FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Friday, August 14, 2015

வெண்மணி அறக்கட்டளை வழங்கும் வெண்மணி இலக்கிய விருதுகள்

வெண்மணி அறக்கட்டளை வழங்கும் வெண்மணி இலக்கிய விருதுகள்:-
ரூ. ஒரு லட்சத்திற்கு மேல் ரொக்கப் பரிசுகள்பாராட்டுக் கேடயங்கள்பொன்னாடைகள் கொண்டது)
1.   குறும்படப் போட்டி2. ஆவணப்படப் போட்டி3. நூல்களுக்கான போட்டி
4. கவிதைப் போட்டி5. கதைப் போட்டி6. கட்டுரைப் போட்டி
1.குறும்படப் போட்டி – ரூ10,000./- 7,000./- 5,000./ மூன்று பரிசுகள்     = ரூ.22,000/-
2. ஆவணப்படப் போட்டி- ரூ,10,000./- 7,000./- 5,000./-     மூன்று பரிசுகள் = ரூ.22,000/- 
தவிர ரூ. 2000./- வீதம் சிறந்த கதைஇயக்குநர்ஒளிப்பதிவாளர், நடிகர்நடிகைகுழந்தை நடிக நடிகைகள்படத் தொகுப்பாளர்ஒளிப்பதிவாளர்களுக்கு என்று      எட்டுப் பரிசுகள்    8x2,000 = 16,000/- 

3. நூல்களுக்கான போட்டி      –   ரூ,.30.000/-
போட்டிக்கு வரும் நூல்களில் கீழ்க்கண்ட துறைகளில் 10 துறைகளுக்கு மட்டும் ஒவ்வொரு துறைக்கும் ஒரு பரிசாக ரூ. 3,000./- வீதம் 10 x 3,000/- = 30,000/-

கவிதைகதைமொழியாக்கம்தமிழ் வளர்ச்சிதனித்தமிழ் வளர்ச்சி,  தமிழ் மருத்துவம்,நாட்டுப் புறவியல்தலித்தியம்பெண்ணியம்அறிவியல்கணிணித் தொழில் நுட்பம்,அரசியல்வரலாறு,  சமூகவியல்பண்பாடுவாழ்வியல்சூழலியல்பல்சமய ஆன்மீகம்,பயணவியல் தன்முன்னேற்றம்திறனாய்வு பல்துறை விழிப்புணர்வுச் செய்திகள் போன்ற தலைப்புகளிலும் இன்ன பிற துறைகளிலும் இருக்கலாம்.

* இரண்டு படிகள் தேவை.
* ஒருவரே பல துறை நூல்களை அனுப்பலாம்.
4. கவிதைப் போட்டி -    ரூ2,000./- வீதம் மூன்று பரிசுகள் 3 x 2.000/- = ரூ.6,000/-
5. கதைப் போட்டி -      ரூ2,000./- வீதம் மூன்று பரிசுகள்  3 x 2.000/- = ரூ.6,000/-
6. கட்டுரைப் போட்டி -   ரூ2,000./- வீதம் மூன்று பரிசுகள் 3 x 2.00/0- = ரூ.6,000/-
* ஒரு படி போதும்.
* படைப்புகள்  ஏ 4 அளவில்  5 பக்க அளவில் இருக்கலாம்.
* படைப்புகளை மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம். அவை யுனிகோடு தமிழ்ப் பாண்டில் செய்திருக்கப்பட வேண்டும்.
* சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
* இதுவரை எதிலும் வெளிவராததாக இருக்க வேண்டும்.
* ஒருவரே பல படைப்புகளை அனுப்பலாம்.
* படைப்புகளை திரும்ப அனுப்ப முடியாது..
* படைப்புகள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய முகவரி : கு.மாரிமுத்துவழக்கறிஞர்,சென்னை உயர்நீதி மன்றம்வெண்மணி அறக்கட்டளை / வெண்மணிப் பதிப்பகம்எண் 114 / 61முதல் தளம்மூர் தெருசென்னை - 600 001மின்னஞ்சல் முகவரி: kumarimuthu12@gmail.com
செல்பேசி எண்  93 45 34 61 08 க்கு அனுப்பப்பட வேண்டும்,
அனைத்துப் போட்டிகளுக்கும் கடைசி நாள் : 31.10.2015    * பரிசளிப்பு : பிப்ரவரி 2016.

* தொடர்பு கொள்ளவேண்டிய நேரம் : பிற்பகல் 4 முதல் 10 மணியளவில்.

Wednesday, August 5, 2015

கண்ணுக்கு அணியும் மூக்குக் கண்ணாடியே !!!
காணும் காட்சிகள் கண்ணுக்கு சொந்தமில்லை,
மனதிற்கு என்பதை மறந்துவிடாதே ....  கோகி.லா
தல போல வருமா????
யோசனை...உனது பிம்பம் என் கண்ணில் பட்டபோது,
வாசனை ... என்னருகே நீ இருந்தபோதெல்லாம்...
சாதனை ... என் கன்னத்தில் உன் உதடுகள் பட்டபோது...
பாவனை ... என்னை நான் உணர்ந்துகொண்டபோது.
சோதனை ..தீராத நோயென என் காதுகள், மனதுக்கு சொன்னபோது.
காலனை .. கண்டதால் நீ முந்திக்கொண்டபோது..
வேதனை ...உனது இழப்பு, என் கைகள் கன்னத்தில் இருந்தபோது.
இத்தனை நடந்தபின்னும் இன்னும் ....
எத்தனை... நாட்கள் உடலை இழந்த தலையாய் நான்... (கோகி..லா)

Sunday, August 2, 2015

இப்படிக்கு ...திரு நங்கை .

நாங்கள் மணக்காமல் போனாலும்... 
வண்ணமயமான காகிதப்பூக்கள்..!!!!! 
இப்படிக்கு ...திரு நங்கை ...(கோகி...லா)
வாழ்க்கையின் தாகம் ...
கஷ்டப்பட்டு குடிப்பதற்க்கில்லை...
இஷ்டப்பட்டு அருந்துவதற்கு....
கோகியின் கோமனக் கவிதை தொகுப்பிலிருந்து ....

Thursday, July 16, 2015

"மேலாளர்" (Manager) பதவிக்காக நேர்காணல்(Interview) தேர்வுக்கு வந்திருந்த ஒருவரை அந்த நிறுவன உரிமையாளர் "கழிவறை நாற்றமடிக்கிறது சுத்தம் செய்துவிட்டு வா" என்றார்.

வானொலியில் நான் எழுதி வழங்கிய நிகழ்ச்சித் தொகுப்பை, புத்தகமாக........

Episode-100- நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? 

....."மேலாளர்" (Managre) பதவிக்காக நேர்காணல்(Interview)தேர்வுக்கு வந்திருந்த ஒருவரை அந்த நிறுவன உரிமையாளர் "கழிவறை (Toilet) நாற்றமடிக்கிறது சுத்தம் செய்துவிட்டு வா" என்றார்.

இப்போது இந்த விளையாட்டின் பந்து உங்களிடம் உள்ளது. நேர்காணலுக்கு வந்திருப்பவர் நீங்கலாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.


# பொதுவாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் சொல்வதைக்கூட சுத்தகரிப்பு தொழிலாளி சரியாக செய்யமாட்டார். நீங்களோ இன்னமும் அந்த நிறுவனத்தில் சேரவில்லை ஆகவே உங்களுக்கு அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் உதவமாட்டார்கள்.

# நீங்களாகவே கழிவறையை பெருக்கி சுத்தம் செய்தால் நீங்கள் அந்த பணிக்குத்தான் லாயக்கு என்று முத்திரை குத்தப்படலாம்.

# மேலாளர் பதவிக்கு வந்த என்னைப்பார்த்தா இப்படி சொன்னாய் என்று கோபித்துக்கொண்டு "சரிதான் போடா சொட்டத்தலையா" என்று திட்டிவிட்டு வந்துவிட்டாலும் நீங்கள் மேலாளர் பதவிக்கு லாயக்கு இல்லாதவர் என முத்திரை குத்தப்படும்.

# இந்த கேள்விக்கான பதில் என்ன என்றால்..நிறுவனத்தின் மேலாளர் என்பவர் விரல் நுனியில் விவரங்களை (fingers edge information) வைத்திருக்க வேண்டமா?

ஒரு நிறுவனத்திற்கு தேவையான அனைத்துவித சேவைகளையும் பெறுவதற்கு தேவைப்படும் சேவை நிறுவன தொலைபேசி எண்கள், நபர், முகவரி, போன்ற அனைத்து தகவல்களையும் நினைவில் வைத்திருப்பவர்களே...
விரல்  நுனியில்  விவரங்கள் வைத்திருப்பவர் என்பவர்"

இப்போது நீங்கள் உங்களின் " விரல் நுனியில் உள்ள விவரங்களை" பயன்படுத்தி கழிவறை சுத்தகரிக்கும் நிறுவனத்தை அழைத்து, சுத்தம் செய்யச்சொல்லி, பிறகு சுத்தமான கழிப்பிடத்தை அந்த நிறுவன உரிமையாளரிடம் காண்பித்து, "சபாஷ் மிக அருமையாக செய்திருக்கிறாய்" என்று கூறும்போது.... கழிவறை சுத்தகரித்த நிறுவனத்தின் செலவு சீட்டை(Bill) தந்து, அதற்க்கான தொகையை செலுத்துமாறு கூறவேண்டும்.

...."வேலை இல்லாதவன்தான் வேலை தெரிஞ்சவந்தான் வீரமான வேலைகாரன் வெவகாரமான வேலைக்காரன்.. http://youtu.be/HlYJd-bLiPk "

அடுத்த நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? மீண்டும் நாளை சிந்திப்போம்...

விடாமல் முயலுங்கள்,

விரும்பியதைப் பயிலுங்கள்...

தொடர்ந்து சிந்திப்போம் .....

மீண்டும் சந்திப்போம் !

வணக்கம்
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.

" வா மா மு "


புத்தகத்தின் அட்டைப்படம் - எழுதிய கதை விலைபோகுமா? தெரியவில்லை....., பதிப்பாளர்- அட்டைபடம் போணியாகும் என்கிறார் ..... மாற்றி யோசிக்க இந்த பாடல்தான் நினைவுக்கு வருகிறது ... : எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் பி ஷைலஜா குரல்: "வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே ஆஹா" ...

# சொற்கள், வார்த்தைகளாக மாறும்போது உருவாகும் மந்திர அதிசயத்தை உண(ர்/ரு)பவர்களின் கையில் நிச்சயம் இந்த புத்தகக் குழந்தை தவழும் ......

# வாய்ப்பு-முடிவு-மாற்றம்:- வாய்ப்புக்கு தகுந்த முடிவெடுக்காவிட்டால் வாழ்க்கை மாறாது...

# மாற்றம்-வாய்ப்பு-முடிவு :- ஒரு மாற்றம் நல்ல வாய்ப்பை தருமென்றால், உடனே முடிவெடுக்கத் தயங்காதே.


# முடிவு-மாற்றம்-வாய்ப்பு :- ஒரு முடிவை எடுத்தபின்பு, எந்த மாற்றத்திற்கும் தகுந்தாற்போல, கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்பவன் திறமையானவன்.


Tuesday, June 23, 2015

Saturday, June 20, 2015

தந்தையர் தினம் (21-06-2015)

தந்தையர் தினம் (21-06-2015) என்பது தந்தையர்களை கௌரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையிலும் வேறுநாடுகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது.


Wednesday, May 13, 2015

மீண்டும் ஒரு மிகப்பெரிய சுனாமி பேராலை உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்....

"....மீண்டும் ஒரு மிகப்பெரிய சுனாமி பேராலை உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்."

நேற்றைய 12-05-2015 நேபாளம் மற்றும் சீனா,  ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகம் முழுவதும் 82 இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “நேபாள பூகம்பத்துக்குப் பிறகான பூமியின் ஊடாக சென்ற ஒலி அலைகளின் தரவுகளின் படி, தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பூமியின் பாறைத்தட்டு கிட்டத்தட்ட 6 மீட்டர்கள் தெற்கு நோக்கி கீழ் நகர்ந்துள்ளது. இது மிகப்பெரிய இடப்பெயர்வாக கருதப்படுகிறது.” 

“பூகம்பம் காரணமாக பாறைகள் பூமிக்கு அடியில் இடப்பெயர்வு கண்டுள்ளதால் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் குறித்து ஆஸ்திரேலிய சுனாமி எச்சரிக்கை மையத்தின் டேனியல் ஜக்ஸா கூறும்போது, மேலும் ஒரு சுனாமி வருவதற்கான சூழல்
ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்தார், அதாவது ஆசியப்பாரைத்தட்டு ஆஸ்திரேலிய பாரைத்தட்டான சுண்ணாம்பு பாறைக்கடியில் மிகப்பெரிய அழுத்தத்தால் தொடர்ந்து அழுத்திக்கொண்டிருப்பதால் எந்த நேரத்திலும் ஆசியப்பாரைத்தட்டு பசிபிக் கடல்பகுதியில் ஒரு பிளவை சந்திக்கக்கூடிய சூழல் எப்போதுவேண்டுமானாலும் ஏற்ப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அப்படி ஒரு பிளவு ஏற்ப்ப்படும்போது இந்திய மற்றும் இந்தோனேசிய கடல்பகுதியில் மீண்டும் ஒரு மிகப்பெரிய சுனாமி பேராலை உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

Friday, May 1, 2015

வாழ்க வாசகர் மன்றங்கள்....விமர்சனங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.....

எழுத்தாளர்களின், சில பொன்னான வார்த்தை மற்றும் வரிகளைப்பற்றி வாசகர்கள் அவர்களின் கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்யும்போதும், அதைக்கேட்கும்போதும் அந்த  புத்தகத்தை வாங்கவும்  படிக்கவும் ஆவலை தூண்டும்வண்ணம் அமைந்திருக்கும் அவர்களின் அந்தச் சிறந்த விமர்சனங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.. காரணம் இந்தக்கணினி உலகத்தில்,  எதோ ஒரு வழியில் புத்தகம் படிப்பவர்களை கவர்ந்திழுத்து பரவலாக புத்தகம் படிக்கும் ஆவலுக்கு உயிர்கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் என்பதால், அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் படைத்த  "விமர்சகர்களை" பாராட்டாமல் இருக்கமுடியாது. 

எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும்,  புத்தகம் படிப்பவர்களையும், படித்த புத்தகத்தைப்பற்றி விமர்சனம் செய்பவர்களையும்  உற்சாகப்படுத்தி ஊக்கிவித்தால், புத்தகம் படிப்பவர்களை அதிகரிக்கச் செயலாம் ..  அது இந்தக்கணினி உலகத்தில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும் என்பது என் எண்ணம்......... 

மலேசிய மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் புத்தகத்தைப்படித்து விமர்சிப்பவர்களுக்கு, "வாசகர் மற்றும் விமர்சகர் மன்றங்கள்"  "பணமுடிப்பு" தருவது இன்றும் வழக்கமாக உள்ளது (எனக்கும் இரண்டு முறை 40 சிங்கப்பூர்  வெள்ளி (இந்திய மதிப்பில் ரூபாய் 2,000/- ) கிடைத்தது.  மாதம் இரு முறை வாசகர் மன்ற கூட்டங்களில் பலருக்கு சிறந்த விமர்சனங்களுக்காக புத்தகப் பதிப்பாளர்களும், சில நிறுவனங்களும் போட்டிப்போட்டுக்கொண்டு பரிசுகள் வழங்குகிறார்கள். ( குறிப்பு - இந்தியாவில் சில எழுத்தாளர்களுக்குகூட இப்படி பாராட்டி பணமுடிப்பு கிடைப்பதில்லை !!!!) தமிழகத்திலும் இப்படி ஒரு செயல் நடைபெற்றால்  புத்தகங்களைப் படிக்கும் / வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும் என்பது எனது எண்ணமும் அதற்க்கான முயற்சியும் மேற்க்கொண்டுவருகிறேன்...ஆகவே  சர்வதேச அளவில் பல வாசகர் மற்றும் விமர்சகர்களின் குழுக்கள், மற்றும் விமர்சகர்களின் வட்டம், விமர்சகர் மன்றம் போன்றவை உருவாகுவதற்கு உறுதுணையாக உதவி செய்தாலே போதும், ஏராளமான வாசகர்களைப் பெறமுடியும்.  இதற்க்கு எழுத்தாளர்களோடு, பதிப்பாளர்களும் உதவி செய்ய முன்வரவேண்டும்.  முதலில் உங்களுக்கு அருகாமையில் இருக்கும் பகுதிகளில்  வாசகர் மன்றம் ஒன்றை அமைத்து, மாதம் ஒருமுறை வாசகர் மற்றும் விமர்சகர் கூட்டம் ஒன்றை  நடத்தி,   சிறந்த வாசகர் மற்றும் விமர்சகர்களுக்கு சில பரிசுப்பொருட்கள் வழங்கினால், வாசகர் மன்றம் சிறப்பாக செயல்படுவதோடு எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் நிறைய பயன்களைப் பெறலாம்.  புது தில்லி மற்றும் அதன் எல்லையில் அமைந்த  உத்திரப் பிரதேச மாநிலத்திலும் சில தமிழ் வாசகர் மற்றும் விமர்சகர் மன்றங்களை உருவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ("வைஷாலி வாசகர் வட்டம்"- புது தில்லி  மற்றும் காசியாபாத் உத்திரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் தமிழ் புத்தாண்டு 2014 முதல் பல நூறு தமிழ் வாசகர்களை உருவாக்கியுள்ளது)… மேலும் இதுபோன்ற பணிகள் தொடர  தோள்கொடுத்து துணை நிர்ப்பவர்களை வரவேற்கிறேன்........

"புத்தம் புதிய புத்தகமே
உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்
பொதிகை வளர்ந்த செந்தமிழே
உன்னை பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்....."

விடாமல் முயலுங்கள், 
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்! 
வணக்கம்
நன்றிகளுடன் கோகி -என்கிற கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி- புது தில்லியிலிருந்து.... 

Thursday, April 30, 2015

மகன்:- வாழ்ந்து முடித்தபிறகு -சொர்கத்திற்கு அனுப்பிவைக்கிறான்.
மகளோ:- வாழும்போதே  வீட்டை சொர்கமாக்குகிறாள்.
"பெண்ணைப் போற்றிடுவீர் ...பெண் மகவை பெற்றிடுவீர்" !!!!

விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்!
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) தற்போது இந்தியாவின் உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து..

Friday, April 24, 2015

1990-வடஇந்தியாவின் ஒரு இராணுவ மையத்தில் தந்தியைப்(பெற்ற) தந்தையின் மனநிலை(பகுதி-14)

எனது நாட்குரிப்பெட்டின் வாடாமலர் பக்கங்கள்:-1990-வடஇந்தியாவின் ஒரு இராணுவ மையத்தில் தந்தியைப்(பெற்ற) தந்தையின் மனநிலை(பகுதி-14):-  தற்போது தகவல் தொழில்நுட்பத்தில் பல வசதிகள் பெற்றிருந்தாலும், 1989-90கலீல்  இந்திய வட எல்லைப்பகுதியில் அமைந்த இந்திய ராணுவ எல்லைப்படை  பயிற்சி மையத்தில், தொலைத் தொடர்பு சாதனங்கள் பயன்பாடு மிகமிக அரிதாகவே பயன்பாட்டில் இருந்தது (ரேடார் மற்றும் தந்தி தவிர மற்றவை). அப்போதெல்லாம்  XP/AT- கணினிகளை( நாங்கள் எருமைக் கணினி என்றுதான் அழைப்போம் அத்தனை மெதுவாக பணிபுரியும் கணினிவகைகள்)  வட  மாநிலத்தில் அமைந்திருந்த பல இராணுவ  மையங்களில் நிறுவுவதற்கு, இராணுவ வாகனத்தில் வெகுதூரம் பயணம்செய்து, கணினியை நிறுவியபிறகு(computer installation) அதை பயன்படுத்த தேவயான பயிற்சியையும்  தந்துவிட்டு திரும்பவேண்டும். ஒரு முறை ஜனவரி மாதத்தில் (நல்ல குளிர்... என் உதடுகள் தந்தியடித்தது)  கணினி பழுதாகிவிட்டது என்று கூறியதால் நானும் மற்றுமொரு, நிறுவனத்தின் பழுது பார்ப்பவரும் அந்த இராணுவ மையத்திற்கு சென்று பார்த்தபோது கணினி ஒளித்திரையின் ஒளியை (கருப்பு/வெள்ளை நிறத்தை) கூட்டிக் குறைக்கும் அமைப்பானை (monitor display adjustment knobs) மாற்றிவிட்டிருந்தமையால், கணினி ஒளித்திரையில் ஒன்றும் தெரியாமல்... கணினி பழுதாகிவிட்டது என்றனர்.  பிறகு  கணினி ஒளித்திரையை (Monitor) பயன்படுத்துவது எப்படி என்று பயிற்சியளித்துவிட்டு வந்தோம். அப்போது தமிழகத்தின் செஞ்சி பகுதியை சேர்ந்த ஒரு இராணுவ வீரருக்கு ஆன் குழந்தை பிறந்துள்ளது என்று  தந்திவந்ததை படித்த அவர் மகிழ்ச்சியில் கண்கலங்கினார், அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும் .... தந்தியைப்(பெற்ற) தந்தை   இப்படி பாடியிருப்பார் "அன்பு வந்தது, என்னை ஆள வந்தது, சொந்தம் வந்தது,  தெய்வ சொர்க்கம் வந்தது ... http://youtu.be/hBKsdFah6q8 

Tuesday, April 21, 2015

வானொலிக் கதைகள் "அந்தநாள் ஞாபகம் - பள்ளிக்கூடம்"- Episode/பகுதி 21....

வானொலிக் கதைகள் "அந்தநாள் ஞாபகம் - பள்ளிக்கூடம்" Episode/பகுதி-21:-(வானொலிக்கு நான் எழுதிய கதையும் பாடல்களும் நிகழ்ச்சிப் பதிவுகளிலிருந்து) "அப்போதெல்லாம் 9-ம் வகுப்புக்கு வந்துவிட்டாலே எதோ ஒரு பரீட்சை பயம் வந்துவிடும்.  9ம்  மற்றும் 10ம் வகுப்பு அவ்வளவு எளிதாக தேர்ச்சி பெறக்கூடிய வகுப்பு அல்ல என்றும்,  அன்றய பாடங்களை அன்றே முழுவதும் படித்து ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும் இல்லையென்றால் பரிட்சையில் தோல்விதான் 9ம் வகுப்பைத் தாண்டுவது கடினம் என எனது வகுப்பாசிரியர் ஏதேதோ சொல்லி மிரட்டி வைத்திருந்தார்...

பாடல்:- ஏ பார் ஆப்பிள் - A for Apple.. B for Biscuit  https://youtu.be/PBLIgp1XhmI

(9-ம்  வகுப்பு அவ்வளவு எளிதாக தேர்ச்சி பெறக்கூடிய வகுப்பு அல்ல என்றும்,  வகுப்பாசிரியர் ஏதேதோ சொல்லி மிரட்டி வைத்திருந்தார்... அந்தக்காலத்தில் பல கிராமத்து மாணவ, மாணவியர்கள் 9-ம் வகுப்பில் தனது படிப்பை நிறுத்திவிட இதுவும் ஒரு காரணம் என்றும் கூறலாம்). பாடல்:- "படிப்புக்கும் ஒரு கும்பிடு"... படம் :-இரும்புத் திரை (1960), பாடலாசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு, இசை : எஸ் வி வெங்கட்ராமன்  https://youtu.be/_k06MusuBeQ

அன்றைய தேர்வு முடிவுகளில் 9ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பிற்கு தேர்ச்சி  பெற்றிருந்த மகிழ்ச்சியில், புது வகுப்பில் புது பாடங்கள், புத்தகங்கள் என அன்றுதான் புதிதாக பிறந்தவன் போல ஒரு குதூகலம் மனதில் நிறைந்திருந்தது. பாடல் "வெற்றிமீது வெற்றிவந்து என்னைச்சேரும் அதை வாங்கி தந்த பெருமையெல்லாம் உம்மைச்சேரும்  https://youtu.be/kYSsx_BZOp8

எதிரில் நண்பன் வந்தான் அவனும் வெற்றிபெற்றிருப்பன் இருப்பினும் பொதுவாக இருக்கட்டுமே என்று "நண்பா, உனக்கு கிடைத்ததுதான் எனக்கும் கிடைத்தது என்று கூறினேன்" அதைக்கேட்ட  அவனது முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.  தொடர்ந்து இருவரும் சேர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டே  கடைத்தெரு வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தோம்.   பாடல்:- உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி - நெஞ்சில் தூங்கிக் கிடக்குது நீதி  https://youtu.be/boyVeLaj14Y

என் மனம் புதிய வகுப்பு,  புதிய புத்தகங்கள் என எதோ ஒரு  மகிழ்ச்சியான சிந்தனைகள் மனதில் ஓட, தொடர்ந்து கடைத்தேருவழியாக நடந்துகொண்டிருந்தோம். பாடல் "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை  https://youtu.be/FfE1rTqyC-Y 

வழியில் மாணவ மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் என ஏராளமானவர்கள் ஒரு புத்தகக் கடைமுழுவதும் நிரம்பி வழிந்தார்கள். மனம் பரபரத்தது எனக்கும் புதிய புத்தகம் வாங்கவேண்டும் என்று ஆசைதான். புதுப்புத்தகத்தின் வாசனை எனக்கு ரொம்ப பிடிக்கும். இருப்பினும் எனது குடும்ப சூழ்நிலையில் பாதிவிலையில் அதிலும் அனைத்து புத்தகங்களும் ஒரே நேரத்தில் வாங்க முடியாத சூழ்நிலை.  
பாடல்:- நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,.. வாழ்ந்தே தீருவோம்!  https://youtu.be/NaItT2DZVXU

சிறிது நேரம் அந்தக் கடையில் நிரம்பிவழிந்த கூட்டத்தை பார்த்தபடி நண்பனும் நானும்  நின்றுகொண்டிருந்தோம். என் வயதுதான் இருக்கும், அந்த மாணவன் அவனது அப்பாவிடம் இந்த புத்தகம் வேண்டும்...அதுவும் வேண்டும் என்று தொடர்ந்து புது புது புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருந்தான்.  கூட்டத்தில் சிறிது இடைவெளி தெரிந்தது சற்றென்று நான் அந்தக் கடையின் கூட்டத்தினுள்  நுழைந்து, கடைக்காரரிடம் 10ம் வகுப்பு புத்தகங்களின் மொத்த விலை எவ்வளவு என்று கேட்டேன். அவர் காசு வைத்திருக்கிறாயா? இல்லையென்றால் பிறகு வா என்று கூறிவிட்டு வேறு ஒருவருக்கு புத்தகம் விற்க விலை கூறிக்கொண்டிருந்தார். பாடல்:- காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும்  இது தெரியுமாடா https://youtu.be/Hv6lb4ttBOI

எனது பரிதாப நிலையை அந்தக்கடையில் புத்தகம் வாங்கிக்கொண்டிருந்த மாணவனும் அவனது தந்தையும் பார்த்துக்கொண்டிருந்தனர். என்ன நினைத்தாரோ? அவர் என்னை அருகில் அழைத்தார். அவரது சட்டைப்பையிலிருந்து, அவர் வீட்டு முகவரி பதித்த அழைப்பு சீட்டு (visiting card) ஒன்றை என்னிடம் தந்து, நாளை வீட்டிற்கு வந்து அவரது மகனின் சென்ற ஆண்டு  படித்த 10ம் வகுப்பு புத்தகங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். சந்தோசத்தில் அவரது பாதங்களில் சாஸ்டாங்கமாக விழுந்து நன்றியை தெரிவிக்க மனம் நினைத்தாலும் கூட்ட நெரிச்சலில் முடியாதுபோனதால் அவரிடம் நின்றபடியே நன்றி கூறி,  அந்த மகிழ்ச்சியை தனது வீட்டிற்கும் தெரிவிக்க, நண்பனின் கையை பிடித்து அவனையும் வேகமாக தரதர வென்று இழுத்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினேன். பாடல்:- நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்திருந்தேன் .. https://youtu.be/NnOPdx7Gn24

மறுநாள் காலை விடியமாட்டேன் என்று அடம் பிடித்தது. அருகிலிருந்த கையடிக்குழாயில் காக்கா குளியல் முடித்து வீட்டிற்க்குள் நுழைந்தபோது அம்மாவும் காஞ்சி குடித்துவிட்டு வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தார்கள். எனக்கும் ஒரு கலயத்தில் கஞ்சியும் தொட்டுக்கொள்ள ஊறுகாயும் வைத்திருந்தார்கள். கஞ்சியை குடித்துவிட்டு, வீட்டை தாழ் போட்டுவிட்டு, வெளியில் செல்ல சொல்லிவிட்டு, அம்மா வேலைக்கு சென்றுவிட்டார். பாவம் அவர்களுக்குத்தான் பள்ளிக்கூடம் படிப்பறிவு என்பது கிடைக்காத கனியாகிவிட்டதால் தனது மகனாவது நன்கு படிக்கட்டும் என்று பெற்றோர்கள் கூலி வேலைக்கு செல்கிறார்கள்.  பாடல்:-பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தானறியேன், ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவக நானறியேன்,  https://youtu.be/_k06MusuBeQ   
விலாசத்தை கண்டுபிடித்து, தயங்கி தயங்கி வீட்டின் வெளியிலிருந்து ஐயா என்று குரல் கொடுத்தேன்.முதலில் நேற்றுபார்த்த அந்த மாணவன் வெளியில் வந்தான் என்னை பார்த்தபிறகு, அப்பா என்று கூறிக்கொண்டு வீட்டினுள்ளே சென்றுவிட்டான். சிறிது நேரத்தில் அந்த மாணவனின் "அப்பா" அவர்கள் வீட்டினுள்ளிருந்து வெளியில் வந்தார், என்னை வீட்டிற்குள் அழைத்தார், நான் வீட்டிற்குள் சென்றதும்  அங்கு ஏற்க்கனவே அனைத்து புத்தகங்களையும் தயாராக எடுத்து வைத்திருந்ததைக் கண்டேன். அங்கு எனக்கு தருவதற்காக அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைக் காட்டிய அவர், இதேபோல உன்னுடைய சென்ற ஆண்டு 9ம் வகுப்பு புத்தகங்களையும், நீயும் மற்றொரு மாணவனுக்கு இலவசமாக தரவேண்டும் என்று கட்டளையிட்டார். நானும் அதற்க்கு என்னுடைய மனப்பூர்வமான சம்மதத்தை தெரிவித்தேன். பாடல்:- மனிதனென்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம் வாழைபோல தன்னை ஈந்து தியாகியாகலாம். https://youtu.be/6Eg20JQwGYY 

அனைத்துபுத்தகங்களும் புதியதுபோலவே அட்டை போடப்பட்டு அழகாக இருந்தது. அதை பார்த்தபோதே மனதில் ஒரு ஆர்வம் ஊற்றடுத்து ஓடியது. அனைத்து புத்தகங்களையும் சரி பாதியாக அடுக்கிப் பிரித்து, எனது இரு தோள்களில் சுமந்துகொண்டு "நன்றி ஐயா" என்று கூறி அங்கிருந்து விடைபெற்றேன்.  பாடல்:- பாட்டு வாழ்ந்து பார்க்கவேண்டும் உலகில் மனிதனாகவேண்டும்  https://youtu.be/YU-b1hNh0g0

மனது முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. புத்தகங்கள் இலவசமாக எனக்கு கிடைத்ததுபோல எனது  நண்பனுக்கும் கிடைக்கவேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். அப்போதுதான்  எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. என்னைப்போலவே பலருக்கும் இதுபோல இலவசமாக பாட புத்தகம் கிடைத்தால் இன்னும் பலமடங்கு மகிழ்ச்சி கிடைக்குமல்லவா என்கிற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. வீட்டிற்கு சென்று தோளில் சுமந்திருந்த புத்தகங்களை வைத்துவிட்டு, அங்கு இருந்த என்னுடைய 9ம் வகுப்பு பாட புத்தகங்களை எடுத்துக்கொண்டு, நண்பனையும் அதுபோலவே அவனது 9ம் வகுப்பு புத்தகங்களை எடுத்துக்கொண்டு நாங்களிருவரும் பள்ளிக்கூடம் நோக்கி ஓடினோம்.  பாடல்:-சிரித்துவாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே https://youtu.be/Ji4Qzh2cXD4
பள்ளியினுள் நுழைந்தவுடன் அங்கிருந்த 8ம் வகுப்பு தேறிய, 9ம் வகுப்புக்கு செல்ல இருக்கும் மாணவர்களை நோக்கி... உங்களுக்கு 9ம் வகுப்பு புத்தகங்கள் இலவசமாக வேண்டுமா? உங்களுடைய பழைய 8ம் வகுப்பு புத்தகங்களை தந்துவிட்டு இந்த 9ம் வகுப்பு புத்தகங்களை பெற்றுக்கொள்ளுங்கள் என்று குரல் கொடுத்தோம். அதைக்கேட்ட பல மாணவர்கள் எங்களை நோக்கி ஓடி வந்தார்கள். சற்று நேரத்தில் 10ம் வகுப்பு மற்றும் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என அனைவரும் அருமையான யோசனை என்று என்னை பாராட்டி அனைவரும் ஒன்று கூடினார்கள். அவர்களின் சென்ற ஆண்டு புத்தகங்களை பெற்றுக்கொண்டு அடுத்த ஆண்டு புத்தகங்களை மாற்றிக்கொண்டிருந்தோம். சற்று தூரத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்களும் இந்த கூடத்தை பார்த்துவிட்டு எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள், மனதில் சற்று பயம் வந்தது இதோடு நிறுத்திவிடலாம, என்கிற எண்ணம் தோன்றியது அதற்குள் "என்ன இங்கு கூட்டம்" என்று அதட்டலோடு வகுப்பு ஆசிரியரும், தலைமை ஆசிரியர் அவர்களும் என்னை நெருங்கிவிட்டார்கள்.  பாடல்:- நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே ... நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை வளரும் முல்லைகளே https://youtu.be/D2kQOWCzcl4

விவரத்தைக் கேள்விப்பட்டதும், தலைமை ஆசிரியர் என்னை முதுகில் தட்டிக்கொடுத்து அருமையான பணியை செய்திருக்கிறாய் என்று பாராட்டியதோடு, பள்ளி நூலக ஆசிரியரை அழைத்து இந்த மாணவனுக்கு தேவையான இடவசதியை பள்ளி நூலகத்தில் செய்துகொடுக்குமாறு கட்டளையிட்டார். அதோடு பள்ளியின் முதல் நாள் காலை தொழுகை கூட்டத்தில் என்னை மேடைக்கு அழைத்து பள்ளியின் அனைத்து மாணவர்களின் முன்னிலையில் பாராட்டியதோடு, ஏழை மாணவர்கள் பயன்பெறும் இந்த திட்டம் சிறப்பான ஒரு திட்டம் என்றும் இதை செயல் படுத்திய என்னை சிறந்த மாணவன் என்று பாராட்டியதோடு, இதை அனைத்துப்பள்ளிகளிலும் செயல்படுத்தும்படி பள்ளிக்கல்வி இயக்குனருக்கு கடிதம் எழுதப்போவதாகவும் கூறினார்.   பாடல்:- நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி  https://youtu.be/XG_gSzVn1Ys

இப்போது உங்களுக்கும் அந்த மாணவன் யார் என்று தெரிந்திருக்கும். பின்னாளில் அதே பள்ளியில் மேல்நிலை வகுப்பில் பகுதிநேர ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பை பெற்றுத்தந்ததும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்தான். பாடல்:- வாங்கய்யா வாத்தியாரய்யா வரவேற்க வந்தோமைய்யா ஏழைகள் உங்களை நம்பி....  https://youtu.be/7lIENBK-la4

(இரண்டு வருடம் பகுதிநேர ஆசிரியராக நான் படித்த அதே பள்ளியில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் என எனது நாட்குறிப்பு புத்தகத்தில் இது குறித்தும், அப்போது நடந்த பல சுவையான சம்பவங்களையும் எழுதி வைத்திருக்கிறேன்.)....  பாடல்:- மீண்டும் பள்ளிக்கு போகலாம் https://youtu.be/51sfVxD_wlE
ஒருவேளை இந்த திட்ட விவரங்கள் உங்களின் பள்ளியில் நடைமுறையில் இல்லையென்றால், அனைத்து ஏழை மாணவர்களின் பயனைக்கருத்தில் கொண்டு, நீங்களே முன்னின்று இந்த சேவைப்பணியை உங்களின் அருகாமையில் இருக்கும் பள்ளியில் தொடங்கிவைத்தால், நீங்கள் செய்த இந்த உதவி உங்களின் எதிர்கால சந்ததியினரின் சிறப்பான வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்பது திண்ணம். "  பாடல்:-நல்ல நல்ல சேவை... நாட்டுக்கு தேவை... Film : Porter kanthan (1955) https://youtu.be/-Y4bCc135QY 

இப்படிக்கு, நன்றிகளுடன் கோகி என்னும் கோபால் கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.  
பாடல்:- எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவார்; என் பாடல் நான் பாட பலர் ஆடுவார், இனி என்னோடு யார் ஆடுவார் ??????  https://youtu.be/vo00ogHbydI

Episode-110. இன்றைய நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா?

Episode-110. இன்றைய நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? 
It wan an interview question… “A Thing, that is available only  in “Heaven”… how to get those Things? First you explain us what is your answer for this question, and how you will be getting such things from Heaven?    ஒரு நிருவனத்தின் வேலைவாய்ப்பு நேர்காணலின்போது கேட்கப்பட்ட கேள்வி அது? அந்த ஒரு பொருள் "சொர்க்கத்தில்" மட்டுமே கிடைக்கும் என்றால், அந்தப் பொருளை கொண்டுவருவதர்க்கான சாதனையை நீங்கள் செய்யவேண்டிய சூழலில்,  உங்களின் பதில் என்ன? என்ன செய்வீர்கள்?. எப்படி கொண்டுவருவீர்கள்? முதலில் இந்த கேள்விக்கான பதிலைக்கூருங்கள் என்றனர்? 

அது ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூருக்கு அருகேயுள்ள தார்ப்பாலைவனத்தில் (  இந்தியாவில் இருக்கும்  தார்ப்பாலைவனத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 200,000 km2 ஆகும்) அமையவிருக்கும் ஒரு பெரிய காற்றாலை மின் உற்பத்தி மற்றும்  சூரிய ஆற்றலை மின்சக்தியாக மாற்றி பெறக்கூடிய நிறுவனத்தின் திட்டப்பணியை மேற்கொள்ள திட்ட மேலாளருக்கான் நேர்காணல் தேர்வின்போதுதான் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது .  காரணம் திட்டப்பணி நடக்கவிருக்கும்  அந்த தார்ப்பாளைவனத்தில் சரியான சாலை வசதிகூட கிடையாது அப்படிப்பட்ட சவாலான பணியை ஏற்று செய்யக்கூடிய திட்ட மேலாளருக்கு எத்தகைய சூழலையும்  எதிர்கொண்டு சமாளிக்கும் திறமை இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தனர்.  

சாதிக்க குறிப்பிட்ட எல்லை என்று ஏதுமில்லை. உங்களின் சாதனையை பிறர் பயன்படுத்திக்கொண்டால் அதற்காக நீங்கள், வருத்தப்படவேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு உங்களின் சாதனையை பயன்படுத்திக்கொள்ளமுடியுமே  தவிர, அவர்களால் சாதிக்கமுடியாது. ஆகவே சாதிக்க, சாமர்த்தியமும் மிக மிக முக்கியம். அதோடு அந்த அந்த நேர, கால, இடத்திற்கு ஏற்றார்போல, சமயோசிதமாகவும் சாமர்த்தியமாகவும் பதில் சொல்ல தெரிந்திருக்கவேண்டும்.  

உங்களின் பதில் "ஆம்/ முடியும்" என்று கூறுவீர்களானால், முதலில் ஒரு சில விவரங்களை நன்கு ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும். அதாவது சொர்க்கம் அது எங்கிருக்கிறது? எப்படி அங்கு செல்லமுடியும்? புராணங்களில் மனிதனின் இறப்பிற்கு பின்பு சொர்க்கம் செல்லலாம் என்று குறிப்பிட்டிருப்பதை கவனத்தில் கொண்டு பார்க்கும்போது. இறந்தபிறகு திரும்ப மனித உடலில் அதுவும் நமது அதே உடலுக்குள் திரும்ப முடியுமா? என்கிற பல கேள்விகளுக்கு விடையே இல்லை. அப்படிப்பட்ட சூழலில் உங்களின் பதில் சிறப்பானதாகவும், அந்த நேர, கால, இடத்திற்கு ஏற்றார்போல, சமயோசிதமாகவும், சாமர்த்தியமாகவும் பதில் சொல்ல தெரிந்திருக்கவேண்டியது அவசியம். 

சரி இப்போது இந்தக் கேள்விக்கான சாமர்த்தியமான பதில் என்ன என்று பார்ப்போம்?   

"நானே சென்று எடுத்துவருவதைவிட, யாரையாவது சொர்கத்திற்கு அனுப்பி எடுத்துவரச் செய்வேன் " என்று  சாமர்த்தியமாக பதில்கூறவேண்டும்.

மேலும் யாரும் பார்த்திராத அந்த பொருளை எடுத்துவருவது மிகவும் எளிது... நீங்கள் எந்த ஒரு புதுப் பொருளை எடுத்துவருகிரீர்களோ "அதுதான் அது", அதாவது சொர்கத்திலிருந்து பெறப்பட்ட பெருள் இதுதான் என்று எதோ ஒரு புதிய பொருளைக்காட்டி சாதித்துவிட்டாதாக கூறலாம். சந்தேகமிருந்தால் உடனே உங்களை சொர்கத்துக்கு அனுப்பி, இதை என்னால் நிருபிக்கமுடியும் என்று கூறினாலே போதும், உங்களது சாதனை ஏற்றுக்கொள்ளப்படும். .. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் .....

ஆகவே, எவர் ஒருவர் எந்த ஒரு கடினமான சாதனைகளையும் தமது குழுவினர்களைக்கொண்டு செய்து முடிக்கும் எண்ணம் உடையவராக, தனது குழுவினர்களை நிர்வகிக்கத்தெரிந்த மற்றும் குழுவினர்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள தெரிந்தவர்கள் மட்டுமே சிறந்த திட்ட மேலாளராக பணியாற்றத் தகுதிபெற்றவராவார். ஆகவே  குழுவிலிருக்கும் ஒருவரை அனுப்பி "சொர்க்கத்தில்" இருக்கும் அந்த பொருளை நாம் எளிதாக பெற்றுவிடமுடியும் என்று கூறவேண்டும். அதேநேரம் உங்களின் குழுவிலிருந்து எவரையும் இழக்கவோ அல்லது  பணியிலிருந்து வெளியேற்றவோ கூடாது. ஆகவே அனைவரையும் அரவணைத்து செல்லவேண்டிய கட்டாய சூழலில் நீங்கள் இருப்பதையும் நினைவில் வைத்திருக்கவேண்டும். 

அடுத்த நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? மீண்டும் நாளை சிந்திப்போம்...
விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சந்திப்போம்!...
வணக்கம்
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. 

Saturday, April 11, 2015

அச்சு வெல்லம் என்றாலே அதற்க்கு சரியான ஜோடி பச்சரிசி...


அச்சு வெல்லம் என்றாலே அதற்க்கு சரியான ஜோடி பச்சரிசி... 

# அச்சு வெல்லத்தோடு தேங்காய் சேர்த்து சாப்பிட உடல் குளுர்ச்சியடையும். வேர் கடலையுடன் சேர்த்து சாப்பிட உடல் சூடேறும். 

# தயிருடன் அச்சு வெல்லம் சேர்ந்து சாப்பிட உடல் சூட்டை கூட்டும், அதுபோல தயிருடன் உப்பு சேர்த்து சாப்பிட உடல் உஷ்ணம் குறையும். 

# இதெல்லாம் விட அச்சு வெல்லம் தயாரிக்கும்போது வெல்லத்துடன் உப்பை சேர்த்து காச்சுவார்கள், உப்பு வெல்லத்தை புளித்துப்போகாமல் காப்பதோடு, நீண்ட நாட்கள் கெடாமலும் காக்கும்.... இனிப்புடன் சிறிதளவு உப்பு சேரும்போது... இனிப்புத்தன்மை சற்று கூடுவதாக மற்றுமொரு ஆய்வு கூறுகிறது....

# அச்சுவேல்லமும் சின்ன வெங்காயமும் "டெங்கு" காய்ச்சலுக்கு நல்ல மருந்தாக உள்ளது.

"அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு அத்தனையும் தித்திக்கிர நாள்தான் ஹோய்........காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்"

விடாமல் முயலுங்கள், 
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்! 
வணக்கம்
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. 

விழிப்போமா?....நெஞ்சே உன் ஆசை என்ன....

விழிப்போமா?..... நெஞ்சே உன் ஆசை என்ன....

# ."அகத்துள் ஆமை புகுந்தால்"... என்பதை தவறாக திரித்துக் கூறப்பட்டு   “ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும்.” என்கிற பழமொழியாக மாறியது. 

அகத்தில் ஆமை புகுதல் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால் "அகம்" என்றால் உள்ளே அதாவது உள்ளத்தின் உள்ளே  அல்லது மனதினுள்ளே என்பதாக பொருள்படும்.  இங்கு ஆமை என்பது இல்லாமை, இயலாமை, முடியாமை, தெரியாமை, பொறாமை போன்ற இன்னும் பலவித ஆமைகளில், ஏதாவது ஒரு ஆமை மனதுக்குள் புகுந்துவிட்டாலே போதும்,  அவனது மனதோடு சேர்ந்து அவனும் கெட்டுப்போவான். 

கை இழந்த ஊனமுற்றவர்கள் கூட மாற்றுத்திரனாளிகலாக வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள், ஆனால் கை இருந்தும் நம்பிக்"கையை" இழப்பவர்களுக்குத்தான் பல ஆமைகள் மனதினுள் புக சிறந்த வழியாக அமைகிறது. அப்படி நம்பிக்கையை இழக்கும்போது...அதனுடன் அடங்காமை, அறியாமை, இயலாமை, இல்லாமை, கல்லாமை, தீண்டாமை, தெரியாமை, பொறாமை, முடியாமை, முயலாமை,  போன்ற இன்னும் பல ஆமைகள் மனதிற்குள் புகுந்துவிட்டாலே, அந்த "தற்கொலை" என்கிற கோழைத்தனம் வந்துவிடுகிறது ... எனது 50 வருட வாழ்க்கையில்,  பள்ளிப்பருவத்தில் என் வகுப்பு நண்பன் (20வயதில்- ஒருவன்) மற்றும் நான் இரண்டு வருடம் ஆசிரியராக பணியாற்றியபோதும் என் வகுப்பு மாற்றுத்திரனாளியான மாணவி ஒருவள் என....மேலும் சிலரின் "தற்கொலை" என்கிற கோழைத்தனத்தை போக்க நான் எடுத்த சில முயற்சிகளும் கூட தோல்வியில் முடிந்தபோது... விதி வென்றதா? என்கிற கேள்விக்கு இன்னமும் எனக்கு விடை கிடைக்கவில்லை. 

ஒன்றுமட்டும் நிச்சயம்... என்ன ஆனாலும் ஆகட்டும் ஒரு கை பார்த்துவிடலாம் என்கிற வைராக்கிய எண்ணங்களை மனதில் விதைத்து மிகப்பெரிய மரமாக வளர்த்துக்கொள்வதே சிறந்த வழி....அப்படிப்பட்ட வைராக்கியத்தை  இளம் வயதிலிருந்தே மனதில் விதைப்பது மேலும் சாலச் சிறந்தது. 

#....நெஞ்சே உன் ஆசை என்ன?  நீ நினைத்தால் ஆகாததென்ன,  இந்த பூமி, அந்த வானம், இடி மின்னலை தாங்குவதென்ன ........

விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்!
வணக்கம்
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. 

Sunday, April 5, 2015

கொழுக்கட்டை மந்தாரை :- பாட்டி சொன்னது:-


கொழுக்கட்டை மந்தாரை :- பாட்டி  சொன்னது:-   விநாயகருக்கும், குரு தட்ச்னாமூர்தி மற்றும் சநீஸ்வரபகவானுக்கும்   பிடித்த பூக்களில் இதுவும் ஒன்று.   இது பொதுவாக மஞ்சள் நிறமுள்ள பூக்களுடன்(சில இடங்களில் வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது) , பூக்களின் நடுவில் காப்பி கோட்டை நிறத்தில் கொழுக்கட்டையின் உள்ளே  இனிப்பு பூரணம் இருப்பது போலவே இந்த பூ அமைந்திருப்பதினால் இந்த பெயர் பெற்றிருக்குமோ?  முன்பெல்லாம் இதன் இலையை ஈர் குச்சியால் தைத்து சாப்பிடும் இலையாக பயன்படுத்தினார்கள் காலம் செல்ல செல்ல இந்த தாவரத்தை காண்பதே அரிதாகிப்போனது. (குறிப்பு:- அந்தி மந்தாரை என்பது வேறு வகை பூந்தாவரம், கொழுக்கட்டை மந்தாரை என்பது வேறு வகை தாவரம்) 
கொழுக்கட்டை மந்தாரை - இந்த மரத்திர்க்கு தனி மகத்துவம் உள்ளது. ஆன் மரம் மற்றும் பெண் மரம் என்று இருவித மரங்களாக காணப்படுகிறது. பெண் மந்தாரை மரம் அழகிய வண்ண பூக்களுடன் சிறு சிறு இலைகலைக்கொன்டதாகவும், ஆன் மந்தாரை மரம் பெரிய இலைகளைப் பெற்றிருக்கும் (இந்த ஆன் மந்தாரை  இலையைத்தான்  ஈர்க்குச்சியால் தைத்து சாப்பிடும் இலையாக பயன்படுத்துகிறார்கள்)  

மந்தாரையின் மருத்துவ குணம்:-இதன் இலையில் விளக்கெண்ணையை தடவி அந்த இலையை சூடான தணலில் வாட்டி,  கத்திக்குத்து அல்லது அடி பட்டு வீக்கம் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் சில மணி நேரங்களிலே வீக்கம் குறைந்து தசைகளுக்கு அடிபட்ட சுவடு தெரியாமல் வலி காணாமல் போகுமாம். ( சோழ மன்னர் காலத்தில் போதி சித்தர் என்று அழைக்கப்பட்ட ஒருவர் இந்த வைத்தியத்தை செய்ததாக குறிப்பு உள்ளது.) மந்தாரை மூல நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது, மந்தாரை இலையில் சாப்பாடு சாப்பிட்டால் குறிப்பாக தயிர் சாதம் பிசைந்து உண்டால் குடல் வியாதிகள் அனைத்தும் குணமாகும்.  மந்தாரையின் இலை, கிளை, வேர்,  மரப்பட்டை என அனைத்தும் பல்வேறுவிதங்களில் மருந்தாக பயன்படுகிறது.........நன்றிகளுடன் கோகி -என்கிற கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி.....

Friday, March 20, 2015

இயலாமையின் கோப தாபம்:-

இயலாமையின் கோப தாபம்:-

பலநேரம்   
நான் சிதறி விட்ட வார்த்தைகள் 
என்னைக் கலங்க வைத்துள்ளன.
ஆனால் 
என் மௌனம் என்றுமே 
என்னைக் கலங்க வைத்ததில்லை.
முயலும் வெல்லும் 
ஆமையும் வெல்லும்
முயலாமை வெல்லாது....

....விடாமல் முயலுங்கள், 
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்! 
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) 

விலையில்லா "துளசி தீர்த்தத்தின்" விலைமதிப்பற்ற பெருமையை

வயதான பாட்டி, அவருக்கு தினமும் தான் பிரியமுடன் வணங்கும் பகவான் ஸ்ரீ ராதா கிருஷ்ணனுக்கு நெய்வேத்தியம் படைப்பது வழக்கம். பாட்டியிடம் போதிய பணவசதி இல்லை என்றாலும் வீட்டில் சமைக்கும் உணவை-"சாதத்தை" தினமும் தான் வணங்கும் ஸ்ரீ ராதா கிருஷ்ணனுக்கு படைத்த பிறகுதான் அனைவரும் உண்ணவேண்டும் என்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.  

திடீரென அதற்கும் இடைஞ்சலாக மகனுக்கும் அவனுடைய மனைவிக்கும் அவர்களது அலுவலக நேர மாற்றத்தின் விளைவாக  விடியற்காலையிலேயே சமைத்த சாதத்தை சாப்பிட்டுவிட்டு , மதியத்திற்கான உணவையும் கையேடு எடுத்துச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டதால், பாட்டிக்கு தர்ம சங்கடம் ஏற்ப்பட்டது. 

தனியாக சுவாமிக்கு நெய்வேத்திய பிரசாதம் தயார் செய்ய, தன்னால் ஒரு செலவு மற்றும் தொந்தரவு என்கிற பழிச்சொல் வந்துவிடுமோ? அப்படி பழிச்சொல்லோடு செய்யும் நெய்வேத்திய பிரசாதம் சரியானது இல்லை என்கிற முடிவில், அங்கும்-இங்கும் வைத்திருந்த காசுகளை ஒன்றாக சேர்த்து, கடையிலிருந்து கல்கண்டு வாங்கிவந்து, அதை பிரசாதமாக  நெய்வேத்தியம் செய்து,பேரன், பேத்தி,மருமகள் என்று அனைவருக்கும் கைநிறைய கல்கண்டு பிரசாதம் வழங்கியதோடு, தனது கணவருக்கும், மகனுக்கும் மட்டும் சக்கரை வியாதி இருப்பதால் ஒரு சிறு கல்கண்டு துகளை மட்டும் பிரசாதமாக தந்தார். அன்றைய பொழுது அதே சிந்தனையில் நகர்ந்தாலும், மேலும் இரண்டு நாட்கள் அதே நிலை தொடர்ந்தது.

மறுநாள் புரட்டாசி மாதம், முதல் சனிக்கிழமை, துவாதசி திதி கூடிய விசேஷமான நாளாக இருந்ததால்,  காலையில் வழக்கம்போல ஸ்ரீ ராதா கிருஷ்ணனுக்கு நெய்வேத்தியம் செய்ய முனைந்தபோது,  அவர் வாங்கிவைத்திருந்த கல்கண்டு பிரசாதத்தை சுற்றி ஏராளமான எறும்புகள் மொய்த்தவண்ணம் இருந்ததைக்கண்டு... இன்று பகவானுக்கு தன்னால் நெய்வேத்திய பிரசாதம் படைக்க முடியாமல் போகுமோ? என்று மனம் வருந்தினார். 

வேறு வழிதோன்றாமல் வீட்டு தோட்டத்திலிருந்து பறித்த துளசி இலைகளை தண்ணீரில் கலந்து "துளசி தீர்த்தமாக" செய்து பகவானுக்கு நெய்வேத்தியம் செய்தார். அதிசயமாக அன்று அனைவரும் துளசி தீர்த்தப் பிரசாதத்தை இரண்டு மூன்று முறை கேட்டு வாங்கி சாப்பிட்டதை நினைத்து பெருமிதமடைந்தார். விலை கொடுத்து வாங்கிய கல்கண்டு பிரசாதம் கடுகளவே உண்டாலும், சக்கரை நோய்க்கு விஷமாகும். விலையில்லா துளசி தீர்த்தப் பிரசாதம் எந்த நோய்க்கும் மருந்தாகும்.  விலைகொடுத்து வாங்கிய "கல்கண்டு" பிரசாதத்தைவிட, விலையில்லா "துளசி தீர்த்தத்தின்" விலைமதிப்பற்ற  பெருமையை  எண்ணி வியந்தார்.  

திருமலைக்கு வருகிறேன், காணிக்கை தருகிறேன் என்கிற பெருமாள் கோவிலுக்கு வேண்டுதல்  எப்போது நிறைவேறுமோ? அதை உடனே நிறைவேற்றமுடியவில்லையே? என்கிற கவலை உங்களுக்கு இருந்தால், உடனே சிறு துளசிதளம் (துளசி இலைக் கொத்து) பறித்து அதை தாமிர அல்லது வெண்கல கிண்ணத்தில் போட்டு அந்தக் கிண்ணம் நிறைய தண்ணீர் ஊற்றி,  நடு வீட்டில் ஒரு சிறு மாக்கோலம் போட்டு அதன் மீது கிண்ணத்தை வைத்து, அந்தக்கின்னத்தை நூத்திஎட்டு  சுற்றுக்கள் "ஓம் நமோ நாராயணாய" என்று கூறியபடி சுற்றிவந்தால்...108-பெருமாள் கோவிலுக்கு சென்று வந்த புண்ணியமும் உங்களின் வேண்டுதலும் நிறைவேறும் என்பது ஆன்றோர் கூற்று. 

விடாமல் முயலுங்கள், 
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்! 
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) தற்போது இந்தியாவின் உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து.....

எளிமையான கல்விக்கடனுக்கு இளையவர் வங்கிக்கணக்கு அவசியம்.



எளிமையான கல்விக்கடனுக்கு  இளையவர் வங்கிக்கணக்கு அவசியம்.....உங்களின் குழந்தைகளுக்கு பத்து வயது பூர்தியாகும்போதே ஏதாவது ஒரு வங்கியில் இளையவர் வங்கிக்கணக்கை துவங்கிவிடுங்கள். அதோடு அவர்களின் பள்ளிப்படிப்பிற்கு செலுத்தவேண்டிய கட்டணங்களை இந்த வங்கிக்கனக்கின் மூலம் செலுத்துங்கள். காரணம் உயர் கல்வி படிப்பிற்கு தேவையான தொகை கிடைக்காதபோது நீண்ட நாட்கள் வங்கி கணக்கை வைத்திருந்த தகுதியின் அடிப்படையில் உங்களின் மகள்/மகனுக்கு அதே வங்கியில் உடனே கல்விக்கடன் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதாவது 18 வயதிற்கு பிறகு உங்களின் மகள்/மகன் படிப்பு செலவுக்கு உங்களை சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை, அவர்களாகவே கல்விக்கடன் பெற்று அவர்களின் விருப்பப்படி படிக்க முடியும். அவர்களின் காலில் அவர்களே நிலைத்து நிற்கும் பொறுப்புள்ளவர்களாக உங்கள் பிள்ளைகளும் இப்படிப்பாடுவார்கள்......"எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்...வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே". http://youtu.be/geYyN5_QYKg

மாணவர்களின் கல்விக் கடன் பிரச்சினைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ‘கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

படிப்பை முடித்து ஓராண்டு வரை கல்விக் கடனுக்கான வட்டியோ, அசலோ திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயமில்லை. இந்தக் காலகட்டத்தில் கடனுக்கான வட்டியை மத்திய அரசே சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வழங்கிவிடும். வட்டி தள்ளுபடி காலம் முடிந்த பிறகு அந்தந்த வங்கிகளின் வட்டி விகிதப்படி வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு 72 அல்லது 120 தவணைகளில் வட்டியையும் அசலையும் மாணவர்கள் செலுத்த வேண்டும்.

இது தான் 2009-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு. ஆனால், இதன்படி எந்த வங்கியும் செயல்படுவதில்லை என்கிறார் நாமக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார். தனது மகளுக்கு கல்விக் கடன் வழங்கிய நாளில் இருந்து 14 சதவீதம் வட்டி விதித்த ஒரு தனியார் வங்கியை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்திருக்கும் ராஜ்குமார், தன்னைப் போல பாதிக்கப்பட்ட நபர்களை ஒருங் கிணைத்து ‘கல்விக் கடன் விழிப் புணர்வு இயக்கம்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய அவர் கூறியதாவது: கல்விக் கடன் விவகாரத்தில் மாணவர்க ளுக்காக தவணை விடுப்பு காலத்தில் மத்திய அரசிடம் இருந்து 5 சதவீதம் வட்டியைப் பெற்றுக்கொள்ளும் சில வங்கிகள், அதை மறைத்து சம்பந்தப் பட்ட மாணவர்களிடமும் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன. மத்திய அரசு வழங்கும் வட்டி மானியத்தை மற்ற வங்கிகளுக்கு வழங்கும் முன்னோடி வங்கியாக (Lead Bank) கனரா வங்கியை நியமித்திருக்கிறார்கள். இதில் என்ன வேதனை என்றால், பெரும்பாலான வங்கிகள் தங்களுக்கு வரவேண்டிய வட்டி மானியத்தை கனரா வங்கியிடம் இருந்து பெறுவதற்கு அக்கறை காட்டவில்லை.

இதனால் அந்த நிதியானது மத்திய அரசின் கஜானாவுக்கே திரும்பிவிட்டது. அரசு கொடுத்த மானியத்தை வாங்காத வங்கிகள் இப்போது அதையும் மாணவர்கள் தலையில் ஏற்றிவிட்டன. எஸ்.சி - எஸ்.டி மாணவர்களின் கல்விக் கடனுக்கான வட்டி மானியத்தை 2009-ல் இருந்து பெரும்பாலான வங்கிகள் பெற்றுக் கொள்ளாமல் இருக்கின்றன.

ஒன்று அந்த வங்கிகள் அந்தப் பிரிவு மாணவர்களுக்கு கடன் வழங்க மறுத்திருக்க வேண்டும் அல்லது கடனுக்கான வட்டியை அந்த மாணவர்களிடம் இருந்தே வசூலித்திருக்க வேண்டும்.
இந்தக் காரணங்களால்தான் அந்த வங்கிகள் வட்டி மானியத்தை பெறாமல் இருக்கின்றன. இதை அறிந்த இந்திய வங்கிகள் சங்கம், எஸ்.சி - எஸ்.டி மாணவர்களின் கல்விக் கடனுக்கான வட்டி மானிய தொகை கனரா வங்கியில் ஏராளமாக இருப்பில் உள்ளது.

சம்பந்தப்பட்ட வங்கிகள் அதை உடனடியாக பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றன என்று நவம்பர் 5-ம் தேதி, அனைத்து வங்கி களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. மொத்தத்தில் கல்விக் கடன் விவகாரத்தில் மத்திய அரசு விதித்த நிபந்தனைகளை வங்கிகள் கண்டுகொள்ளவில்லை.

இது குறித்து நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் சங்கம் ஆகி யோருக்கு நான் அனுப்பிய புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப் படாததால் அவர்களையும் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்திருக் கிறேன். எனவே, கல்விக் கடன் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ‘கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.

கல்வி சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினை களுக்கும் உரிய தீர்வை இந்த இயக்கம் முன்னெடுத்துச் செய்யும் என்று ராஜ்குமார் தெரிவித்தார். (தொடர்புக்கு: +91-9442164601)

Thursday, March 19, 2015

விதியின் பிடியிலிருந்து எப்படி தப்புவது?

பாவம் என்பது நமது எண்ணங்களின் செயல்பாடுகளோ? என்று ஒரு சந்தேகம் வருகிறது. சற்று சிந்தித்துப்பார்த்தால் "நடந்துகொண்டிருக்கிற நான், 'கால் இடறி தரையில் வீழ்வேன்' என்று நமது மனதில் ஓர் எண்ணம் நம்மை தொடருமேயானால், நிச்சயம் நாம் தரையில் வீழ்வது உறுதி. ஆகவே செயல்களைவிட நமது எண்ணங்கள்தான் நமது  தலைவிதியை நிர்ணயிக்கிறதோ என்கிற ஆணித்தரமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறது. 

திருவள்ளுவரும் 113வது அதிகாரத்தில் ஊழ் என்று தனி அதிகாரமே தந்திருக்கிறார். மேலும் எண்ணிய எண்ணியாங்கு எய்துப என்று கூறியிருப்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால் நமது எண்ணங்கள்தான் விதியை நிர்ணயிக்கிறது என்பது புரிகிறது.  

சரி மனிதப்பிறவி தமது எண்ணங்களின் பிரதி பிம்பங்களான விதியின் பிடியிலிருந்து எப்படி தப்புவது? நம்பிக்கையானது, நல்லது மற்றும்   ஏற்புடையது என ஏற்றுக்கொள்ளுதல் போன்ற இன்னும் பல்வேறு அர்த்தங்களை கொண்டது.  நல்லது அல்லாதவைகளையும்,  "நல்லதாக" பார்ப்பது கூட ஒரு வகையில் நம்பிக்கயின் வடிவங்கள்தான். உதாரணமாக நாம் சாலையில் நடந்துகொண்டிருக்கும்போது நமது காலடியில்,  எறும்பு போன்ற பல்வேறு சிறு  உயிரினங்கள் மிதிபட்டு இறக்கின்றன, அதற்க்கு நாம்  பாவம் செய்ததாக வருந்துவதைவிட, அவைகளின் அந்தப் பிறவியிலிருந்து விடுபட்டு , அதைவிட சற்று உயரிய மறு பிறவி பெறுவதற்கு  நம்மால் ஆனா ஒரு உதவியாக நினைப்பதுதான் சிறந்தது, ஏன் எனில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இன்னும் பல புராண இதிகாசங்களிலும், பல உயிர்கள் இறப்பது பாவ விமோச்சனமாகவும் அல்லது கீழ் உயிரினத்திலிருந்து  விமோசனம் பெற்று உயரிய உயிருனமாக மறு பிறவி எடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே நமது எண்ணங்களை சிறப்பான எண்ணங்களாக மாற்றினால் நமது தலைவிதியும் மாறிவிடும் என்பது தெரிகிறது.  ஆகவே நமது சிந்தனைகளை நெறிப்படுத்திக் கொண்டு செயல்படுவோமேயானால்  நமது தலைவிதியும் (எப்பிரவியாயினும்) சிறப்பாகவே இருக்கும்.. 

"நீ எதை தூக்கி எரிகிராயோ அது உன்னிடம் திரும்ப வரும் - மகாபாரதம் ... ஆவகே நமது எண்ணங்கள் நல்லவைகளாக பிறருக்கு உதவுமேயானால் அது நமக்கும் நல்லதாகவே அமையும். 

வாழ்க்கை மீது விதிக்கப்பட்டிருக்கும் சில எதார்த்தங்களை ஒப்புக் கொள்ள மறுக்காதீர்கள். நம் முன்னோர் அப்படியான எதார்த்த நிகழ்வுகளை “விதி” என்று வகைப்படுத்தினார்கள். அதை மாற்ற முடியாது என்பதாலேதான் “விதியை மாற்ற முடியும்” எனச் சொல்லாமல் “விதியை மதியால் வெல்லலாம்” எனச் சொல்லித் தந்தனர்..

விதியென்று ஏதுமில்லைவேதங்கள் வாழ்க்கையில்லை... உடலுண்டு உள்ளமுண்டு. முன்னேறு மேலே மேலே.

நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) தற்போது உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து.....  

Monday, March 2, 2015

நமது "தலைவிதி" என்கிற "குருவிக் குடை!

"குருவிக் குடை"
அனுதினம் விழித்தெழுந்து
அதற்காகவே காத்திருந்தபோதும்,
குருவியளவு அதிர்ஷ்ட மழையில்  கூட...
நம்மை நனைந்துவிடாமல் காக்கும்...
நமது "தலைவிதி" என்கிற
"குருவிக் குடை!..."


# "நான்"

சிறு குருவியே, ஆனாலும்......
பனி மலையின்
உச்சியில் நான் .....


# "அவ்வளவு பெரிய பற்களா"

தலை வாரும்  சீப்புக்கும்கூட
பற்கள் உண்டு ....
உன் காலை,
நான் வாரிவிட்டேன் என்கிறாயே ...
எனக்கு என்ன அவ்வளவு பெரிய
பற்களா இருக்கிறது ?????????????

FREE JOBS EARN FROM HOME