்எஸ் மற்றும் விஜயா எழுத்துருக்கள்தான் அதிகமாக பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலைமையை சற்றே மாற்றிட  எங்கள் நிறுவனம் ஏற்கனவே பனீசியா நிறுவனம் கட்டற்ற முறையைல் வெளியிட்ட டாம் எழுத்துருக்களை யுனிகோடு வெப் எழுத்துரு முறைமைக்கு மாற்றி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விதவிதமான எழுத்துருக்களை இணையத்தில் பயன்படுத்தலாம். மின் புத்தகம், குறுஞ்செயலிகள் என எல்லாவிடங்களிலும் இதை பயன்படுத்தலாம்.

எழுத்துருக்களின் மாதிரி



தமிழ்ப் புத்தாண்டில் பொதுப்பயன்பாட்டு வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி

இன்னமும் 100 எழுத்துருக்கள் விரைவில் வெளியிடப்படும்


இந்த எழுத்துரு திட்டத்தில் எங்களுக்கு வழிகாட்டிய திரு.தகடூர் கோபி அவர்களுக்கு நன்றி!

நன்றி.


--
M.S.Murali (B+ve)

Tuesday, April 12, 2016

"குரு கிராம்" ஒரு புதிய கிராமம் புதிய பெயர் இன்றுமுதல் உதயமாகியது .

செய்தி:- புது  தில்லியின் எல்லையில் இருக்கும் ஹரியான மாநில "குடு காவுன்"  என்கிற தற்ப்போதைய தொழில்நகரம் இன்றுமுதல் "குரு கிராம்" என்று (சமஸ்கிருத மொழி)  பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.  ஒரு காலத்தில் நான் 1991 ல் பார்த்த போது எங்கும் எருமை மாடுகளும், எருமை சான வரட்டிகளுமாக இருந்த கிராமம், 2000ம் ஆண்டுக்குப் பிறகு புது தில்லியின் தொழிலாக மாசு கட்டுப்பாட்டு கெடுபிடிகளால் பல தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து தில்லியிலிருந்து இந்த குடு கிராமத்திற்கு இடம்பெயர்ந்தன.  அப்படிப்பட்ட நிலையில்தான் அந்தக் கிராமம் இன்று மிகப்பெரிய தொழில்நகரமாக  உயர்ந்தது.  இன்றும் உத்திரப்பிரதேசம் மற்றும் தில்லியிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் தினமும் இந்த தொழில் நகரத்திற்கு சென்றுவருகிறார்கள்.  புது தில்லியின் பாலம் சர்வதேச விமான  நிலையத்திலிருந்து வெறும் 10 மையில் தொலைவில் அமைந்திருக்கும் ஹரியான மாநிலத்தின் இந்த புதிய தொழில் நகரத்தின் புதிய பெயர் "குரு கிராமம்"  நட்புடன் கோகி -ரேடியோ மார்கோனி, புது தில்லியிலிருந்து. 
Photos: Mr.Shiv Kumar Pushpakar - The Hindu



Friday, April 8, 2016

Want to be a TV Broadcast Journalists...

Want to be a TV Broadcast Journalists, to collect, verify and analyse information about news and events, and present that information in an accurate, impartial and balanced way. Please mail your details to "Careers@ns7.tv"

Friday, April 1, 2016

இன்று World Autism Awareness Day.ஆசியாவிலேயே புகழ் பெற்று விளங்கும்- NIMHANS & VIMHANS.

ஏப்ரல் 2, 2016 இன்று World Autism Awareness Day.... ஆசியாவிலேயே புகழ் பெற்று விளங்கும், இந்தியாவின் சிறந்த மற்றும் முதன்மையான மனநல சுகாதார நிறுவனமான "மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான" தேசிய நிறுவனம் (NIMHANS-National Institute of Mental Health and Neuro Sciences) பெங்களூரில் அமைந்துள்ளது." இதைப்போலவே மற்றொன்று புது தில்லியில் இருக்கும் "விம்ஹான்ஸ்"(VIMHANS -Vidyasagar Institute of Mental Health, Neuro & Allied Sciences) வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இந்த இரண்டு இடங்களையும் சுற்றிப்பார்த்த என்னுடைய அனுபவம், என் மனதை நெகிழவைத்த அனுபவமும்கூட.............. அங்கு சிகிச்சை பெறுபவர்கள் சராசரி நோயாளிகள் போல இருந்தாலும் சிறு அளவிலான மூளைக் குறைபாடு அல்லது நரம்பியல் குறைபாடு உடையவர்கள்’ என்று அங்கு பணியாற்றும் மருத்துவர் ஒருவர் சொன்னபிறகுதான் தெரிந்தது................ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு நாள் ஏப்ரல் 2, 2016 இன்று World Autism Awareness Day என்று ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட நாள். கோகி-ரேடியோ மார்கோனி.  


அப்போது 1985-87, நான் டாக்டர் ராதா கிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளியில் (நான் படித்த அதே பள்ளியில்) பகுதிநேர ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த நேரம். முன்பு நான் மாணவனாக அதே பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது எனக்கு மேல்நிலைக்கல்வி "தாவரவியல்" ஆசிரியராக இருந்தவர்................................. " திரு ந.கிருஷ்ண சுவாமி சார் (சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கிறார்) என்னிடம் 15 நாட்கள் விடுப்பில் அவரது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான" தேசிய நிறுவனம் (NIMHANS) பெங்களூருவுக்கு சென்றுவர உடன் உதவிக்கு வருமாறும், அதற்குத்தேவையான திட்டமிடவேண்டும் என்று என்னுடைய உதவியை கேட்டபோது, பள்ளி கலைக்கல்வி நாடகக்குழு நிகழ்ச்சி தயாரிப்பில் உதவியாக இருந்த எனக்கு "மருத்துவ சிகிச்சைக்கு திட்டமிடுதலில் " அதுதான் முதல் அனுபவமும்கூட..... 

ஆகவே நிகழ்ச்சி தயாரிப்பு என்பது அவ்வளவு எளிய வேலை இல்லை அதற்க்கென்று தனி அனுபவ அறிவும், செயல் திறனும்  அவசியம் தேவை....... மேலும் பல சுவையான விவரங்களுக்கு வாருங்கள் நமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறைக்கு..... அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி.  http://programmedirector.blogspot.in/2015/11/blog-post_21.html

Sunday, March 27, 2016

"சொல்லும் முன் செயலாக......எள் என்று தொடங்கும்போதே எண்ணெய்யை கொண்டுவரவேண்டும்" என்றார்.....

எள் என்றால் எண்ணெய்யாக நிற்கவேண்டும் "சொல்லும் முன் செயலாக......எள் என்று தொடங்கும்போதே எண்ணெய்யை கொண்டுவரவேண்டும்" என்றார்.....

நான் முதலில் ஒரு ஆலோசகராகத்தான் அந்த நிறுவனத்தின் உரிமையாளரை தொடர்புகொண்டேன்... அது ஒரு உள்ளாடை பெயரில் தொடங்கும், தொலைத்தொடர்புத்துறை சார்ந்த பெரிய சீன நிறுவனத்தின் துணை நிறுவனம். என்னைபோன்ற இந்திய ஆலோசகர்களை  சீண்ட கூட  மாட்டார்கள் என்கிற நினைப்பில்... கல் எரிந்து பார்ப்போம்... என்றுதான் முயற்சி செய்தேன்... உடனே அழைப்பு வந்தது ஆச்சிரியம்தான்......  எதோ ஒரு நேரத்தில் பேச்சுவாக்கில் தென்னிந்தியர்கள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும் எனவும், அவர்களுக்கு தரப்பட்ட பணியில் சிறப்பாக செயல்படுவார்கள் என்கிற நம்பிக்கயை வெளிப்படுத்தினார்... அவரது நம்பிக்கைதான் எனக்கு வாய்ப்பு தந்தது என்பதை புரிந்துகொண்டேன்...... இருப்பினும் நான் சிங்கப்பூரில் பெற்ற சீன மொழி அறிவை (மாண்டரின்) பெருங்காய அளவில் அவ்வப்போது பயன்படுத்தியது அவருக்கு பிடித்திருந்தது என்பதை அவரது அணுகுமுறையில் தெரிந்துகொண்டேன்...... பாராட்டி வேலைவாங்கும்  திறமையான நிர்வாக இயக்குனர் அவர் என்பதையும் புரிந்துகொண்டேன்.   

நமது திட்டப்பணிக்கு எள் என்று தொடங்கும்போதே எண்ணெய்யை கொண்டுவரவேண்டும்.... அப்படிப்பட்ட ஒரு தலைமை நிர்வாகி தேவை என்றார்....(அவர் ஆங்கிலத்தில் சொன்னதை மிகப் பொருத்தமான தமிழில் குறிப்பிட்டுள்ளேன், எள் மற்றும்  எண்ணையைப்பற்றி தமிழர்களுக்கு மட்டுமே தெரிந்த பழமொழி,.... வேறு எந்த  மொழியிலும்  இல்லாத உவமை தமிழ் மொழிக்கு உண்டு.)  ஆனால் எள் என்றால் எண்ணெய்யாக 'வழிகிறவர்கள்தான்' இன்று நிறைய பார்க்கமுடிகிறது. இவர்கள் சோப்பு போடுவது, வெண்ணை வெட்டுவது, ஜாலரா அடிப்பது போன்ற பணிகளில் பலர் வல்லவர்களாக வளம் வந்துகொண்டிருப்பதை நான் அதிகம் பார்த்திருக்கிறேன் என்பதை எனது உள்மனது நினைவுபடுத்தியது.

அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக செயலாற்றிக்கொண்டிருக்கும்  அவர் பிரபல சீன நிறுவனத்தின் சொந்தக்காரர்.... சீன நாட்டைச் சேர்ந்தவர்... சரளமாக ஆங்கிலம் பேசும் அவரை சட்டென்று சீன நாட்டை சேர்ந்தவர் என்று சொல்லுவது கடினம்... நானே ஒரு முறை அந்த நிறுவனத்தின் ஆண்டுவிழா நிகழ்ச்சியின்போது ஒரு வாய்ப்பு கிடைத்ததால்....."நீங்கள் சீனாவின் ஹாங் காங்கில் பிறந்து வளந்தவரா?" என்று கேட்டிருக்கிறேன்.... அவர் சிரித்துக்கொண்டு இல்லை சாங்காய் அருகில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும், (புரியாத பெயரில் எதோ கிராமமொன்றை சொன்னார்) அவரது முன்னோர்கள் விவசாயமும் மீன்பிடித்தல் மற்றும் மீன் சந்தை வியாபாரம் செய்தவர்கள் மற்றும் மீனவ குடும்பத்தை சேர்ந்தவர் என்றார். அவர் அப்படி கூறியதில் எனக்கு மிகுந்த ஆச்சரியம்.... 

அந்த நிறுவனத்தை மேலோட்டமாக ஒரு சுற்று சுற்றிவந்தபோது, நான் நினைத்தபடியே பலர் அலுவலகப் பனியின் நேரத்தை வீனடித்துக்கொண்டிருன்தனர், இதில் ஆச்சரியம் என்னவென்றால் வேலை அதிகம் என்று வேலை நேரம் தவிர அதிகப்படியான நேரத்திலும் வேலை செய்து அதிகப்படியான (OT-Over Time) சம்பளம் ஈட்டுபவர்கலாக மிகவும் சுறுசுறுப்பாக பணியாற்றுவதைப்போல வளம் வந்துகொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு பிரிவின் தலைமை அதிகாரிகளோடு அவர்களது பிரிவினை சுற்றிப்பார்த்தபோது... பல இடங்களில் எனது கேள்விக்கு ...அதிகம்.... "இல்லை, கிடையாது,  தெரியவில்லை" போன்ற பதில்கள் கிடைத்தது.... பல அலுவலகப் பிரிவுகளில் கணினி இருந்தும் உல் கட்ட செயல்பாட்டிற்கு மிக அதிகமான காகித உத்தரவுச் சீட்டு  மற்றும் கடிதக் கோப்புக்கள் பயன்படுத்துவது தெரிந்தது. எந்த ஒரு விவரமும் கோப்புகளை புரட்டிப்பார்த்து நீண்ட நேரம் செலவு செய்து அறிந்துகொள்ள வேண்டியிருந்தது......  மேலும் இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் ....நன்றிகளுடன்  ரேடியோ-கோகி.   

Friday, March 25, 2016

World’s first hospital train ...

World’s first hospital train ....Lifeline Express is run and operated by Impact India Foundation with the help of Indian Railways and Health Ministry of India.. it has 2 surgical operation theater, 3 operating tables, a sterilization area, 2 recovery rooms for patients, on-board power generators, a pantry car, storage for medical supplies, and accommodation for medical staff.. So far it has medically served over 900,000 people including more than 100,000 surgeries in the remotest rural parts of the country!!

Wednesday, March 23, 2016

பூமியின் நிழல் நிலவில் விழும் காட்சி Date : ( 23 - 03 - 2016 ) Day : Wednesday

பூமியின் நிழல் நிலவில் விழும் காட்சி Date : ( 23 - 03 - 2016 ) Day : Wednesday புதன் கிழமை இந்திய நேரப்படி 3.10 pm(15.10 Hrs) இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கும் சந்திரகிரகணத்தை, அதாவது பூமியின் நிழல் நிலவில் விழும் காட்சி இந்தியாவில் தெரியாது, ஆனால் இந்த நிகழ்வை / கிரகணத்தை சிங்கப்பூரில் நன்கு காணமுடியும்.  

இந்தியாவிற்கு இந்த கிரகண தோஷம் கிடையாது. ஆனால் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் உத்திரம் நட்சத்திர காரர்கள் கிரகன சாந்தி செய்துகொள்வது சிறப்பு. 

பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் கிரகன காலத்தில் தீர்த்தமாடி, சுத்தமாய் அவர்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றவும். பிறகு முடிந்தால் கிருஷ்ணன் கோவில் சென்று பெருமாளை சேவிக்கவும். 

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கிரகணம் துவங்கும் நேரம் : மாலை ( 5 - 39 ) மணி அளவில் ஆகும் எச்ளிப்சே Starting Time : ( 5 - 39 ) Pm ( Singapore Time ).

மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கிரகணம் முடிவடையும் நேரம் : இரவு ( 9 - 59 ) மணி அளவில் ஆகும் எச்ளிப்சே Ending Time : ( 9 - 59 ) Pm ( Singapore Time ). அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி.

Wednesday, March 16, 2016

தாமதங்கள்= தா+மதங்கள் DELAYS CAN CHANGE EVERYTHING.

DELAYS CAN CHANGE EVERYTHING.
தாமதங்கள்= தா+மதங்கள் 
தாமதங்கள் "தா-மதங்" என்ற கள்.
தாமதங்கள் அனைத்தையும் மாற்றிவிடும். 
தாமதங்கள் தலைகீழாக புரட்டிப்போடும்.
தாமதங்கள் தாக்கத்தை ஏற்ப்படுத்தும்.
தாமதங்கள் தடுமாற்றத்தை தரும்.
தாமதங்கள் தரம் தாழ்த்திவிடும். 
தாமதங்கள் தடம் மாற்றிவிடும்.
கள்..
ங்க..
மத..
தா...ல்...
நட்புடன் கோகி-ரேடியோ மார்கோனி. 

மாற்றம் என்பது பிறருக்கு அல்ல உங்களுக்குத்தான் தேவை.

மாற்றம் என்பது பிறருக்கு அல்ல உங்களுக்குத்தான் தேவை. நன்கு சிந்தியுங்கள் மாற்றம் வேண்டும் என்று கூறி அவர்களுக்குத்தேவையான மாற்றத்தை உங்களை வைத்து நிறைவேற்றிக் கொள்கிறார்கள். முதலில் நீங்கள் உங்களின் அலுவலத்தில் உங்களின் வேலையை செய்கிறீர்களா அல்லது பிறரது வேலையை செய்கிறீர்களா என்று நீங்களே உங்களைப்பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.   உலகின் 96 % மக்கள் அவர்களது பணியை செய்யாமல், மற்றவர்களின் பணியை செய்து உழைக்கிறார்கள். எப்போது ஒரு மனிதன் தன்னைப்பற்றி உணர்ந்து தனது முன்னேற்றத்திற்கு உழைக்கிறானோ அப்போதுதான் அவன் உயர்வான ஒரு நிலையைப் பெறுவான். 

நிர்வாகிகள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட செயலை மட்டுமே கவனத்தில் வைத்து செயல்பட்டால் அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். இதைத்தான் நாயின் வேலையை நாயும், கழுதையின் வேலையை கழுதையும் செய்யவேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்..... அப்படி முன்னோர்கள் கூறிய அந்தக்கதைதான் என்ன?


ஒரு ஊரில் துணிகளை துவைக்கும் சலவைத் தொழிலாளி ஒருவர் அவரது வீட்டில் அவருக்கு உதவியாக இருக்க ஒரு கழுதையையும், அவரின் வீட்டு காவலுக்கு என ஒரு நாயையும் மிக அன்போடு பராமரித்து வளர்த்துவந்தார்.

ஒருநாள் இரவு ஒரு திருடன் அந்த சலவைத் தொழிலாளியின் வீட்டில் இருக்கும் பொருளை திருடுவதற்காக சிறிது தொலைவில் மறைந்திருந்து, இரவு அனைவரும் தூங்கட்டும் பிறகு திருடலாம் என காத்திருந்தான்.

இதைப்பார்த்துவிட்ட சலவைத் தொழிலாளியின் வளர்ப்புக் கழுதை, தமது எஜமானர் வீட்டுக்கு திருடன் திருட வந்திருப்பது தெரிந்து மனம் பதறியது, கழுதையின் அருகே அமைதியாக படுத்திருக்கும் அந்த வீட்டு நாயிடம், கழுதை தனது பதற்றத்தை கூறி அவர்களது எஜமானரை எழுப்பி நடக்கவிருக்கும் திருட்டை தடுக்க உதவுமாறு கூறியது. அதற்க்கு நாயும் அந்த திருடன், திருட ஒளிந்திருப்பதை பார்த்துவிட்டதாகவும், திருடனை பிடித்து திருட்டை தடுக்கவேண்டியது இந்த வீட்டு நாயான தன்னுடைய வேலை எனவே நான் பார்த்துக்கொள்கிறேன், கழுதையே நீ சற்று அமைதியாக உன்னுடைய வேலையை கவனி என்றது.

பதற்றமாக இருந்த கழுதை, எப்படியாவது திருடன் வந்திருப்பதை தமது எஜமானருக்கு தெரியப்படுத்தவேண்டும் என தனது சக்தியை எல்லாம் திரட்டி உரக்க கத்தியது .....

கழுதையின் கத்தலைக் கேட்ட சலவைத் தொழிலாளி தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டான், இந்தக் கழுதை ஏன் இப்படி நாடு இரவில் எனது தூக்கத்தைக் கெடுத்து கத்துகிறது என்று வீட்டின் கூரையில் சொருகி இருந்த உருட்டுக் கட்டையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியில் வந்தான், அங்கு கத்திக்கொண்டிருந்த கழுதையின் முதுகில், தனது கையில் வைத்திருந்த உருட்டுக் கட்டையால் ஓங்கி ஒரு அடி அடித்து, கழுதையே உனக்கு என்ன வந்தது வாயை மூடி அமைதியாக படுத்துக்கிட, ஏன் எனது தூக்கத்தைக் கெடுக்கிறாய் என்று கூறி மேலும் ஒரு உருட்டுக்கட்டை அடியை கழுதைக்கு தந்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டான். 

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நாய், கழுதையைப் பார்த்துக் கூறியது. நாயின் வேலையை நாயும், கழுதையின் வேலையை கழுதையும் என "அவரவர் வேலையை அவரவர் செய்யவேண்டும் இல்லையென்றால் இப்படித்தான் உதய் விழும்" என்றது.....        

இது அலுவலக மேலாண்மைக்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் முன்னேற, சிறந்த இடத்தைப் பிடிக்க ஒவ்வொருவருக்கும் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.  

மேலும் ஒரு உதாரணத்திற்கு... வகுப்பில் உள்ள மாணவர்களிடையே நன்றாக படிப்பவன் சுமாராக படிப்பவன் என்ற பேதம் இருந்தாலும், யார் தன் நிலையிலிருந்து மிகுந்த முன்னேற்றம் அடைகிறார்களோ அவர்களே ஆசிரியரின் கவனத்தை மிகவும் கவருவார்கள். அந்த மாணவனே சிறந்த மாணவனாக ஆசிரியரால் முன்நிருத்தப்படுகிறான். ஆகவே நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உங்களுக்குண்டான வேலையைமட்டும் சிறப்பாக செய்து பேரும் புகழும், அதற்குரிய ஊதியமும் பெற்று வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கவேண்டும். சிலருக்கு தன்னுடைய வேலை எது என்றுகூட பிரித்து தெரிந்துகொள்ளக்கூடிய திறமையில்லாமல், மற்றவரது வேலைதான் தன்னுடைய வேலை என்று வாழ்க்கையை வாழத்தெரியாமல் வீனடித்துக்கொண்டிருக்கிரார்கள். இந்தப் பதிவை மேலும் தொடர்ந்து படியுங்கள் பல விவரங்கள் உங்களுக்குப் புரியும்.

"பாடல்:- இந்த மாநிலத்தைப் பாராய் மகனே! உந்தன் வாழ்க்கை தனை உணர்வாய் மகனே! இளம் மனதில் வலிமைதனை ஏற்றடா! முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா!!!! ...."

முதலில் அலுவலகத்தில் உங்களது பனி எது என்று தெரிந்துகொண்டபின், அந்தப் பணியை சிறப்பாக செய்வதோடு உங்களது சுய முன்னேற்றத்திற்கான பணியையும் சேர்த்து செய்தால் தான் நீங்கள் சிறப்பான இடத்தை அடையமுடியும். அதற்க்கு உங்களது அலுவலகப்பணியை குறித்த நேரத்திற்கு  முன்பாகவே முடியுமாறு செய்து முடித்து, அதில் கிடைக்கும் உபரி நேரத்தில் உங்களின் சொந்த முயற்சிக்கான வேலைகளையும் செய்யவேண்டும். 

உதாரணமாக உங்களின் அலுவலக வேலை 8-மணி நேரம் என்றால், நீங்கள் 8-மணி நேரத்தில் செய்யவேண்டிய வேலையை 6-மணி நேரத்திலேயே செய்து முடித்துவிட்டு 2-மணி நேரத்தை மிச்சப்படுத்தி உங்களின் சொந்த முயற்சிக்கான, உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளும் செயல்களை செய்து சிறப்பான நிலையை அடைய பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.ஆகவே ஒரு நாளைக்கு 24மணி நேரம்  என்றால், ஒவோவ்று 8-மணி நேரத்தில் நீங்கள் சேமிக்கும் 2மணி நேரம் உங்களுடைய நேரமாக, உங்களின் உயர்வுக்காக மட்டும் செலவு செய்யக்கூடியதாக, ஒருநாளைக்கு  6மணி நேரம் உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது ஒரு நாள் என்பது உங்களுக்கு (நாள் 24 மணி + உங்களுடைய சேமிப்பு  6 மணி  = 30மணி நேரம்). மற்றவர்களுக்கு வெறும் 24மணி நேரம். "அதாவது உங்களுக்கு பணம்பழம போன்ற நெல்லிக்கனி"  (புரிகிறதா? இல்லையென்றால் மேற்கூறிய உதாரணத்தை திரும்ப திரும்ப படித்துப்பாருங்கள் புரியும்).

பாடல்:- "காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது" என்பதை நேரம் + நிர்வாகம் = வெற்றி என்கிற நூலாக்கி, நேரத்தை நமது நிர்வாகத்தில் வைப்பதன் முக்கியத்துவத்தை மிகக் கச்சிதமாக எழுதியிருக்கிறார் கவிஞ்சர் கண்ணதாசன் அவர்கள்....

மேலும் தற்போது உங்களின் மாத ஊதியம் 10000/- என்றால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளின் அது இரண்டு மடங்காக 20000/- என ஊதியம் அதிகமாக கிடைக்குமாறு, அதற்குத் தேவையான முயற்சிகளை செய்வதுதான், உங்களின் உயர்வுக்கான சொந்த முயற்சிக் குறிக்கோளாக இருக்குமாறு, நீங்கள் தினமும் சேமிக்கும் உங்களின் உபரி நேரத்தில் அதற்க்கான முயற்சிகளை செய்யும் நேரமாக அமைத்துக்கொள்ளுங்கள்.

"பாடல்:-உள்ளத்திலே உரம் வேண்டுமடா, உண்மையிலே திறம் காணுமடா,  ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா..........ஏட்டுச சுரைக் காயெல்லாம், மூட்டை கட்டியாகணும், நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும்....." 
ஆகவே அவரவர் வேலையை அவரவர் செய்வதே சாலச் சிறந்தது அதாவது "நாயின் வேலையை நாயும் கழுதையின் வேலையை கழுதையும் செய்யவேண்டும்". 

நான் பலநேரம் இதுபற்றி சிந்தித்ததுண்டு, இன்னமும் கூட பலர் அவர்களின் அலுவலகத்தில், அவர்களது வேலையை செய்யாமல் பிறரது வேலையை செய்து மாத சம்பாத்தியம் பெறுகிறார்கள்.  எப்போது ஒருவர் தன்னுடைய வேலை இது என்று உணர்ந்து, தனது வேலையைமட்டும் சிறப்பாக செய்து பேரும் புகழும் பெற்று உயர்வு பெறுகிறார்களோ, அவரே அவர்களது வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் அவர்களது ஆரம்ப இடத்திலேயே சரியாக வாழக்கையை அமைத்துக்கொள்ளாமல் திணறி தனது முடிவுக்கு தானாகவே காரனமாகிவிடுகிரார்கள். இதை வைத்துத்தான் நீங்கள் பணிபுரியும் உங்களின் நிறுவனம் உங்களின் திறனை மதிப்பிடுகிறது.

"பாடல்:-புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...."

இப்போது நாம்,  நமது உயர்விற்கான தலைவிதியை எப்படி மாற்றி அமைத்துக்கொள்வது என்பதைப் பார்ப்போம்..... இதற்க்கு நாம் நமது அனைவரது வாழ்விலும் உள்ள ஒரு உதாரணத்தை இங்கு எடுத்துக்கொள்வோம். வழக்கமாக நாம் அலுவலகம் செல்ல பேரூந்து நிறுத்தத்தில் பலமணி நேரம் காத்துக்கிடந்தும் நமக்குத் தேவையான அந்த பேரூந்து உடனே வருவதில்லை. பத்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று இருந்தாலும் அரை மணிநேரமாகியும் எந்த ஒரு பேரூந்தும் வாராதது நமது தலைவிதி என்று நினைப்போம். மறுநாள் நமக்கு பேருந்தில் செல்லவேண்டிய அவசியமிருக்காது, நாம் வேறு வேலையாக நேற்று நின்றிருந்த அதே பேரூந்து நிலையத்தைக் கடக்கின்றபோது, நேற்று எந்த பெரூந்திர்க்காக வெகுநேரம் காத்திருந்தோமோ அதே பேரூந்து ஒன்றன்பின் ஒன்றாக காலியான இருக்கைகளுடன் இரண்டு மூன்று பேரூந்துகள் செல்வதைப்பார்க்கலாம்.

"பாடல்:- சொல்லாதே யாரும் கேட்டால், எல்லோரும் தாங்கமாட்டார்... ....விதி என்று ஏதுமில்லை, வேதங்கள் வாழ்க்கையில்லை ...." 

ஆகவே ஒன்று நிச்சயமாக தெரிகிறது, எது நமக்கு வேண்டுமோ அது நமக்கு கிடைக்காது, எது நமக்கு வேண்டாமோ அது நிறைய கிடைக்கும்" இதுதான் நமது தலைவிதி என்று தெரிந்துவிட்டதால் இனி நாம் நமது வாழ்க்கையை எது கிடைக்கிறதோ அதை நோக்கி அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கவேண்டும். அது எப்படி என்று மேலும் தொடர்ந்து இப்பதிவை படியுங்கள்.  

பாடல்: "மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒரு குரங்கு, அதை தாவ விட்டால், தப்பி ஓட விட்டால்... நம்மை பாபத்தில் ஏற்றிவிடும்..."

பொதுவாக மனிதனின் மனம், "இது" இருந்தால் நான் இன்னும் சிறப்பாக இருப்பேன் என்கிற மனநிலையில் "இது (அல்லது) அது" என்பவற்றிற்கு பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறது. உதாரணமாக இன்னும் அதிக சம்பளம் கிடைத்தால் நான் இன்னமும் அதிக நேரம் கடுமையாக உழைக்கத் தயார் என்கிற கூற்று அனைவரின் மனதிலும், அதோடு சொல்லிலும், செயலிலும் வெளிப்படுவதைப் பார்க்கிறோம், ஆகவே மனிதனின் மனம் "பணம்" என்கிற ஒன்றின் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் "கோழை" என்று சொன்னால் எத்தனை உள்ளங்கள் இது சரியான கூற்று என்று ஒப்புக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறது??????. 

"பாடல்:- மயக்கமா? கலக்கமா?...மனதிலே குழப்பமா?... வாழ்க்கையில் நடுக்கமா?......." 

வேறு ஒரு உதாரணத்தையும் சொல்கிறேன்.... ஒருவர் மற்றவரை ஒப்பிட்டு தனது நிலையைப் பற்றி நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பார். நான் செய்யும், அதே பணியை செய்யும் அவருக்கு என்னைவிட அதிக சம்பளம் என்பார்... "எனக்கு ஒருநாளைக்கு ரூ300 என்றால் அதே வேலையை செய்யும் அவருக்கு ரூ400 ஏன்?" என்பார்... 

அதற்க்கு நான் அவரிடம் ..... "நீங்கள் ரூ600 க்கு தகுதியுடையவர் பின்பு ஏன் ரூ 400ஐப் பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள்???? என்றேன்".... 

அப்படிஎன்றால் எனக்கு ரூ 600 கிடைக்கவேண்டுமல்லவா ஏன் கிடைக்கவில்லை? என்கிற அவரின் கேள்விக்கு நான் தந்த பதில்.... "அது உங்களின் கையில் அல்லவா இருக்கிறது... முதலில் ரூ 600க்கு உண்டான வேலையை, திறமையை செயலில் காட்டுங்கள். பிறகு என்னை வந்து பாருங்கள்.... என்றேன். 

"பாடல்- உலகம் ஆயிரம் சொல்லட்டுமே... உனக்கு நீதான் நீதிபதி... மனிதன் எதையோ பேசட்டுமே.... மனச பார்த்துக்கோ நல்லபடி உன் மனசை பார்த்துக்கோ நல்லபடி....." 

ஆகவே ஒரு ரகசியத்தை நான் இப்போது உங்களுக்கு சொல்கிறேன்.... நீண்ட ஒரு வரிசையில் நிர்ப்பவர்களில், முதலில் யார் நிற்கிறார்களோ அவர்களை மட்டுமே நாம் பார்க்கமுடியும். அவர்களின் பின்னால் நிர்ப்பவர்களை நம்மால் பார்க்கமுடியாது.  உலகத்தின் பார்வை யார் முதலில் இருக்கிறார்களோ அவர்களின் மீது மட்டுமே இருக்கும், அதாவது, நல்ல சம்பளம், நல்ல வாய்ப்பு என ஏதாவது ஒரு காரணத்தின் பின்னால் நீங்கள் நின்றுகொண்டிருந்தாள்... பின்னல் நின்றுகொண்டிருக்கும் உங்களை யாருக்கும் தெரியாமலே போய்விடும். அடுத்த 10 வருடங்கள் ஆனாலும் நீங்கள் முன்னேறமுடியாது. ஆகவே ஏதாவது ஒரு காரணத்தின் பின்னால் நிற்கும் உங்களின் முடிவை விட்டுவிடுங்கள். குறைவான சம்பளம் அல்லது சம்பளமே இல்லையென்றாலும் சிறப்பாக எந்த வேலையையும்  செய்து முடிப்பேன் என்கிற முடிவோடு செயல்பட்டு, முதலிடத்தில் நில்லுங்கள்..... பிறகு பாருங்கள்... உங்களின் சிறப்பான செயலை பாராட்டி பதவியும் பணமும் உங்கள் பின்னால் வரும்..... உங்களுக்கு எது தேவையோ அனைத்தும் உங்களின் பின்னால் வரும்... உங்களுக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் உங்களின் பின்னல் வரும் அவைகளை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லையென்றால் உங்களின் அதிகாரிக்குப் பின்னால் செல்லும் உங்களைத்தான், அவரது முன்னேற்றத்திற்கு அவர் பயன்படுத்திக்கொள்வார். 

"பாடல்:- பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே ...கருடன் சொன்னது.... அதில், அர்த்தம் உள்ளது..."

முதலில் உங்களின் முன்னேற்றத்திற்கு என்னவெல்லாம் தேவை என்பதை தேர்ந்தெடுத்து அதற்க்குண்டான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள், படிப்படியாக நீங்கள் உயர்ந்தநிலை அடைந்தபிறகு, அந்த உயர்நிலையை சரியானபடி தக்கவைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.....  பலர் மகாபாரத அபிமன்யுவைப் போல வேகமாக உயர்வான நிலையை எட்டிப்பிடித்து பிறகு அந்த உயர் பதவியை த்க்கவைத்துக்கொள்ளமுடியாமலும், அந்தப்பதவிக்கு கீழ் நிலைக்கு வரமுடியாமலும், தட்டுத் தடுமாரிவிடுகிரார்கள்... ஆகவே நீங்கள் பெற்ற உங்களின் உயர்நிலையை எப்படி தக்கவைத்துக்கொள்வது என்பதைப்பற்றி  பார்ப்போம் ....தொடரும் 

"பாடல்:- துணிந்து நில், தொடர்ந்து செல்... தோல்வி கிடையாது தம்பி... உள்ளதை சொல், நல்லதை செய்... தெய்வம் இருப்பதை நம்பி...."

.... அன்புடன் கோகி -ரேடியோ மார்கோனி.   

Saturday, March 12, 2016

சேவல் கூவிட, பொழுது புலர்ந்தது, புத்தகத்திலே......

சேவல் கூவிட 
பொழுது புலர்ந்தது
புத்தகத்திலே......

பெற்ற குழந்தைக்கும் தெரியாத 
குடும்ப உறவினர்கள் 
புத்தகத்திலே..... 

புத்தகமும், நூலகமும்..
அருங்காட்சியகத்தில்
அடுத்த சில நூற்றாண்டுகளில்...

நட்புடன் கோகி-ரேடியோ மார்கோனி. 

Friday, March 4, 2016

2016 ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து கிரகணங்கள் நிகழும்.

2016 ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து கிரகணங்கள் நிகழும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புது தில்லி, மார்ச்-9 -2016 அன்று நடக்கவிருக்கும் பகுதி சூரிய கிரகணத்தை சிங்கப்பூரர்கள் முழுமையாக காணலாம். மிக அரிதான நிகழ்வாகக் கூறப்படும் இந்தக் கிரகணத்தில் உச்சநிலையின்போது கிட்டத் தட்ட 90% விழுக்காட்டுச் சூரியனைச் சந்திரன் மறைக்கும் இந்த சூரிய கிரகணம்  இந்தியாவில் கிழக்கு கடற்கரையை ஒட்டிய பகுதியில் இறுதிகட்ட நேரத்தில் மட்டுமே காணக்கூடிய சூரிய கிரகனமாகும், மற்ற பெரும்பாலான இந்தியப் பகுதியில் இந்த  சூரிய கிரகனத்தை பார்க்கமுடியாது. மலேசியா, சிங்கப்பூருக்கு இந்த சூரிய கிரஹனம் முழு சூரிய கிரஹனமாக எளிதில் பார்க்ககூடியதாக இருக்கும்.  

இந்தியாவின் பெரும்பாலான இடங்களில், கிரகணம் தொடக்கப் பகுதி தெரியாது, கிரகனத்தின் இருதிகட்டாத்தில் சூரிய உதயம் அதாவது ஓரளவு ஒளிமங்கச்செய்யும் சூரிய உதயத்திற்கு முன் இருக்குமாறு தெரியும்.

இந்த சூரிய கிரஹனம் இந்திய நேரப்படி அதிகாலை 4.49 மணிக்கு தொடங்கி முழு கிரகன நிலையை 5.47மணிக்கும் பிறகு காலை 6.48 மணியளவில் இருதிகட்டநிலையை அடையும். 


பித்ரு தர்ப்பணம் என்னும் மூதாதையர்களுக்கு செய்யும் சூரிய கிரகன கால தர்ப்பணம் என்பது சூரிய உதயத்திற்கு முன்பு செய்யவேண்டிய சடங்கு ஆகவே உங்களின் பகுதியில் காலை (5அம டு 6.50அம) 5மணியிலிருந்து  6.50மணிக்குள்  சூரிய உதயம் இருக்குமானால் சூரிய உதயத்திற்கு முன்பு செய்யலாம். நீங்கள் வசிக்கும் பகுதியில் காலை 6.50மணிக்கு மேல் சூரிய உதயம் இருக்குமானால் கிரகண தர்ப்பணம் செய்யத் தேவையில்லை.  
சூரிய கிரகனத்தைப் பார்க்கலாமா? விஞ்ஞன முறைப்படி சூரியவிட்டத்தை சந்திரன் கடக்கும் நிகழ்வான அதாவது சூரியனுக்கும் பூமிக்குமிடையில்  சந்திரனின் வருவதால் ஏற்ப்படும் இந்த நிகழ்வைப் பார்க்கலாம் தவறில்லை,  மெய்ஞான முறைப்படி இப்படிப்பட்ட கிரகனத்தின்போது தாறுமாறான சூரிய கதிரானது நேரடியாகவோ அல்லது நவ கோள்களின் மீது பட்டு பிரதிபலிப்பு தாறுமாறான கதிர்களாக உயிர்களின் மீது விழுவதால் உயிர்களின் சக்திக்கு ஊரு விளைவிக்கும் நிலையை உண்டாக்குகிறது என்பது பண்டைய புராண காலத்திலிருந்து கூறப்படும் கூற்று. அறிவியல் முறையிலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.  

ஜோதிடம்:- சூரியனின் கதிர்கள் நேரடியாக உயிர்களின் மீது படுவது சிறப்பானது அதைவிட சிறப்பாக அதன் பிரதிபலிக்கும் ஒளிக் கதிரானது இரண்டுமடங்கு சிறந்தது, அது உள்ளத்திற்கும் உணர்வுகளுக்கும் புதிய தேம்பைத்தருகிறது.... அதாவது சூரிய ஒளிக் கதிரானது சந்திரன் மற்றும் பிற கோள்களின் மீது பட்டு பிரதிபலிக்கும் ஒளிக் கதிராக நம் மீது படும்போது  உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகப்பெரிய சக்தியை தருகிறது அதைத்தான் நாம் 9-நவ கோள்களின்  சக்தியாக (கோள்களின் பார்வை என)  உணருகின்றோம். 

அடுத்த சூரியகிரஹன  வரும் 09-மே-2016 திங்கள் அன்று புதன் கோளானது சூரிய விட்டத்தை கடக்கும்போது ஏற்ப்படுகிறது. இது மாலை 4மணியிலிருந்து சூரியன் (அஸ்தமிக்கும்) மறையும் வரை  இந்தியாவின் அனைத்துப்பகுதியிலும் தெரியும். 


இந்த சூரிய கிரஹனம்  பூரட்டாதி நட்சத்திரத்தில் ஏற்ப்படுகிறது,  இந்த சூரிய கிரகன தோஷ நட்சத்திரங்கள்:-சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, புனர்பூசம், விசாகம். என இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரகன கதிர்களினால் உடலும் மனமும் தாக்கப்படாமல் தம்மை காத்துக்கொள்ள, கிரகன தோஷ சாந்தி செய்துகொள்வது சிறந்தது  

1. சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை வழிபட்டால், எப்படிப்பட்ட கிரகன தோஷங்களின் பாதிப்பிலிருந்தும் விடுபடலாம். 


2. பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் கிரகன காலத்தில் தீர்த்தமாடி, சுத்தமாய் அவர்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றவும். பிறகு முடிந்தால்  கிருஷ்ணன் கோவில் சென்று பெருமாளை சேவிக்கவும்.

3) கிரகன காலத்தில் (ஆண்கள்) தீர்த்தமாடி காயத்ரி ஜபம், அஷ்டாக்ஷரம், த்வயம், சர்மா ஸ்லோக ஜெபங்களை முடிந்தவரை செய்யவும். இக்காலங்களில் ஜபம் செய்வது பத்து மடங்கு ஜபம் செய்யும் பலனை அளிக்கும்.

4) பெண்கள் குழந்தைகள் ஸ்லோகம், ச்தோற்ற பாடம் முதலியவைகளை பாராயணம் செய்யலாம்.

5) அனைவரும் காலை 7.00 மணிக்கு மேல் தீர்த்தமாட வேண்டும்.

6) கிரகணம் விடியற்காலை 5.00 மணிக்கு ஆரம்பிக்கின்றது. எனவே கிரகணம் முடிந்த பின் தீர்த்தமாடி, சமையல் செய்து சாப்பிடலாம். அதாவது காலை 7.00 மணிக்கு மேல்.

7) நேற்று இரவு சமைத்த உணவை மீதம் வைத்து சாப்பிட வேண்டாம்.

8) ஊறுகாய், தயிர் போன்றவற்றில் தர்ப்பம் (நுனி கிள்ளிப் போட்டு ) போட்டு வைக்கவும். தர்ப்பைப்புல்லானது கிரகன கதிர்களை நெருங்கவிடாமல் காக்கும் சக்திபடைத்தது. 

9) இங்கே குறிப்பிட்டவை தவிர வேறு சந்தேகங்கள் இருந்தால் வாட்சப்பில் தொடர்புகொள்ளுங்கள்.

நன்றிகளுடன் ரேடியோ-கோகி. 

Wednesday, March 2, 2016

ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில்....

பல வழிகளில் உங்களின் ஓய்வுநேரத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் ஆனாலும் அது எந்தவகையில் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்பதுதான் முக்கியம்.


ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.http://www.onlineadpostingjobs.com/register.php?ruser=87116862

சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.https://www.sitedone.com/user/508

தொலைக்காட்சியில் பொழுதைக் கழிப்பதால் உங்களின் பொருளாதாரம் உயரப்போவதில்லை மாறாக மேலும் பல புதிய தொலைக்காட்சி நிலையங்கள் உருவாகி லாபம் ஈட்டுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டால் நலம்.

நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....நட்புடன் ரேடியோ-கோகி.

Wednesday, February 24, 2016

ஜீசஸ் ஒரு தமிழ் பிராமணர்:ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்ச்சை புத்தகம் 70 ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பு…

ஜீசஸ் ஒரு தமிழ் பிராமணர்: ஆமாங்கோ!!! என்கிறார் மராட்டிய புத்தக ஆசிரியர் கணேஷ் சாவர்க்கர்..... ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்ச்சை புத்தகம் 70 ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பு…


ஏசு கிறிஸ்துவை தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்துவாகச் சித்திரித்து, மராத்தி மொழியில் எழுதப்பட்ட புத்தகம், சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இந்துத்துவா அமைப்பான இந்து மகா சங்கம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஆகியவற்றின் முன்னோடி என்று கூறப்படும்  வி.டி.சாவர்க்கரின் சகோதரர் கணேஷ் சாவர்க்கர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இதுகுறித்து வீர சாவர்க்கர் நினைவு அறக்கட்டளையின் தலைவர் ரஞ்சித் சாவர்க்கர், மும்பையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசினார். அப்போது, அத புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில தகவல்களை, அவர் கூறினார். […] http://thetimestamil.com/

Thursday, February 18, 2016

யோகம் அடித்தது-"அடிக்கிறதுமணிகள்" ரிங்கிங் பெல்லஸ்- யோகம் அடித்தது 'சுதந்திர 251' ... ஒரு கைத்தொலைபேசி முன்பதிவு செய்தாகிவிட்டது ... எப்போது கையில் தவழும்?

யோகம்  அடித்தது- அடிக்கிறதுமணிகள்" ரிங்கிங்  பெல்லஸ்- யோகம் அடித்தது 'சுதந்திர 251' ... ஒரு கைத்தொலைபேசி  முன்பதிவு செய்தாகிவிட்டது ... எப்போது கையில் தவழும்? http://freedom251.com/cart

Wednesday, February 17, 2016

251 ரூபாய் மலிவு விலை ஸ்மார்ட்போன்-முடங்கியது இணையதளம், வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்...

251 ரூபாய் மலிவு விலை ஸ்மார்ட்போன் வாங்க ஆர்வம் : முடங்கியது இணையதளம், வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்...
உங்களின் சம்பளத்தில் PF/EPF என்னும் மாதாந்திர பணியாளர் வருங்கால வைப்பு நிதி பிடித்தம்,  உங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ஊதியத்தை குறைப்பதாக தோன்றலாம்,........ ஆனால் உங்களுக்கு தெரியாமலே  நீங்கள் கோடீஸ்வரர் ஆகப்போகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா???????? விவரம்:-  படத்தைப் பார்த்து, 3-வளம் வந்து, தோப்புக்கரணம் போட்டு, கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.... நட்புடன் ரேடியோ-கோகி.  

உலகளவில் சர்க்கரை தயாரிப்பு விலையை நிர்ணயிக்கும் முக்கிய நாடுகளாக...

தற்போதைய சூழலில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு முக்கிய நாடுகள் 2016 மற்றும் 2017 ஆண்டுக்கான, உலகளவில் சர்க்கரை தயாரிப்பு விலையை நிர்ணயிக்கும் முக்கிய நாடுகளாக விளங்கும். என்று உலக சர்க்கரை உற்பத்தியில் முக்கியப் பங்குவகிக்கும் நாடான பிரேசில் கருத்து தெரிவித்துள்ளது.  மேலும் முழு விவரங்களுக்கு  எனது ஆராய்ச்சி புத்தகமான "CLIP-CANE LOGISTIC IMPROVEMENT PROGRAM in Indian Sugar Industries"by Gopal Krishnan -Radio Maconi ......https://www.researchgate.net/publication/276253304_CLIP-CANE_LOGISTIC_IMPROVEMENT_PROGRAM_in_Indian_Sugar_Industries

FREE JOBS EARN FROM HOME