எள் என்றால் எண்ணெய்யாக நிற்கவேண்டும் "சொல்லும் முன் செயலாக......எள் என்று தொடங்கும்போதே எண்ணெய்யை கொண்டுவரவேண்டும்" என்றார்.....
நான் முதலில் ஒரு ஆலோசகராகத்தான் அந்த நிறுவனத்தின் உரிமையாளரை தொடர்புகொண்டேன்... அது ஒரு உள்ளாடை பெயரில் தொடங்கும், தொலைத்தொடர்புத்துறை சார்ந்த பெரிய சீன நிறுவனத்தின் துணை நிறுவனம். என்னைபோன்ற இந்திய ஆலோசகர்களை சீண்ட கூட மாட்டார்கள் என்கிற நினைப்பில்... கல் எரிந்து பார்ப்போம்... என்றுதான் முயற்சி செய்தேன்... உடனே அழைப்பு வந்தது ஆச்சிரியம்தான்...... எதோ ஒரு நேரத்தில் பேச்சுவாக்கில் தென்னிந்தியர்கள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும் எனவும், அவர்களுக்கு தரப்பட்ட பணியில் சிறப்பாக செயல்படுவார்கள் என்கிற நம்பிக்கயை வெளிப்படுத்தினார்... அவரது நம்பிக்கைதான் எனக்கு வாய்ப்பு தந்தது என்பதை புரிந்துகொண்டேன்...... இருப்பினும் நான் சிங்கப்பூரில் பெற்ற சீன மொழி அறிவை (மாண்டரின்) பெருங்காய அளவில் அவ்வப்போது பயன்படுத்தியது அவருக்கு பிடித்திருந்தது என்பதை அவரது அணுகுமுறையில் தெரிந்துகொண்டேன்...... பாராட்டி வேலைவாங்கும் திறமையான நிர்வாக இயக்குனர் அவர் என்பதையும் புரிந்துகொண்டேன்.
நமது திட்டப்பணிக்கு எள் என்று தொடங்கும்போதே எண்ணெய்யை கொண்டுவரவேண்டும்.... அப்படிப்பட்ட ஒரு தலைமை நிர்வாகி தேவை என்றார்....(அவர் ஆங்கிலத்தில் சொன்னதை மிகப் பொருத்தமான தமிழில் குறிப்பிட்டுள்ளேன், எள் மற்றும் எண்ணையைப்பற்றி தமிழர்களுக்கு மட்டுமே தெரிந்த பழமொழி,.... வேறு எந்த மொழியிலும் இல்லாத உவமை தமிழ் மொழிக்கு உண்டு.) ஆனால் எள் என்றால் எண்ணெய்யாக 'வழிகிறவர்கள்தான்' இன்று நிறைய பார்க்கமுடிகிறது. இவர்கள் சோப்பு போடுவது, வெண்ணை வெட்டுவது, ஜாலரா அடிப்பது போன்ற பணிகளில் பலர் வல்லவர்களாக வளம் வந்துகொண்டிருப்பதை நான் அதிகம் பார்த்திருக்கிறேன் என்பதை எனது உள்மனது நினைவுபடுத்தியது.
அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக செயலாற்றிக்கொண்டிருக்கும் அவர் பிரபல சீன நிறுவனத்தின் சொந்தக்காரர்.... சீன நாட்டைச் சேர்ந்தவர்... சரளமாக ஆங்கிலம் பேசும் அவரை சட்டென்று சீன நாட்டை சேர்ந்தவர் என்று சொல்லுவது கடினம்... நானே ஒரு முறை அந்த நிறுவனத்தின் ஆண்டுவிழா நிகழ்ச்சியின்போது ஒரு வாய்ப்பு கிடைத்ததால்....."நீங்கள் சீனாவின் ஹாங் காங்கில் பிறந்து வளந்தவரா?" என்று கேட்டிருக்கிறேன்.... அவர் சிரித்துக்கொண்டு இல்லை சாங்காய் அருகில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும், (புரியாத பெயரில் எதோ கிராமமொன்றை சொன்னார்) அவரது முன்னோர்கள் விவசாயமும் மீன்பிடித்தல் மற்றும் மீன் சந்தை வியாபாரம் செய்தவர்கள் மற்றும் மீனவ குடும்பத்தை சேர்ந்தவர் என்றார். அவர் அப்படி கூறியதில் எனக்கு மிகுந்த ஆச்சரியம்....
அந்த நிறுவனத்தை மேலோட்டமாக ஒரு சுற்று சுற்றிவந்தபோது, நான் நினைத்தபடியே பலர் அலுவலகப் பனியின் நேரத்தை வீனடித்துக்கொண்டிருன்தனர், இதில் ஆச்சரியம் என்னவென்றால் வேலை அதிகம் என்று வேலை நேரம் தவிர அதிகப்படியான நேரத்திலும் வேலை செய்து அதிகப்படியான (OT-Over Time) சம்பளம் ஈட்டுபவர்கலாக மிகவும் சுறுசுறுப்பாக பணியாற்றுவதைப்போல வளம் வந்துகொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு பிரிவின் தலைமை அதிகாரிகளோடு அவர்களது பிரிவினை சுற்றிப்பார்த்தபோது... பல இடங்களில் எனது கேள்விக்கு ...அதிகம்.... "இல்லை, கிடையாது, தெரியவில்லை" போன்ற பதில்கள் கிடைத்தது.... பல அலுவலகப் பிரிவுகளில் கணினி இருந்தும் உல் கட்ட செயல்பாட்டிற்கு மிக அதிகமான காகித உத்தரவுச் சீட்டு மற்றும் கடிதக் கோப்புக்கள் பயன்படுத்துவது தெரிந்தது. எந்த ஒரு விவரமும் கோப்புகளை புரட்டிப்பார்த்து நீண்ட நேரம் செலவு செய்து அறிந்துகொள்ள வேண்டியிருந்தது...... மேலும் இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் ....நன்றிகளுடன் ரேடியோ-கோகி.
No comments:
Post a Comment