வயதான பாட்டி, அவருக்கு தினமும் தான் பிரியமுடன் வணங்கும் பகவான் ஸ்ரீ ராதா கிருஷ்ணனுக்கு நெய்வேத்தியம் படைப்பது வழக்கம். பாட்டியிடம் போதிய பணவசதி இல்லை என்றாலும் வீட்டில் சமைக்கும் உணவை-"சாதத்தை" தினமும் தான் வணங்கும் ஸ்ரீ ராதா கிருஷ்ணனுக்கு படைத்த பிறகுதான் அனைவரும் உண்ணவேண்டும் என்பதை வழக்கத்தி ல் வைத்திருந்தார்.
திடீரென அதற்கும் இடைஞ்சலாக மகனுக்கும் அவனுடைய மனைவிக்கும் அவர்களது அலுவலக நேர மாற்றத்தின் விளைவாக விடியற்காலையிலேயே சமைத்த சாதத்தை சாப்பிட்டுவிட்டு , மதியத்திற் கான உணவையும் கையேடு எடுத்துச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டதால், பாட்டிக்கு தர்ம சங்கடம் ஏற்ப்பட்டது.
தனியாக சுவாமிக்கு நெய்வேத்திய பிரசாதம் தயார் செய்ய, தன்னால் ஒரு செலவு மற்றும் தொந்தரவு என்கிற பழிச்சொல் வந்துவிடுமோ? அப்படி பழிச்சொல்லோடு செய்யும் நெய்வேத்திய பிரசாதம் சரியானது இல்லை என்கிற முடிவில், அங்கும்-இங்கும் வைத்திருந்த காசுகளை ஒன்றாக சேர்த்து, கடையிலிருந்து கல்கண்டு வாங்கிவந்து, அதை பிரசாதமாக நெய்வேத்தியம் செய்து,பேரன், பேத்தி,மருமகள் என்று அனைவருக்கும் கைநிறைய கல்கண்டு பிரசாதம் வழங்கியதோடு, தனது கணவருக்கும், மகனுக்கும் மட்டும் சக்கரை வியாதி இருப்பதால் ஒரு சிறு கல்கண்டு துகளை மட்டும் பிரசாதமாக தந்தார். அன்றைய பொழுது அதே சிந்தனையில் நகர்ந்தாலும், மேலும் இரண்டு நாட்கள் அதே நிலை தொடர்ந்தது.
மறுநாள் புரட்டாசி மாதம், முதல் சனிக்கிழமை, துவாதசி திதி கூடிய விசேஷமான நாளாக இருந்ததால், காலையில் வழக்கம்போல ஸ்ரீ ராதா கிருஷ்ணனுக்கு நெய்வேத்தியம் செய்ய முனைந்தபோது, அவர் வாங்கிவைத்திருந்த கல்கண்டு பிரசாதத்தை சுற்றி ஏராளமான எறும்புகள் மொய்த்தவண்ணம் இருந்ததைக்கண்டு... இன்று பகவானுக்கு தன்னால் நெய்வேத்திய பிரசாதம் படைக்க முடியாமல் போகுமோ? என்று மனம் வருந்தினார்.
வேறு வழிதோன்றாமல் வீட்டு தோட்டத்திலிருந்து பறித்த துளசி இலைகளை தண்ணீரில் கலந்து "துளசி தீர்த்தமாக" செய்து பகவானுக்கு நெய்வேத்தியம் செய்தார். அதிசயமாக அன்று அனைவரும் துளசி தீர்த்தப் பிரசாதத்தை இரண்டு மூன்று முறை கேட்டு வாங்கி சாப்பிட்டதை நினைத்து பெருமிதமடைந்தார். விலை கொடுத்து வாங்கிய கல்கண்டு பிரசாதம் கடுகளவே உண்டாலும், சக்கரை நோய்க்கு விஷமாகும். விலையில்லா துளசி தீர்த்தப் பிரசாதம் எந்த நோய்க்கும் மருந்தாகும். விலைகொடுத்து வாங்கிய "கல்கண்டு" பிரசாதத்தைவிட, விலையில்லா "துளசி தீர்த்தத்தின்" விலைமதிப்பற்ற பெருமையை எண்ணி வியந்தார்.
திருமலைக்கு வருகிறேன், காணிக்கை தருகிறேன் என்கிற பெருமாள் கோவிலுக்கு வேண்டுதல் எப்போது நிறைவேறுமோ? அதை உடனே நிறைவேற்றமுடியவில்லையே? என்கிற கவலை உங்களுக்கு இருந்தால், உடனே சிறு துளசிதளம் (துளசி இலைக் கொத்து) பறித்து அதை தாமிர அல்லது வெண்கல கிண்ணத்தில் போட்டு அந்தக் கிண்ணம் நிறைய தண்ணீர் ஊற்றி, நடு வீட்டில் ஒரு சிறு மாக்கோலம் போட்டு அதன் மீது கிண்ணத்தை வைத்து, அந்தக்கின்னத்தை நூத்திஎட்டு சுற்றுக்கள் "ஓம் நமோ நாராயணாய" என்று கூறியபடி சுற்றிவந்தால்...108-பெருமாள் கோவிலுக்கு சென்று வந்த புண்ணியமும் உங்களின் வேண்டுதலும் நிறைவேறும் என்பது ஆன்றோர் கூற்று.
விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சிந்திப்போம்!
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) தற்போது இந்தியாவின் உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து.....
No comments:
Post a Comment