FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Wednesday, June 1, 2016

"டிஜிட்டல் மார்கெடிங்" (Digital Marketing) என்று அழைக்கும் வீட்டிலிருந்தபடியே இணையவழி கணினியில் சம்பாதிக்கும் இலவச பயிற்சி.

ஒவ்வொரு மாதமும் NCR-NEW DELHI-வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் கலந்துகொண்டு ஏராளமான பரிசுகளை வெல்லலாம்.
http://vaishalireaderscircle.blogspot.in/

NCR-NEW DELHI என்று குறிப்பிடும் நமது தேசிய தலைநகரான புது தில்லி மற்றும் அதன் சுற்றுவட்ட எல்லைப்பகுதியில் அமைந்த ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேச மாநில எல்லைப்பகுதியை ஒட்டிய இடங்களில்  வசிக்கும் தமிழர்களும், கிழக்கு தில்லியின்  "வைஷாலி" டெல்லி மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்த செக்டர்-4 மையப் பூங்காவில் (Central Park) நடைபெறும் வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பு  நிகழ்ச்சியில் பங்குபெறலாம். 
1. வாசகர் வட்ட சந்திப்பின் அனைத்துப் போட்டிகளிலும் பங்குபெற்று பரிசினை வெல்லுங்கள்.
2. வாசகர் வட்ட வலைப்பதிவு இதழின்  6-வித்தியாசங்களைக் கண்டுபிடித்து பரிசுகளை வெல்லுங்கள்.
3. வாசகர் வட்ட வலைப்பதிவு போட்டிக் கேள்வியின் சரியான விடை கூறி பரிசினை வெல்லுங்கள்.
4. வாசகர் வட்ட வலைப்பதிவு கதையின் தொடர்ச்சியான "மீதிக் கதையைக்" கூறி பரிசினை வெல்லுங்கள்.
5. எனக்குப் பிடித்த எழுத்தாளர் பகுதியில், கதை / கவிதைப்  புத்தக விமர்சனங்களைக் கூறி பதிப்பாளர்களின் பணமுடிப்பு பரிசைப் பெறுங்கள்.
6. ஒவ்வொரு மாதமும் 3-வது  ஞயிறு அன்றைய வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் கலந்துகொண்டு குலுக்கல் முறையில் திடீர் அதிர்ஷ்ட பரிசுகளை வெல்லுங்கள்.  மேலும் பல பரிசுகளும் உண்டு. 

முக்கியமாக வரும் 28வது (19-06-2016-அன்றைய) வாசகர் வட்ட சந்திப்பிலிருந்து, தொடங்கும் வீட்டிலிருந்தபடியே இணையவழி கணினியில் சம்பாதிக்கும் இலவச பயிற்சி மற்றும் அதற்க்கான முழு விவரங்களையும் பெறலாம். ருபாய் 50,000 மதிப்புகொண்ட "டிஜிட்டல் மார்கெடிங்" (Digital Marketing) என்று அழைக்கும் இந்த இலவச பயிற்சியை ஒவ்வொரு வாசகர்வட்ட சந்திப்பு நிகழ்ச்சியிலும் பெறலாம். 
வைஷாலி வாசகர் வட்டத்தின் உறுப்பினர்கள் பலர் அவரது இல்லத்தில், அவர்களது அலுவலக வேலை செய்யவும், குழைந்தைகளின் கல்விக்காகவும் High-Speed Internet Broadband /WiFi Connection . என்னும் இனைய வசதி பெற்றிருக்கிறார்கள். அவர்களின் ஆதங்கம் என்னவென்றால்,  ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை இனைய சேவைக்கு செலுத்துவது தவிர்க்கமுடியாததாகிவிட்ட நிலையில், இணையத்திற்காக செய்யும் செலவை மிச்சப்படுத்தவும், வீட்டிலிருந்துகொண்டு அவர்களின் ஒய்வு நேரத்தில் சம்பாதிக்கவும் எளிமையான இலவச பயிற்சி மற்றும் விவரங்களை வரும் வாசகர் வட்ட சந்திப்புகளில் கலந்துகொள்ளும் அனைவரும் பெறலாம். 
முக்கியக் குறிப்பு:- பயிற்சி முழுதும் தமிழில்மட்டுமே  எளியமுறையில் கூகுளின் அனைத்து இலவச செயலி மற்றும் மென்பொருட்களை எப்படி பெறுவது மற்றும் எப்படி கையாள்வது என்கிற அனைத்து இலவச பயிற்சியினக் கொண்டதாக இருக்கும். 
மேலும் இணையவழியில் எப்படி பாதுகாப்பான பண பரிவர்த்தனை செய்வது, பே-பால்(Paypal) என்னும் வெளிநாட்டு பணம், அந்நிய செலவாணியை பெறுவது மற்றும் பே-யு-மணி(Pay-U-Money)என்கிற இந்திய ரூபாய் பணமதிப்பில் பணத்தினை செலுத்தவும் பெறவும், இணையத்தில் சம்பாதிக்கும் பணத்தை வங்கிக் கணக்கிற்கு எப்படி மாற்றிக்கொள்வது என்கிற இலவச மென்பொருட்களை எப்படி பெற்று வலைப்பதிவில் பொருத்துவது போன்ற எளிய பயிற்சி வகுப்பாகவும் இருக்கும்      
பின் குறிப்பு :- பயிற்சி முழுதும் தமிழில்மட்டுமே  எளியமுறையில் கூகுளின் அனைத்து இலவச செயலி மற்றும் மென்பொருட்களை எப்படி பெறுவது மற்றும் எப்படி கையாள்வது என்கிற அனைத்து இலவச பயிற்சியினக் கொண்டதாக இருக்கும். அனைத்து பயிற்சி மற்றும் பரிசுகளும் வாசகர் வட்ட சந்திப்பில் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். 

நன்றி 
இப்படிக்கு, 
கோகி. 

No comments:

FREE JOBS EARN FROM HOME